முதல் நாள்-மொக்கையின் தோற்றம்
நேற்றைய துவக்க விழா - ஒரு மீள் பார்வை
*$* நாம் எதிர் பார்த்த படி முக்கால் வாசி மொக்கை பதிவர்கள் வந்துவிட்டார்கள்,வெங்கட் இன்று காலை தான் ஆஜராகியிருக்கிறார்
*$* மொக்கை போடுவது எவ்வாறு என்ற இலவச வகுப்பும் பயிற்சிப் பட்டறையும் நடத்த சங்கம் முடிவெடுத்துள்ளது
*$* மூன்று நாள் விழாவாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
- முதல் நாளான இன்று : மொக்கையின் தோற்றம் பற்றி ஆராயப்படும்.
- இரண்டாம் நாள் : மொக்கையை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வோர் என்ற தலைப்பில் செயல்படும்.
- மூன்றாம் நாள் : மொக்கை அமைச்சரவை பற்றி விவாதம் நடைபெறும்
பரிசை வழங்கிய நண்பர் நீச்சல்காரன் அவர்களுக்கு மூன்றாம் நாள் பாராட்டு விழா நடத்தவும் ஏற்பாடு நடந்து வருகிறது.
தோற்றம்
மேலாமல் பார்க்கப் போனால் என்ன பெரிய மொக்கை என்ற எண்ணம் தோன்றும்,ஆனால் அது ஏன் வந்தது எதனால் வந்தது என்று ஆராய்வதற்காகத்தான் இந்த ஆராய்ச்சி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மொக்கை என்ற வடிவம் தனியாகத் தோன்றி இந்தளவுக்கு வளர வாய்ப்பில்லை,அது ஒன்றிலிருந்து திரிந்து பின்பு தனியாக வளர்ந்திருக்கக்கூடும்
அதாவது ஒரு அதிரடி படம் எடுக்க திட்டமிட்டு அதற்கு தேவையான முயற்சிகளும்,செலவுகளும்,திறமைகளும் வெளிப்படவில்லையெனில் அது அரைகுறையாகத்தான் முடியும்,அது தான் மொக்கை ஆகியிருக்கலாம்
அரைகுறையான கவிதை,கதை,படம்,மனிதன்,இன்ன பிற.... எல்லாவற்றையும் தான் பொதுவாக மொக்கை என்ற பெயரில் வழங்குகிறோம்
மொக்கையின் தோற்றம் பற்றிய நம் சங்க கண்மணி கோமாளி செல்வாவின் ஆராய்ச்சி கட்டுரை இங்கே படியுங்கள்
மொக்கை - பெயர்காரணம்
மொக்கை என்ற சொல் பொதுப் பெயர்சொல்லாக வழங்கப்படுகிறது
மொக்கை என்ற சொல் இந்த நோக்கத்திலும் உருவாக்கப்பட்டிருக்கலாம்
மொக்கு + கை = மொக்கை
மொக்கு = அழகான பூவின் முந்தய வடிவம் (அல்லது) பூவின் அரைகுறை வடிவம்
ஆகவே ஒருவர் கவிதையோ,கதையோ எழுதப்போய் அது அரைகுறையாக இருக்குமாயின் அது மொக்கை என்று பெயர் பெறுகிறது
இன்று மான் ஆட்டில் விவாதிக்க வேண்டிய பொருள்
% மொக்கை என்ற சொல் உருவாவதற்கான பல்வேறு சூழ்நிலைகள்,காரணங்கள்
% அழகான கவிதை மொக்கையாக மாறிய விதம்
அனைவரும் வாரீர் !!! வாரீர்
இடம் : புதிய பின்னூட்டத் திடல்
பின்.குறிப்பு : இன்றும் நாளையும் நடைபெரும் மிக முக்கியமான ஆராய்ச்சி அரங்கத்திலும்,கருத்தரங்கத்திலும் கலந்து கொள்ளும் மொக்கை பதிவர்களுக்கே கடைசி நாள் அமைச்சரவையில் முன்னுரிமை அளிக்கப்படும்

