50 பதிவுகள் ???
முதலில் என்னை வளர்த்த அனைத்து பதிவுலக நண்பர்களையும்,அண்ணன்களையும்,அக்காக்களையும் என் சிரம் தாழ்த்தி வ ண ங் கு கி றே ன்
இது ஐம்பதாவது பதிவு எழுதிவிட்டேன் என்று சொல்வதற்கான பதிவல்ல, ஐம்பதில் என்ன கிழித்திருக்கிறேன் என்று என்னுள் நானே பார்க்கும் ஒரு மீள் பார்வை தான்
எப்பவாச்சும் சும்மா இருக்கும் போது கவித எழுத தோணும்,அப்டி எழுதிய கவிதைகளை மத்தவங்களுக்கு காட்டலாம்னு பதிவெழுத ஆரம்பித்தேன்
நான் கணிப்பொறி மாணவன் என்பதாலோ சுடுதண்ணி அவர்களின் பதிவுகள் எனக்கு ரொம்ப யோசிக்க வைத்துவிட்டது,அதன் விளைவு இந்த ஜில்தண்ணி
இதுவரை என்ன பதிவெழுதி கிழிச்சிருக்கேன்
எழுத ஆரம்பித்த போது புத்தகங்களில் காப்பி அடித்தவைகளை வைத்து தோணுவதை எழுதுவேன்,அதன் பிறகு சில ஃபார்வட் மெயில்களை பதிவிட்டேன்
இவை தந்த ஊக்கத்தில் அடுத்த கட்டத்திற்கு முயற்சி செய்தேன்,அவை கவிதைகளாக வந்தது,கவிதைளை எழுதி பாராட்டு பெறும் போது,அதற்கு ஈடு இனை எதுவுமில்லை,அப்படியொரு திருப்தி கிடைத்தது
அதன் பிறகு அறிவியல் வாத்தியார் போன்ற அறிவியலை எளிதாக சொல்லும் முயற்சிகளை எடுத்தேன்,அது எனக்கு மாபெரும் வெற்றியாக தெரிந்தது,ஆனால் அதையும் என்னால் இன்று தொடர்ந்து எழுத இயலவில்லை
கவிதையை தவிர்த்து என் எண்ணங்களை அப்படியே பதிவாக அமைந்த முதல் பதிவு உலகம் எப்போது அழியும் என்ற பதிவுதான்
அதன் பிறகு கடவுள் என்னைபொருத்தவரை என்னவென்று எழுதிய பதிவு கடவுள் என் மட்டில் ,அது எனக்குள் நிறைய எண்ணங்களை விதைத்தது,இதுவரை எழுதியதிலேயே சிறந்த பதிவாக நான் கருதுவது இந்த பதிவைதான்,ஏனென்றால் என் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்தது,அதன் விளைவு அடுத்தது என்னவென்ற தேடல் தொடங்கியது
ஆம் நிறைய சந்தேகங்கள் வர ஆரம்பித்திருக்கிறது,என்னை சுற்றி இருக்கும் சமூகத்தை பற்றியும் சரி,கடவுள்,மூடநம்பிக்கை,பரிணாமம்,மதம்,மனிதம் பற்றிய நிறைய சந்தேகங்கள் வந்துகொண்டே இருக்கிறது
அதன் விளைவு என்னையே நான் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளேன்,இனி அதற்கு பதில் தேட வேண்டும்
இனி என் பதிவு எப்படி இருக்கும் ????
என் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளும் பதிவுகள் வரும்,அப்பறம் கவிதைகள்,வித்யாசமான என் சிந்தனைகள்,நான் ரசித்தவைகள் என்று தொடர்ந்து என் பயணத்தை தொடரலாம் என்று நினைக்கிறேன்
ஆனால் இந்த அளவுக்கு எழுதியதற்கு காரணம் நீங்கள் தான்,உங்கள் உண்மையான அன்பினால் வரும் ஒவ்வொரு பின்னூட்டமும் என்னை மீண்டும் மீண்டும் எதையாவது தேடத் தூண்டுபவையாக இருக்கும்
இதுவரை ஒன்னும் பெரியதாக எழுதிவிடவில்லை,ஆனால் இனி தேடுவதற்கு நிறைய இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது
நிறைய படிக்க ஆரம்பித்திருக்கிறேன் புத்தகங்களும் சரி,பதிவுகளும் சரி.
அப்பறம் நிறைய சொந்தங்கள் கிடைத்திருக்கிறது மாப்பி என்று கூப்பிடும் நட்புகளும்,தம்பி என்று கூப்பிடும் அண்ணண்களும்,அக்காக்களும் கிடைத்திருக்கின்றன,இதுவே எனக்கு மிகப் பெரிய வரப் பிரசாதமாக நினைக்கிறேன்
அனைத்து சொந்தங்களுக்கும் ஒரு வேண்டுகோள்,நான் இதுவரை எழுதிய பதிவுகளை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பின்னூட்டத்தில் மறக்காமல் பதியுங்கள்,ஏனென்றால் என்னை அடுத்த முயற்சிக்கு தூண்டுபவையாக அவை இருக்கும் ,ஒரு FEED BACK ஆக இருக்கும்
மீண்டும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
