அடச்சீ...
labels இப்படியும் கேவலங்கள் , தொழில்நுட்பம் , மூஞ்சிபுத்தகம் , 36 பின்னூட்டங்கள்
புதுவருசம் வந்துட்டு...இந்த வருசத்துல எதாவது ஒன்னாவது உருப்படியா செஞ்சி கிழிச்சிருக்கோமான்னு பாத்தா அப்டி ஒன்னுமில்ல..சரி வரும் வருசத்துலையாவது எதையாவது செய்வோம்(இன்னும் எத்தன வருசத்துக்குடா இதே டயலாக்க விடுவீங்க :( )
சரி மேட்டருக்கு வருவோம்....
மூஞ்சிபுத்தகம் அதாங்க FACEBOOK.. நம்மாளுங்க பாஷையில் சொல்ல போனா ப்ளாகரை போல ஓசி-யில் கும்மியடிக்க கிடைத்த இன்னொரு வரப்பிரசாதம்..அவ்ளோதான்
இங்கும் ஆண்களுக்கு நிகரா பெண்கள் வலம் வருவதில் மகிழ்ச்சியுடன் கூடிய வருத்தம் தான், ஏன் இங்கும் பெண்கள் தான் பாதிப்புக்குள்ளாகிறார்கள்
நம்ம பொண்ணுங்களுக்கு இதை சொல்லியே ஆகணும், நீங்க அழகு தான் இல்லன்னு யாருமே சொல்ல,அதை ஏன் ஊருக்கே காட்டனும்?
இது ஒரு ஃபேசனாவே ஆயிட்டு....பேஸ்புக்குல போடுறத்துக்காவே ரகம் ரகமா போட்டோ எடுக்குறாயிங்க...இவிங்க
போன வாரம் ஒரு பெண்ணின் போட்டோவை எதார்த்தமாக பார்க்க நேர்ந்தபோது...அதிலிருந்த கமெண்டுகள்...ச்சீ இப்டி கூடவா கெளம்பிருக்காயிங்கன்னு சொல்ல வைத்துவிட்டது
அப்பெண்ணின் உடலை வர்ணித்து இப்படி அப்படி என்று..ஆங்கிலத்தில் கேவலமாக எழுதியிருந்த அத்தனை பேரின் பேரும் இப்படித்தான் இருந்தது..john silverstock, mary brown, peter smith எல்லாம் வெளிநாட்டு ஆளுங்களா இல்ல நம்மாளுங்களே இப்டிபட்ட பேரில் திரியிராயிங்களான்னு தெரியல :(
எங்க போனாலும் எல்லா வகையான ஆளுகளும் இருக்கத்தான் செய்யுறாயிங்க... நாமதான் கவனமா இருக்கனும் :)
தாய்குலமெ உங்களுக்குத்தான் சொல்றன் கேட்டுக்கங்க
நாம் பொழுதுபோக்குக்காகவும் நட்புகளை ஆராதிக்கவும் இந்த மூஞ்சிபுத்தகம் இன்றியமையாத ஒன்றாயிட்டு..சரிதான் ஆனாலும் நீங்கதான் உசாரா இருக்கனும்
## தெரியாத நபர்களை சேர்க்கவே சேர்க்காதீங்க
## போட்டோக்களை இங்கு அப்லோடு செய்து.. நீங்களே மாட்டிக்காதீங்க. நாளக்கி உங்க போட்டோக்களிலும் இது மாதிரி கேவலமான பின்னூட்டங்கள் வரலாம், அதுமட்டுமில்லாம உங்க போட்டோவ அலாக்கா தூக்கி பல்வேறு கேவலங்களுக்கு பயன்படுத்தும் கயவர்கள் இணையத்தில் பலர் வலம் வருகிறார்கள் என்பதையு மறந்துடாதீங்க
## அப்படியே உங்கள் நண்பர்களுக்கு போட்டோக்களை காட்ட வேண்டுமென்றால் இருக்கவே இருக்கு மின்னஞ்சல்(E-mail), அதுல பகிர்ந்துக்கங்க
## பேஸ்புக்கில் நிறைய கட்டுப்பாடுகளும் இருக்கின்றன..அவைகளும் பயன்படுத்துங்க...
Facebook privacy settings
# நம்ம குரு சுடுதண்ணி அவர்களின் இந்த இரண்டு பதிவும் கண்டிப்பா உங்களுக்கு பயன்படும்..படிச்சி பாருங்க
இணையத்தில் புகைப்படம் வெளியிடும் முன்- 1
இணையத்தில் புகைப்படம் வெளியிடும் முன்- 2
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)