இதென்ன கல்வியா ?
முஸ்கி : என்னடா என்னுமா தேடல்,இடைவேளை,சந்தேகம்ன்னு போன பதிவுல கொழப்புனவனாச்சேன்னு பாக்குறீங்களா,இனி நம்ம ரவுண்டு தான்
பத்தாம் வகுப்புத் தேர்வில் 500 க்கு 400க்கு மேல் எடுத்தவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து பதினொன்றாம் வகுப்புக்கு சேர்த்துக் கொள்கிறது சில பள்ளிகள் அதுவும் மெட்ரிக் பள்ளிகள்,இப்படி நன்றாக படிப்பவர்களை மட்டும் வைத்து பாடம் நடத்தி பரிட்சை எழுத வைத்து பின் பீத்திக் கொள்வது "மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற பள்ளி" என்று
இது பெரிய சாதனை மயிரா,யோவ் பத்தாம் வகுப்பில் 250 எடுத்தவனுக்கு பயிற்சி கொடுத்து பனிரெண்டாம் வகுப்பில் முன்னேற்றி காட்டு ஒத்துக்குறேன்
அரசு பள்ளிகளிலிருந்துதான் விளையாட்டுத் துறைக்கு அதிக மாணவர்கள் வருகிறார்கள் என்பது சந்தோசத்திற்குரிய விசயம்,ஏன்னா முக்கால்வாசி மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு வாய்க்காத ஒன்றாகிவிட்டதே
விளையாட்டுத்தான் சொல்லித் தரல பாடமாவது ஒழுங்கா சொல்லிக் கொடுக்குறானுவோளா இந்த மெட்ரிக் பள்ளிகளில் என்று பார்த்தால்,அதுவும் கவலைக்குரிய நிலை தான்
நான் படித்த மெட்ரிக் பள்ளி ஒன்றின் நிலைமையை பாருங்களேன்
@@ விளையாட்டுதான் இல்லையென்பதால் மைதானமும் இல்லை
@@ ஆசிரியர்களாக பணிபுரியும் அத்துனை பேரும் பெண்கள்,ஏன்னா அவங்க தான் கேள்வி கேக்காம கொடுக்குற சம்பளத்த வாங்கிட்டு போயிடுவாங்க
@@ LKG வகுப்புக்கு பாடம் நடத்துபவர் பட்டதாரியாக இருக்க வேண்டாம், பத்தாம் வகுப்புக்கு நடத்துபவர் கூட பட்டம் பெற்றவராக இல்லையே
@@ கல்லூரியில் வேதியல் படித்தவரை இங்கு வரலாறு நடத்த சொல்கிறார்கள்,அவரும் நடத்துகிறார் (வேறு வழி)
@@ ஒரு எழவையும் மாணவர்களுக்கு நடத்தாமல் பொட்ட மனப்பாடம் செய்ய சொல்லி பரிட்சை எழுத வைக்கிறாங்க
@@ விளையாட்டுமில்ல,பாடமும் நடத்த வக்கில்ல டாய்லட் கூடவா சுத்தம் செய்யாமையா இருக்கனும் கொடுமடா
@@ இவனுக கரெக்டா செய்யுற ஒரே வேலை என்னான்னா மாசம் ஒன்னாந்தேதி ஆனா FEES பணத்த வாங்கிடுறது தான்
@@ ஆயிரம்,ஐநூறுன்னு வேனுக்கு பணம் வாங்குறானுங்க,வேனோட நிலைமையா பாத்தா ரொம்ப கவலைக்கிடம்
@@ ஓட்டும் டிரைவருக்கு லைசன்சு இல்ல
@@ ஒரே ட்ரிப்பில் 60 பேரை ஏத்தி பிஞ்சுக் குழந்தைங்க உசுரெடுக்குறது
@@ இவனுக கெட்ட கேட்டுக்கு டொனேஷனும் எட்டாவது சேர்க்க என்ட்ரன்சு எக்சாமும் ஒரு கேடு :(
இந்த மாதிரி பள்ளிகளில் படித்துவிட்டு எங்க போய் கிழிக்கிறது,என்னுமோ சமச்சீர் கல்வி வரப்போகுதாமே,அது என்ன கிழிக்கிதுன்னு பாப்போம்

