இசை - கணேசகுமாரன் #1
labels 100DaysOfReading , ReadingChallenge , வாசிப்பனுபவம் , 0 பின்னூட்டங்கள்
கதைசொல்லி : கணேசகுமாரன்
புதுவருசம் வந்துட்டு...இந்த வருசத்துல எதாவது ஒன்னாவது உருப்படியா செஞ்சி கிழிச்சிருக்கோமான்னு பாத்தா அப்டி ஒன்னுமில்ல..சரி வரும் வருசத்துலையாவது எதையாவது செய்வோம்(இன்னும் எத்தன வருசத்துக்குடா இதே டயலாக்க விடுவீங்க :( )
சரி மேட்டருக்கு வருவோம்....
மூஞ்சிபுத்தகம் அதாங்க FACEBOOK.. நம்மாளுங்க பாஷையில் சொல்ல போனா ப்ளாகரை போல ஓசி-யில் கும்மியடிக்க கிடைத்த இன்னொரு வரப்பிரசாதம்..அவ்ளோதான்
இங்கும் ஆண்களுக்கு நிகரா பெண்கள் வலம் வருவதில் மகிழ்ச்சியுடன் கூடிய வருத்தம் தான், ஏன் இங்கும் பெண்கள் தான் பாதிப்புக்குள்ளாகிறார்கள்
நம்ம பொண்ணுங்களுக்கு இதை சொல்லியே ஆகணும், நீங்க அழகு தான் இல்லன்னு யாருமே சொல்ல,அதை ஏன் ஊருக்கே காட்டனும்?
இது ஒரு ஃபேசனாவே ஆயிட்டு....பேஸ்புக்குல போடுறத்துக்காவே ரகம் ரகமா போட்டோ எடுக்குறாயிங்க...இவிங்க
போன வாரம் ஒரு பெண்ணின் போட்டோவை எதார்த்தமாக பார்க்க நேர்ந்தபோது...அதிலிருந்த கமெண்டுகள்...ச்சீ இப்டி கூடவா கெளம்பிருக்காயிங்கன்னு சொல்ல வைத்துவிட்டது
அப்பெண்ணின் உடலை வர்ணித்து இப்படி அப்படி என்று..ஆங்கிலத்தில் கேவலமாக எழுதியிருந்த அத்தனை பேரின் பேரும் இப்படித்தான் இருந்தது..john silverstock, mary brown, peter smith எல்லாம் வெளிநாட்டு ஆளுங்களா இல்ல நம்மாளுங்களே இப்டிபட்ட பேரில் திரியிராயிங்களான்னு தெரியல :(
முஸ்கி : நம்ம கடைய சரியா தொறக்குறதில்லன்னு நிறைய பேர் வருத்தப்படுறாங்க , சரி விடுங்க இனி ஜில்தண்ணி - எப்போதும் சூடா (ஹீ ஹீ) கிடைக்குமுங்கோ
"எதையும் அழகாக ரசிக்கலாம் அழகான மனமிருந்தால்"
மூக்கும் முழியுமாய் ஏமி ஜாக்சன் கலரில் இருந்தால் தான் அழகா, எதுவும் அழகு தான் என் மனம் அழகாக இருப்பதால்
சாக்கடை முதல் சாக்லெட் பேப்பர் வரை
எல்லாம் அழகாகவே தெரிகிறது
ச்சீ என்று விரட்டும் நாயை தோ என்று அழைத்து கொஞ்சினால் அழகுதான், ஆமாம் இதெல்லாம் எனக்குள் எப்படி வந்தது
நாத்து பறிப்பது முதல் களையெடுத்தல்,அறுவடை வரை மனிதசக்தியை மட்டுமே நம்பி விவசாயம் செய்து கொண்டிருந்த நாம் இப்போது அத்தனையையும் எந்திரத்தை வைத்தே செய்து முடிக்கிறோம் .

என்னத்த சொல்றது போங்க, இப்பலாம் எது யோசிச்சாலும் சரி எழுதினாலும் சரி எல்லாமே சின்னாதாவே வருது,பரிட்சையில 16 மார்க் கேள்விக்கும் ரெண்டு மார்க் கேள்விக்கும் ஒரே அளவு பதில் தான் வருது
எல்லாத்துக்கும் அவன் தான் காரணம்,அவன்தாங்க ட்விட்டர் , இனி பரிட்சை கேள்வி தாளில் எல்லா வினாக்களுக்கும் 140 எழுத்துக்களில் விடையளின்னு இருந்தா கூட தேவலாம் என்கிற அளவுக்கு என்னை ட்விட்டர் அடிமையாக்கி இருக்கிறது
நிறைய மொக்கை கவிதலாம் எழுதுறன் அதுக்கு காரணம் "அவள்" இல்ல ட்விட்டர் தான்,இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா என்னோட பதிவும் 140 எழுத்துக்கு சின்னதா ஆனாலும் ஆகும்
ட்விட்டர் இன்னக்கி இணையத்தின் இன்றியமையாததாகிவிட்டது, ட்விட்டருக்கு முன் கூகுளின் ஆர்குட்டும்,மூஞ்சி புத்தகமும் டம்மி பீசுகளாய் வளம் வந்து கொண்டிருக்கின்றன (இன்னமும் யாராவது ஆர்குட் யூஸ் பண்றீங்களா என்ன :) )
காலை 8.30 மணி - பேருந்து நிலையம்
காலேஜ் வழியா செல்லும் நகரப் பேருந்து வருதான்னு எட்டி பார்த்த பிரபாவுக்கு அவன் ஃபிகர் அங்கு நின்று கொண்டிருந்ததை பார்த்த போது ஒரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்
என்னடா எப்போதும் காலேஜ் பஸ்லயே போயிடுவா,இன்னக்கி இங்க நிக்கிறா,சரி நமக்கடித்த அதிர்ஷ்டம் என்று தன்னுள் சொல்லிக் கொண்டு சிரித்தான் அவன்
பேருந்தும் வந்தது அவள் அசால்ட்டாக முன் புறம் ஏறி நின்று கொண்டாள், நண்பர்கள் டேய் அடுத்த பேருந்தில் போகலாம் டா என்று கத்தியும் காதில் விழாதது போல் அவனோ பின் புறமாக முட்டி மோதி அவளுக்கருகில் போய் நின்றான்
முழு நிலவைப் போல் பிரகாசித்திருந்தது அவன் முகம்,அவள் சிரிப்புச் சில்லரைகளை சிதற விட இவன் ஒவ்வொன்றாய் பொறுக்கிக் கொண்டிருந்தான்
ஒரு ரெண்டு மூணு வாரமா இநத பக்கம் வர முடியாம போயிடுச்சி, மொக்கைகள் கம்மியா இருக்கு,ஆளாலுக்கு உருப்படியா எழுத ஆரம்பிச்சிட்டாங்க,இப்படியே போனா தமிழ் பதிவுலகம் என்னாவது சரி அதான் மொக்கை ரிட்டன்ஸ்
காலேஜும் போக ஆரம்பிச்சாச்சு புது நண்பர்கள் நிறைய பேர் கிடைச்சிருக்காங்க(தோழிகள் கிடைக்கலன்னு சொன்னா நம்பவா போறீங்க),புது சூழ்நிலை எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு
*****************************
முதல் நாளே வாந்தி சாரி வாத்தி ஒருவர் யாரெல்லாம் ப்ளாகரா இருக்கீங்க,கைய தூக்குங்கன்னு சொல்ல,நான் மட்டும் தைரியமா கைய தூக்கிட்டேன்(ஆமாம் நான் ப்ளாகரா ?), நான் மட்டும் கை தூக்க ஊரே என்னை பார்க்க ஆரம்பத்தது, அந்த வாத்தி whats your latest blog என்று கேட்க நான் கோக்குமாக்கு என்று உளர,என்னை பாத்து அத்தன பொண்ணுங்களும் சிரிக்க எப்படியோ சமாளிச்சேன்
*****************************
ஒரு வாரக் காலத்தில் எல்லா பய புள்ளங்களுக்கும் பட்டப் பேர் வச்சாச்சு, எனக்கு என்ன பேர் வச்கிருக்காங்கன்னு சொல்ல மாட்டேனே ( தெறம தெறம) :)
*******************************
சென்னை வாழ்க்கையை நல்லா அனுபவிக்கிறேன் முன்பு போல் விடியற்காலை 11 மணி வரை தூங்க முடியாவிட்டாலும் முன்னிரவு 5.30 மணி வரை தான் தூங்க முடிகிறது(தாங்க சாரி தூங்க முடில)
********************************
மொக்க கவுஜைகள் ரிட்டன்ஸ்
சென்ற வருடம்
காதலித்த அவளுக்காக
எழுதிய கவிதையை
இப்போது காதலிக்கும்
அவள் படித்துப் பார்த்து சிரிக்கறாள்
அவளுக்கென்று நினைத்து
++===++===++===++===++===++
குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு
குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு
என்னடா குவாட்டர் அடிக்க காசு கேக்குறானான்னு பாக்குறீங்களா, சீ நான் ரொம்ப நல்ல பையன் ,சரக்க அடிக்காத எனக்கே இப்டி மப்பு ஏறிடிச்சுனா,உங்களுக்கு சொல்லவா வேணும்
வேற ஒன்னும் இல்லங்க குவாட்டர் கட்டிங் பட பாடல்களை தான் சொல்றேன்,மெய்யாலுமே செம கிக்கு ஏறுதுங்க,பாடம் வரிகளும் தாரு மாறு

முஸ்கி : என்னடா என்னுமா தேடல்,இடைவேளை,சந்தேகம்ன்னு போன பதிவுல கொழப்புனவனாச்சேன்னு பாக்குறீங்களா,இனி நம்ம ரவுண்டு தான்
பத்தாம் வகுப்புத் தேர்வில் 500 க்கு 400க்கு மேல் எடுத்தவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து பதினொன்றாம் வகுப்புக்கு சேர்த்துக் கொள்கிறது சில பள்ளிகள் அதுவும் மெட்ரிக் பள்ளிகள்,இப்படி நன்றாக படிப்பவர்களை மட்டும் வைத்து பாடம் நடத்தி பரிட்சை எழுத வைத்து பின் பீத்திக் கொள்வது "மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற பள்ளி" என்று
இது பெரிய சாதனை மயிரா,யோவ் பத்தாம் வகுப்பில் 250 எடுத்தவனுக்கு பயிற்சி கொடுத்து பனிரெண்டாம் வகுப்பில் முன்னேற்றி காட்டு ஒத்துக்குறேன்
பதிவுலகில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது
ஒன்றல்ல.............................. பத்தல்ல...................................
நூறு கவிதைகள் ஒரே பதிவில்....யாரால் முடியும்
என் நண்பன் வெறும்பயலால் மட்டுமே முடிந்தது
அவனை பாராட்டி பட்டம் வழங்கத்தான் இந்த பதிவே
வெறும்யலை பாராட்டி ஒரு கவித
நீ வெறும்பயலல்ல
பெறும்பய (கீழுள்ள போட்டோவை பார்க்கவும்)
ஒன்றும் தெரியாதென்று சொன்னாய்
ஒன்னு ரெண்டு முழுசா தெரிஞ்சிருக்கே
சிங்கப்பூர் கண்டெடுத்த சிங்கமே !!!
சினம் கொள்ளாத சிவனே :(
சிரிப்பு போலீசிடம் கூட
சிக்காத சில்வண்டே