Showing posts with label கவித மாதிரி. Show all posts
Showing posts with label கவித மாதிரி. Show all posts

கல்லூரிக் கலாட்டாவும் சில கவிதைகளும்

ஒரு ரெண்டு மூணு வாரமா இநத பக்கம் வர முடியாம போயிடுச்சி, மொக்கைகள் கம்மியா இருக்கு,ஆளாலுக்கு உருப்படியா எழுத ஆரம்பிச்சிட்டாங்க,இப்படியே போனா தமிழ் பதிவுலகம் என்னாவது சரி அதான் மொக்கை ரிட்டன்ஸ்

காலேஜும் போக ஆரம்பிச்சாச்சு புது நண்பர்கள் நிறைய பேர் கிடைச்சிருக்காங்க(தோழிகள் கிடைக்கலன்னு சொன்னா நம்பவா போறீங்க),புது சூழ்நிலை எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு

                                      *****************************

முதல் நாளே வாந்தி சாரி வாத்தி ஒருவர் யாரெல்லாம் ப்ளாகரா இருக்கீங்க,கைய தூக்குங்கன்னு சொல்ல,நான் மட்டும் தைரியமா கைய தூக்கிட்டேன்(ஆமாம் நான் ப்ளாகரா ?),  நான் மட்டும் கை தூக்க ஊரே என்னை பார்க்க ஆரம்பத்தது, அந்த வாத்தி whats your latest blog என்று கேட்க நான் கோக்குமாக்கு என்று  உளர,என்னை பாத்து  அத்தன பொண்ணுங்களும் சிரிக்க எப்படியோ சமாளிச்சேன்

                                      *****************************

ஒரு வாரக் காலத்தில் எல்லா பய புள்ளங்களுக்கும்  பட்டப் பேர் வச்சாச்சு, எனக்கு என்ன பேர் வச்கிருக்காங்கன்னு சொல்ல மாட்டேனே ( தெறம தெறம) :)

                                    *******************************

சென்னை வாழ்க்கையை  நல்லா அனுபவிக்கிறேன் முன்பு போல் விடியற்காலை 11 மணி வரை தூங்க முடியாவிட்டாலும்  முன்னிரவு 5.30 மணி வரை தான் தூங்க முடிகிறது(தாங்க சாரி தூங்க முடில)


                                    ********************************
மொக்க கவுஜைகள் ரிட்டன்ஸ்


சென்ற வருடம்
காதலித்த அவளுக்காக
எழுதிய கவிதையை
இப்போது காதலிக்கும்
அவள் படித்துப் பார்த்து சிரிக்கறாள்
அவளுக்கென்று நினைத்து

++===++===++===++===++===++


என் 
வாழ்க்கை பேனா 
அவன்,அவள்களை 
படித்து எழுதியதால் 
எப்போதும்
மகிழ்ச்சியில் 
பொங்கியே 
இருக்கிறது 
==++===++==++==++===++===
 நான் 
அவளோடு அதிகம் பேசிய
வார்த்தை 
"மௌனம்"
==++==++==++==++==++==++==++
என் அழகுப் பேயின் 
கன்னக் குழிகளில் 
காதல் ரசத்தை 
ருசித்ததால நான் 
என் வசம் இல்லாமல் போனேன்
டிஸ்கி :  நேரம் இல்லாததால்  சரியா மொக்கை போட முடியல,கூடிய சீக்கிரம் ஃபுல் ஃபார்முல ஆரம்பிச்சிடுறேன்

இரவுக் கவிதையும் இரவல் கவிதையும்

தூக்கம் எதிரியாய் தெரியும் சில இரவுகளில் மனதில் கிறுக்கியவை சில

*** இரவுக் கவிதைகள் ***


அவளெனும் 
வீணையை மீட்டினேன் 
உச்சஸ்தாயியில் 
பிறந்தது 
மௌன ராகம்....

###############################

இலக்கணமில்லா
கவிதையும் தீருமோ 
அந்த 
அழகின் இலக்கணத்திற்கு 
முன்னால்

###############################

அன்று 
வெட்கச் சிணுங்களில் 
ஒளிந்து மறைந்தவள் 
இப்போதும் 
சிணுங்குகிறாள் 
என்னுள் 
ஒளிந்து கொண்டு 
 
###############################
 
அவள்
பார்வையால் 
தீணி போடாததால் 
இப்போது பசியெடுத்து 
கத்த ஆரம்பித்துவிட்டது
கா...கா....காதல்
 
 
 *** இரவல் கவிதை  ***
 
எத்தனை முறை தான் என்னோட கவிதைய படிச்சி அலுத்துப் போயிருப்பீங்க, அதான்  ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னு தோழி மதுர பொண்ணுகிட்ட சில கவித எழுதி கேட்டேன்...அதையும் பாருங்க

அன்பே உன் நினைவலைகள்
கனல் நெருப்பாய் என்னை
கடந்து செல்வதால்
கண்களை மூடினாலும்
அதிலும் நீ மட்டுமே தெரிகிறாய்.
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 
உனக்கான அழகிய கவிதையொன்றை
அலசி கொண்டு இருந்த போது
உனக்கே உரித்தானதாய் ஒரு கவிதை
பறந்து வந்தமர்ந்தது 
அதுவோ
உனக்கான கவிதை இந்த
உலகத்தில் இல்லை என்ற
செய்தியையே கொண்டு வந்து இருந்தது!

போண்டா வடையும் - பாக்கெட் கவிதையும்

** இந்த வார போண்டா **

எங்கெங்கும் காணினும் போலியடா

தமிழ்நாடு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கா சேர்கை கலந்தாய்வில் பல மாணவ-மாணவிகள் போலி மதிப்பெண் சான்றிதழ்களை பயன்படுத்தி விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது

பொறியியல் சேர்க்கை - 50 போலி சான்றிதழ்களும்மருத்துவ சேர்க்கை - 10 போலி சான்றிதழ்களும்

இது முதல் முறையாக தமிழகத்தில் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது,இதற்கு முன்னரும் இது போன்ற போலிக்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது
மருத்துவ கலந்தாய்வில் இருந்த 10 போலி சான்றிதழ்களில் 9 பெண்களுடையதாம்.

இது தொடர்பாக இருவர் கைதும் செய்யபட்டுள்ளார்கள்,அவர்களின் விசாரித்ததில் அவர்கள் 500 க்கு மேற்பட்டோருக்கு போலி சான்றிதழ் தயார் செய்து கொடுத்திருக்கிறார்களாம்,பார்ப்போம் இன்னும் எவ்வளவு வெளிவருகிறது என்று ????

*** மிச்ச மீதி வடைகள் ***

* இந்தியாவின் முதல் உலாவி என்று ஒன்று கிளம்பியுள்ளது,EPIC BROWER
பிரபல நிறுவனம் மொசில்லா இதை வெளியிட்டுள்ளது

தீம்சுகள் மற்றும் சைடுபார் வசதி தான் இதன் சிறப்பம்சம்

ஓவர் லோடு ஏற்றப்பட்ட லாரி போல் மெதுவாகவே இயங்குகிறது

தரவிறக்க

* டெஸ்ட் பூட்டிகளிளிருந்து ஓய்வு பெறுகிறார் பாகிஸ்தான் அதிரடி
ஆட்டக்காரர் அப்ரிடி

* இந்திய ரூபாய்க்கான சின்னம் மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,அதில் ஹந்தி எழுத்து மட்டும் இருப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம்,விரைவில் சின்னம் வெளிவருமா ??

* சோனியா என்ன சொன்னாலும் சரி நான் மக்கள் பயணம் சென்றே தீருவேன் என்கிறார் ஜெகன் (ஆந்திரா)


பாக்கெட் கவிதை

உன்னோடு பேசாத
நாட்கள் இல்லை
சீண்டாத நொடிகளும் இல்லை

உன்னை பிரிந்த நேரங்கள்
யாருமில்லா காட்டிலலைவது போல்
தனிமையயே
உணர்கிறேன்

நான் உறங்கிய பிறகு தான்
நீ
உறங்குவேன்
என்கிறாய்

நான்
சற்று வறுமையில்
இருக்கறேன்
என்பதயே
நீ
சொல்லித்தான்
அறிந்து கொண்டேன்
"உங்களிடம் குறைவான தொகையே உள்ளது"

*** அலைபேசி ****

♥ ஏமிக்கு ஒரு காதல் கடிதம் ♥


உனை முதன் முதலில்
பார்த்தேன்
✔ சென்னையில்

அத்தனை பேர்
இருக்க
என்னை மட்டும்
ஏன் அப்படி பார்த்தாய் :)


பார்த்ததோடு விட
வேண்டியதுதானே
இந்த மர மண்டையில்
♪ பூக்கள் பூக்கவும் ♪ வைத்தாய்

நீ தமில் கற்றுக் கொண்டதே
என்னிடம்
பேசத் தானா !!

எனக்கு குஸ்திலாம்
போட தெரியாது ✖
சொல்லு
உனக்காக
மொக்கயா ✂ டிஸ்கி வேணா போடறேன் !!

வாம்மா
துறையம்மா ☂
வாசல் தாண்டி
வாயேம்மா !!

ஆருயிரே
ஆர்யாவையும்
அழைத்து வா
நிரூபிக்கிறேன்
யார்
'பல'சாலி ♖ என்று

சீக்கிரம் ட்விட்டு ✝
நாம்
சந்திக்கபோகும்
அந்த நாளை

Related Posts with Thumbnails