உலகம் எப்போது அழியும் ?கண்டிப்பாக 20ஆம் நூற்றாண்டு உலகத்தின் அழிவாகத்தான் இருக்கும்,என்பது போன்ற செய்திகள் அவ்வப்போது கிளம்புவதுண்டு

அப்படியென்றால் உலகம் அழியவே அழியாதா என்றால் அழியும் ஆனால் மெல்ல மெல்ல அழியும் என்பது தான் என் கருத்து.

எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் இந்த மனிதனால் இயற்கையை எதிர்த்து நிற்பது அவ்வளவு சுலபமல்ல,இயற்கையை நாம் ஆக்கிறமிக்கிறோம் அது நம்மை ஆட்டி வைக்கிறது

கண்டிப்பாக இந்த பூமிக்கு அழிவிறுக்கிறது,அது எப்படி வேண்டுமானாலும் வரலாம்

பகவத் கீதையில் தண்ணிரால் தான் இந்த உலகம் அழியும் என்ற
கூற்று இருக்கிறதாம்(நான் படிக்கல,நண்பர்கள் சொன்னதுங்கோ),ஆம் சுனாமி,பூகம்பம்,எரிமலை சீற்றம் போன்ற இயற்கை பேரழிவுகளால் மெல்ல அழியும்ஒரு புறம் தண்ணிர் இல்லாததால் வறட்சியால் பூகம்பம் மற்றொறு புறம் வேறு மாதிரியான பிரச்சனை

வெயில் காலங்களில் நல்ல மழை பெய்கிறது,மழை பருவத்தில் வெயில் சுட்டெரிக்கிறது,எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கிறது,இதை என்னவென்று சொல்ல?

இந்த உலக வெப்பமயமாதல் வேற,இங்கு மட்டும் வெப் உயர்வில்லை பனிப் பிரதேசங்களான ஆர்டிக்,அண்டார்டிகா பகுதிகளிலும் தான்,இதனால் என்ன ஆகும்

நம் பூமிப் பந்தில் நான்கில் மூன்று சதவீதம் கடல் தான்,ஒரு பகுதி தான் நாம் வாழும் நிலப்பகுதி,வெப்பம் அதிகரிப்பினால் பனிக்கட்டிகள் உருகி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது,இதனால் கடல் பகுதி கண்டிப்பாக அதிகரிக்கும்,நிலப் பகுதி குறையும்,நாமும் குறைவோம் ?


ஒரே ஓட்டை போட்டு சர்வ சாதாரணமாக ஆபத்தான அறுவை சிகிச்சைகளை மருத்துவத் துறை செய்து வருகிறது,மிகப் பெரிய வளர்ச்சி தான்,ஆனால் இந்த நோய்களின் வளர்ச்சி இதைவிட அபரிமிதமாக இருக்கிறதே,முன்பு பிளேகு,காளரா என்று எண்ணக்கூடிய அளவிலிருந்த நோய்கள்(கிருமிகள்) இப்போது தங்களை மறுவடிவமைப்பு செய்துகொண்டு வருகிறது,அழிவு தானே ?


அழிவு இப்படித்தான் வரவேண்டும் என்றில்லை,உலகப் போரின் போது அப்பாவி மக்கள் எவ்வளவு பேர் கொள்ளப்பட்டனர்,ஹிட்லர்,ஸ்டாலின் , ராஜபக்ஷே போன்ற சர்வாதிகாரிகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும் இது போன்ற அழிவுகள் வரும்

இலங்கையில் நம் தமிழ் இனம் அழிக்கப்பட்டது ஒரு அழிவுதானே :(


இப்படி ஒருபுறம் இருக்க வேற்று கிரக வாசிகளால் கூட அழிவு ஏற்படலாம் என்கிறார் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரான ஹாகின்ஸ்.

எப்படி இருந்தாலும் இன்னும் ஒரு நூற்றாண்டோ அல்லது ஒன்றரை நூற்றாண்டுகளுக்குத் தான் இந்த பூமியால் தாக்குப் பிடிக்க முடியும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது

என்னடா அழிவை பற்றியே சொல்றானே ஒரு சந்தோசமான விஷயம் என்னவென்றால் செவ்வாய் கிரகத்தில் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது அப்படியென்றால் கண்டிப்பாக தண்ணீர் இருக்கும் என்பதும் உறுதி.

அப்ப செவ்வாய் கிரகத்துல ஒரு பிளாட் வாங்கிட வேண்டியதுதான் போலிருக்கு :)

அழிவு உறுதியாகிவிட்டதால் அதை தடுக்க முடியாது வேண்டுமென்றால் கொஞ்சம் தள்ளிப் போடலாம்,அதற்கு முதலில் இயற்கையோடு சண்டையிடுவதை முதலில் நிறுத்த வேண்டும்

என்னால் இந்த பூமியை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் நீங்களும் ஒரு மரம் வளருங்கள்.


நம் பூமித் தாய்க்கு இப்போது தேவை சுதந்திரம்,சுத்தமான காற்று,நல்ல தண்ணி இவற்றை உங்களால் கொடுக்க முடியுமா ???? யோசிங்க

மனிதன் தன் அடுத்த பரிணாமத்தில் இவற்றையெல்லாம் தூள் தூளாக்கக் கூட வாய்பிருக்கிறது ,பாப்போம் நாம் இருந்தால்

24 Response to "உலகம் எப்போது அழியும் ?"

 1. மே மாதம் ஏஞ்சல் டிவி அறிவிப்பு
  தெற்கு சீனாவில் நீரால் அழியும் ஆபத்து
  ஜுனில் நடந்தது

  ஜுன் மாதம் ஏஞ்சல் டிவி அறிவிப்பு
  பசிபிக் கடல் பகுதி நீரால் அழியும் ஆபத்து
  அதுவும் பெரிய சுனாமி அளவுக்கு இருக்க போவதாக அறிவித்துள்ளது

  //எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் இந்த மனிதனால் இயற்கையை எதிர்த்து நிற்பது அவ்வளவு சுலபமல்ல,இயற்கையை நாம் ஆக்கிறமிக்கிறோம் அது நம்மை ஆட்டி வைக்கிறது//

  அதான்.. அதேதான்.

  Jey says:

  நல்ல பதிவு தல. எல்லாத்தயும் நாம நாசமாகிட்டிருக்கோம், உலகம் சீக்கிரம் அழியட்டும் தல நிம்மதியா போய் சேருவோம்.

  உலகம் அழியுரதுக்கு முன்னால சீக்கிரம் உன் டிகிரிய முடிப்பா!!

  சென்னைலயே ஒரு பிளாட் வாங்க முடியல. செவ்வாய் கிரகத்துலையா???

  //வேற்று கிரக வாசிகளால் கூட அழிவு ஏற்படலாம் என்கிறார் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரான ஹாகின்ஸ்.//

  வெளிய இருந்து வர உட்ருவோமா? நாம்பளே முடிச்சிடுவோம்..

  எத்தனயத்தான் சமாளிக்கிறது....

  ஹீம்... நடக்குறது நடக்கும்... ஒன்னும் பண்ண முடியாது...

  எத்தனயத்தான் சமாளிக்கிறது....

  ஹீம்... நடக்குறது நடக்கும்... ஒன்னும் பண்ண முடியாது...

  நல்ல படங்கள்! நல்ல பதிவு! ஆனால் நல்ல செய்தி இல்லை!

  Riyas says:

  நல்ல பதிவு.. ஜில்

  //அழிவு இப்படித்தான் வரவேண்டும் என்றில்லை,உலகப் போரின் போது அப்பாவி மக்கள் எவ்வளவு பேர் கொள்ளப்பட்டனர்,ஹிட்லர்,ஸ்டாலின் , ராஜபக்ஷே போன்ற சர்வாதிகாரிகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும் இது போன்ற அழிவுகள் வரும்//

  இந்த லிஸ்டில் ஜோர்ஜ் W புஷ்யையும் சேர்த்துக் கொள்ளலாம்..

  Riyas says:

  அழியும் போது அழியட்டும்.
  அதுவரை தொடர்வோம் வாழ்க்கையை.

  இப்பவாவது உணர்ந்து ஏதாவது பண்ணத்தான் வேணும். பால்கனியில துளசிச்செடி கூட வளர்க்கமுடியல. என்னமோ நடக்கட்டும்:((

  ################
  உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
  http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

  அன்புடன் .> ஜெய்லானி <
  ################

  Anonymous says:

  comment for http://allinall2010.blogspot.com/2010/07/blog-post.html

  ஏய், மதவெறிப்பிடித்த பதிவரே! விரைவில் சக மனிதரின் நம்பிக்கையை மதிக்கப் பழகிக்கொள்

  நல்ல பதிவு..

  Anonymous says:

  I don't know whether I am doing the right thing but I am posting it here.This link "The Most Important Video Ever Part 1/8" http://www.youtube.com/watch?v=F-QA2rkpBSY
  is a lecture by one of the best professor's,this deals with a lot of things, the mathematics explained here is something that everyone should know.This not only deals with Mathematics but also about energy crisis and stuff.Its mostly based on America but it's also applies to all places.

  Sorry again I just wanted to share this but I am not a blogger(I just visit and read)nor will this reach many people if I post.If you could post this or make it into a proper blog, I am sure it will help a lot of people in understanding a lot of simple things.

  Ananthi says:

  நல்ல பதிவு..
  இயற்கை தரும் அழிவுகளை விட,
  நாமே இயற்கையை அழிக்காமல் இருத்தல் நல்லது..

  Mythili says:

  useful post

  //பகவத் கீதையில் தண்ணிரால் தான் இந்த உலகம் அழியும் என்ற
  கூற்று இருக்கிறதாம்(//

  தண்ணில தான! ஆமாமா

  மனிதம் காக்க வரம் வளர்ப்போம்!

  இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் தேவையான பதிவு எப்பொழுதுதான் திருந்தப் போகிறோம்

  உடுங்க பாஸ்.. ஏதாவது யாகம் பண்ணி பரிகாரம் பண்ணிக்கலாம்....


  ஹி..ஹி

  \\இவற்றை உங்களால் கொடுக்க முடியுமா ???? \\

  good question!!

Related Posts with Thumbnails