சாலையோரக் கவிதைகள்

இந்த கவிதைகள் நான் கிறுக்கியது என்ற பதிவில் எழுதியது,இப்போது அந்த பதிவுகள் அழிந்துவிட்டது,உங்களுக்காக இங்கு...

விழியீர்ப்பு விசை...






கல்லூரி
காலங்களில்
நீ
அந்த
நீல நிற
சுடிதாரில்
உன்
தோழிகள் படை சூழ
வலம் வருவாய்
நான்
கடைக்கண் தரிசனம்
கிடைக்குமா
என ஏங்கிய
நேரத்தில்
மலையின் பின்
உதிக்கும்
ஆதவனை போல
உன்
கன்னக் குழிகளில்
உதித்த
அந்த
வெட்க்கச்சிரிப்பை
கண்டு
நான்
வெட்கினேன்

உன்
விழியீர்ப்பு விசையில்
அந்த
புவியீர்ப்பு
விசை கூட
தோற்று விட்டதடி

____________________________________

அழகுக் குறிப்பு.....

உன்னை
பின்தொடர்ந்து
வருகையில்
நீ
அள்ளி வீசினாய்
அழகுக் குறிப்புகளை
ஆம்
உன்
செருப்பும்
அழகின்
குறிப்பு தானே

______________________________________

அவளின்றி



இப்போதெல்லாம்
பூக்களை
பார்த்து
பரிகசிக்கிறேன்
நீ
எல்லாம்
எம்மாத்திரம்
என்னவள்
முன்பு...

19 Response to "சாலையோரக் கவிதைகள்"

  1. Anonymous says:

    நல்ல முயற்சி..தொடருங்கள்

    அனைத்தும் அருமை நண்பரே...

    தொடருங்கள்...

    முதல் கவிதை என்னை மிகவும் கவ்ர்ந்தது.... பாராட்டுக்கள்.

    செருப்பு அழகின் குறிப்பா?
    நல்லா கிளப்புறாங்க பீதிய!

    Paleo God says:

    கலக்குங்க! :))

    Anonymous says:

    //உன்
    விழியீர்ப்பு விசையில்
    அந்த
    புவியீர்ப்பு
    விசை கூட
    தோற்று விட்டதடி//

    முன்னமே உங்கள் பதிவுகளில் பதித்தது தான்.
    ஆனாலும் மீண்டும் ரசிக்க வைக்கின்றன.

    Prasanna says:

    ஆஹா ஜில்லு.. அப்பா நீங்க மூத்த பதிவரா :)
    அப்புறம் கவிதை.. நல்லா இருக்கு நிறைய எழுதுங்க..
    கலக்கிட்டடா காப்பி..

    போடுங்க ..போடுங்க...

    மூன்றும் முத்துக்கள்..

    "விழியீர்ப்புவிசை" கவர்கிறது.

    மிக்க நன்றி ஆர்.கே.சதீஷ்குமார் சார்

    மிக்க நன்றி அகல்விளக்கு நண்பா

    மிக்க நன்றி சி. கருணாகரசு சார்

    மிக்க நன்றி வால்,ஹீ ஹீ ஹீ

    மிக்க நன்றி 【♫ஷங்கர்..】™║▌│█│║││█ அண்ணே

    மிக்க நன்றி இந்திராவின் கிறுக்கல்கள்

    @பிரசன்னா

    அப்டில்லாம் சொல்லபிடாது,ஒரு பதிவு ஆரம்பித்து அத ஒரே மாசத்துல இழுத்து மூடியாச்சி,அதுக்கு போயி மூத்த பதிவர்ன்னு சொல்லிட்டீகளே

    ஹீ ஹீ


    மிக்க நன்றி ஜெய்லானி

    வருகைக்கு நன்றி பாலாசி அண்ணே

    நன்றி மாதேவி

    ///////உன்
    விழியீர்ப்பு விசையில்
    அந்த
    புவியீர்ப்பு
    விசை கூட
    தோற்று விட்டதடி
    ////////


    காதல் வந்தால் இந்த புவியீர்ப்பு
    விசை என்ன பூகம்பமே பூ போல்தான் தோன்றும் . அதுதான் காதல் . கவிதைகள் அனைத்தும் அருமை பகிர்வுக்கு நன்றி !

    Romeoboy says:

    Good keep it up

    ரைட் விடு ஜூட்

    //உன்னை
    பின்தொடர்ந்து
    வருகையில்
    நீ
    அள்ளி வீசினாய்
    அழகுக் குறிப்புகளை
    ஆம்
    உன்
    செருப்பும்
    அழகின்
    குறிப்பு தானே
    //

    :)

    நன்று..

    அருமையான வரிகள்...

Related Posts with Thumbnails