எனக்கென்று சில உறவுகள்


தங்கக் கம்பி

நான் பள்ளி சேர்ந்த வருடம்
நீ பூமியில் குதித்தாய்
என் தாய் மடியை அபகரித்து விட்டாயோ என்று
கண்ணில் நீர் கசிந்தது
அம்மா தேற்றினாள் உன் தம்பி தான் என்று

நான் தான் உனக்கு பெயரே வைத்தேன்
வளர்ந்துவிட்டாய்
நீ அண்ணா என்று கூப்பிடும் அந்த
வார்த்தைக்காக ஏங்கியவன்

எத்தனை சண்டைகள்
நமக்குள்
பலப்ப குச்சிக்கும் அம்மா செய்த முறுக்குக்கும்
சண்டை போடாத நாட்களே இல்லை

இன்று கூட
சண்டை தான்
புது தலையணையை யார்
வைத்துக் கொள்வது

என்ன இருந்தாலும் விட்டுக் கொடுப்பவன்
நான் தான்
என் தம்பி தானே

--------------------------------------------------------------

மாமன் மகள்..

குட்டிப் பெண்ணாய்
பார்த்துக் கொண்டிருந்தேன்
அதற்குள்
பெரிய மனுசி
ஆகிவிட்டாள்

நிறைய வித்யாசங்கள்
அவளிடம்
புதிதாய் கண்டுபிடித்த வெட்கம்
சற்றே உப்பிய கன்னம்
குரல் கூடத்தான்

சட்டென்று
குதித்த என் இதயம்
அவளிடம்
நின்று கொண்டு
முறைப் பெண் தானே
காதலித்து பாரேன்
என்றது
என்ன செய்ய ?

----------------------------------------------------

நண்பா...

இத்தனை வருடம் படித்தேன்
என்ன வளர்ந்தது
நண்பர்கள் எண்ணிக்கை தான்

அரியர் வைத்தாலும்
கேட்டாய்
ஆடை வாங்கினாலும்
கேட்டாய்
நானும் மறுக்கவில்லை
"ட்ரீட்"

சொந்தமே இல்லாமல்
மச்சான் என்றாய்
மாமா என்றேன்

ஒன்றுமே
இல்லையென்றாலும்
நமக்குள்
நிறைய
இருக்கும்
பகிர்ந்து கொள்ள

நம்
நட்பிற்கு
முடிவு
என்றுண்டா

19 Response to "எனக்கென்று சில உறவுகள்"

 1. ஒரே நேரத்தில் மூன்று கவிதைகள்.. வெவ்வேறு தளம் .. பாராட்டுக்கள்

  பாராட்டுக்கள்

  சற்றே உப்பிய "கன்னம்"..

  நல்ல கற்பனை...

  மூன்றுமே நல்ல கவிதைகள் ,
  கலக்குறே நண்பா வாழ்த்துக்கள்..

  ( எல்லாமே பழைய டைரி தொகுப்பு போல இருக்கே )

  "ட்ரீட்" :
  இந்த ட்ரீட் தொல்ல தாங்க முடியலைங்க, மொபைல் தொலைச்சதுக்கு எல்லாம் ட்ரீட் கேக்குறானுங்க

  malgudi says:

  முதலாவது கவிதை அருமை.

  தம்பி இன்று உயிரோடு இல்லாத காரணமோ அதிகம் பாதித்தது.

  நல்லா இருக்குங்க....வாழ்த்துக்கள்...

  Riyas says:

  //நிறைய வித்யாசங்கள்
  அவளிடம்
  புதிதாய் கண்டுபிடித்த வெட்கம்
  சற்றே உப்பிய கன்னம்
  குரல் கூடத்தான்//

  நல்லாயிருக்கு ஜில்... வாழ்த்துக்கள்

  ////சட்டென்று
  குதித்த என் இதயம்
  அவளிடம்
  நின்று கொண்டு
  முறைப் பெண் தானே
  காதலித்து பாரேன்
  என்றது
  என்ன செய்ய ?
  /////////

  தக்காளி காசா , பணமா ஒரு கை பார்த்திரவேண்டியதுதானே !

  தம்பியுடன் சண்டையிட்டு கழித்த நாட்களை மீண்டும் கண் முன் நிறுத்தியது உங்களின் வார்த்தைகள் . பகிர்வுக்கு நன்றி சகோதரா !

  தம்பி... முறைப்பெண்... நண்பன்....

  மூன்றும் அருமை நண்பா...

  மூன்றுமே அருமை

  மூன்றுமே அருமை. ஒவ்வொன்றுன் ஒவ்வொரு பரிணமம்... ஒவ்வொரு களம்..... பாராட்டுக்கள்

  மூன்று முத்துக்களும் ஜில்லென்று மனதிற்கு குளிர்ச்சியாய் ...

  உங்கள் பெயருக்கு ஏற்ப ...

  பாராட்டுக்கள் தோழர் ...

  வருகிறேன் ....

  மூன்றும் நன்றாயிருக்கிறது.:)

  ஜில்தண்ணி நிஜமாலுமே ஜில்லு இருக்கு மூன்று கவிதைகளும். வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..

  //ஒன்றுமே
  இல்லையென்றாலும்
  நமக்குள்
  நிறைய
  இருக்கும்
  பகிர்ந்து கொள்ள//

  நல்லா இருக்கு.. நெசம் தான்..

  மூன்றுமே சூப்பர்.... ஆனால் மாமன் மகள் தான் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு... என்னுடைய உண்மை உணர்வுகளை சொல்லும் கவிதை அதுதானே...

  Anonymous says:

  எத்தனை உறவுகளைப் பற்றிக் கூறினாலும்
  நண்பனைப் பற்றி விவரிக்கும் வார்த்தைகளுக்கு தனி அழகு.

Related Posts with Thumbnails