தோ(ழி)ழன் அப்டேட்ஸ்....
டிஸ்கி : அண்ணன் கார்க்கி அவர்களின் தோழி அப்டேட்சை படித்து படித்து, நாமளும் எழுதுவோமே என்று முயற்சி செய்தது :)
எதுக்கெடுத்தாலும் ட்ரீட் கேக்குறவன் நண்பன்...ட்ரீட்டுக்காகவே எதையாவது கேக்குறவன் என் நண்பன்
****************************************************************************
தோழி மழையில் நனைந்து வந்த போதுதான் எனக்கு நம்பிக்கை வந்தது, காதலின் மேல் அல்ல அவள் மேக்கப்பின் மேல்,கலையவே இல்லீங்க :)
*******************************************************************************
நண்பனுக்கு புது தோழி குறுஞ்செய்தி
அனுப்பியிருந்தாள்
என்ன செய்தி என்று வாங்கி படித்துக் கொண்டே
தோழி நம்பரை மனப்பாடம் செய்வான் இன்னொரு டகால்டி நண்பன்
********************************************************************************
மாப்ள உனக்கெத்தன அரியர்டா என்றுதான் கேட்டேன், நட்சத்திரத்த உன்னால என்ன முடியுமான்னு கேக்குறான்,என்னத்த சொல்ல :)
*******************************************************************************
தோழியின் சாப்பாடு டப்பாவை ஆட்டைய போட்டு ஆசையாக தயிர் சாதம் சாப்பிட திறந்தால் தனியாக அமர்ந்திருக்கிறது பர்கர் !?!
*******************************************************************************
நீல நிற சுடிதார் உனக்கு எடுப்பாக இல்லை என்றேன், உமக்கு எடுப்பா இருக்கும் போட்டுக்குறீயா என்கிறாள் :(
*******************************************************************************
என் அலைபேசியில் இன்னொரு பெண்னின் பெயரை பார்த்துவிட்டு சீறினாள் யார் என்று ? என் சித்தி என்றேன் சிரித்தாள் :) பெருமூச்சுடன் :()
********************************************************************************
பௌர்னமி நிலாவை காட்டி "நிலவில் உன் முகம் தெரிகிறது" என்றேன்
அப்ப என்ன ஔவை பாட்டி என்கிறாயா,என் மேக்கப் அவ்வளவு மோசமாவா இருக்கு என்கிறாள்
*********************************************************************************
இப்படியும் ஆகுமா....
நண்பர்களே இந்த பதிவை போல தோழியையும்,தோழனையும் ஒன்னா வைக்காதீங்க , அப்பறம் அவ்வளவுதான் :)