இதென்ன கல்வியா ?

முஸ்கி : என்னடா என்னுமா தேடல்,இடைவேளை,சந்தேகம்ன்னு போன பதிவுல கொழப்புனவனாச்சேன்னு பாக்குறீங்களா,இனி  நம்ம  ரவுண்டு தான் 

 பத்தாம் வகுப்புத் தேர்வில் 500 க்கு 400க்கு மேல் எடுத்தவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து பதினொன்றாம் வகுப்புக்கு சேர்த்துக் கொள்கிறது சில பள்ளிகள் அதுவும் மெட்ரிக் பள்ளிகள்,இப்படி நன்றாக படிப்பவர்களை மட்டும் வைத்து பாடம் நடத்தி பரிட்சை எழுத வைத்து பின் பீத்திக் கொள்வது "மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற பள்ளி" என்று

இது பெரிய சாதனை மயிரா,யோவ் பத்தாம் வகுப்பில் 250 எடுத்தவனுக்கு பயிற்சி கொடுத்து பனிரெண்டாம் வகுப்பில்  முன்னேற்றி காட்டு ஒத்துக்குறேன்


அரசு பள்ளிகளிலிருந்துதான் விளையாட்டுத் துறைக்கு அதிக மாணவர்கள் வருகிறார்கள் என்பது சந்தோசத்திற்குரிய விசயம்,ஏன்னா முக்கால்வாசி மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு வாய்க்காத ஒன்றாகிவிட்டதே

விளையாட்டுத்தான் சொல்லித் தரல பாடமாவது ஒழுங்கா சொல்லிக் கொடுக்குறானுவோளா இந்த மெட்ரிக் பள்ளிகளில் என்று பார்த்தால்,அதுவும் கவலைக்குரிய நிலை தான்

நான் படித்த மெட்ரிக் பள்ளி ஒன்றின் நிலைமையை பாருங்களேன்

@@  விளையாட்டுதான் இல்லையென்பதால் மைதானமும் இல்லை

@@  ஆசிரியர்களாக  பணிபுரியும் அத்துனை பேரும் பெண்கள்,ஏன்னா அவங்க தான் கேள்வி கேக்காம கொடுக்குற சம்பளத்த வாங்கிட்டு போயிடுவாங்க

@@   LKG வகுப்புக்கு பாடம் நடத்துபவர் பட்டதாரியாக இருக்க வேண்டாம், பத்தாம் வகுப்புக்கு நடத்துபவர் கூட  பட்டம் பெற்றவராக இல்லையே
 
@@  கல்லூரியில் வேதியல் படித்தவரை இங்கு வரலாறு நடத்த சொல்கிறார்கள்,அவரும் நடத்துகிறார் (வேறு வழி)

@@   ஒரு எழவையும் மாணவர்களுக்கு நடத்தாமல் பொட்ட மனப்பாடம் செய்ய சொல்லி பரிட்சை எழுத வைக்கிறாங்க

@@  விளையாட்டுமில்ல,பாடமும் நடத்த வக்கில்ல  டாய்லட் கூடவா சுத்தம் செய்யாமையா இருக்கனும் கொடுமடா

@@  இவனுக கரெக்டா செய்யுற ஒரே வேலை என்னான்னா மாசம் ஒன்னாந்தேதி ஆனா FEES பணத்த வாங்கிடுறது தான்

@@  ஆயிரம்,ஐநூறுன்னு வேனுக்கு பணம் வாங்குறானுங்க,வேனோட நிலைமையா பாத்தா ரொம்ப கவலைக்கிடம்

@@  ஓட்டும் டிரைவருக்கு லைசன்சு இல்ல

@@  ஒரே ட்ரிப்பில் 60 பேரை ஏத்தி பிஞ்சுக் குழந்தைங்க உசுரெடுக்குறது

@@  இவனுக கெட்ட கேட்டுக்கு டொனேஷனும் எட்டாவது சேர்க்க என்ட்ரன்சு எக்சாமும்  ஒரு கேடு :(

இந்த மாதிரி பள்ளிகளில் படித்துவிட்டு எங்க போய் கிழிக்கிறது,என்னுமோ சமச்சீர் கல்வி வரப்போகுதாமே,அது என்ன கிழிக்கிதுன்னு பாப்போம்

42 Response to "இதென்ன கல்வியா ?"

  1. dheva says:

    தம்பி...ஜில்தண்ணி...தூள் கிளப்பு....எதுக்கு பிரேக் எல்லாம் தேவையில்லை...எனக்கு தெரியும் உனக்குள்ள இருக்கிறது கரி இல்லை நெருப்புன்னு...

    வாழ்த்துகள் தம்பி...!

    post super thambi... welcome back after a long break of 8 hrs.... hehehe

    இவ்வளவு அழகா பதிவை எழுதி விட்டு ஏன் இடைவேளை எல்லாம் உன் கோபம், சந்தோசம் ஏதுவா இருந்தாலும் எழுத்தில் அது இருக்கணும்

    நீ ஒன்னும் கவலை படதா ஜில்லு.உனக்கு ஆரு பதிவ ஆட்டே போடு தரணும்னு ஜொள்ளு கச்சிதமா முடிச்சுரலாம்.ஹிஹீஹிஹீ

    பாரு நீ பிரேக் போட்ட நாலா இன்ட்லிக்கு ஒரு கோடி ரூவா நஷ்டமாம் வந்து வருத்த பட்டு போறார்.இந்த மாதிரி எதாச்சும் போட்டே இருக்கனும் ஓகே :)

    பாரு நீ பிரேக் போட்ட நாள இன்ட்லிக்கு ஒரு கோடி ரூவா நஷ்டமாம் வந்து வருத்த பட்டு போறார்.இந்த மாதிரி எதாச்சும் போட்டே இருக்கனும் ஓகே :)

    ரைட்டு!

    அடுத்த வாரம் பதிவு போட சொன்னேன், அடுத்த சில மணி நேரத்துலயே போட்டுடயே.

    நல்ல பதிவும் கூட, கலக்குப்பா

    சூடா இருக்கே, ஜில்லு :))

    Ramesh says:

    நல்ல பதிவு...

    cool down cool down இவனுங்க திருந்த போறதில்லை...

    அட இத விட கொடுமை என்னன்னா அந்த பசங்கள போட்டு மிரட்ட வேண்டியது .. 11 படிக்கும் போதே 12 வது பாடம். எல்லாமே மனப்பாடம் தான்.. 2 வருசத்துக்கு ஒரே பாடம். இத படிச்சு எங்க பள்ளிக்கூடத்துல அம்பூட்டு மார்க் வாங்கிட்டாங்க அப்படின்னு பீத்த வேண்டியது .. அவுங்கள விட அந்த பள்ளிக்கூடத்துல சேர்க்குற பெற்றோர்கள சொல்லணும் .. பள்ளிக்கூடம் நடத்துறவன சொல்லி என்ன பயன் ..

    நாடு மன்டைல ஆணி அடிச்சா மாதிரி சொல்லிருக்கே

    //உனக்குள்ள இருக்கிறது கரி இல்லை நெருப்புன்னு...//

    வழிமொழிகிறேன்.... :)

    Riyas says:

    பதிவு நல்லாயிருக்கு ஜில்லு..

    KUTTI says:

    ஜில்லுக்கு எதோ ஆயிடுச்சு.

    மனோ

    Unknown says:

    மச்சி சுத்தி வளச்சி எங்க வரன்னு தெரியுது !

    //"இந்த மாதிரி பள்ளிகளில் படித்துவிட்டு எங்க போய் கிழிக்கிறது"//


    சென்னை வரைக்கும் வந்து கிழிக்கலாம் ! உதாரணம் "ஜில்தண்ணி"

    Unknown says:

    All are true

    I accept

    Unknown says:

    You are absolutely right..........

    These fellows are running schools to fill their pocket with money

    Not to fill the kids brain with knowledge

    good one:)

    பதிவு ஜில்லுனு இருக்கு

    Katz says:

    நீங்க படிச்சா ஸ்கூல் மட்டும் இப்படி இல்ல நாட்டுல முக்கால்வாசி இப்படி தான் இருக்கு. நல்ல பதிவு.

    எங்கள் ஏரியாவில் இருக்கிற முக்கால்வாசி மெட்ரிக் பள்ளிகள் இப்படித்தான் உள்ளது. இருந்தும் பெற்றோர்கள் அவற்றில்தான் சேர்க்கிறார்கள். அது ஒரு மோகம்! பல மெட்ரிக் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் பரவாயில்லை!

    VISA says:

    ennudaiya aathangathai ellaam pathivaagavea eluthivitteergal.ungal FOLLOW window uthayamaaga nearam edukirathu

    @visa

    ஆமாங்க இந்த லிங்கை முயற்சி செய்து பாருங்களேன்

    ரொம்ப நன்றிங்க தல :)

    Chitra says:

    @@ இவனுக கரெக்டா செய்யுற ஒரே வேலை என்னான்னா மாசம் ஒன்னாந்தேதி ஆனா FEES பணத்த வாங்கிடுறது தான்

    .....எது கல்வி சேவை நிறுவனம் - எது கல்வி வியாபார நிறுவனம் என்று தெரிந்தால் மட்டும், மக்கள் என்ன செய்யப் போறாங்க? தங்களுடைய status ஐ கூட்டி காட்டுற ஸ்கூல்ல தான் குழந்தைகளை சேர்க்கப் போறாங்க. இதுக்கு போய் டென்ஷன் ஆ? போங்க சார்!

    //இந்த மாதிரி பள்ளிகளில் படித்துவிட்டு எங்க போய் கிழிக்கிறது,என்னுமோ சமச்சீர் கல்வி வரப்போகுதாமே,அது என்ன கிழிக்கிதுன்னு பாப்போம்//


    ”நச்” வரிகள்

    யப்பா.... உனக்குள்ள இப்படி ஒரு சமூக சிந்தனையா?..... நல்ல படைப்பு..... நானும் நிறைய அனுபவித்திருக்கிறேன்...

    //ஆசிரியர்களாக பணிபுரியும் அத்துனை பேரும் பெண்கள்,ஏன்னா அவங்க தான் கேள்வி கேக்காம கொடுக்குற சம்பளத்த வாங்கிட்டு போயிடுவாங்க//

    உண்மைங்க நண்பா...

    இப்ப கிராமங்கள் நடக்கிற பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகள்ல இதுதான் நிலைமை... கேட்க நாதியில்ல...சொன்னத கொடுத்திட்டு வாசல்ல கொண்டுபோய் குழந்தைய விடுறதோட பெத்தவங்க கடமை முடிஞ்சிப்போயிடுது...

    ஜில்தண்ணி இன்னைக்கு கொதிக்குதே..

    a says:

    கொதிப்பு கொஞ்சம் அதிகமா இருக்கு......

    ஜில்தண்ணி படிச்சது குத்தாலத்துலயா இல்ல மாயவரத்துலயா?

    சூப்பர்மா..
    நல்ல காரசாரமா ஒரு பதிவு..

    தேவையான கோபம்தான்..

    dheva said...

    /// தம்பி...ஜில்தண்ணி...தூள் கிளப்பு....எதுக்கு பிரேக் எல்லாம் தேவையில்லை...எனக்கு தெரியும் உனக்குள்ள இருக்கிறது கரி இல்லை நெருப்புன்னு... ////

    கண்டிப்பா அண்ணே
    நெருப்பா இருப்போம்

    @@@ வினோ said...

    /// post super thambi... welcome back after a long break of 8 hrs.... hehehe ////

    நன்றி தல :) ஹீ ஹீ

    @@@ சௌந்தர் said...

    //// இவ்வளவு அழகா பதிவை எழுதி விட்டு ஏன் இடைவேளை எல்லாம் உன் கோபம், சந்தோசம் ஏதுவா இருந்தாலும் எழுத்தில் அது இருக்கணும் ///

    சரி விடுங்க தல,இனிமேல் எதுவா இருந்தாலும் எழுதிடுவோம் :)

    @@ madurai ponnu

    யக்கா இனி பிரேக் போட மாட்டேண் :)

    மொக்கை தொடரும் :)

    அருண் பிரசாத் said...

    //// ரைட்டு!
    அடுத்த வாரம் பதிவு போட சொன்னேன், அடுத்த சில மணி நேரத்துலயே போட்டுடயே.///

    ரொம்ப நன்றிங்க :)

    Unknown says:

    பசங்களை ஸ்கூல்ல சேர்த்தறவங்க மனசுல இருக்கற கேள்விகள் அத்தனையும்.. அருமையா சொல்லியிருக்கீங்க.. நன்றி..

    Jey says:

    கிராமத்துக் கல்யாணம் + மொய், http://pattikattaan.blogspot.com/2010/09/blog-post.html

    NaSo says:

    இது ரொம்ப காலமா நடக்குது. எந்த ஆட்சி வந்தாலும் இதே நிலைமை தான்.

    Unknown says:

    regardez ce site Web sacs répliques hautes trouver plus www.dolabuy.su étudiez ce site ce formulaire de contact

Related Posts with Thumbnails