அறிவியல் வாத்தியார் - 2


வணக்கம்
ஐயா,சௌக்கியமா இருக்கீங்களா !!

ரொம்ப நல்லா இருக்கேண்டா தம்பி,தமிழ் பதிவுலகில் ஏதோ பிரச்சனயாமே

வேணாம் யா,ரவுண்டு கட்டிடுவாங்க,நாம நம்ம வேலைய பாப்போம்

அதுவும் சரி தான் சரி நேத்து ராத்திரி 12 மணிக்கு டவுட்டுன்னு போன் பண்ணினது நீதான

ஆமாம் யா , பல சந்தேகம் இருக்கு

சரி ஒன்னு ஒன்னா கேட்டு தொல

எங்க அம்மா வயித்துல பிறந்த எனக்கும், என் தம்பி ,தங்கச்சிக்கும் இடையே உருவ ஒற்றுமை இருந்தாலும்,குணம் வேறு படுவது ஏன் ஐயா ?

ஒக்காந்து யோசிச்சிருக்க போல

இல்லையா படுத்துக்கிட்டு யோசிச்சேன் (ஹி ஹி ஹி )

சரி கேட்டுக்க

கருவுறுதல் நிகழும் பொது 23 பண்புக்காரணிகள் மட்டுமே சேர வேண்டும்,இது கூடவோ,குறையவோ கூடாது.இதை சரியாக செய்வது மீயாசிஸ் (meiosis) என்ற பிரிவாகும்

ஆணின் முதல் 23 பண்புக்காரணிகளோ அல்லது கடைசி 23 பண்புக்காரணிகளோ சேரலாம்.என்னென்ன குணங்கள் அல்லது எந்த வரிசை என்பதை கண்டுபுடிக்க முடியாது ( ஆனாலும் முடியும் )



சூல்முட்டையில் விந்து விழும் போது எந்தெந்த விதமாக பண்புக்காரணிகள் இனைகிறதோ,அதை பொறுத்து தான் குணங்கள் மாறுபடுகின்றன,ஒவ்வொரு முறை கருவுறும் போதும் இப்படித்தான் வெவ்வேறு குணங்களில் குழந்தைகள் பிறக்கின்றன

சில இரட்டை குழந்தைகள் ஓட்டிப் பிறப்பது ஏன்யா ?

கருவான முட்டை சில சமயங்களில் இரண்டாக பிரிய வாய்ப்பிருக்கிறது ,அது தான் ரெட்டை குழந்தை(twins) ,அப்படி பிரியும் போது சரியாக பிரியாமலிருக்கும் போது ஓட்டிப் பிறக்கும் (conjoined twins ),சரியாக பிரியாத முட்டை தனித்தனி குழந்தையாக வளர்கிறது

இந்த தேன் சிட்டுக் குருவி மட்டும் எப்படி காற்றில் நிலையாக நிற்கிறது ?

தேன் சிட்டுக்கள் பறந்து கொண்டே தேனை குடிக்கும் ஆற்றல் பெற்றவை,சிறகுகளை வேகமாக அடிப்பதன் மூலமே இது சாத்தியமாகிறது.ஒரு நிமிடத்திற்க்கு 55 தடவைகள் அடிக்கிறது என்றால் பாருங்களேன்

இவ்வளவு வேகமான அசைவுகளால் நம் கண்களுக்கு சிறகுகள் தெரியாது,வெறும் சத்தம் மட்டும் தான் கேட்கும்


ஐயா,இன்னக்கி காலையில என்ன சாப்பாடு ?

சப்பாத்தி தான் டா

ம் அதுல ஒரு சந்தேகம்

அடப் பாவி கேளு

சப்பாதியில எப்படி இரண்டு அடுக்குகள் உருவாகிறது ?

மாவு உருண்டைய தட்டையாக்கி சூடான இரும்பு தவாவில் சுடும் போது,அடியில் இருக்கும் பகுதி சீக்கிரம் சூடாகிறது.அதனால் நடுவில் உள்ள ஈரப்பசை ஆவியாகி மேல் நோக்கி அழுத்தம் தருவதாலேயே பலூனை போல் உப்புகிறது.


ஆனால் சரியாக மாவு இடப்படவில்லையெனில்,சில இடங்கள் மெலிதாகவும் இருக்கும்,அப்போது முழுவதும் உப்பாமல்,விட்டு விட்டு உப்பியிருக்கும்

கடைசியா ஒன்னு சொல்றேன் கேட்டுக்க

நம்ம மூக்குல வாசனை உணரும் செல்கள் எவ்வளவு இருக்கு தெரியுமா ?

அதையும் நீங்களே சொல்லிடுங்களேன்

வெறும் 50 லட்சம் தான்,ஆனால் நாய்க்கு எவ்வளவு தெரியுமா கிட்டத்தட்ட 22 கோடி செல்கள் இருக்கிறதான்,அதனால தான் போலீஸ்ல பயன்படுத்துறாங்க
தெரியுமா

சரி சரி போதும்,இன்னொரு நாள் பார்போம்,ஆனால் நைட் மட்டும் போன் பன்னாதடா

சரி யா பன்னமாட்டேன்,ரொம்ப நன்றி ஐயா !!

நன்றி,வரேன்

18 Response to "அறிவியல் வாத்தியார் - 2"

  1. அறிவியல் விளக்கங்கள் அருமை
    அதை விட தாங்கள் வாத்தியாரிடம்
    கேள்வி கேட்டு பதில் வாங்குவது
    இன்னும் சிறப்பு பாராட்டுக்கள்......

    தகவலும் பயனுல்ளதா இருக்கு.... இந்த பாணியும் நல்லா இருக்குங்க.

    பாராட்டுக்கள்.

    மக்களுக்கான அறிவியலை யதார்த்தமாக சொல்வதின் திறமை உங்களிடம் மிகையாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள். சமூக வாழ்வில் காணப்படும் நிகழ்வுகளை அறிவியல் நோக்கில் சொல்லுங்கள். வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

    எஸ்கோபர் தொடர்பதிவும், அறிவியல் விளக்கங்களும் அருமை ஜில்தண்ணி. தொடர்ந்து அசத்துங்க :)

    Riyas says:

    அருமையான பதிவுங்க.. எனக்கும் ஒரு டவுட்டங்க.. ஜில்தண்ணின்னு பேர வெச்சிட்டு அதென்ன சுடுதண்ணியின் ஆஸ்தான ரசிகன்.. விளக்கம் கொடுங்கோ...? எப்புடி

    அறிவியலை கூட மிகவும் சுவராஸ்யமாக சொல்ல முடியும் என சொன்ன பதிவு. சிரித்துக் கொண்டே வாசித்தேன். நன்றி.

    இந்த பாணி நல்லாருக்கு நண்பா...

    அறிவியல நல்லா உள்வாங்கிக்க முடியுது... :)

    சப்பாதி பற்றி இதுவரை நான் அறியாத தகவல்கள் என்னை வியப்பில் ஏற்படுத்தியது . மிகவும் சிறப்பான பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பரே !
    என்றும் உங்கள் ரசிகன் பனித்துளி சங்கர் .

    அட்ரா அட்ரா.. எப்புடி இப்படி எல்லாம்..??
    சூப்பருங்க.. :)

    Nejamma.. interesting visayam solreenga.. thodarattum ungal sevai.. :)

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

    kudanthaiyur.blogspot.om

    ஜில்லு எனக்கொரு சந்தேகம் .... வேனாம் வாத்தியார் தூங்கட்டும்..!!

    ஜெய்லானி, சந்தேகம் வந்தா எப்படி உங்களால் தூங்க இயலும், எழுப்புங்கள் வாத்யாரை :)

    @ஷர்புதீன்
    மிக்க நன்றி சார்

    @மணி (ஆயிரத்தில் ஒருவன்)
    அப்படியா ரொம்ப சந்தோசம் மணி சார்

    @சி. கருணாகரசு
    மிக்க நன்றி சார்

    @தோழன்
    வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி சார் :)

    @சுடுதண்ணி
    வாங்க குரு
    வருகைக்கு மிக்க நன்றி !!!

    @Riyas said...

    // அருமையான பதிவுங்க.. எனக்கும் ஒரு டவுட்டங்க.. ஜில்தண்ணின்னு பேர வெச்சிட்டு அதென்ன சுடுதண்ணியின் ஆஸ்தான ரசிகன்.. விளக்கம் கொடுங்கோ...? எப்புடி //

    எனக்கு சுடுதண்ணியின் பதிவுகள்னா ரொம்ப பிடிக்கும்,அதனால் தான் சுடுதன்ணியின் சிஷ்யன் என்று போட்டுக் கொண்டேன்
    நன்றி ரியாஸ்

    @V.Radhakrishnan said...

    // அறிவியலை கூட மிகவும் சுவராஸ்யமாக சொல்ல முடியும் என சொன்ன பதிவு. சிரித்துக் கொண்டே வாசித்தேன். நன்றி.//

    ரொம்ப நன்றி சார்
    முயற்சி செய்து பார்த்தேன் நன்றாகவே வந்துள்ளது :)


    @அகல்விளக்கு said...

    //இந்த பாணி நல்லாருக்கு நண்பா...அறிவியல நல்லா உள்வாங்கிக்க முடியுது... :) //

    சுலபமாக உள்வாங்கிக் கொள்ள தான் இந்த நடையில் முயற்சி செய்தேன்,தாங்களே சொல்லிவிடீர்

    நன்றி அகல்விளக்கு :))


    @♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

    //சப்பாதி பற்றி இதுவரை நான் அறியாத தகவல்கள் என்னை வியப்பில் ஏற்படுத்தியது . மிகவும் சிறப்பான பதிவு பகிர்வுக்கு நன்றி நண்பரே !
    என்றும் உங்கள் ரசிகன் பனித்துளி சங்கர்//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சங்கர் சார்

    @ Ananthi said...

    //அட்ரா அட்ரா.. எப்புடி இப்படி எல்லாம்..??
    சூப்பருங்க.. :)//

    யார அடிக்க சொல்றீங்க,என்ன இல்லயே
    ரொம்ப சந்தோசம் ஆனந்தி

    @r.v.saravanan

    மிக்க நன்றி சார்

    @ஜெய்லானி said...

    //ஜில்லு எனக்கொரு சந்தேகம் .... வேனாம் வாத்தியார் தூங்கட்டும்..!!//

    பெரிய சந்தேகமாத்தான் இருக்கு,இருங்க கேட்டு சொல்றேன்

    EMLIN says:

    Sir,
    Is it 55 times in a minute or 55 times in a second. just clarify that. I think that 55 times in a second.

    Thank you.

    @emlin

    தாமதத்திற்கு மன்னிக்கவும்
    அந்த பறவை ஒரு நொடிக்கு 55 தடவைகள் தன் இறக்கயை அடிக்கும்

    தவறுக்கு மன்னிக்கவும்

Related Posts with Thumbnails