நான் மறந்த என் முதல் பதிவு
நானும் பதிவெழுதப்போறேன் என்று கிளம்பி கிட்டத்தட்ட ஒரு மூன்று மாதம் ஆகிறது,30 பதிவுகளும் போட்டாச்சி,50 பேர் என்னை பின்தொடர்கின்றனர்,அப்டி என்னதான் இருக்கிறது இந்த பதிவுலகில்
இப்போது தான் தெரிகிறது இது மிகப் பெரிய உலகம் என்று
எவ்வளவு வியக்கத்தக்க உலகம் திறமைசாலிகளும்,எழுத்தாளர்களும்,சிந்தனையாளர்களும் அற்புதமாக எழுதி வருகின்றனர்.
என் ஒவ்வொரு முயற்சியையும் தட்டிக் கொடுக்க அன்பான நண்பர்கள் கிடைத்தார்கள்,என் தவறை சுட்டிக் காட்டி திருத்தும் அண்ணன்கள் கிடைத்தார்கள்,இங்கு வயது வித்தியாசமின்றி பழகும் பெரியோர்கள் இருக்கின்றனர்.
முக்கியமாக இப்போது நிறைய படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்,என்னையும் நம்பி ஒரு 50 பேர் இருக்கிறார்களே,அதற்காகவாவது சிறந்த பதிவுகளை எழுத வேண்டுமே என்று அக்கறை வந்துள்ளது.
இங்கு திறமை கண்டிப்பாக பாராட்டப்படும்,வெளிக்கொணரப்படும் !!!
என் திறமையை முடிந்த வரை வெளிப்படுத்த முயல்வேன் நண்பர்களே !!!
_________________________________________________
இந்த சின்னப் பையனின் ஒரு சின்ன அறிமுகம்
இவ்வளவு நாளாய் ஜில்தண்ணி என்று அழைத்துக்கொண்டிருந்த நண்பர்களே,என் பெயர் "யோகேஸ்வரன்".வயசு ஒரு 21 ஆகுது,சும்மா ஏதோ கிறுக்கிக் கொண்டிருக்கின்றேன்,எங்க ஊரு குத்தாலம் (குற்றாலம் இல்லீங்க) நாகை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சின்ன ஊர்.
இனி என்னை 'ஜில்லு' யோகேஷ் என்று கூட கூப்பிடலாம்,அப்பறம் நிறைய எழுதனும்னு ஆசையாத்தான் இருக்கு,முடிந்தவரை முயற்சிப்பேன்
இன்னும் என்னை பத்தி ஏதாவது தெரியணும்னா,ஒரு மின்னஞ்சல் அனுப்புங்க இல்ல மின்னரட்டைக்கு வாங்க
மின்னஞ்சல் : jillthanni@gmail.com
குறிப்பு : இதய நோய் உள்ளவர்களும் ,பெண்களும்,சிறுவர்களும் கீழே உள்ள படத்தை பார்ப்பதை தவிர்க்கவும் ,மீறி பார்த்து பயந்து போனால் நான் பொறுப்பல்ல (ஹி ஹி ஹி )
இது தான் நான்
அப்பாடா என்னபத்தி சொல்லிபுட்டேன்,அப்பறம் நீங்கதான் சொல்லணும்
வரட்டுங்களா !!!!
