உலகின் ஏழாவது பணக்காரர் - 2
கடந்த பதிவில் எஸ்கோபர் என்ற போதை ராஜா உருவானதை பார்த்தோம்.
எஸ்கோபர் போதை தொழில் தான் செய்தானே தவிர,அதில் ஒரு நேர்மையை கடைபிடிப்பவன்,வித்யாசமாக சிந்திப்பவன் கூட,தன் தொழிலை விருத்தி செய்ய உருவாக்கிய நெட்வொர்க் தான் மெடலின் கார்ட்டல்
மெடலின் என்ற கொலம்பிய நகரத்து வியாபாரிகளை ஒன்று சேர்த்து ஆரம்பிக்கப் பட்டதுதான் இந்த மெடலின் கார்ட்டல்,எஸ்கோபர் இரண்டு வகையாக பிஸ்னஸ் மாடல்களை மெடலின் கார்டலில் வைத்திருந்தான்.
ஒன்று கொக்கோ பயிரிட்டு அதை தரமிக்க கொக்கெய்னாக மாற்றி வியாபாரம் செய்வது,இன்னொன்று மற்ற வியாபாரிகளிடமிருந்து ஒரு விலை கொடுத்து வாங்கி அதை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கடத்துவது
கொலம்பிய நாட்டின் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்க காரணம் மக்களின் சக்திதான்,போதை காசு தான் என்றாலும் கொடுப்பதற்க்கு எஸ்கோபரால் மட்டும் தான் முடியும் என்கிறார்கள் மக்கள்
மிகப் பெரிய அரசாங்கத்தையே நடத்த ஆரம்பித்தான் எஸ்கோபர்,புயல் காலங்களில் அசுர வேகத்தில் உதவிகளை செய்தது இவனது குழு
ஒரு காலத்தில் கடும் புயல்,மழையால் மக்கள் தொற்று நோயால் மடிந்து கொண்டிருந்தனர்,சுகாதாரமற்ற நிலை உருவாகியது கொலம்பியாவில்.பார்த்தான் எஸ்கோபர் மருந்து பொருட்களை ஸ்பைனிலிருந்து இறக்கினான்,அதிரடியாக செயல்பட்டு மக்களை காப்பாற்றினான்.
இத்துடன் விட்டிருந்தால் தமிழ் பட ஹீரோவாக மட்டும் தான் ஆகியிருப்பான்,அதோடு விடவில்லை யாருக்கு என்ன வேண்டுமோ அள்ளிக் கொடுத்தான்,விடு இல்லையா கட்டிக் கொடுத்தான்,பணம் வேண்டுமா...கொடுத்தான்,ஏழைகளுக்கு உதவ தயக்கமே காட்ட மாட்டான் இந்த எஸ்கோபர்.
மொத்தத்தில் கொலம்பிய மக்களின் பரமபிதாவாகவே மாறிவிட்டான் எஸ்கோபர்,கொலம்பிய ராபின் ஹுட்டாக மாறினான்.
கொலம்பிய அரசால் அவனை ஒன்றுமே செய்ய இயலவில்லை,ஆனாலும் இவனை போட்டுத் தள்ள ஒரு குழு உருவானது..அது தான்....அடுத்த பதிவில்
விறுவிறுனு இருக்கு...
ஆனா ஆரம்பிக்கும் முன்னமே முடிந்த மாதிரியிருக்கு... ;)
அட இவரு நல்லவரா கெட்டவரா..
ஆனால் அவர்ர உதவும் மனம் நல்லாயிருக்கே
எனது முன்னை பதிவில் இப்படி ஒரு கவிதை எழுதினேன்
எல்லாரிடமும்
எல்லாமும்
இருக்கிறது
நல்ல மனசைத்தவிர
ஆனால் இவரிடம் அதுவும் இருக்கில்ல..
நல்லா இருக்கு
அடுத்த பதிவுக்கு காத்திருக்கும்
r.v.saravanan
kudanthaiyur.blogspot.com
//போட்டுத் தள்ள ஒரு குழு உருவானது..அது தான்//
ம்ம் சீக்கிரம் சீக்கிரம் :)
சூப்பர் நடை தல...
அடுத்து என்ன வென்று ஆர்வம் தொற்றிக்கொள்கிறது..
சூப்பர் நடை தல...
அடுத்து என்ன வென்று ஆர்வம் தொற்றிக்கொள்கிறது..
சுவராஸ்யமா இருக்கு... அருமை...
வித்தியாசமான பதிவா இருக்கு. விறுவிறுப்பாவும் போகுது. ம், தொடருங்க.
கேள்விப்பட்டிராத ஆளைப்பற்றி ஆச்சரியமான தகவல்கள்!
நல்லாயிருக்கு ஜில்தண்ணி!
விறுவிறுப்பாகயிருக்கிறது...
அடுத்த பகுதி???
get redirected hereRead Full Report this websitesee navigate to this websitemy review here
l4d63s8f82 b3a87h0n63 a6e37s2f77 a8h95r3t48 k2v68c9j14 y4g02u1g62