சொந்த கதை(முதல் முயற்சி)

மதியம் சரியான தூக்கம்,சரியாய் ஒரு 5.30 மணி இருக்கும் வழக்கம் போல என் அலைபேசி மூஞ்சில தான் முழிச்சன்

2 new messages received என்றிருந்தது

எடுத்துப் பார்த்தேன்,எனக்கு தெரியாத நம்பர் ஒன்றிலிருந்து

hi ashik how are you என்ற குறுஞ்செய்தி இருந்தது,சரி யாரோ தெரியாம மாத்தி அனுப்பியிருப்பாங்க ,நான் உடனே

sorry i am not ashik என்று தட்டினேன்

உடனே அடுத்த செய்தி

i know this is ashik, tell me என்று

நானும் really,dis s not ashik,i m vimal என்றேன்

அதற்கு oh sorry,number maaridichi,anyway v r frnds என்று reply வந்தது

என்னடா இது,யாரா இருப்பா,ஒரு வேல எதாவது பிகரா இருந்தா,சரி ஒரு பிட்ட போடுவோம் என்று

wats ur name,wat r u doing என்று பிட்டை போட்டேன்

i am divya(இங்கயும் திவ்யா வா),doing BE in pondicherry,u...

என்னால நம்ப முடியல,அது ஒரு பொண்ணு தான் என்று

i ll cal u என்றேன்

not now,my brother is here ,i ll tell u later என்றாள்

அதிலிருந்து ஒரே மெசேஜ் தான்

wat r u eating
r u sleeping
என்று தட்டிக் கொண்டே இருந்தோம்

எங்க அம்மாவின் திட்டு வேறு

***(இரண்டு நாட்களுக்கு பிறகு)***

என் நண்பர்களிடம் பீத்திக் கொன்டேன்,ஒரு பிகரு எனக்கு மெசேஜ் அனுப்புறா என்று

நண்பர்கள் அளப்பரையை கட்டினார்கள்,டேய் அது பொண்ணு தானா என்று

தெரியல அவ சைகாலஜிய பார்த்தா அப்டிதான் தோணுது

டேய் வேணாம் டா,நம்பாத...

சரி,செக் பண்ணி புடுவோம் என்று ஒருத்தன் பட்டுன்னு போன போட்டுட்டான்

ஒரு சின்ன குழத்தை தான் பேசுச்சி,அக்கா கோவிலுக்கு போயிருக்கா என்று யாரோ சொல்லி கொடுத்தார் போல் பேசியது

சரி,வேண்டாம் வேற மொபைல்லேர்ந்து ட்ரை பண்ணுன தெரிஞ்சிடும்ல என்றான் இன்னொரு நண்பன்.

அதற்குள் எனக்கு ஒரு மெசேஜ்

dont call me now, i m at my grandma ஹவுஸ் என்று

சரி கண்டிப்பா இவ பொண்ணு இல்லைடா என்றார்கள் நண்பர்கள்

அப்படியே அதை விட்டு விட்டேன்

***(ஒரு மாதத்திற்கு பிறகு)***

நண்பன் ஒருவன் அலைபேசியில், அந்த நம்பரை பார்த்தேன்
எனக்கு மனப்பாடம் ஆனா எண் அல்லவா அது....
விசாரித்த போது தெரிந்தது அது உண்மையிலேயே
.
.
.
.
.
.
.
நம்ம சேகர் பய எண் என்று
வெறுத்து போய்,அவன போன் பண்ணி திட்டினேன்

அவன் சொன்னான் "ஆம்பள கிட்ட கல்லைய போட்ட பய நீ தான்" என்றான்

(அவ்வ்வ்வ்.....இப்போதும் எனக்கு பல்பு எரிந்தது,டொயிங்......)

சரி விடுப்பா விடுப்பா..
நமக்கு இதெல்லாம் சகஜம் தானே


____________________
டிஸ்கி : இது உங்க சொந்த கதையா என்று யாரும் கேட்க வேண்டாம்,இது ஒரு கற்பனையே

நல்ல இருந்தா சொல்லுங்க ட்ரீட் வச்சுடுவோம்...
நல்லா இல்லனாலும் சொல்லுங்க,அதுக்கும் ட்ரீட் உண்டு

13 Response to "சொந்த கதை(முதல் முயற்சி)"

 1. Chitra says:

  ////டிஸ்கி : இது உங்க சொந்த கதையா என்று யாரும் கேட்க வேண்டாம்,இது ஒரு கற்பனையே////
  ....... ok. நீங்கள் சொன்னால் சரிதான்.... ஹா,ஹா,ஹா,........ நல்லா இருக்குங்க.

  நல்லாவே இருக்கு!!!
  ட்ரீட் எப்போ :))

  அட பாவமே, உங்களையே வறுத்து, உங்களையே கடலை போட வச்சுட்டாங்களே? :-)

  @Chitra said...

  \\....... ok. நீங்கள் சொன்னால் சரிதான்.... ஹா,ஹா,ஹா,........ நல்லா இருக்குங்க\\

  ஆஹா!அடடா

  @சைவகொத்துப்பரோட்டா said...
  \\நல்லாவே இருக்கு!!!
  ட்ரீட் எப்போ :))\\

  அடுத்த பதிவில் தந்துபுட்டா போச்சி

  @சேட்டைக்காரன் said...

  \\அட பாவமே, உங்களையே வறுத்து, உங்களையே கடலை போட வச்சுட்டாங்களே? :-)\\

  என்ன இல்ல சேட்டை,என் கதை நாயகனை(எப்புடியெல்லாம் தப்பிக்க வேண்டியதா இருக்கு)

  Jaleela says:

  ஜில் தண்ணி ரொம்ப வே சில்லுன்னு இருந்தது.

  கதை நல்ல இருக்கு.

  கற்பனைல ஏமாத்துற பொண்ணு பெரும் திவ்யாவா ... அவ்வ்வ்வ்வ்வ்....
  என்னவோ போடா மாதவா...

  padma says:

  சரி திவ்யா இருக்கிற pondicherry லேயே ட்ரீட் இருக்கட்டுமா?

  Ok Ok சரி ட்ரீட் எப்போ எங்கே...?

  மிக்க நன்றி ஜலீலா!!!

  ஆமாம் ருத்ரவீனை இங்கயும் அந்த திவ்யாதான்(ஹும் என்ன பன்றது)

  @ட்ரீட் கேட்ட அனைவருக்கும்

  அடுத்த பதிவில் தங்கள் அனைவருக்கும் ட்ரீட் காத்திருக்கிறது!!
  :) ஹீ ஹீ ஹீ

  சரி சரி பாண்டிக்கு எப்பப் போலாம் - ட்ரீட்டுக்கு

  நல்வாழ்த்துகள் ஜில்தண்ணி
  நட்புடன் சீனா

  நல்ல கதை மாப்பு ..!

  Anonymous says:

  MUSIC,LOVE,OWNSTORY, VERY INTRESTING I LIKE IT. BY CHRISTY

  Anonymous says:

  engaluku treat illaya ?

Related Posts with Thumbnails