நானும் அந்த 140 எழுத்துக்களும்
என்னத்த சொல்றது போங்க, இப்பலாம் எது யோசிச்சாலும் சரி எழுதினாலும் சரி எல்லாமே சின்னாதாவே வருது,பரிட்சையில 16 மார்க் கேள்விக்கும் ரெண்டு மார்க் கேள்விக்கும் ஒரே அளவு பதில் தான் வருது
எல்லாத்துக்கும் அவன் தான் காரணம்,அவன்தாங்க ட்விட்டர் , இனி பரிட்சை கேள்வி தாளில் எல்லா வினாக்களுக்கும் 140 எழுத்துக்களில் விடையளின்னு இருந்தா கூட தேவலாம் என்கிற அளவுக்கு என்னை ட்விட்டர் அடிமையாக்கி இருக்கிறது
நிறைய மொக்கை கவிதலாம் எழுதுறன் அதுக்கு காரணம் "அவள்" இல்ல ட்விட்டர் தான்,இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா என்னோட பதிவும் 140 எழுத்துக்கு சின்னதா ஆனாலும் ஆகும்
ட்விட்டர் இன்னக்கி இணையத்தின் இன்றியமையாததாகிவிட்டது, ட்விட்டருக்கு முன் கூகுளின் ஆர்குட்டும்,மூஞ்சி புத்தகமும் டம்மி பீசுகளாய் வளம் வந்து கொண்டிருக்கின்றன (இன்னமும் யாராவது ஆர்குட் யூஸ் பண்றீங்களா என்ன :) )
எது நடந்தாலும் ஊருக்கு முன்னாடி முதல்ல ட்விட்டேருக்கு சொல்லிடுறேன், வாந்தி வந்தாலும் சொல்றன், பூந்தி தின்னாலும் சொல்றன், மொத்ததுல ட்விட்டர் ஒரு குட்டி நண்பன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி வந்தது வந்துட்டீங்க சில பல ட்விட்டுகளை படிச்சிட்டு போங்க :)
@@ அவள் அன்று கண்களால் கடித்ததால் ஏற்ப்பட்ட காதல் புண் இன்று வடுவாகியும் சுகமாய் வலிக்கிறதே #காதல் சுகம்
@@ போன வாரம் சுட்ட ஊசிப் போன வடையை கூட சகித்து சாப்பிட்டு விடுவேன் இந்த பாழாய் போன பீசாவை எவன் திம்பான் #பிசா கார்னரின் கார்னரில்

