Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

ஒரு சிறிய இடைவேளை தேவை

வாழ்க்கை புத்தகத்தின் தலைப்பை கூட முழுதாய் படிக்கவில்லை
அதற்குள் பல வருடங்கள் ஓடிவிட்டன
பாலைவன வெற்றிடமாய் இருக்கிறது  மூளை
கற்றது கையளவு கூட இல்லை கடுகளவு தான் 

ஒரு மூன்று மாதமாய் குடியிருந்த பதிவுலகத்திற்கும் எனக்கும் இடையில் ஒரு வெற்றிடம் உருவாகியிருக்கிறது,எழுத நினைத்ததை எழுத முடியவில்லை,எங்கெங்கோ அலைகிறது மனசு

ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது இப்படியே இருந்துவிட முடியாது,எதாவது செய்தே தீரணும் 
 
எனக்குள் நிறைய குழப்பங்கள் இருக்கு ??
நான் நானாகவே மாறணும்
நிறைய படிக்கனும்
நிறைய சிந்திக்கனும் சந்திக்கனும்
 
அது வரை பதிவுலகை விட்டு சற்றே விலகி இருக்கிறேன்,இது என் தேடலின் துவக்கம் தான்

மீண்டும் வருவேன்
நானாய்

50 பதிவுகள் ???

முதலில் என்னை வளர்த்த அனைத்து பதிவுலக நண்பர்களையும்,அண்ணன்களையும்,அக்காக்களையும் என் சிரம் தாழ்த்தி        வ   ண   ங்  கு  கி  றே  ன்  

இது ஐம்பதாவது பதிவு எழுதிவிட்டேன் என்று சொல்வதற்கான பதிவல்ல, ஐம்பதில் என்ன கிழித்திருக்கிறேன் என்று என்னுள் நானே பார்க்கும் ஒரு மீள் பார்வை தான்

எப்பவாச்சும் சும்மா இருக்கும் போது கவித எழுத தோணும்,அப்டி எழுதிய  கவிதைகளை மத்தவங்களுக்கு காட்டலாம்னு பதிவெழுத ஆரம்பித்தேன்

நான் கணிப்பொறி மாணவன் என்பதாலோ சுடுதண்ணி அவர்களின் பதிவுகள் எனக்கு ரொம்ப யோசிக்க வைத்துவிட்டது,அதன் விளைவு இந்த ஜில்தண்ணி

இதுவரை என்ன பதிவெழுதி கிழிச்சிருக்கேன்

எழுத ஆரம்பித்த போது புத்தகங்களில் காப்பி அடித்தவைகளை  வைத்து தோணுவதை எழுதுவேன்,அதன் பிறகு சில ஃபார்வட் மெயில்களை பதிவிட்டேன்

இவை தந்த ஊக்கத்தில் அடுத்த கட்டத்திற்கு முயற்சி செய்தேன்,அவை கவிதைகளாக வந்தது,கவிதைளை எழுதி பாராட்டு பெறும் போது,அதற்கு ஈடு இனை எதுவுமில்லை,அப்படியொரு திருப்தி கிடைத்தது

அதன் பிறகு அறிவியல் வாத்தியார் போன்ற அறிவியலை எளிதாக சொல்லும் முயற்சிகளை எடுத்தேன்,அது எனக்கு மாபெரும் வெற்றியாக தெரிந்தது,ஆனால் அதையும் என்னால் இன்று தொடர்ந்து எழுத இயலவில்லை

கவிதையை தவிர்த்து என் எண்ணங்களை அப்படியே பதிவாக அமைந்த முதல் பதிவு உலகம் எப்போது அழியும் என்ற பதிவுதான்
 
அதன் பிறகு கடவுள் என்னைபொருத்தவரை என்னவென்று எழுதிய பதிவு கடவுள் என் மட்டில் ,அது எனக்குள் நிறைய எண்ணங்களை விதைத்தது,இதுவரை எழுதியதிலேயே சிறந்த பதிவாக நான் கருதுவது இந்த பதிவைதான்,ஏனென்றால் என் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்தது,அதன் விளைவு அடுத்தது என்னவென்ற தேடல் தொடங்கியது

ஆம் நிறைய சந்தேகங்கள் வர ஆரம்பித்திருக்கிறது,என்னை சுற்றி இருக்கும் சமூகத்தை பற்றியும் சரி,கடவுள்,மூடநம்பிக்கை,பரிணாமம்,மதம்,மனிதம் பற்றிய   நிறைய சந்தேகங்கள் வந்துகொண்டே இருக்கிறது

அதன் விளைவு என்னையே நான் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளேன்,இனி அதற்கு பதில் தேட வேண்டும்

இனி என் பதிவு எப்படி இருக்கும் ????

என் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளும் பதிவுகள் வரும்,அப்பறம் கவிதைகள்,வித்யாசமான என் சிந்தனைகள்,நான் ரசித்தவைகள் என்று தொடர்ந்து என் பயணத்தை தொடரலாம் என்று நினைக்கிறேன்

ஆனால் இந்த அளவுக்கு எழுதியதற்கு காரணம் நீங்கள் தான்,உங்கள் உண்மையான அன்பினால் வரும் ஒவ்வொரு பின்னூட்டமும் என்னை மீண்டும் மீண்டும் எதையாவது தேடத் தூண்டுபவையாக இருக்கும்

இதுவரை ஒன்னும் பெரியதாக எழுதிவிடவில்லை,ஆனால் இனி தேடுவதற்கு  நிறைய இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது

நிறைய படிக்க ஆரம்பித்திருக்கிறேன் புத்தகங்களும் சரி,பதிவுகளும் சரி.

அப்பறம் நிறைய சொந்தங்கள் கிடைத்திருக்கிறது மாப்பி என்று கூப்பிடும் நட்புகளும்,தம்பி என்று கூப்பிடும் அண்ணண்களும்,அக்காக்களும் கிடைத்திருக்கின்றன,இதுவே எனக்கு மிகப் பெரிய வரப் பிரசாதமாக நினைக்கிறேன்


அனைத்து சொந்தங்களுக்கும் ஒரு வேண்டுகோள்,நான் இதுவரை எழுதிய பதிவுகளை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பின்னூட்டத்தில் மறக்காமல் பதியுங்கள்,ஏனென்றால் என்னை அடுத்த முயற்சிக்கு தூண்டுபவையாக அவை இருக்கும்  ,ஒரு FEED BACK ஆக இருக்கும்  

மீண்டும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

எனக்கு பிடித்த பதிவர்கள் 0.1

வணக்கம் நண்பர்களே !!!

நானும் என் நண்பன் குத்தாலத்தானும் சேர்ந்து ஒரு பதிவை ஆரம்பித்து இருக்கிறோம் (இங்கயே கிழிக்க முடியல இது வேறையா)

அந்த பதிவிலும் தங்கள் ஆதரவை தாருங்கள் நண்பர்களே !!!

எங்க ஊர் குத்தாலம்,அதனால் குத்தாலத்தான்'ஸ் என்று பெயர் வைத்து விட்டோம்,அந்த பதிவிலும் இனி என் மொக்கைகளை படிக்கலாம்,என் நண்பன் எனக்கு மேல செம மொக்கையா எழுதுவான்,படித்து பாருங்களேன் தெரியும்


"எனக்கு பிடித்த பதிவர்கள் 0.1 பதிவை படிக்க >>>>>

எனக்கு பிடித்த சில புதிய பதிவர்களை இங்கு அறிமுகப் படுத்தியிருக்கிறேன்,படித்துப் பாருங்கள்

பதிவுத் திருட்டு - உஷார்

நேற்று வானம்பாடிகள் ஐயாவின் பதிவில் அலெக்சா ரேட்டிங்கும் அல்லக்கைகளும் என்ற பதிவை படித்தேன்.அதில் பதிவர் சூர்யா கண்ணன் அவர்களின் கூகுள் கணக்கு அனைத்தும் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு விட்டதாகவும் அதனால் அவர் பதிவும் முடக்கபட்டுவிட்டதாக கூறுயிருந்தார்.


சூர்யா கண்ணன் அவர்களின் பதிவு எப்படிப்பட்ட பதிவென்பது நாம் அறிந்ததே,நம்மை போன்ற பதிவர்கள்,கணிப்பொறி துறை மாணவர்கள்,கணிப்பொறி வல்லுனர்கள் போன்ற அனைவரும் சூர்யா கண்ணன் பதிவுகளின் மூலம் பயன் பெற்று வந்தோம்

இன்று அந்த பதிவே இல்லை என்கிறது

எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை, பதிவிலேயே மீட்டெடுக்க சில வழிகளை பதிவுலக நண்பர்கள் அளித்திருக்கின்றனர், நண்பர்களே உங்கள் யாருக்காவது ஏதேனும் வழிகள் தெரிந்தால் சொல்லி உதவுங்கள் ,நமக்கு அந்த பதிவு தேவை.

அந்த பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் அஹமது இர்ஷாத் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்

உங்கள் ஆக்கங்கள் யாரால் திருடப்பட்டிருக்கிறது என்று அறிய இத்தளத்தில் உங்கள் வலை முகவரியை கொடுத்தால் உடனே சொல்லி விடுகிறது.. http://www.copyscape.com/

அந்த இனையதளத்திற்கு சென்று என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என சென்றேன்

முகப்பு பக்கத்திலேயே எனது வலைதள முகவரியை கேட்டிருந்தார்கள்,கொடுத்து தேடினேன்,ஒன்றும் இல்லை,பதிவின் வேறு பக்கங்களை தேடிப் பாருங்கள் என்ற செய்தியும் வந்தது.

நானும் அடுத்தடுத்த பதிவை கொடுத்து எங்காவது திருடப் பட்டுள்ளதா என்று தேடிக் கொண்டிருந்தேன்.

என்னுடைய உலகம் எப்போது அழியும் என்ற பதிவின் முகவரி கொடுத்து தேடும்போது,இந்த பக்கத்தில் உள்ள தகவல்கள் இன்னொரு தளத்துடன் ஒத்துப் போகிறது என்ற தகவல் வந்தது

அந்த தளத்தில் நுழைந்து பார்த்த போது தெரியவந்தது,என்னுடைய அந்த பதிவு திருடப்பட்டிருப்பது

மீனகம்.காம் என்ற வலைதளத்தில் தான் இந்த திருட்டு வேலை நடந்திருக்கிறது,நான் அந்த பதிவை போட்டது ஜீன்.30 ஆம் தேதி,அந்த பதிவில் ஜீலை 1 ஆம் தேதி திருடிப் போட்டிருக்கின்றனர் .

என்ன ஒரு கேவலமான வேலை,ஒருத்தர் அறிவை,ஒருத்தர் முயற்சியை இப்படி சல்லித்தனமாக காப்பி & பேஸ்ட் செய்வது என்ன மோசமான செயல்

என்னுடைய உலகம் எப்போது அழியும் பதிவு

திருடப்பட்ட பதிவு -மீனகம்.காமில்

கண்டிப்பாக உங்கள் பதிவுகள் கூட திருடப்படவும்,திருடப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது,அதனை தீர்த்துக் கொள்ள இந்த தளத்திற்கு செல்லவும் உங்கள் பதிவின் முகவிரியை கொடுத்து தேடிப் பாருங்கள்.

இந்த பதிவுத் திருட்டிலிருந்து தப்பிக்க சில வழிகளை நம்ம ஜெய்லானி அண்ணன் பதிவில் கூறியுள்ளார்,அதையும் பாருங்கள்

இனிவரும் காலங்களில் இந்த பதிவுத் திருட்டை தடுக்க என்ன செய்யலாம் ? சொல்லுங்கள் நண்பர்களே !!! சொல்லுங்கள்

Related Posts with Thumbnails