உலகின் ஏழாவது பணக்காரர் - 3

கொலம்பிய அரசால் ஒன்றுமே செய்ய முடியவில்லை,அமெரிக்க அன்னாச்சிக்கு புரிந்து விட்டது,இவனை இப்படியே விட்டு வைத்தால் நாமும் கொலம்பியா போல் ஆகிவிடுவோம்,அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ரீகனுக்கு இந்த கொக்கெய்ன் மேட்டர் அப்போது தான் தெரிய வந்ததாம்.


சுதாரித்து கொண்ட அதிபர் கொலம்பிய அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அன்புடையிர்,சர்வமங்களம் உண்டாகட்டும் நாளது 1914-ம் ஆண்டு அமெரிக்காவிலே ஒரு சட்டம் இயற்றபட்டது,அதற்கு பெயர் ஹாரிசன் நார்காடிக்ஸ் ஆக்ட்,அதுதான் போதை தடுப்பு சட்டம்.மரிஜ்ஜுவானா,கொக்கெய்ன்,ஓபியம்,கஞ்சா,அபின் உட்பட அனைத்து கசுமாலங்களும் இங்கே தடை செய்யப்பட்ட பொருள்களாகும் யாரோ உங்க ஊரு பரமபுருஷன் எஸ்கோபராமே,அவன் வேலைகள் தான் என்பதை எங்கள் உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்டேன்,நீங்கள் என்ன சொல்கிறீர்.

அமெரிக்காவிடமிருந்து இப்படி ஒரு கடிதம் வந்த பிறகு அவனை அடக்க திணரிக் கொண்டிருந்த கொல்மபிய அரசு அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது,ஒப்பந்ததில் போதை கடத்தல்காரர்களை பிடிக்க அமெரிக்காவும்,அதை குறைக்க கொலம்பியாவும் உதவி செய்ய வேண்டும்.

அந்த காலகட்டத்தில் தான் ஒரு பாதுகாப்பிற்காக லிபரல் கட்சி மூலமாக அரசியலில் குதித்து மேலவை உறுப்பினர் ஆனான் இந்த எஸ்கோபர்.

மேலவைக்கு இரண்டாம் நாள் சென்றான்,சபையில் போதை கடத்தலை குறிவைத்து கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டு அதற்கு எஸ்கோபர் பதில் உரை ஆற்ற அழைக்கப்பட்டார்.

ஒவ்வொரு கொலம்பியனும் தன் காதுகளை தீட்டிக் கொண்டு அவன் உரையை கேட்க தயாரானார்கள்,தன் தொண்டையை சரி செய்து கொண்டு பேச ஆரம்பித்த எஸ்கோபர்

மாண்புமிகு மேலவை தலைவர் அவர்களே எனக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத போதை வர்த்தகம் பற்றி என்னை பேச அழைத்திறுக்கிறார்கள்,அதை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது,ஆகவே வேறு ஒரு விசயத்தை இங்கே பேசுகிறேன்,நம் நாட்டில் ஒரு வேளை உணவுக்கே வழியில்லாத பாமரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா,அவர்களை பற்றி நீங்கள் விவாதித்ததுண்டா,நான் இப்போது கிராமங்களை தத்தெடுத்து வருகிறேன் உங்களால் முடியுமா.இதை பற்றி தனி விவாதம் வைத்து எனக்கு பாராட்டு விழா அல்லவா நடத்தி இருக்க வேண்டும்.


சபை கலைந்துவிட்டது,யாருக்கு பேச்சு வரும்

எஸ்கோபர் முழிபிதுங்கி மாட்டிக் கொண்டு அசடு வழிந்த விஷயம் செய்தித் தாள்களில் வரும் என எதிர்பார்த்தவர்களுக்கு,அத்தனை தினசரிகளும் முதல் பக்கத்தில் எஸ்கோபர் புகழ் பாடப்பட்டிருந்தது....தலையில் அடித்துக் கொண்டார்கள்....

அப்பறம் என்ன ஆனது...அடுத்த பதவில்

டிஸ்கி : என்னடா எஸ்கோபர கொள்ள வந்த கூட்டத்த பத்தி சொல்றன்னு சொன்னானே,எங்கன்னு நீங்க கேக்குறது புரியுது...இவை தவிர்க்கமுடியாத வார்த்தைகளாய் போய் விட்டதே,முடிந்த வரை சுருக்கி அடுத்த பதவில் முற்றும் போட்டுட வேண்டியது தான்....

12 Response to "உலகின் ஏழாவது பணக்காரர் - 3"

  1. whenever u post article information oriented ( KNOWLEDGE ORIENTED) PLS SEND THE LING TO MY G MAIL ID ( vellinila78@gmail.com)
    thanking you!

    அருமை நண்பா...

    ஆனால் அடிக்கடி தொடரும் போட்டு பிரசர் ஏத்துறீங்க...

    இருந்தாலும் விடமாட்டமுல்ல... தொடர்ந்து படிப்பமுல்ல..
    :-)

    நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள்.

    அன்புடன்,
    www.narumugai.com

    அடுத்தப் பதிவை வாசித்தே ஆகவேண்டும் என்ற அளவில் முகவும் சுவராசியமாக பதிவை நகர்த்தி இருக்கிறீர்கள் . மிகவும் சிறப்பு . தொடருங்கள் மீண்டும் வருவேன்

    Anonymous says:

    //மரிஜ்ஜுவானா//
    மரிவானா

    அருமையான தொடர் பதிவு நண்பரே....
    இத்தனை நாள் தங்கள் வலைபூவை
    பார்க்காமல் போய் விட்டதே...
    இனி தொடர்ந்து வருவேன்

    நல்லபகிர்வுங்க... தொடருங்க.

    நல்லாயிருக்கு ஜில்லு...


    // ஆனால் அடிக்கடி தொடரும் போட்டு பிரசர் ஏத்துறீங்க... //


    நானும் அதைத்தாங்க சொல்றேன்....

    Anonymous says:

    //அருமை நண்பா...

    ஆனால் அடிக்கடி தொடரும் போட்டு பிரசர் ஏத்துறீங்க...

    இருந்தாலும் விடமாட்டமுல்ல... தொடர்ந்து படிப்பமுல்ல..
    :-)

    //

    அகல்விளக்கு நீங்க டென்ஷனே ஆகவேண்டியதில்லை. பா.ராகவன் எழுதி கிழக்கு வெளியிட்ட என் பெயர் எஸ்கோபர் என்ற புத்தகத்தை வாங்கிப் படித்தால் முழுவதும் படித்துவிடலாம். உங்க நண்பர் அதில் இருந்து வார்த்தை,வரி மாறாமல் எழுதுகின்றார். அப்பட்டமாக அடுத்தவன் உழைப்பைத் திருடுகின்றார்.

    பெயரை சொல்ல பயப்படும் அனானி நண்பரே
    என் பெயர் எஸ்கோபர் புத்தகத்தை மூலமாக வைத்து தான் எழுதினேன்,அதெல்லாம் ரைட்டுதான்
    220 பக்க புத்தகத்தை தங்களால் கரு மாறாமல் சொந்த எழுத்துக்களில்
    ஒரு 20 பக்கத்துக்கு கொண்டு வர முடியுமா ?

    நல்ல பதிவு தொடருங்கள்

    sowheau says:

    company website see page see this page luxury replica bags site here replica louis vuitton

Related Posts with Thumbnails