அவர்கள் வந்துவிட்டார்கள் (Aliens)

நியு ஆர்லியஸ் மாகாணத்தில் பறக்கும் தட்டை பார்த்ததாக மக்கள் வியப்பு

தென் ஆப்ரிக்காவில் இரவு நேரங்களில் வட்ட வெளிச்சம் ஒன்று தெரிவதாக சொல்கிறார்கள்


இது
போன்ற செய்திகள் அடிக்கடி நாளிதிழில் பார்த்திருப்பதுண்டு,அவற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது,வெறும் வியூகம் தான் என்று இதுவரை நினைத்திருப்போம் .

வேற்று கிரக வாசிகள் என்பது கற்பனையல்ல அவர்கள் ஒரு நாள் இங்கு வந்தே தீருவார்கள்,நாம் அவர்களை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம் ஆனால் அவர்களை நாம் சந்திக்கும் நேரம் அழிவின் ஆரம்பமாக கூட இருக்கலாம்

இந்த திகிலூட்டும் தகவலை சொன்னது நானல்ல,புகழ் பெற்ற இயற்பியல் ஆராய்ச்சியாளர் ஸ்டீஃபென் ஹாகின்ஸ் தான்

ஹாக்கின்ஸ் ஒரு மாற்றுத் திறனாலி ஆவார்,அவர் தன் சற்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்,தன் குறைகளை பொறுட்படுத்தாது பல சாதனைகளை புரிந்துள்ளார்


சமீபத்தில் ஹாக்கின்ஸ் தன் ஆராய்ச்சியை உலகிற்கு காட்ட டிஸ்கவரி சானலில், Into the universe என்ற அற்புதமான ஆராய்ச்சி நிகழ்ச்சியில் தான் இந்த தகவலை அறிவித்துள்ளார்


கண்டிப்பாக வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்கள் என்று அடித்து சொல்ல காரணம் ஒரு கணக்கு தான் என்கிறார்

நாம் வாழும் பூமி மற்றும் இதர கோள்கள் அடங்கியது ஒரு மண்டலம் மட்டும் தான்,இந்த பிரபஞ்சத்தில் 100 கோடி மண்டலங்கள் இருக்கும்
பூமியை போல உயிர் வாழ ஏதுவான சூழ்நிலை கண்டிப்பாக ஏதாவது கோள்கலில் இருக்கலாம்.


ஆனால் அங்கு உயிரினம் எப்படி இருக்கும் என்று நாம் சொல்ல முடியாது,அவை ஒரு செல் உயிரினமாகவும் இருக்கலாம்,இல்லை மனிதனை விட பரிணமித்த ஜீவன்களாகவும் இருக்கலாம்,அவர்கள் கிரகத்தில் எல்லா வளங்கள் தீர்ந்து போன பின்,வேறு கிரகத்தை ஆக்கிரமிக்க பல ராட்சத தட்டுகளில் கூட இங்கு வரலாம்.

இதுவரை அவதார்,ப்ரிடேட்டர்,ஏலியன்ஸ்,இ.டி போன்ற படங்களிலும்,அறிவியல் புனைவுகளிலும் நாம் கற்பனையில் பார்த்த அந்த ஜீவராசிகள் நமக்கே ஆப்பு வைக்க வந்தா எப்படி இருக்கும்.ஆப்பு கண்ணுக்கு தெரியும்


டிஸ்கவரி தொலைகாட்சியில் ஒளிபரப்பான இந்த அற்புதமான டாக்குமெண்ட்ரியை கான

Into the universe பாகம்-1


Into the universe பாகம்-2

Into the universe பாகம்-3

Into the universe பாகம்-4

Into the universe பாகம்-5

மேலும் வாசிக்க

ஹாக்கின்சின் இனையதளம்

அவர் பேட்டி

11 Response to "அவர்கள் வந்துவிட்டார்கள் (Aliens)"

 1. வியப்பான பதிவுதான் நண்பரே . சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு ஆங்கில நாளிதழ் ஒரு ஆராய்ச்சியின் அறிக்கை வெளியிட்டது அதில் நமது பூமி கிரகத்தில் நாம் வாழ்வதுபோல . ஒருசில கிரகங்களில் உயிர்கள் வாழ்வதர்க்காகான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறிக்கை வெளியாகி இருக்கிறது . எதுவும் சொல்வதற்கில்லை இன்றைய நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் . பகிர்வுக்கு நன்றி !

  Anonymous says:

  வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

  பகிர்வுக்கு நன்றி .

  பயமுறுத்துறியே ஜில்லு.....

  Riyas says:

  நல்ல தகவல்கள் ஜில்லு சார்..

  பகிர்வுக்கு நன்றி

  ஏலியன்ஸ் நம்முடனே இருக்கிறார்கள்!,
  பெரிய உருவத்தில் தான் ஏலியன்ஸ் இருக்க வேண்டுமென்றல்ல, சிறு கிருமிகளுமாக கூட இருக்கலாம்!

  யோசித்து பாருங்கள், சில ஆண்டுகளாக பல புது நோய்கள்!

  ஏலியன்ஸ் அட்டாக் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது!

  (இந்த கத எப்படியிருக்கு :) )

  இது வேறயா.......!!

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

  பயப்படுத்துறீங்களே நண்பா...

  பயமுறுத்தும்பதிவு நண்பரே.

  இன்றைய நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் . பகிர்வுக்கு நன்றி !

  பட்டைய கெளப்புங்க ஜில்லு :) அவர்கள் முதலில் வரும் போது நம்மூர் அரசியல்வாதி ஒருவரை சந்திக்க வெச்சிட்டா போதும்.. திரும்பி வர மாட்டாங்க,

  நல்ல தகவல்கள் நன்றி

  LawrencE says:

  it will never happen from my opinion...

Related Posts with Thumbnails