உலகின் ஏழாவது பணக்காரர் - 3

கொலம்பிய அரசால் ஒன்றுமே செய்ய முடியவில்லை,அமெரிக்க அன்னாச்சிக்கு புரிந்து விட்டது,இவனை இப்படியே விட்டு வைத்தால் நாமும் கொலம்பியா போல் ஆகிவிடுவோம்,அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ரீகனுக்கு இந்த கொக்கெய்ன் மேட்டர் அப்போது தான் தெரிய வந்ததாம்.


சுதாரித்து கொண்ட அதிபர் கொலம்பிய அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அன்புடையிர்,சர்வமங்களம் உண்டாகட்டும் நாளது 1914-ம் ஆண்டு அமெரிக்காவிலே ஒரு சட்டம் இயற்றபட்டது,அதற்கு பெயர் ஹாரிசன் நார்காடிக்ஸ் ஆக்ட்,அதுதான் போதை தடுப்பு சட்டம்.மரிஜ்ஜுவானா,கொக்கெய்ன்,ஓபியம்,கஞ்சா,அபின் உட்பட அனைத்து கசுமாலங்களும் இங்கே தடை செய்யப்பட்ட பொருள்களாகும் யாரோ உங்க ஊரு பரமபுருஷன் எஸ்கோபராமே,அவன் வேலைகள் தான் என்பதை எங்கள் உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்டேன்,நீங்கள் என்ன சொல்கிறீர்.

அமெரிக்காவிடமிருந்து இப்படி ஒரு கடிதம் வந்த பிறகு அவனை அடக்க திணரிக் கொண்டிருந்த கொல்மபிய அரசு அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது,ஒப்பந்ததில் போதை கடத்தல்காரர்களை பிடிக்க அமெரிக்காவும்,அதை குறைக்க கொலம்பியாவும் உதவி செய்ய வேண்டும்.

அந்த காலகட்டத்தில் தான் ஒரு பாதுகாப்பிற்காக லிபரல் கட்சி மூலமாக அரசியலில் குதித்து மேலவை உறுப்பினர் ஆனான் இந்த எஸ்கோபர்.

மேலவைக்கு இரண்டாம் நாள் சென்றான்,சபையில் போதை கடத்தலை குறிவைத்து கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டு அதற்கு எஸ்கோபர் பதில் உரை ஆற்ற அழைக்கப்பட்டார்.

ஒவ்வொரு கொலம்பியனும் தன் காதுகளை தீட்டிக் கொண்டு அவன் உரையை கேட்க தயாரானார்கள்,தன் தொண்டையை சரி செய்து கொண்டு பேச ஆரம்பித்த எஸ்கோபர்

மாண்புமிகு மேலவை தலைவர் அவர்களே எனக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத போதை வர்த்தகம் பற்றி என்னை பேச அழைத்திறுக்கிறார்கள்,அதை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது,ஆகவே வேறு ஒரு விசயத்தை இங்கே பேசுகிறேன்,நம் நாட்டில் ஒரு வேளை உணவுக்கே வழியில்லாத பாமரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா,அவர்களை பற்றி நீங்கள் விவாதித்ததுண்டா,நான் இப்போது கிராமங்களை தத்தெடுத்து வருகிறேன் உங்களால் முடியுமா.இதை பற்றி தனி விவாதம் வைத்து எனக்கு பாராட்டு விழா அல்லவா நடத்தி இருக்க வேண்டும்.


சபை கலைந்துவிட்டது,யாருக்கு பேச்சு வரும்

எஸ்கோபர் முழிபிதுங்கி மாட்டிக் கொண்டு அசடு வழிந்த விஷயம் செய்தித் தாள்களில் வரும் என எதிர்பார்த்தவர்களுக்கு,அத்தனை தினசரிகளும் முதல் பக்கத்தில் எஸ்கோபர் புகழ் பாடப்பட்டிருந்தது....தலையில் அடித்துக் கொண்டார்கள்....

அப்பறம் என்ன ஆனது...அடுத்த பதவில்

டிஸ்கி : என்னடா எஸ்கோபர கொள்ள வந்த கூட்டத்த பத்தி சொல்றன்னு சொன்னானே,எங்கன்னு நீங்க கேக்குறது புரியுது...இவை தவிர்க்கமுடியாத வார்த்தைகளாய் போய் விட்டதே,முடிந்த வரை சுருக்கி அடுத்த பதவில் முற்றும் போட்டுட வேண்டியது தான்....

உலகின் ஏழாவது பணக்காரர் - 2

கடந்த பதிவில் எஸ்கோபர் என்ற போதை ராஜா உருவானதை பார்த்தோம்.

எஸ்கோபர் போதை தொழில் தான் செய்தானே தவிர,அதில் ஒரு நேர்மையை கடைபிடிப்பவன்,வித்யாசமாக சிந்திப்பவன் கூட,தன் தொழிலை விருத்தி செய்ய உருவாக்கிய நெட்வொர்க் தான் மெடலின் கார்ட்டல்


மெடலின் என்ற கொலம்பிய நகரத்து வியாபாரிகளை ஒன்று சேர்த்து ஆரம்பிக்கப் பட்டதுதான் இந்த மெடலின் கார்ட்டல்,எஸ்கோபர் இரண்டு வகையாக பிஸ்னஸ் மாடல்களை மெடலின் கார்டலில் வைத்திருந்தான்.

ஒன்று கொக்கோ பயிரிட்டு அதை தரமிக்க கொக்கெய்னாக மாற்றி வியாபாரம் செய்வது,இன்னொன்று மற்ற வியாபாரிகளிடமிருந்து ஒரு விலை கொடுத்து வாங்கி அதை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கடத்துவது

கொலம்பிய நாட்டின் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்க காரணம் மக்களின் சக்திதான்,போதை காசு தான் என்றாலும் கொடுப்பதற்க்கு எஸ்கோபரால் மட்டும் தான் முடியும் என்கிறார்கள் மக்கள்

மிகப் பெரிய அரசாங்கத்தையே நடத்த ஆரம்பித்தான் எஸ்கோபர்,புயல் காலங்களில் அசுர வேகத்தில் உதவிகளை செய்தது இவனது குழு


ஒரு காலத்தில் கடும் புயல்,மழையால் மக்கள் தொற்று நோயால் மடிந்து கொண்டிருந்தனர்,சுகாதாரமற்ற நிலை உருவாகியது கொலம்பியாவில்.பார்த்தான் எஸ்கோபர் மருந்து பொருட்களை ஸ்பைனிலிருந்து இறக்கினான்,அதிரடியாக செயல்பட்டு மக்களை காப்பாற்றினான்.

இத்துடன் விட்டிருந்தால் தமிழ் பட ஹீரோவாக மட்டும் தான் ஆகியிருப்பான்,அதோடு விடவில்லை யாருக்கு என்ன வேண்டுமோ அள்ளிக் கொடுத்தான்,விடு இல்லையா கட்டிக் கொடுத்தான்,பணம் வேண்டுமா...கொடுத்தான்,ஏழைகளுக்கு உதவ தயக்கமே காட்ட மாட்டான் இந்த எஸ்கோபர்.

மொத்தத்தில் கொலம்பிய மக்களின் பரமபிதாவாகவே மாறிவிட்டான் எஸ்கோபர்,கொலம்பிய ராபின் ஹுட்டாக மாறினான்.

கொலம்பிய அரசால் அவனை ஒன்றுமே செய்ய இயலவில்லை,ஆனாலும் இவனை போட்டுத் தள்ள ஒரு குழு உருவானது..அது தான்....அடுத்த பதிவில்

உலகின் ஏழாவது பணக்காரர்

உலகின் சிறந்த கார்ப்பரேட் நிருவனத்தின் தலைவர்,சிறந்த நிர்வாகி,உலக பொருளாதாரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றவர் என்றெல்லாம் இவரை புகழ முடியாது,ஏனென்றால் இவர் உலக போதை உலகின் முடிசூடா மன்னனாவார்,அவர் தான் "பாப்லோ எஸ்கோபர்"


உலக வரைபடத்தில் அழகான கோன் ஐஸ் மாதிரி வட அமெரிக்காவுக்கு கீழே தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு குட்டி தேசம் தான் கொலம்பியா.

போதை கடத்தல்காரர்களின் தலைமையகம் கொலம்பியா என்றால்,அதன் குல தெய்வம் இந்த எஸ்கோபர்.கொலம்பியா அசாதாரண கனிம வளங்களை கொண்ட நாடாகும்,சுதந்திரத்திற்க்கு பிறகு எல்லா லத்தீன் அமெரிக்க நாடுகளை போலவே பல உள்நாட்டுக் குழப்பங்கள் வந்தது,எல்லை தகராறு,சிவில் யுத்தம் போன்றவற்றால் பொருளாதாரம் சின்னாபின்னமானது.

அமெரிக்க அன்னாச்சி உள்ளே வந்தார்,பல கொரில்லா இயக்கங்களுக்கு பண உதவியும்,பயிற்சியும் அளித்து கலவரத்தை உருவாக்கியது,ஏழை விவசாயிகள் நிலத்தை வைத்துக் கொண்டு சும்மா இருந்தனர்.

அந்த நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக வளைத்து போட்டு,பயிரிட்டதுதான் கொக்கோ என்ற செடி,இந்த செடியிலிருந்துதான் கொக்கெய்ன் உருவாக்கப்படுகிறது.


பச்சை கொக்கோ இலைகளை கொதிக்கவைத்து,வடிகட்டி,ஆறவைத்து,மீண்டும் வடிகட்டி,பொடியாக்கி,ம்ம்ம் இந்த மாதிரி அற்புதமாக கொக்கெய்ன் உருவாக்கும் வல்லுனர்கள் பலர் எஸ்கோபர் கையில் இருந்தனர்.

எஸ்கோபர் என்ற போதை ராஜா இங்கு தான் முளைத்தான்,இந்த கொக்கெய்ன் வேறு எங்கும் பயிரிடுவதில்லை,பயிரிட்டாலும் அதை சிறந்த தரத்திற்க்கு போதை மருந்து தயாரிக்க ஆட்கள் வேறு எங்குமில்லை என்பதை புரிந்து கொண்டான் எஸ்கோபர்.

கொக்கெய்ன் வியாபாரத்தை உலக அளவில் கொண்டு செல்ல முடிவு செய்தான்,சரி இது என்ன கடலை மிட்டாய் பிசினசா,போதை பொருட்களாச்சே எப்படி அரசாங்கம் சும்மா இருக்கும்

அதற்கு எஸ்கோபர் சொன்ன வார்த்தைகள்

"பணத்தை கொடுத்து இந்த அரசாங்கத்தை விலைக்கு வாங்கிவிடுவேன்,முரண்டு பிடிப்பவர்களை கொன்று நதியில் வீசிவிடுவேன்"

கொக்கெய்ன் வியாபாரம் கோடி கோடியாக கொழித்தது,பணப் புழக்கம் எக்கச்சக்கம்,அந்த நேரத்தில் ஒரு மிகப் பெரிய நெட்வொர்க்கை உருவாக்கி வைத்திருந்தான் எஸ்கோபர்,ஆம் உலகின் ஏழாவது பணக்காரனானான் இந்த போதை மேதை.

அமெரிக்காவே பாதி அடிமையாக்கிவிட்டது இந்த கொக்கெய்னுக்கு அந்த அளவுக்கு போதை..........அப்படி ஒரு போதை.......


எப்படி அரசாங்கத்தையும்,அமெரிக்காவையும் சமாளித்தான்,அவனுக்கு பிரச்னையே வரவில்லையா.....அடுத்த பதிவில் பார்ப்போம்

இது விருதுகள் வழங்கும் வாரம்..

ஹி ஹி ஹி
இந்த வாரம் விருதுகள் வழங்கும் வாரம் போலிருக்கு

அண்ணன் சைவகொத்துபுரோட்டா வைரமும் வஞ்சியும் என்று ஆரம்பித்து வைத்தார்,நண்பர் பிரச்சன்னாவும் பாராட்டு விழா நடத்திவிட்டார், பற்றாக்குறைக்கு விருதுகளுக்கே பெயர்போன நம்ம ஜெய்லானி அவர்களும் அழகே வா என்று கொடுத்துவிட்டார்.

அவரவர் தங்களுக்கு கிடைத்த விருதுகள் எல்லாம் எடுத்து தங்கள் பதிவில் செறுகிக் கொண்டிருக்கின்றனர் .

அதனால் இந்த ஜில்தண்ணி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்
(
பயப்புடாதீங்க கடிச்சிட மாட்டேன் )

நாங்களும் விருது கொடுக்கலாமே என்று வந்தால், பிரபல பதிவர்கள் அனைவரும் அந்த விருதை பெற்று விட்டனர்,என்ன செய்யலாம் என்று யோசித்தேன் ( ரூம் போட்டு இல்ல ,எங்க வீட்ல தான்).

ஒரு வழியாக நெட்டில் சுட்டும் , மண்டைய தட்டியும் ஒரு நான்கு விருதுகளை உருவாக்கிவிட்டேன்.அவைகளை நம் தமிழ் பதிவுலக அன்பர்களுக்கு அளிக்கிறேன்

1.டெக்னாலஜி குரு

"பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல"
இவர்கள் தான் நம் தமிழ் பதிவுலகின் டெக்னாலஜி தாதாக்கள்,இவர்களுக்குத்தான் இந்த விருது

சுடுதண்ணி

சூர்யா கண்ணன்
2.addicted blogger awards


addicted என்றால் அடிமை என்று அர்த்தம்,இந்த விருதுகளை பெறுபவர்களின் பதிவுகளும் அப்படித்தான் இருக்கும்,அடிமையாக்கிவிடும் எழுத்துக்கள்.

சேட்டைக்காரன்
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪
வால்பையன்
நண்டு@நொரண்டு -ஈரோடு3.சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள்

நான் படித்ததில் சிறந்த சிறுகதைகளை எழுதிய நண்பர்களுக்கு இந்த விருதை பார்சல் செய்கிறேன்.

dreamer - ஹரிஷ் நாராயண்

அலைவரிசை - இர்ஷாத்

கொத்து புரோட்டா - பிரசன்னா
க.பாலாசி
ஹைக்கூ சிறுகதைகளுக்காக சைவகொத்துபுரோட்டா
ருத்ரவீணை4 . பதிவுலக நண்பர்கள் விருது

நான் பதிவுல என்ன எழுதினாலும் நம்மள பாராட்டி ,ஊக்குவித்த இந்த நண்பர்களுக்கு இந்த விருது,இந்தாங்க...

மங்குனி அமைச்சர்
நாடோடிகள்
செல்ல நாய்க்குட்டி
ரியாஸ்
அன்புடன் ஆனந்தி
தக்குடுபாண்டி
ஜெய்லானி
பிரபாகரனின் தத்துபித்
புலவன் புலிக்கேசி
மெல்லினமே மெல்லினமே
ரசிகன் மகேஷ்
மனோ
கிறுக்கல்கள்
குடந்தை r.v.சரவணன்இதுவரை என்னை ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி !!!!!!

புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்............

ஒரு விமானம் வானில் பறந்துகொண்டிருக்கிறது...........


அதில் பயணம் செய்பவர்கள்

1.கால்ப்பந்து வீரர் ரொனால்டினோ
2.கிளிண்டன் மனைவி ஹிலாரி கிளிண்டன்
3.முன்னால் அமெரிக்க அதிபர் புஷ்
4.போப் ஆண்டவர்
5.ஒரு இந்திய சிறுவன்

திடீரென்று விமானம் தீப்பிடிக்கிறது

தப்பிக்க நான்கு பாராசூட்கள் மட்டும் தான் இருக்கிறது,என்ன செய்வது

அப்போது

கால்ப்பந்து வீரர் ரொனால்டினோ:

நான் தான் இந்த உலகின் சிறந்த கால்ப்பந்து வீரன்,என்ன நம்பி பல இலட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்,அதனால நான் முதல்ல போறேன்,என்று கிளம்பிவிட்டார்
ஹில்லாரி கிளிண்டன் :

நான் தான் இந்த அமெரிக்காவின் அமைச்சர், அதிபர் அளவுக்கு பிரபலமான ஆளு , அதனால நான்தான் அடுத்து.....என்று அவரும் பாராசூட்டில் கிளம்பிவிட்டார்...ஜார்ஜ்
புஷ் :

ஹி ஹி ஹி , நான் தான் முன்னால் அமெரிக்க அதிபர் புஷ் ,சிறந்த காமெடி அதிபர் கூட, எனக்குத்தான் அடுத்த பாராசூட்...........கிளம்பிட்டார்


இப்போது மீதமிருப்பது போப்பும் இந்திய சிறுவனும் தான்..

போப் : சிறுவனே எனக்கு வயசாயிடுச்சி நான் இருந்து என்ன செய்யப் போறேன், மீதமிருக்கும் அந்த பாரசூட்டில் நீ போய் விடு

இந்திய சிறுவன் : ஹா ஹா ஹா , இல்ல தாத்தா நாம ரெண்டு பேருமே தப்பிக்கலாம் வாங்க

போப்: எப்படி ?


இந்திய
சிறுவன் : அமெரிக்காவின் மூளைக்கார முன்னால் அதிபர் பாராசூட்னு என் ஸ்கூல் பாகா எடுத்துட்டு போய்ட்டார் , ஹி ஹி ஹி !!

இருவரும் தப்பித்தனர் !!!!

அனால் அந்த புஷ்ஷ்ஷ்ஷ் ... என்ன ஆனார்மூடிய பைனாகுலரை வைத்து பார்த்துக் கொண்டும் ...........

தலைகீழாக வைத்து புத்தகத்தை படித்துக்கொண்டும்.............இதயத்தை வயிற்றில் வைத்துக் கொண்டும் இருக்கிறார் ....

ஹி ஹி ஹீ ...............

அறிவியல் வாத்தியாரிடம் சில கேள்விகள்

பில் கேட்சிடம் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் அவர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை ,நேத்து தான் நம்ம பழைய அறிவியல் வாத்தியார பார்த்து பேசிகினு இருந்தேன்,அப்ப அவர் கிட்டேயும் சில கேள்விகள்,ஆனா என்ன பதில்கள் உடனே வந்துடுச்சு.

கடல் நீர் உப்பு கரிக்குதுன்னு நாம குடிக்க மாற்றோம்,அப்டி குடிச்சா என்ன ஆகும் வாத்தியாரே ?

டேய் தம்பி,ஒரு லிட்டர் கடல் நீரை எடுத்து சோதித்துப் பார்த்தால் கிட்டத்திட்ட 35 கிராம் உப்பு கிடைக்கும்,மனிதனுக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 5 லிட்டர் வரை தேவைபடுகிறது,இந்த அளவில் 100-150 கிராம் உப்பு இருக்கும் ,ஒரு நாளைக்கு இந்த அளவு உப்பு சேர்ந்தால் ஏகப்பட்ட விளைவுகள் ஏற்படும்..அப்பறம் ஒன்னும் செய்ய முடியாது ,சரியா

அய்யா நான் இந்த வயசுலேயே இம்புட்டு உசரமா இருக்கேன் நீங்க ஏன் குள்ளமாவே இருக்கீங்க?

ஆளுக்கு ஆள் உயரம் வித்யாசப்படுவது கால் எலும்புகளின் நீளம் தான்,குட்டையோ நெட்டையோ ஆண்களின் இடுப்பு முதல் கழுத்து வரை சராசரி 28 அங்குலம்தான் , பெண்களுக்கு 24 அங்குலம் , ஆளுக்கு ஆள் உயரம் வித்யாசமாவது இந்த கால் எலும்பு அளவில் தான்,ரைட்டா....சரி இந்த உப்பு மேட்டர பத்தி சொல்லுங்க,மனிதனின் கண்ணீரும் ஏன் உப்பு கரிக்கிறது?

மனிதனின் கண்களிலிருந்து நாள்தோறும் குறைந்த பட்சம் 15 சொட்டு கண்ணீர் வருகிறது ,அது வாகனம் ஓட்டும் போதோ,தொலைகாட்சி பார்க்கும் போதோ எப்படி வேண்டுமானாலும் வரும்,அதில் பாதி ஆவியாகிவிடுகிறது,கண்ணீரில் 33% தண்ணீர் தான் இருக்கிறது,மேலும் அதில் புரோடீன்,குல்கோஸ் ,சோடியம் ,பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளதால் தான் உப்பாக உள்ளது.......


வாத்தியாரே எனக்குத்தான் கனவுல நமீதா,நயன்தாரா எல்லாம் வராங்க,கண் பார்வை இல்லாதவர்களுக்கு கனவு வருமா ?

கனவு பொதுவாக காட்சியுடன் தொடர்புடையது ,மூளையிலுள்ள பார்வைப்புரணி (visual cortex) என்ற பகுதியே பார்வை உணர்ச்சியை முறைப்படுத்துகிறது,நாம் உறங்கும்போதும் செல்கள் இயங்கிக் கொண்டிருக்கும்,அவற்றின் தன்னியல்பு இயக்கத்தால் தோன்றும் சாயல்கள் மற்றும் நிகழ்வுகளே கனவுகள் ஆகும்.

தூக்கத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலோ அல்லது இடைவெளியிலோ தான் கனவு வருகிறது ,உறக்கத்தின் அந்த பகுதியை விரைவு விழியியக்க உறக்கம்(REM-Rapid Eye Movement sleep) என்பர் .

பார்வையற்றோருக்கு கனவு தோன்றுமா என்பது அவரது பார்வஐப்புரணி துடிப்புடன் செயல்படுகிறதா என்பதை பொறுத்தது ,பார்வைப்புரணி பழுதாகாத பார்வையற்றோரால் கண்டிப்பாக கனவு காண முடியும்,ஆனாலும் அவை வெறும் ஒளித் தெறிப்புகளாக மட்டுமே இருக்கும் (flash).

என் தம்பி பஸ்லயோ,கார்லயோ போனாலே வாந்தி எடுத்துடுறான் அது ஏன்?
உம் இதுக்கு பேரு மோஷன் சிக்னஸ், வாகனங்கள் முன்னும் பின்னும் அசைந்து குலுங்குவதால்,சிலரது உட்செவியிலுள்ள (inner ear ) உடல் சமநிலை நரம்புகள் மிகுதியாக தூண்டப்பட்டு குமட்டலும்,வாந்தியும் வருகிறது .பயணம் செய்து பழகிவிட்டால் இந்த பிரச்சன இருக்காது.

பஸ்ல போன ஒரு ரூபாய்க்கி புளிப்பு முட்டாய் வாங்கிக் கொடு,சரியாய் போயிடும்.


சரி இத்தன கேள்விக்கு பொறுமையா பதில் சொன்னேன்ல,நான் உன்ன ஒரு கேள்வி கேக்குறன் சொல்லு?

சரி கேளுங்க

உனக்கு எத்தன கேர்ள் பிரண்ட்ஸ் இருக்காங்க,உண்மையச் சொல்லு ?

அவ்வ்வ்வ் பப்ளிக்க வச்சி இதெல்லாம் கேக்க பிடாது , கேட்டாலும் 12 பிரண்ட்ஸ் தான்னு சொல்ல மாட்டேனே

டேய் மர மண்டயா அதான் நீ யே சொல்லிட்டியே

ஆஹா! சரி சரி விடுங்க ஒரு இளைஞன் வாழ்கையில இதல்லாம் சகஜமப்பா...

சரி டா ,மணி ஆயிடிச்சி,வீட்டுக்காரி திட்டுவா வரட்டுமா,மீண்டும் சிந்திப்போம்

நீங்களுமா,சரி வாத்தியாரே வாங்க !!!

பில் கேட்சிடம் கேள்விகள்-ஃபார்வட் மெயில்

புரட்சியை பற்றி எழுதி கொஞ்சம் போர் அடிக்குது ,அதனால நேத்து வந்த ஒரு மின்னஞ்சலை தங்களுடன் பகிர்கிறேன்

இது வெறும் பார்வேட் மெயில் தான்........

________________________________________________________________

என்னுடைய நண்பரின் சில சந்தேகங்கள்...................


நான் திருச்சியில் இருந்து
எழுதுகிறேன். நான் நேற்று ஒரு கணிப்பொறி வாங்கினேன். அந்த கணிப்பொறியை
உபயோகிக்கும் போது நான் கண்டறிந்த சில குறைபாபடகளை தங்களின் பார்வைக்கு
கொண்டு வருகிறேன். இதுவரை யாருக்கும் தங்களை எதிர்த்து எழுத
தைரியமில்லாததால் நான் எழுதுகிறேன்.நெல்வேலி பக்கத்தில் உள்ள சிறு
குக்கிராமத்தில் இருந்து எழுதுகிறேன்.1. இணையத்தில் இணைப்பு கொடுத்த பிறகு நான் என்னுடைய ஹாட்மெயில் அக்கவுண்டை திறக்க முயற்சிக்கும் பொழது பாஸ்வோர்ட் என்ற பகுதியில் மட்டும்
என்ன தட்டச்சு செய்தாலும் ****** என்றே வருகிறது. ஆனால் மற்ற இடங்களில்
ஒழுங்காக தட்டச்சு ஆகிறது. நான் ஹார்டடுவேர் பொறியாளரை அழைத்து
சோதனையிட்பொழுது அவர் தட்டச்சுப் பலகையில் எந்த பிரச்சனையுமில்லை என்று
கூறினார்.

ஆகவே எப்போதும் என்னுடைய அக்கவுண்டை திறப்பதற்காக ****** என்ற பாஸ்வேர்டை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. என்னால் கூட என்னுடைய
ஹாட்மெயில் பாஸ்வேர்ட் என்னவென்று தெரியாததால் தயவுசெய்து என்னுடைய
அக்கவுண்டை சோதனையிட்டு என்னை இந்தத் தீராத பிரச்சனையிலிருந்து என்னை
மீட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


2. என்னால் Shut_Down பொத்தானை அழுத்தியபிறகு எதுவுமே தட்டச்சு செய்ய முடியவில்லையே ஏன்?

3. டெஸ்க்டாப்பில் Start என்ற பொத்தான் இருக்கிறது. ஆனால் Stop என்ற பொத்தான் இல்லையே ஏன்? வைக்க மறந்து விட்டீர்களா?

4. மெனுவில் Run என்ற பொத்தான் இருக்கிறது. எனக்கு மூட்டு வலியாக இருப்பதால்
என்னால் ஓட முடியாது. ஆகவே அந்த பொத்தானை Sit என்று மாற்ற முடியுமானால்
எனக்கு உட்கார்ந்து கொண்டே இயக்குவதற்கு வசதியாக இருக்கும்.


4. கணிப்பொறி திரையில் Re-Cycle Bin என்று ஒன்று இருக்கிறதே. அப்படியானால் Re-Scooter என்று ஒன்று எங்கேனும் இருக்கிறதா? ஆனால் நான்
ஏற்கனவே ஸ்கூட்டர் வாங்கிவிட்டேனே?

5. Find என்ற ஒரு பொத்தான் இருக்கிறதே. அது சரியாக இயங்கவில்லை எனது மனைவி நேற்று வீட்டு சாவியை
தெலைத்து விட்டு அதில் தேடியிருக்கிறாள் ஆனால் அவளால் கண்டுபிடிக்க
முடியவில்லையே. விளக்கம் கூறவும். ஏதேனும் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்குமோ?


6. ஒவ்வொரு நாள் இரவிலும் எனது Mouseசை பூனையிடமிருந்து காப்பாற்ற நான் படும் பாடு படவேண்டியதாக இருக்கிறது.ஆகவே மவுஸோடு தாங்கள் நாயும்
வழங்கினால் மவுஸை பாதுகாக்க வேண்டிய கவலை இருக்காது அல்லவா.? எப்படி யோசனை?

7. என்னுடை மகன் Microsoft Word கற்று விட்டான் இப்போது அவன் Microsoft
Sentence படிக்க ஆசைப்படுகிறான்.எப்பொழுது அதனை வழங்குவீர்கள். ஆகவே
இதுபோன்ற குறைகளை எல்லாம் களைந்துவிட்டால் உங்களுக்கு இந்தநாள் மட்டுமல்ல எந்த நாளும் இனிய நாள்தான்.

பெண் சிங்கம் சூ கி


என்னடா சூ கி - என்று என்னெனவோ சொல்றானே என்று பாக்காதீங்க,இவர் தான் பர்மாவின் புரட்சிப் புயல்.

20 வருடங்கள் வீட்டுச் சிறையில் அடைத்தும் தளராதவர் பர்மாவின் சூ கி(suu kyi)இவரது அப்பா ஆங் சாண்(aung san) நவீன பர்மாவின் தந்தை,அவர் தான் பிரிட்டனிடமிருந்த்து பர்மாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தவர்,ஆனால் அதற்கடுத்த சில நாட்களிலேயே படுகொலை செய்யப்பட்டார்,பர்மா ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் உயர் படிப்பு முடித்த சூ கி 1988 ஆம் ஆண்டு பர்மா திரும்பினார்,பர்மாவில் ராணுவத்தின் அராஜகத்தை கண்டு வெகுண்டார்,ஜனனாயக ஆட்சி மலர முழு மூச்சுடன் இங்கினார்.

அவருக்கு மகாத்மா காந்தி தான் ரோல் மாடல்,அஹிம்சை வழியிலேயே தன் போராட்டங்களை நடத்தினார்.

1990 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சூ கி-க்கு ஆதரவாக 82 சதவீத மக்கள் ஓட்டு போட்டார்கள்.ஆனால் ராணுவமோ இந்த தேர்தல் செல்லாது என்று அறிவித்து சூ கி-யை வீட்டுக் காவலில் அடைத்தது.


கடுமமையான தனிமையான வீட்டுச் சிறையில் வாடினார் சூ கி,கேன்சரால் பாதிக்கப்பட்ட தன் கணவரை பார்க்க கூட தடைகளை விதித்தது,அவர் இறந்த போதும் கூட கடும் கட்டுப்பாடுகளுடன் தான் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

"மீண்டும் பர்மாவுக்கு வர மாட்டேன்" என்கிற உத்தரவாதத்தோடு வெளிநாட்டில் தஞ்சம் அடைந்தால் வீட்டுச் சிறையிலிருந்து விடுதலை என்று பர்மா அரசு பேரம் பேசியது , அசைந்து கொடுக்கவில்லை இந்த இரும்புப் பெண்மணி.

2002 இல் ஐ.நா-வின் தலையீட்டால் அரசுக்கும்,சூ கி - க்கும் இடையில் ஒப்பந்தம் உருவானது.உடனடியாக வீட்டுச் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

அதோடு விட்டதா சூ கி செல்லுமிடமெல்லாம் கலவரத்தை உருவாக்கியது அரசு,இதையே காரணம் காட்டி மீண்டும் வீட்டுச் சிரையில் அடைத்தது.

பல உலக நாடுகள் எச்சரித்தும் இன்று வரை அசையவில்லை அரசு,காரணம் சீனா-வாகத்தான் இருக்க முடியும்,ஏனெனில் நம் இந்தியாவிற்க்கும் சீனா - விற்க்கும் இடையில் தான் இந்த பர்மா இருக்கிறது.பர்மா தன் கையில் இருந்தால் இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டலாம் என்ற ஆசையில் தான் இப்படி செய்து வருகிறது.

சூ கி இந்தியாவிற்க்கு ஆதரவானவர்,அதனால் தான் இன்று வரை அவருடன் மல்லுக்கு நிற்கிறது.இதுதான் உலக அரசியலோ.....


புரட்சி எரியும்..........

புரட்சியின் மறுபெயர் "சே"


புரட்சியின் அடையாளம் சே குவேரா , வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவின் திமிர்த்தனத்தை எதிர்த்து நின்ற மாவீரன்.

இடதுசாரிக் கொள்கைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த சே,சிறு வயதிலிருந்தே அநீதியை கண்டு ஆத்திரம் கொள்பவராக இருந்தார்.பணக்காரக் குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் தோழனாக இருந்தவர்.

அமெரிக்க முழுவதும் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம் சே- வின் வாழ்கையை திசை மாற்றியது .முதலாளித்துவம் மக்களை எவ்வளவு கொடூரமாக பிழிந்தெடுக்கிறது என்பதை கண்கூடாகப் பார்த்தார்.இனி புரட்சி மட்டும்தான் ஒரே வழி என முடிவெடுத்தார்.

முதலாளித்துவ அமெரிக்காவின் கீழ் இருந்த கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ உடனான அறிமுகம் இதை சாத்தியப்படுத்தும் என நம்பினார் "சே".அர்ஜென்டீனாவில் பிறந்த சே கியூபா பரட்சி வெற்றி பெற களம் இறங்கினார், அமெரிக்கா ஸ்தம்பித்தது, காஸ்ட்ரோ குவேராவை தன் நம்பிக்கையான தளபதியாக கருதினார்.மக்கள் சக்தி கியூபா வில் வெற்றி பெற்றது,சே விற்கு அமைச்சர் பதவி வழங்கினார் காஸ்ட்ரோ.

கொஞ்ச காலத்தில் அமைச்சர் பதவியை துறந்து காங்கோவின் விடுதலைக்கு போராட ஆப்ரிக்காவிற்கு சென்றார் ,அங்கிருந்து பொலீவிய நாட்டு விடுதலைக்காக போராடினார்.

சே வை விடாமல் துரத்தியது அமெரிக்க சி ஐ எ , கொரில்லா வீரர்களுடன் கடும் போர் ஏற்பட்டது,அங்குதான் சே சுட்டுக் கொள்ளப் பட்டார் .கலங்கினார் காஸ்ட்ரோ தன் ஒரு கையை இழந்தது போல் துடித்தார்,இன்று வரை அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்த்து நின்று கொண்டிருக்கிறார் காஸ்ட்ரோ.


"அநீதிக்கு எதிராக கிளர்ந்து எழுந்தால் நீயும் நானும் தோழனே " - சே குவேரா

இன்று சே வின் பேத்தியான லிடியா குவேராவும் ஒரு புரட்சிக்காரர் தான்,பசுமையை நோக்கி புரட்சி செய்கிறார் இந்த பெண் குவேரா


புரட்சி தொடரும்................

பேசும் புகைப்படங்கள் - 1

சுவாரசியமான புகைப்படங்கள் !!

ஐஸ்வரியா ராய் என்ன ரெட்ட பிறவியா...


இல்லீங்க இது அவரோட மெழுகு பொம்ம !!
(பொம்ம இல்ல பொம்ம இல்ல உண்மை)

இவுருதான் இந்த வருடத்தின் சிறந்த புருஷன் !!!!பய புள்ள தண்ணி அடிக்க என்ன வில்லத்தனம் !!!


நம்ம ஊர்ல ரோடு சரியில்ல,அது சரியில்ல என்று புலம்புகிறோம்,இத என்னனு சொல்ல!!!மாமா அந்த துப்பாக்கி வேணும் !!!


செத்த
நேரம் வெளிய வர முடியல,எடுத்து தள்ளிடுராயிங்க !!!

தொழிலதிபர் வாழ்கையில இதெல்லாம் சகஜமப்பா !!!
:-)


பிள்ளையாரின் வேண்டுகோள் ??

கடந்த வருடம் பிள்ளையார் சதுர்த்தியின் போது அலைபேசியில் க்ளிக்கியது !!


இன்றைய தகவல் :

எப்படியும் இந்த வாரம் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துடும்னு நினைக்கிறன் ,தினமலர் கல்வி மலர் இணையத்தளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து கொள்கிறார்கள்,பதிவு செய்து உங்கள் மதிப்பெண்களை மின்னஞ்சலிலோ, உங்கள் அலைபேசியிலோ பெறலாம்

முகவரி : http://www.kalvimalar.com/examresults.asp


நல்லா இருக்கோ இல்லையோ,வந்து சொல்லிட்டு போங்க!! பின்னூட்டத்தில்


காதல் கவிதை....

நிறைய ஆணி இருப்பதால் ,பதிவுகளை எழுத இயலவில்லை,அதான் இந்த கவிதையாவது போடுவோமே என்று வந்தேன்


எக்ஸாம் கவிதை ...

பரிட்சை
பயத்தில்
பக் பக்
என்று
துடித்துக் கொண்டிருந்தது
இதயம்
அவள்
வந்தால்
பேஸ் பால்
ஆடியது
பட படவென
பட்டாம்பூச்சியாய்
பறந்தது...

_________________________

இசை....

உன்னில்
மெட்டுப் போட
முயன்றேன்
குட்டினாய்

செத்துப் போ
என்றால் கூட
போய் விடுவேன்
விட்டுப் போ
என்றல்லவா
சொல்லிவிட்டாய்..

கழுத கழுத.....

கவித கவித....


பெண்ணே
நான்
உன்னை
வெறித்து
வெறித்து
பார்த்துக்
கேட்டக்
கேள்விகளுக்கு
நீ
தந்த
ஒரே
பதில்
உயர்தரப்
புன்னகை

________________________________

உலகத்தமிழ் மாநாடு.....

உலகத்தமிழ் மாநாட்டில்
சிறந்த கவிதை
உன் வருகை

Related Posts with Thumbnails