சொந்த கதை(முதல் முயற்சி)

மதியம் சரியான தூக்கம்,சரியாய் ஒரு 5.30 மணி இருக்கும் வழக்கம் போல என் அலைபேசி மூஞ்சில தான் முழிச்சன்

2 new messages received என்றிருந்தது

எடுத்துப் பார்த்தேன்,எனக்கு தெரியாத நம்பர் ஒன்றிலிருந்து

hi ashik how are you என்ற குறுஞ்செய்தி இருந்தது,சரி யாரோ தெரியாம மாத்தி அனுப்பியிருப்பாங்க ,நான் உடனே

sorry i am not ashik என்று தட்டினேன்

உடனே அடுத்த செய்தி

i know this is ashik, tell me என்று

நானும் really,dis s not ashik,i m vimal என்றேன்

அதற்கு oh sorry,number maaridichi,anyway v r frnds என்று reply வந்தது

என்னடா இது,யாரா இருப்பா,ஒரு வேல எதாவது பிகரா இருந்தா,சரி ஒரு பிட்ட போடுவோம் என்று

wats ur name,wat r u doing என்று பிட்டை போட்டேன்

i am divya(இங்கயும் திவ்யா வா),doing BE in pondicherry,u...

என்னால நம்ப முடியல,அது ஒரு பொண்ணு தான் என்று

i ll cal u என்றேன்

not now,my brother is here ,i ll tell u later என்றாள்

அதிலிருந்து ஒரே மெசேஜ் தான்

wat r u eating
r u sleeping
என்று தட்டிக் கொண்டே இருந்தோம்

எங்க அம்மாவின் திட்டு வேறு

***(இரண்டு நாட்களுக்கு பிறகு)***

என் நண்பர்களிடம் பீத்திக் கொன்டேன்,ஒரு பிகரு எனக்கு மெசேஜ் அனுப்புறா என்று

நண்பர்கள் அளப்பரையை கட்டினார்கள்,டேய் அது பொண்ணு தானா என்று

தெரியல அவ சைகாலஜிய பார்த்தா அப்டிதான் தோணுது

டேய் வேணாம் டா,நம்பாத...

சரி,செக் பண்ணி புடுவோம் என்று ஒருத்தன் பட்டுன்னு போன போட்டுட்டான்

ஒரு சின்ன குழத்தை தான் பேசுச்சி,அக்கா கோவிலுக்கு போயிருக்கா என்று யாரோ சொல்லி கொடுத்தார் போல் பேசியது

சரி,வேண்டாம் வேற மொபைல்லேர்ந்து ட்ரை பண்ணுன தெரிஞ்சிடும்ல என்றான் இன்னொரு நண்பன்.

அதற்குள் எனக்கு ஒரு மெசேஜ்

dont call me now, i m at my grandma ஹவுஸ் என்று

சரி கண்டிப்பா இவ பொண்ணு இல்லைடா என்றார்கள் நண்பர்கள்

அப்படியே அதை விட்டு விட்டேன்

***(ஒரு மாதத்திற்கு பிறகு)***

நண்பன் ஒருவன் அலைபேசியில், அந்த நம்பரை பார்த்தேன்
எனக்கு மனப்பாடம் ஆனா எண் அல்லவா அது....
விசாரித்த போது தெரிந்தது அது உண்மையிலேயே
.
.
.
.
.
.
.
நம்ம சேகர் பய எண் என்று
வெறுத்து போய்,அவன போன் பண்ணி திட்டினேன்

அவன் சொன்னான் "ஆம்பள கிட்ட கல்லைய போட்ட பய நீ தான்" என்றான்

(அவ்வ்வ்வ்.....இப்போதும் எனக்கு பல்பு எரிந்தது,டொயிங்......)

சரி விடுப்பா விடுப்பா..
நமக்கு இதெல்லாம் சகஜம் தானே


____________________
டிஸ்கி : இது உங்க சொந்த கதையா என்று யாரும் கேட்க வேண்டாம்,இது ஒரு கற்பனையே

நல்ல இருந்தா சொல்லுங்க ட்ரீட் வச்சுடுவோம்...
நல்லா இல்லனாலும் சொல்லுங்க,அதுக்கும் ட்ரீட் உண்டு

இன்று படித்தது...

இன்று எங்க ஊரு நூலகத்துக்கு சென்றேன்,நிறைய புத்தகங்கள் நன்றாகவே இருந்தது,அங்கு இடையில் ஒரு புத்தகத்தில் ருத்ரன் என்ற பெயரை படித்தேன்,நான் ஏற்கனவே டாக்டர் ருத்ரன் அவர்களின் பதிவை பார்த்திருப்பதால்,அந்த புத்தகத்தை சட்டென எடுத்து படிக்க ஆரம்பித்தேன்

அந்த புத்தகத்தின் பெயர் " தேவைகள் ஆசைகள் " என்று இருந்தது,ருத்ரன் அவர்கள் ஒரு சைகாலகிஸ்ட் என்பது அனைவரும் அறிந்தது,சரி அப்படி என்ன இருக்கிறது என்று மேலும் படிக்க ஆரம்பித்தேன்.

அந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த இரு விஷயங்கள் பற்றி சொல்கிறேன்
உயர்ந்த லட்சியங்களுக்காக உழைப்பவர்கள் இருக்கிறாகள் உலகெங்கும் சாகச சாதனைகள் நிகழ்கின்றன நீ நீயாகவே இரு

இந்த கருத்தின் மூலமே "நீ நீயாகவே இரு" என்பது தான்
நம் பதிவுலகத்தை எடுத்துக் கொள்வோம்,நான் எனக்கு தெரிந்த,புரிந்த அனுபவித்த கருத்துக்களை தான் பகிர்ந்து கொள்ள வேண்டும்,அதை விட்டு விட்டு,வால் பையனை போல்,சேட்டைக்காரனை போல்,எழுத முயற்சித்தால் அது வேலைக்கு ஆகாத ஒன்று.

மனித மூடர்களாக இருப்பவர்களிடமும் சொல்வதற்க்கு அவர்களிடம் ஒரு கதை உண்டு

இந்த கருத்திலும் அவ்வளவு உண்மை பொதிந்திருக்கிறது,கண்டிப்பாக ஒவ்வொரு மனிதரிடமும் நாம் கற்றுக் கொள்ள ஏதாவது ஒரு விஷயம் இருக்கும்,வாழ்கையும் அப்படித்தான் நாம் ஒடிக்கொண்டு மட்டும் இருக்க கூடாது,சுற்றத்தை கவனித்துக் கொண்டு தான் ஒட வேண்டும்.

அப்பாடா இப்பவே கண்ண கட்டுதே என்று நீங்கள் சொல்வது எனக்கும் கேட்டு விட்டது,சரி சரி புரியுது ,அத விடுங்க இங்க வாங்க..

நம்ம நித்யா ரஞ்சி இருக்குற இடத்த சொல்லிட்டாராமே...
உங்களுக்கு தெரியுமா..

இப்பவும் கடுப்பா இருக்கா ,கீழ பாருங்க


எத்தன சுத்துதுன்னு கண்டுபிடிச்சி சொல்லுங்க
கண்டுபிடிகிறவர்களுக்கு ஒரு சொம்பு ஜில்லதண்ணி பரிசாக கொடுக்கப்படும்

இப்ப இன்னா நடக்குது ...

நாராயணா கோயம்பத்தூர்ல பிரபல தொழிலதிபர் கைதாமே ...

அப்டி ஒன்னும பெருசா நடக்கலங்க...சப்ப மேட்டர் தான் சொல்றன் கேட்டுகோங்க...

நம்ம சானியா அக்காவும்,மாலிக் மச்சானும் பாகிஸ்தானுக்கு பறந்துட்டாங்கோ ,ஆமாங்க ஒரு வாரமா ஆமாம் இல்ல, இல்ல ஆமாம் என்ற மாலிக் கடைசியாக ஆமாம் என்று தலையாட்டி சட்டபடி முதல் மனைவியை விவாகரத்து செய்தார்,அப்புறமென்ன நம்ம சானியாவுக்கும் சோயபுக்கும் தலைமறைவு கல்யாணம் நடந்துடுச்சு ....போதும் இது
.

ஒரு வழியாக "சன் நியூஸ் புகழ்" நித்யா கதவை திறந்து விட்டார் பிடித்துக் கொள்ளுங்கள் என்று,நித்யானந்தா கைது ரஞ்சிதா எங்கே(இதுவும் ஒரு நியூஸ் து)





நம்ம மோடி மேட்டர்க்கு வாங்க,இந்தியாவிற்காக கல்லா கட்டும் இவருக்கே ஆப்பா,இந்த தருராள வந்துது வினையே,அவுரு ஆளுக்கு டீம வாங்கித்தரேன் பேர்வழி என்று இப்போது வருமானவரித் துறை மோடியை நோண்டுகிறது...முடிவில் யாருக்குதான் ipl கமிஷ்னர் பதவி.

ஸ்ரீநிவாசன் : உள்ளேன் அய்யா !!!!



விண்ணை தொடும் முயற்சி பாழா போயிடிச்சி,ஆமாங்க அந்த சீனா பயல் பாகிஸ்தான்ல ஏவுகனைய வெச்சுக்கிட்டு படம் காட்டுறான்,இந்திய ஏவுகணை தோல்வி,கண்டிப்பா அவன போடணும் டா.



அப்பறம் விழுப்புரம்,கேரளாவுல எடுத்த சுறா வரும் 30 ம் தேதி வெளிவருகிறார் , வழக்கம் போல் அதிரடி,சரவெடி என்று பாடு பாடிக் கொண்டே வருகிறார்,சன் பிக்சர்சின் குத்தகை நடிகை தமன்னா தான் இதிலேயும்
கல்லா கட்டுறார்.


இன்றைய வானிலை அறிக்கை

"வானிலை அறிக்கை அளிக்க இன்று இடியமின் வரவில்லை"

யோவ் !! போய் வேலைய பாருங்கய்யா

பத்துப் படங்கள் (தொடர் பதிவு)

முதலில் என்னை இந்த தொடர் பதிவிற்க்கு அழைத்த சைவகொத்துபரோட்டா அவர்களுக்கு ஒரு கோடி நன்றிகள்

என் நெஞ்சில் நிற்கும் அந்த 10 படங்கள்....


"நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவும் தப்பு இல்ல" என்ற வார்தைகள் தான் என்னை ஈர்த்தது,கமல் அவர்களின் நடிப்பு எப்போதும் போல போலித்தனமில்லாமல் இருந்தது,"நிலா அது வானத்து மேல" பாட்டு சுப்பர் ஆட்டம்,நாயகன் ஒரு நிஜ நாயகன் தான்.

அடுத்து அதாங்க தமிழ்நாட்டின் அர்னால்டு அருண் பாண்டியன் மற்றும் ராம்கி இனைந்து நடித்த இனைந்த கைகள்.நட்பிற்க்கு இந்த படமும் ஒரு எடுத்துக்காட்டு,ராணுவத்தில் இருக்கும் அருண் அசல் ராணுவ வீரன் போலவே என் கண்களுக்கு தெரிந்தார்

விக்ரம் இதுவும் நம்ம தல கமல் படம்தான்,அருமையான திரைக்கதை தழுவல், சலாமியா நாட்டில் கடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ராக்கெட்டை மீட்க செல்லும் கமல் ஆஹா,சலாமியா நாட்டின் இளவரசி சூப்பர் ஃபிகர்(பேரு தெரியலங்கோ ! தெரிஞ்சா சொல்லுங்க)

நான் கண் கலங்கிய ஒரே படம்,கண் பார்வை இல்லாத காசி யை ஏமாற்றும்
ஊர் பெரியவரும் அதை கடைசியில் தீர்த்த முடிவும் அருமை,விக்ரமின் நடிப்பு ஆஹா! ஓஹோ ரகம்

இந்த படத்தை சொல்லியே ஆகனும்,ஆயுத எழுத்து மூன்று கதாநாயகன்கள் இருந்தாலும் நம்ம ஆளு சூர்யா தான்,அருமையான மேனரிசத்தை வெளிப்படுத்தியிருப்பார்,மாணவ அரசியலும் அவர் ஸ்டைலும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு ரோல் மாடல் தான்,பாடல்களில் ரஹ்மான் ரஹ்மான் தான்.


யாரடி நீ மோகினி தனுஷின் நடிப்பிற்க்கு ஒரு ஜில்தண்ணி அபிஷேகம்,நான் ரொம்ப என்ஜாய் செய்து பார்த்த படம்,இரண்டாவது பாதி காமெடி கிராமத்து கலாட்டா தான் சூப்பர் ரகம்.நயன் தாராவும் கவர்ச்சியை குறைத்து நடிப்பில் பட்டய கிளப்பி இருந்தார்.

எனக்குள் இன்னொரு உலகத்தை காட்டிய படம் நான் கடவுள்,ஆர்யாவுக்கும் அக்கா பூஜாவுக்கும் ஒரு "ஓ" போடுங்க,இப்படியும் நடக்கிறது இந்த உலகத்தில் என்று எனக்கு உணர்த்திய படம்,இளையராஜாவின் இசையில் நான் உருகியே விட்டேன்.

காதலை அருமையாக ரசித்த படம் வாரணம் ஆயிரம்,சூர்யா சார் செய்யுற காதல பார்த்தா நமக்கே காதலிக்கனும்னு தோணும்,அப்படிப்பட்ட ரொமான்ஸ் காதல்,"அடியே கொல்லுதே" பாடல் உட்பட அனைத்து பாடலும் சூப்பர் ஹிட்.

மன்னிச்சிகோங்க ! இத நான் முன்னாடியே சொல்லி இருக்கனும்
அன்பே சிவம் அடடா,இப்படியும் ஒரு நடிகனா என வியந்த படம்,முகத்திலே தளும்புகளுடன் உலக நாயகன் பதித்த ஒரு மைல் கல்,அன்புதான் அடிப்படை எனவுணர்த்திய படம்.

இன்னொரு வித்தியாசமான காதல் படம்,அதாங்க காதலில் விழுந்தேன்,இறந்து போன காதலியை தூக்கிக் கொண்டு ஓடும் போதும் சரி,நடிப்பும் சரி,சற்றே வித்தியாசமான படம்.

இந்த பத்து படமும் எனக்கு,எனக்கு மட்டும் பிடித்தவையே !

நன்றி ! நன்றி ! நன்றி !

பெரியவரின் பக்குவம்...


இன்று காலையில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

நேற்றிலிருந்தே என் நண்பன் ஒருவன் தங்கள் வீட்டுக்கு வருமாறு வற்புறுத்திக் கொண்டே இருந்தான்,சரி இன்னக்கி போவோம் என்று கிளம்பிச் சென்றேன்

அவன் வீட்டுக்கு சென்று மத்த நண்பர்களுடன் அளவளாவிவிட்டு , ஜில்லுன்னு ஒரு ஐஸ்கிரீம் சாபிட்டோம்

அப்போது மணி மதியம் 1.30 ஆகிவிட்டது ,சரி மச்சான் மணி ஆயிடிச்சி வீட்டுக்கு கிளம்புறேன் டா என்று அணைத்து நண்பர்களுக்கும் ஒரு பாய் சொல்லிவிட்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி கிளம்பினேன்

ஒரு தனியார் பேருந்து நின்று கொண்டிருந்தது,ஏறி கடைசி சீட்டில் ஒரு பெரியவர்க்கு அருகில் உட்கார்ந்தேன்

அப்போது ஒரு பருமனான வாலிபர் பஸ்சில் ஏறி படியிலேயே நின்றார்

சற்று நேரத்தில் இன்னொரு இளைஞன் ஏறி அந்த படியில் நிற்பவரை பார்த்து ,டேய் மேல ஏறுனா இன்னா கொறஞ்சா போவ போற என்று அதட்டல் மொழியில் சொன்னான்

அந்த வாலிபரும் நான் இங்கே தான் நிப்பேன் ,இன்னா பண்ணனும் இப்ப என்று கொஞ்சம் அசால்டாக பேசினான்

நடத்துனர் வந்து சொல்லியும் கேட்கவில்லை....

அப்போது அந்த பெரியவர் , தம்பி நீங்க கோச்சிக்க பிடாது ,வயசானவன் வெயில் தாங்கல கொஞ்சம் மேல ஏறி வந்தால் காத்து வரும் என்று அவரை தட்டி கொடுத்தார்

தப்பா நினைச்சுகாதீங்க என்று மறுபடியும் சிரித்துகே கொண்டே அந்த வாலிபரிடம் கூறினார்

இவ்வளவு நேரம் படியில் அடம் பிடித்துக் கொண்டிருந்த அந்த வாலிபர் சட்டென்று மேலே ஏறி பஸ்சின் நடு பகுதிக்கு சென்று விட்டு சிரித்து கொண்டே அந்த பெரியவர்க்கு தலை ஆட்டினார்.

இவ்வளவையும் பார்த்து கொண்டிருந்தேன் நான்

மனசுக்குள்ளே பேசிக் கொண்டேன்

இதுதான் பக்குவமா... முதிர்ச்சியா .. என்று அந்த பெரியவரை நினைத்து வியந்தேன்

சாதாரண மேட்டர் தான் .. அந்த தட்டி கொடுத்து இனிமயோடும்,பண்போடும் நடந்து கொள்ளும் அந்த பக்குவமும்,முதிர்ச்சியும் எனக்கு இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்வேன்

அதை வளர்த்துக் கொள்வேன் கண்டிப்பாக, நீங்களும் பக்குவமடையுங்கள்

வாழ்வில் மகிழ்ச்சி பூக்கட்டும்....

தமிழ் கணினி...


இன்னக்கி இன்னா எழுதுறதுன்னு யோசிச்சேன் ,ஒரு நாள் கல்லூரியில் நண்பர் சொல்லிகொடுத்த சில கணினி பயன்பாடு சொற்களும் அதன் தமிழ் சொற்களும்

Acknowlege - ஏல் அறிவிப்பு
adoptor card- பொறுத்து அட்டை
add-on - கூட்டு உறுப்பு
address bus - முகவரி பாட்டை
algorithm - நெறிமுறை
alignment - சைவு
array- அணி
assembler - பொறிமொழியாக்கி
cable - வடம்
chip - சில்லு
clip art - ஆயத்தப் படம்
disk - வட்டு
hard disk - வன் வட்டு
file - கோப்பு
record - ஏடு,பதிவு
interpreter - வரி மொழி மாற்றி
router - வழிப்படுத்தி
network - வலையமைப்பு
virus - நச்சு நிரல்
random access - நேர் அணுகல்

உருப்புடியா நாளைக்காவது எழுதுவேன்னு நினைக்குறேன்........

கைரேகை பாக்கலையோ....



இங்கு கை ரேகை பார்க்கப்படும் !!!

இப்படி விளம்பரங்கள் செய்து கொண்டு வீதிகளில் சம்பாதித்து வருகின்றனர் பலர்

உன் வாழ்கை உன் கையில் (இது பாட்ஷா பட பஞ்சிங்கோ ) என்பதை விட்டுவிட்டு பலர் இந்த கை ரேகைகளில் எதிர்காலம் ஒளிந்திருப்பதாக நம்புகின்றனர்

அந்த மூட நம்பிக்கை தான் அவர்களுக்கு மூலதனமாகிறது

கையை காட்ட சொல்லி புதன் மேடு,சுக்கிர மேடு என்று அடுக்கடுக்காக மேடுகளை பார்த்து முடிவாக " வருகிற சித்திரை மாதம் 15 ஆம் தேதிக்கு பிறகு செல்வம் கொழிக்கும்,வளம் பெருகும் என்று புழுகுவார்கள்.

இந்த குறியெல்லாம் நிறைவேருதோ இல்லையோ , உங்கள் கரங்களை பார்த்து
நீங்கள் எந்த அளவிற்கு ஆரோகியமானவர் என்று சொல்லிவிட முடியுமாம்,உடல்நிலையின் எதிர்காலத்தையும் ஓரளவிற்கு கணிக்கலாம்

ஆம்,கனடா நாட்டில் உள்ள மத்திய லாங்க்ஷைர் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் ஜான் மேனிங் இன் ஆராய்ச்சி தான் இது..

விரலின் நீளமும் ஆரோக்கியமும் என்று ஆராய்ந்தார்...

அதன் முடிவுகள் சில

உதாரணமாக ஒரு மனிதன் விரலின் நீளம் அவன் வலிமையை வெளிப்படுத்தும் என்கிறார் அவர்

ஒரு சிறுவனின் மோதிர விரலின் நீளத்தை கொண்டே அவனுக்கு ல் வரும் பிற்காலத்தில் வரும் இதய நோயை பற்றி கண்டு பிடிக்கலாமாம்

மோதிர விரலை விட சுட்டு விரலின் நீளம் அதிகமாக உள்ள பெண்களுக்கு மார்பக புற்று நோய் வர வாய்ப்பிருக்கிறதாம்

ஆண்களின் சுட்டு விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்தால் பெருஞ்சுரப்பி நோய் வரலாம் என்கிறார்

இந்த நோய்களை முன்பே கண்டு பிடிக்கும் திறமை கிரேக்கர்களிடம் இருந்ததாக
வரலாறு கூறுகிறது

கை மடிப்புகளின் நிறம் மற்றும் நகங்களின் சிவப்புத்தன்மையை கொண்டும்
ஒருவருக்கு இரத்தசோகை இருக்கிறதா என்று சொல்லி விடலாமாம்

நமது பாதங்கள் ,நம்முடைய உடல் உறுப்புகளுடன் தொடர்புடையது தானாம்
பாதத்தை பார்த்தும் சிகிச்சை முறையை கண்டுபிடிப்பார்கலாம்

என்ன முழுசையும் படிச்சிடிங்களா.....

இனி ஜில்தண்ணி ஐடியா

உங்கள் உள்ளங்கையை விரியுங்கள் ,சுட்டு விரலின் அடிப்பாகத்தில் உள்ள மேட்டில்(இது அந்த மேடு இல்லிங்கோ) ,இன்னொரு கையின் பேரு விரல் நுனியை பதியுங்கள்.

பின்னர் பேரு விரல் நுனியை மெதுவாக அழுத்தி சுற்றுங்கள்

நன்றாக இருக்குமே

ஏன் என்றால் அந்த மேடு தான் நமது உணர்ச்சி மையம்....

இதை செய்து பார்த்து அருமையாக உள்ளதாக கூறுபவர்களுக்கு (புளுகுபவர்களுக்கு) ஜில் தண்ணி கிடையாது ....

சூடோ ஜில்லோ உங்களால முடிஞ்ச தண்ணிய கொஞ்சம் ஊத்திட்டு(பின்னோட்டம்) போடுங்கப்பா

காலந்தாழ்த்திகள் கிளப் (late club)

வணக்கம் பதிவுலக நண்பர்களே !

நம்மல்ல நிறைய பேர் இந்த காலந்தாழ்திகள் குரூப் ல தான் இருக்கோம்னு நினைக்கிறன்,ஆமாம் காலந்தாழ்த்திகல்னா யாரு?

அவங்க ஒன்னும் பெரிய விலங்கினமோ,பறவையோ கிடையாது
சாதாரண மனுஷ பதறுங்க தான் ,ஆனாலும் இவர்கள் தங்கள் கடமையை மறந்து விட்டு நாளை,அப்புறம் என்று வேலையே தள்ளி போடுபவர்கள்

இவர்களிடம் உள்ள பொதுவான குணங்கள்

1. ஒரு வேலையே செய்வதற்கு மூடு வரும் வரை காத்திருப்பார்கள்
2. அந்த வேலையே செய்வதற்கு இப்போது அவசரம் என்ன என்பார்கள்
3.இது ரொம்ப அதிகம் வேலையே எங்கிருந்து தொடங்குவது என்று கேட்பார்கள்

நண்பர்களே இந்த காலந்தாழ்த்திகளுகேன்றே அமெரிக்காவில் ஒரு club இருக்கிறது,இந்த கிளப்பில் சுமார் 4,000 பேர் உறுப்பினர்களாக உள்ளார்களாம்

இந்த club இன் சில வேடிக்கையான நடவடிக்கைகள்

* 1812 ஆம் அண்டு நடந்த போருக்கு 1967 ஆம் ஆண்டு எதிர்ப்பு therivithaargal

* டிசம்பர் மாதம் கொண்டாட வேண்டிய கிறிஸ்துமஸ் பண்டிகையை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் கொண்டாடினார்கள்

*இந்த club இல் உறுப்பினர் ஆக வேண்டுமென்றால்,விண்ணப்ப படிவத்தை உடனே கொடுத்துவிடக் கூடாதாம்

ஆகவே எந்த செயலையும இன்றே,இப்போதே செய்யுங்கள்

Related Posts with Thumbnails