Showing posts with label மனிதர்கள். Show all posts
Showing posts with label மனிதர்கள். Show all posts

அவர்கள் வந்துவிட்டார்கள் (Aliens)

நியு ஆர்லியஸ் மாகாணத்தில் பறக்கும் தட்டை பார்த்ததாக மக்கள் வியப்பு

தென் ஆப்ரிக்காவில் இரவு நேரங்களில் வட்ட வெளிச்சம் ஒன்று தெரிவதாக சொல்கிறார்கள்


இது
போன்ற செய்திகள் அடிக்கடி நாளிதிழில் பார்த்திருப்பதுண்டு,அவற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது,வெறும் வியூகம் தான் என்று இதுவரை நினைத்திருப்போம் .

வேற்று கிரக வாசிகள் என்பது கற்பனையல்ல அவர்கள் ஒரு நாள் இங்கு வந்தே தீருவார்கள்,நாம் அவர்களை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம் ஆனால் அவர்களை நாம் சந்திக்கும் நேரம் அழிவின் ஆரம்பமாக கூட இருக்கலாம்

இந்த திகிலூட்டும் தகவலை சொன்னது நானல்ல,புகழ் பெற்ற இயற்பியல் ஆராய்ச்சியாளர் ஸ்டீஃபென் ஹாகின்ஸ் தான்

ஹாக்கின்ஸ் ஒரு மாற்றுத் திறனாலி ஆவார்,அவர் தன் சற்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்,தன் குறைகளை பொறுட்படுத்தாது பல சாதனைகளை புரிந்துள்ளார்


சமீபத்தில் ஹாக்கின்ஸ் தன் ஆராய்ச்சியை உலகிற்கு காட்ட டிஸ்கவரி சானலில், Into the universe என்ற அற்புதமான ஆராய்ச்சி நிகழ்ச்சியில் தான் இந்த தகவலை அறிவித்துள்ளார்


கண்டிப்பாக வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்கள் என்று அடித்து சொல்ல காரணம் ஒரு கணக்கு தான் என்கிறார்

நாம் வாழும் பூமி மற்றும் இதர கோள்கள் அடங்கியது ஒரு மண்டலம் மட்டும் தான்,இந்த பிரபஞ்சத்தில் 100 கோடி மண்டலங்கள் இருக்கும்
பூமியை போல உயிர் வாழ ஏதுவான சூழ்நிலை கண்டிப்பாக ஏதாவது கோள்கலில் இருக்கலாம்.


ஆனால் அங்கு உயிரினம் எப்படி இருக்கும் என்று நாம் சொல்ல முடியாது,அவை ஒரு செல் உயிரினமாகவும் இருக்கலாம்,இல்லை மனிதனை விட பரிணமித்த ஜீவன்களாகவும் இருக்கலாம்,அவர்கள் கிரகத்தில் எல்லா வளங்கள் தீர்ந்து போன பின்,வேறு கிரகத்தை ஆக்கிரமிக்க பல ராட்சத தட்டுகளில் கூட இங்கு வரலாம்.

இதுவரை அவதார்,ப்ரிடேட்டர்,ஏலியன்ஸ்,இ.டி போன்ற படங்களிலும்,அறிவியல் புனைவுகளிலும் நாம் கற்பனையில் பார்த்த அந்த ஜீவராசிகள் நமக்கே ஆப்பு வைக்க வந்தா எப்படி இருக்கும்.ஆப்பு கண்ணுக்கு தெரியும்


டிஸ்கவரி தொலைகாட்சியில் ஒளிபரப்பான இந்த அற்புதமான டாக்குமெண்ட்ரியை கான

Into the universe பாகம்-1


Into the universe பாகம்-2

Into the universe பாகம்-3

Into the universe பாகம்-4

Into the universe பாகம்-5

மேலும் வாசிக்க

ஹாக்கின்சின் இனையதளம்

அவர் பேட்டி

உலகின் ஏழாவது பணக்காரர் - 3

கொலம்பிய அரசால் ஒன்றுமே செய்ய முடியவில்லை,அமெரிக்க அன்னாச்சிக்கு புரிந்து விட்டது,இவனை இப்படியே விட்டு வைத்தால் நாமும் கொலம்பியா போல் ஆகிவிடுவோம்,அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ரீகனுக்கு இந்த கொக்கெய்ன் மேட்டர் அப்போது தான் தெரிய வந்ததாம்.


சுதாரித்து கொண்ட அதிபர் கொலம்பிய அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அன்புடையிர்,சர்வமங்களம் உண்டாகட்டும் நாளது 1914-ம் ஆண்டு அமெரிக்காவிலே ஒரு சட்டம் இயற்றபட்டது,அதற்கு பெயர் ஹாரிசன் நார்காடிக்ஸ் ஆக்ட்,அதுதான் போதை தடுப்பு சட்டம்.மரிஜ்ஜுவானா,கொக்கெய்ன்,ஓபியம்,கஞ்சா,அபின் உட்பட அனைத்து கசுமாலங்களும் இங்கே தடை செய்யப்பட்ட பொருள்களாகும் யாரோ உங்க ஊரு பரமபுருஷன் எஸ்கோபராமே,அவன் வேலைகள் தான் என்பதை எங்கள் உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்டேன்,நீங்கள் என்ன சொல்கிறீர்.

அமெரிக்காவிடமிருந்து இப்படி ஒரு கடிதம் வந்த பிறகு அவனை அடக்க திணரிக் கொண்டிருந்த கொல்மபிய அரசு அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது,ஒப்பந்ததில் போதை கடத்தல்காரர்களை பிடிக்க அமெரிக்காவும்,அதை குறைக்க கொலம்பியாவும் உதவி செய்ய வேண்டும்.

அந்த காலகட்டத்தில் தான் ஒரு பாதுகாப்பிற்காக லிபரல் கட்சி மூலமாக அரசியலில் குதித்து மேலவை உறுப்பினர் ஆனான் இந்த எஸ்கோபர்.

மேலவைக்கு இரண்டாம் நாள் சென்றான்,சபையில் போதை கடத்தலை குறிவைத்து கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டு அதற்கு எஸ்கோபர் பதில் உரை ஆற்ற அழைக்கப்பட்டார்.

ஒவ்வொரு கொலம்பியனும் தன் காதுகளை தீட்டிக் கொண்டு அவன் உரையை கேட்க தயாரானார்கள்,தன் தொண்டையை சரி செய்து கொண்டு பேச ஆரம்பித்த எஸ்கோபர்

மாண்புமிகு மேலவை தலைவர் அவர்களே எனக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத போதை வர்த்தகம் பற்றி என்னை பேச அழைத்திறுக்கிறார்கள்,அதை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது,ஆகவே வேறு ஒரு விசயத்தை இங்கே பேசுகிறேன்,நம் நாட்டில் ஒரு வேளை உணவுக்கே வழியில்லாத பாமரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா,அவர்களை பற்றி நீங்கள் விவாதித்ததுண்டா,நான் இப்போது கிராமங்களை தத்தெடுத்து வருகிறேன் உங்களால் முடியுமா.இதை பற்றி தனி விவாதம் வைத்து எனக்கு பாராட்டு விழா அல்லவா நடத்தி இருக்க வேண்டும்.


சபை கலைந்துவிட்டது,யாருக்கு பேச்சு வரும்

எஸ்கோபர் முழிபிதுங்கி மாட்டிக் கொண்டு அசடு வழிந்த விஷயம் செய்தித் தாள்களில் வரும் என எதிர்பார்த்தவர்களுக்கு,அத்தனை தினசரிகளும் முதல் பக்கத்தில் எஸ்கோபர் புகழ் பாடப்பட்டிருந்தது....தலையில் அடித்துக் கொண்டார்கள்....

அப்பறம் என்ன ஆனது...அடுத்த பதவில்

டிஸ்கி : என்னடா எஸ்கோபர கொள்ள வந்த கூட்டத்த பத்தி சொல்றன்னு சொன்னானே,எங்கன்னு நீங்க கேக்குறது புரியுது...இவை தவிர்க்கமுடியாத வார்த்தைகளாய் போய் விட்டதே,முடிந்த வரை சுருக்கி அடுத்த பதவில் முற்றும் போட்டுட வேண்டியது தான்....

உலகின் ஏழாவது பணக்காரர் - 2

கடந்த பதிவில் எஸ்கோபர் என்ற போதை ராஜா உருவானதை பார்த்தோம்.

எஸ்கோபர் போதை தொழில் தான் செய்தானே தவிர,அதில் ஒரு நேர்மையை கடைபிடிப்பவன்,வித்யாசமாக சிந்திப்பவன் கூட,தன் தொழிலை விருத்தி செய்ய உருவாக்கிய நெட்வொர்க் தான் மெடலின் கார்ட்டல்


மெடலின் என்ற கொலம்பிய நகரத்து வியாபாரிகளை ஒன்று சேர்த்து ஆரம்பிக்கப் பட்டதுதான் இந்த மெடலின் கார்ட்டல்,எஸ்கோபர் இரண்டு வகையாக பிஸ்னஸ் மாடல்களை மெடலின் கார்டலில் வைத்திருந்தான்.

ஒன்று கொக்கோ பயிரிட்டு அதை தரமிக்க கொக்கெய்னாக மாற்றி வியாபாரம் செய்வது,இன்னொன்று மற்ற வியாபாரிகளிடமிருந்து ஒரு விலை கொடுத்து வாங்கி அதை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கடத்துவது

கொலம்பிய நாட்டின் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்க காரணம் மக்களின் சக்திதான்,போதை காசு தான் என்றாலும் கொடுப்பதற்க்கு எஸ்கோபரால் மட்டும் தான் முடியும் என்கிறார்கள் மக்கள்

மிகப் பெரிய அரசாங்கத்தையே நடத்த ஆரம்பித்தான் எஸ்கோபர்,புயல் காலங்களில் அசுர வேகத்தில் உதவிகளை செய்தது இவனது குழு


ஒரு காலத்தில் கடும் புயல்,மழையால் மக்கள் தொற்று நோயால் மடிந்து கொண்டிருந்தனர்,சுகாதாரமற்ற நிலை உருவாகியது கொலம்பியாவில்.பார்த்தான் எஸ்கோபர் மருந்து பொருட்களை ஸ்பைனிலிருந்து இறக்கினான்,அதிரடியாக செயல்பட்டு மக்களை காப்பாற்றினான்.

இத்துடன் விட்டிருந்தால் தமிழ் பட ஹீரோவாக மட்டும் தான் ஆகியிருப்பான்,அதோடு விடவில்லை யாருக்கு என்ன வேண்டுமோ அள்ளிக் கொடுத்தான்,விடு இல்லையா கட்டிக் கொடுத்தான்,பணம் வேண்டுமா...கொடுத்தான்,ஏழைகளுக்கு உதவ தயக்கமே காட்ட மாட்டான் இந்த எஸ்கோபர்.

மொத்தத்தில் கொலம்பிய மக்களின் பரமபிதாவாகவே மாறிவிட்டான் எஸ்கோபர்,கொலம்பிய ராபின் ஹுட்டாக மாறினான்.

கொலம்பிய அரசால் அவனை ஒன்றுமே செய்ய இயலவில்லை,ஆனாலும் இவனை போட்டுத் தள்ள ஒரு குழு உருவானது..அது தான்....அடுத்த பதிவில்

உலகின் ஏழாவது பணக்காரர்

உலகின் சிறந்த கார்ப்பரேட் நிருவனத்தின் தலைவர்,சிறந்த நிர்வாகி,உலக பொருளாதாரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றவர் என்றெல்லாம் இவரை புகழ முடியாது,ஏனென்றால் இவர் உலக போதை உலகின் முடிசூடா மன்னனாவார்,அவர் தான் "பாப்லோ எஸ்கோபர்"


உலக வரைபடத்தில் அழகான கோன் ஐஸ் மாதிரி வட அமெரிக்காவுக்கு கீழே தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு குட்டி தேசம் தான் கொலம்பியா.

போதை கடத்தல்காரர்களின் தலைமையகம் கொலம்பியா என்றால்,அதன் குல தெய்வம் இந்த எஸ்கோபர்.கொலம்பியா அசாதாரண கனிம வளங்களை கொண்ட நாடாகும்,சுதந்திரத்திற்க்கு பிறகு எல்லா லத்தீன் அமெரிக்க நாடுகளை போலவே பல உள்நாட்டுக் குழப்பங்கள் வந்தது,எல்லை தகராறு,சிவில் யுத்தம் போன்றவற்றால் பொருளாதாரம் சின்னாபின்னமானது.

அமெரிக்க அன்னாச்சி உள்ளே வந்தார்,பல கொரில்லா இயக்கங்களுக்கு பண உதவியும்,பயிற்சியும் அளித்து கலவரத்தை உருவாக்கியது,ஏழை விவசாயிகள் நிலத்தை வைத்துக் கொண்டு சும்மா இருந்தனர்.

அந்த நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக வளைத்து போட்டு,பயிரிட்டதுதான் கொக்கோ என்ற செடி,இந்த செடியிலிருந்துதான் கொக்கெய்ன் உருவாக்கப்படுகிறது.


பச்சை கொக்கோ இலைகளை கொதிக்கவைத்து,வடிகட்டி,ஆறவைத்து,மீண்டும் வடிகட்டி,பொடியாக்கி,ம்ம்ம் இந்த மாதிரி அற்புதமாக கொக்கெய்ன் உருவாக்கும் வல்லுனர்கள் பலர் எஸ்கோபர் கையில் இருந்தனர்.

எஸ்கோபர் என்ற போதை ராஜா இங்கு தான் முளைத்தான்,இந்த கொக்கெய்ன் வேறு எங்கும் பயிரிடுவதில்லை,பயிரிட்டாலும் அதை சிறந்த தரத்திற்க்கு போதை மருந்து தயாரிக்க ஆட்கள் வேறு எங்குமில்லை என்பதை புரிந்து கொண்டான் எஸ்கோபர்.

கொக்கெய்ன் வியாபாரத்தை உலக அளவில் கொண்டு செல்ல முடிவு செய்தான்,சரி இது என்ன கடலை மிட்டாய் பிசினசா,போதை பொருட்களாச்சே எப்படி அரசாங்கம் சும்மா இருக்கும்

அதற்கு எஸ்கோபர் சொன்ன வார்த்தைகள்

"பணத்தை கொடுத்து இந்த அரசாங்கத்தை விலைக்கு வாங்கிவிடுவேன்,முரண்டு பிடிப்பவர்களை கொன்று நதியில் வீசிவிடுவேன்"

கொக்கெய்ன் வியாபாரம் கோடி கோடியாக கொழித்தது,பணப் புழக்கம் எக்கச்சக்கம்,அந்த நேரத்தில் ஒரு மிகப் பெரிய நெட்வொர்க்கை உருவாக்கி வைத்திருந்தான் எஸ்கோபர்,ஆம் உலகின் ஏழாவது பணக்காரனானான் இந்த போதை மேதை.

அமெரிக்காவே பாதி அடிமையாக்கிவிட்டது இந்த கொக்கெய்னுக்கு அந்த அளவுக்கு போதை..........அப்படி ஒரு போதை.......


எப்படி அரசாங்கத்தையும்,அமெரிக்காவையும் சமாளித்தான்,அவனுக்கு பிரச்னையே வரவில்லையா.....அடுத்த பதிவில் பார்ப்போம்

பெண் சிங்கம் சூ கி


என்னடா சூ கி - என்று என்னெனவோ சொல்றானே என்று பாக்காதீங்க,இவர் தான் பர்மாவின் புரட்சிப் புயல்.

20 வருடங்கள் வீட்டுச் சிறையில் அடைத்தும் தளராதவர் பர்மாவின் சூ கி(suu kyi)இவரது அப்பா ஆங் சாண்(aung san) நவீன பர்மாவின் தந்தை,அவர் தான் பிரிட்டனிடமிருந்த்து பர்மாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தவர்,ஆனால் அதற்கடுத்த சில நாட்களிலேயே படுகொலை செய்யப்பட்டார்,பர்மா ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் உயர் படிப்பு முடித்த சூ கி 1988 ஆம் ஆண்டு பர்மா திரும்பினார்,பர்மாவில் ராணுவத்தின் அராஜகத்தை கண்டு வெகுண்டார்,ஜனனாயக ஆட்சி மலர முழு மூச்சுடன் இங்கினார்.

அவருக்கு மகாத்மா காந்தி தான் ரோல் மாடல்,அஹிம்சை வழியிலேயே தன் போராட்டங்களை நடத்தினார்.

1990 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சூ கி-க்கு ஆதரவாக 82 சதவீத மக்கள் ஓட்டு போட்டார்கள்.ஆனால் ராணுவமோ இந்த தேர்தல் செல்லாது என்று அறிவித்து சூ கி-யை வீட்டுக் காவலில் அடைத்தது.


கடுமமையான தனிமையான வீட்டுச் சிறையில் வாடினார் சூ கி,கேன்சரால் பாதிக்கப்பட்ட தன் கணவரை பார்க்க கூட தடைகளை விதித்தது,அவர் இறந்த போதும் கூட கடும் கட்டுப்பாடுகளுடன் தான் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

"மீண்டும் பர்மாவுக்கு வர மாட்டேன்" என்கிற உத்தரவாதத்தோடு வெளிநாட்டில் தஞ்சம் அடைந்தால் வீட்டுச் சிறையிலிருந்து விடுதலை என்று பர்மா அரசு பேரம் பேசியது , அசைந்து கொடுக்கவில்லை இந்த இரும்புப் பெண்மணி.

2002 இல் ஐ.நா-வின் தலையீட்டால் அரசுக்கும்,சூ கி - க்கும் இடையில் ஒப்பந்தம் உருவானது.உடனடியாக வீட்டுச் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

அதோடு விட்டதா சூ கி செல்லுமிடமெல்லாம் கலவரத்தை உருவாக்கியது அரசு,இதையே காரணம் காட்டி மீண்டும் வீட்டுச் சிரையில் அடைத்தது.

பல உலக நாடுகள் எச்சரித்தும் இன்று வரை அசையவில்லை அரசு,காரணம் சீனா-வாகத்தான் இருக்க முடியும்,ஏனெனில் நம் இந்தியாவிற்க்கும் சீனா - விற்க்கும் இடையில் தான் இந்த பர்மா இருக்கிறது.பர்மா தன் கையில் இருந்தால் இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டலாம் என்ற ஆசையில் தான் இப்படி செய்து வருகிறது.

சூ கி இந்தியாவிற்க்கு ஆதரவானவர்,அதனால் தான் இன்று வரை அவருடன் மல்லுக்கு நிற்கிறது.இதுதான் உலக அரசியலோ.....


புரட்சி எரியும்..........

Related Posts with Thumbnails