Showing posts with label சிறுகதை மாதிரி. Show all posts
Showing posts with label சிறுகதை மாதிரி. Show all posts

மீண்டும் ஒரு ப்ரியா


முஸ்கி : இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களும்...சம்பவங்கள் அத்தனையும் கற்பனையே :)

ரு நிற நீர்வீழ்ச்சி போல் தறையில் வீழ்ந்து கிடந்தது தார்சாலை...இரவு 10 மணி...என்னை போலவே அந்த பேருந்தும் வெறுமையாகவே இருந்தது..இந்த இருபது நிமிட பயணத்திற்க்குள் நான்கு வருட கல்லூரி நினைவுகளுக்குள் நீந்தியே வந்துவிட்டேன்....ஆமாங்க என் கல்லூரி வாழ்க்கை முடிஞ்சி போச்சு...இனி கலாட்டா இல்ல...கூத்து இல்ல...ம்ம்ம் அந்த காதலும் இல்ல..இந்த நாலு வருசத்துல முலுசா சம்பாதிச்சது ஒரு முப்பது முப்பத்தஞ்சி நட்புகளை தான்..ம்ம்ம் எல்லாம் முடிஞ்சிபோச்...

ஊருக்கு போகனும்...அதுக்குத்தான் இப்ப கோயம்பேடு போயிட்ருக்கன்...டஜன் டஜனாக மக்களை உள்ளும்-வெளியும் தள்ளிக் கொண்டிருந்தது பேருந்து நிலையம்...எல்லா கைகளிலும் வாட்டர் பாட்டில் அல்லது அலைபேசி(கள்)...

கிருஷ்ணகிரி..ஓசூர்..பாண்டி...பாண்டி...விழுப்புரம்...கடலூர்...திண்டிவனம் என ஊர்களை கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தனர்...நம்ம ஊர் பக்கம் செல்லும் பேருந்துகளை ஒரு வழியாக தேடிப் பிடித்ததில்..நின்று கொண்டிருந்தது ரெண்டே ரெண்டு தான்..சரி போறதுதான் போறோம்...அந்த புது வண்டிலதான் போவோமேன்னு ஏரியாச்சு...ஒன்னும் கூட்டம்லாம் இல்ல...

வழக்கம் போல் பக்கத்து சீட்டில் பெருசு-வழக்கத்திற்க்கு மாறாக முன் சீட்டில் ஃபிகர்...நீல நிற டீ-சர்ட்...அப்பாவோடத்தான் வந்தா..ஆனா அவர் நாலு சீட் முன்னாடி...எடம் இல்ல போல....பரவாயில்ல என் டார்லிங் சமந்தா அளவுக்கு இல்லனாலும் ஏதோ இருந்தா..ச்ச சுமாரா அழகா இருக்கா..அதுவும் சென்னை எப்டியும் பத்து பதினஞ்சி பாய் ஃப்ரெண்ட்சு இருப்பானுங்க என எதை எதையோ முணுமுணுத்தது மனசு..

வேகம் பிடித்தது பேருந்து..என் எண்ணங்களும் தான்...சென்னையை தாண்டியாச்...டிக்கெட்டும் போட்டாச்...அடுத்து என்ன லைட் ஆஃப்

எனக்கு தூக்கம் வரல...இருளில் நகர்ந்து கொண்டிருந்த நிழல்களை பார்த்துக் கொண்டே நகர்ந்தது நேரம்..


மணி 12ஐ தாண்டி ஓடிக் கொண்டிருந்தது..இஞ்சின் சத்தத்திற்கு இடையிடையே உச்ச்..உச்ச்....யாரோ எதற்க்கோ முனகுவது போன்றதொரு சத்தம் என்னை தொந்தரவு செய்தது...பெரியவர் ஒருவர் தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தார் அவரா இருக்குமோ...இல்ல பின் சைடு பச்ச கொழந்தய வெச்சிருக்குற பெண்ணா ? சரி நாம தூக்கத்தை வர வெப்போம்னு கண்ண மூடிக்கிட்டு கொஞ்ச நேரமிருந்தன்...மீண்டும் மீண்டும் அந்த உச்'...என்னை வெறுப்பேத்தியது

இங்கு யாரோ பக்கத்தில்தான்..சீட்டிலிருந்து சற்று நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்....ஆமாம் அவ தான்...அந்த சத்தம் அவகிட்டேந்துதான்..அந்த முன் சீட் பெண் தான்...

என்னவா இருக்கும்...மூட்டை பூச்சியா இருக்குமா ? இல்ல எதும் ஒடம்பு சரியில்லையா..ச்ச ச்ச பார்த்தா நல்லாத்தான இருக்கா

திரும்ப திரும்ப...உச்' சத்தம்...இப்போது ஒரு பக்கமாக ஒருக்களித்து கொண்டு...ஏதோ என்னிடம் பேச வருவது போலவே சிணுங்கிக் கொண்டிருந்தாள்

ம்ம்ம் நீண்ட நேர யோசனைக்கு பிறகு அலைபேசியை இயக்கி..அதன் வெளிச்சத்தை...அவளின் உச்'சிற்கு பதிலாக்கினேன்...சட்டென திரும்பியவள்..இதற்க்குத்தான் இத்தனை நேரமாய் காத்திருந்தது போல்...அவள் அலைபேசியில் எதையோ தட்டச்சி எனக்கு தெரிவது போல் காட்டினாள்..திரையில் இருந்தது hai

எனக்கொன்றும் புரியவில்லை...இப்படியொரு இரவில்..அப்படியொரு பெண்ணிற்க்கு என்னிடம் பேச என்ன இருக்க போகிறது..

சரி என்னதான் பாத்துடுவோமே...முன் சீட்டில் சாய்ந்து..அவளுக்கு மட்டும் கேட்கும் அளவான குரலில் ஹாய் என்றேன்...

பக்கத்து சீட் பெருசு...குறட்டையில் ரிதமிக் ஆர்கஸ்ட்ராவே நடத்திக் கொண்டிருந்தது...

அவள் காதில் கண்டிப்பாய் விழுந்திருக்கும்..ஆனால் இன்னும் ஒன்னும் ரியாக்ஷன் இல்ல..இப்ப என்னால முடியல

ச்ச இந்த பொண்ணுங்களே இப்டிதான்...ஒருத்தன கெளப்பி விட்டுட்டு போயிடுவாளுக...நாங்க இப்டி பொலம்பனும்

என்னதான் கல்லூரியில் எத்தனையோ பெண்களுடன் பேசிருக்கன்...பழகிருக்கன்..கடல போட்ருக்கன்..ஆனா இந்த நடு ராத்திரில வந்த  hai இந்த பாடு படுத்துகிறது...

அவ என்னதான் பண்றான்னு பார்க்கலாமேன்னு...பேக்க எடுக்குற மாதிரி எந்திருச்சி...பார்த்தா அந்த புள்ள தூங்கிடுச்சி....

ம்ம்ம் அவ எதுக்குதான் என்னதான் என்ட்ட பேச வந்தா...தெரிஞ்சே ஆகனும்...ஏதோ ஒரு தைரியம் எனக்குள்...டேய் 'அவள எழுப்புடா'ன்னுது

ஜன்னல் பக்கம் தான் அவள் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்..ஜன்னல் கேப்பில் லைட்டா கை விட்டு கையில் கிள்ளினால் போதும்...எந்திருச்சிருவா...பாத்துக்கலாம்

வழக்கமாக ஆடும் கைகள் இப்போது தைரியமாகவே இருந்தது...லாவகமாக கைகளை இயக்கி..முன் சீட்டிற்க்கு சென்றேன்

கை கையை தேடியது...ஆனால் தவறிப் போய் அவள் கைகளுக்கு அருகிலிருந்த மார்புகளை லைட்டா தொட்டுவிட்டது

மிரட்சியில் கைகளை வெடுக்கென உருவிக் கொண்டேன்.. நட்டுக் கொண்டன.......'முடிகள்'

அவளும் எழுந்துவிட்டாள்...ச்ச ஏண்டா ஏன்...அவள் என்ன செய்யப் போகிறாள் என்ற பயத்தை விட அந்த தொடுதல் தந்த கிறக்கமே மிக்கிருந்தது

இப்டி ஆயிடுச்சே..அவள் என்ன பண்ணுவான்னு பெஸ்ட் கேஸ்..ஒர்ஸ்ட் கேஸ் எல்லாம் மூளை ஆராய்ந்தது

1) சத்தம் போட்டு எல்லாரையும் எழுப்பி..அவ அப்பா என் கழுத்தை பிடித்து பஸ்லேர்ந்து எறக்கி விடுவது
2) எதையும் வெளியே சொல்லாம..எங்கிட்ட மீண்டும் பேசாமல் அப்டியே செல்வது

அவள் என்ன செய்ய போகிறாள் என்ற ஆவல்.அதாங்க பயம் தாங்கமுடியல

கொஞ்ச நேர யோசனைக்கு பிறகு..அவள் அலைபேசியை எடுத்து..மீண்டும் எதோ ஒத்தினாள்

dai ennada loosu? :)

லூசா...இப்படி சம்பத்தமில்லாத  கேள்வி(பதில்) என்னை ஆச்சரியப்படுத்தியது

சரி இது வேற யாருக்காவது இருக்கும்..வெயிட் பண்ணுவோம்னு காத்திருந்தேன்..இல்ல யாருக்கும் அனுப்பல...அது எனக்குத்தான்

இப்போது அந்த சேதியை அழித்துவிட்டு..8056533228 என்ற நம்பரை டைப்பினாள்...

என்னடா இது...கத வேற மாதிரி போகுது...என்ன பொண்ணுடா இவ

என் கை தவறாவே பட்டிருந்தாலும்...ஒரு பொண்னு இப்டியா நடந்துக்குவா..பசங்கள முன்ன பின்ன பாத்திருக்கவே மாட்டாளோ

எப்டியோ நாம தப்பிச்சா சரி...அவ நெம்பரை போனில் சேமித்துக் கொண்டு

extremly sorry pa என்று மெசேஜை தட்டினேன்

k da...no worries என ரொம்ப ரிலாக்சாவே பதில் வந்தது

பிறகு ஊரென்னா...அப்பா என்ன பண்றாரு...அண்ணன் தம்பி இருக்கானுங்களா..ஒரே கடல கடலதான்..

அவ பேர உங்ககிட்ட சொல்டனா என்ன..இல்லல்ல...இவ பேரும் ப்ரியாவாம் :)

இந்த கிளுகிளுப்புளயே ஊர் வந்து சேந்தாச்சு...குட்டி தூக்கம் போட்டு எந்திருச்ச்ப்போ

3 message received

அவகிட்டேர்ந்துதான்...

dai rcharge me fr 50 rs da urgent

ஆஹா சனியன் சட பிண்ண ஆரம்பிச்சிடுச்சே..பொட்டு வெச்சு பூ  வெக்காம போவாதே ரைட்டு...priya3னு சேமித்திருந்ததை LOLனு மாத்திட்டன்

LOLனா என்னன்னு கேக்குறீங்களா...தெரியல..அதாங்க...லோலாயி :)








ஆ........

அப்போது மணி  இரவு  எட்டை தாண்டியிருக்கும் ப்ரித்வி தோசையை விழுங்கிக்கொண்டிருந்தான், முறுவலா ஒரு தோசை என்று சித்தியிடம் ஆர்டர் செய்துவிட்டு எண்ணெய் ஜாடியை எடுக்க விழைகையில் ஒரு சத்தம்

டொக் டொக் !!
ஹாய் மச்சான்  !!

நண்பன் மணி அரட்டை பெட்டியில் கூப்பிடுரான் ஹாய் மச்சி தோ வாரேன்னு இவன் உரத்த குரலில் தன்னை அறியாமல் கத்திவிட, சித்தி டேய் என்னடா யாருகிட்ட பேசுற இங்க யாருமே இல்லயே, எதாவது போன் கீன் வந்துச்சாடா

சீ ஒன்னுமில்ல என்று தலையில் தட்டிக் கொண்டு தோசை போன்றே முறுவலான ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு எழுந்தான்.

மாடிப் படிகளில் சட்டென தாவி மேல சென்ற போது கடிகாரம் சரியாக 9.30 ஐ காட்டிக் கொண்டிருந்தது, சரி எதாவது படிக்கலாமேன்னு அலமாரியில் கலைந்து கிடந்து புத்தகங்களில் ஒன்றை எடுத்து நாலு பக்கம் மேய்ந்து கொண்டிருக்கையில் 

இன்னும் ஓர் இரவு ! இன்னும் ஓர் நிலவு  
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா ! 
என் நெஞ்சிலொரு பூ பூத்ததன் பேர் என்னவென கேட்டேன் !! 
இரும்பிலே இருதயம் முளைக்குதே !

என்று கன்னாபின்னாவென்று பாடல்கள் மாறி மாறி  இவன் காதுமடலருகில் காட்டுக் கத்தலில் ஒலித்துக் கொண்டிருந்தது, மண்டையே வெடித்துவிடும் போன்ற உணர்வு  மூளை நரம்புகள்  முறுக்கிக் கொள்வைதை போல ஒரு வலி, சட்டென தன் காதில் இருந்த ஹெட்போன பிய்தெடுக்க முயற்ச்சிக்கையில் காதில் ஹெட்போனே இல்லை, பின் எப்படி இந்த சத்தம் 

அலைபேசியை சுண்டிப் பார்க்கையில் அதிலும் பாடவில்லை, அந்த சத்தத்தின் படபடப்பு அடங்கவில்லை, ஜன்னலில் எட்டிப் பார்த்தான்...மொட்டை மாடியில் ஏறி தெருவை வெறித்து பார்த்தான்...குளிரில் குட்டி நாய் ஒன்று அலரிக் கொண்டிருந்த சத்தம் மட்டும் தான்..அப்படி ஒரு அமைதி...


பதட்டத்தில் பத்து படிகள் மதமதவென குதித்திறங்கி ஆக்வாசியூரில் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரை மூன்று தம்ளர்கள் குடித்திருப்பான்..அப்போது சித்தப்பா காலை சாப்பாட்டுக்கு வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தார் ..அவரிடம் இதை சொல்லலாமா என்று ஒரு நொடி  யோசிக்கையில் அனிச்சையாக கால்கள் படிகளில் செலுத்தப்பட்டு மீண்டும் மாடிக்கே வந்தான் 

இந்த உணர்வு என்னவென்று அவனுக்கு புரியவில்லை...இதை டைரியில் எழுதிவிடுவொம், என்னன்னு அப்பரம் ஓசிக்கலாம்னு..தன் மெத்தைக்கடியிலிருந்த டைரியை எடுத்து பிப்ரவரி 16-ஐ தேடி  இந்த உணர்வை எப்படி எழுதுவது என்று மனசுல ஒருவாரு எழுத்துக்களை கோர்த்து கொண்டு 
எழுத பேனாவை டைரியில் கைவைக்க அங்கொரு அதிர்ச்சி 

தான் மனதில் கோர்த்த எழுத்துக்கள் டைரியில் அச்சுபிசகாமல் அச்சடிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போய் டைரியை வீசிவிட்டான்...இரவின் தனிமையில் பயம்  என்னவென்றே புரியாமல் மொசேக் தரையில் சப்பணக்கால் போட்டுக் உட்கார்ந்து தலையை சொரிந்து கொண்டே இருந்தான் 

தலை முடியெல்லாம் உதிர்ந்து தலைபாரமே இல்லாமல் போன்றிருந்தது  ....தன்னையறியாமல் கண்கள் சொக்கிப் போய் தரையிலேயே தூங்கிப் போய்விட்டான் ப்ரித்வி...

காலை பத்து பதினோரு மணியிருக்கும் மீண்டும் அந்த சத்தம் 
 
டொக் ! டொக்
 
இப்போது கணிப்பொறிக்குள்ளிருந்து வந்தது..மேசையிலிருந்த சுட்டியை திரையில் நகர்த்தி க்ளிக்கி இவனும் ஹாய் மச்சான் என்று அரட்டையடிக்க ஆரம்பித்தான்

டிஸ்கி :   என்ன பண்றது இந்த சுஜாத புத்தகங்கள படிக்கிறதும் , கம்பிபிட்டர  நோண்டுறதுமே பொலப்பா இருந்தா இப்பிடித்தான் எதாவது சம்மந்தமில்லாம  தோணுமாம் 




டிக்கெட்

காலை 8.30 மணி - பேருந்து நிலையம்

காலேஜ் வழியா  செல்லும் நகரப் பேருந்து வருதான்னு எட்டி பார்த்த பிரபாவுக்கு அவன் ஃபிகர் அங்கு நின்று கொண்டிருந்ததை பார்த்த போது  ஒரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்

என்னடா எப்போதும் காலேஜ் பஸ்லயே போயிடுவா,இன்னக்கி இங்க நிக்கிறா,சரி நமக்கடித்த அதிர்ஷ்டம் என்று தன்னுள் சொல்லிக் கொண்டு சிரித்தான் அவன்

பேருந்தும் வந்தது அவள் அசால்ட்டாக முன் புறம் ஏறி நின்று கொண்டாள், நண்பர்கள் டேய் அடுத்த பேருந்தில் போகலாம் டா என்று கத்தியும் காதில் விழாதது போல் அவனோ பின் புறமாக முட்டி மோதி அவளுக்கருகில் போய் நின்றான்

முழு நிலவைப் போல் பிரகாசித்திருந்தது அவன் முகம்,அவள் சிரிப்புச் சில்லரைகளை சிதற விட இவன் ஒவ்வொன்றாய் பொறுக்கிக் கொண்டிருந்தான்


இவ்வளவு நெருக்கத்தில் பிரபா இதுவரை அவளை பார்த்ததில்லை,கிறக்கத்தில் அங்கு நடந்தது யாவும் ஊமைப் படமாகவே தெரிந்தது அவனுக்கு

அங்கு எவனோ இந்த பாடலை வேறு ஓடவிட்டிருந்தார்கள்

காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை
தீயின் குடுவையில் அடைத்தால் கண்ணை

திடீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈரென்று     சடன்      பிரேஏஏஏஏஏஏஏஏஏஏஏக்
போட்டு ஓரங்கட்டினார் டிரைவர்

காரணம் டிக்கட் செக்கிங் செய்கிறார்களாம்

வெள்ளை சீருடை அணிந்த இருவர் இரு பக்கமும் நின்று கொண்டு ஒவ்வொருத்தராக செக் செய்தனர்

அப்போது தான் பிரபாவுக்கு தோணியது ஆஹா நாம டிக்கட் எடுத்தோமா தெரியலயேன்னு  சட்டை பையை துழாவியதில் கிடைத்தது சில சில்லரை காசுகள் மட்டுமே

ஒவ்வொருவராக  டிக்கெட்டை காட்டிக் கொண்டிருந்தனர்

பிரபாவுக்கு இப்போது முற்றிலும் வியர்த்து விட்டது

ஆஹா டிக்கெட் எடுக்கலன்னா இவனுக எப்புடியும் ஒரு 150 ரூவாயாவது தாளிச்சிருவானுங்க,ரூல்சு பேசினா ஃபைன் 500 கட்றியான்னு கேப்பாங்க

அவனுக்கு என்ன செய்வது என்று புரியல,இப்ப பையில் இருப்பது எல்லாத்தையும் தேத்துணா கூட முழுசா முப்பது ரூவா கூட தேறாது,பயலுவோ கூட வந்தாலாச்சும் அவனுகளாவது எதாவது வழி செய்திருப்பானுங்க  என்று பல கோணங்களில் இருந்தும் யோசனை வந்தது

இந்த பொண்ண பாத்து வாய பிளந்து பேருந்தில் ஏறினது என் தப்பு  என்று தலையிலடித்துக் கொண்டான்

அதற்குள் அந்த டிக்கெட் செக்கிங் ஆசாமி அவனை பார்த்து டிக்கெட் எங்கப்பா எடுத்து குடுத்துட்டு போப்பா,காலேஜுக்கு மணி ஆகலயா இன்னும் ?

அவன் என்னுமோ பத்து இட்லியை வாயில் வைத்திருப்பதை போல் "டிக் டிக் டிக்கெட்" என்று மழுப்பி விட்டான்

அதற்குள் அந்த ஆசாமி " ஓ உங்கிட்ட இருக்குறது பஸ் பாசா,சரி அத காட்டு"

அப்போது தான் பிரபாவுக்கு 300 வாட் பல்பு எறிந்து  நினைவுக்கு வந்தது,ஆமாம் நம்மகிட்டதான் பஸ் பாசு இருக்குள்ள,அப்பரம் என்ன பயம்...

பிரபா தலையில் அடித்துக் கொண்டு சிரித்தான் " சே அந்த பொண்ண பாத்ததும் இது கூடவா மறந்து போகும் மரமண்டையாட நீ "

டிஸ்கி : இது உனக்கு நடந்த உண்மை கதையான்னு யாராவது கேட்டீங்க,அப்பரம் ஆமான்னு சொல்லிடுவேன் ஆமாம் :)

Related Posts with Thumbnails