பில் கேட்சிடம் கேள்விகள்-ஃபார்வட் மெயில்

புரட்சியை பற்றி எழுதி கொஞ்சம் போர் அடிக்குது ,அதனால நேத்து வந்த ஒரு மின்னஞ்சலை தங்களுடன் பகிர்கிறேன்

இது வெறும் பார்வேட் மெயில் தான்........

________________________________________________________________

என்னுடைய நண்பரின் சில சந்தேகங்கள்...................


நான் திருச்சியில் இருந்து
எழுதுகிறேன். நான் நேற்று ஒரு கணிப்பொறி வாங்கினேன். அந்த கணிப்பொறியை
உபயோகிக்கும் போது நான் கண்டறிந்த சில குறைபாபடகளை தங்களின் பார்வைக்கு
கொண்டு வருகிறேன். இதுவரை யாருக்கும் தங்களை எதிர்த்து எழுத
தைரியமில்லாததால் நான் எழுதுகிறேன்.நெல்வேலி பக்கத்தில் உள்ள சிறு
குக்கிராமத்தில் இருந்து எழுதுகிறேன்.1. இணையத்தில் இணைப்பு கொடுத்த பிறகு நான் என்னுடைய ஹாட்மெயில் அக்கவுண்டை திறக்க முயற்சிக்கும் பொழது பாஸ்வோர்ட் என்ற பகுதியில் மட்டும்
என்ன தட்டச்சு செய்தாலும் ****** என்றே வருகிறது. ஆனால் மற்ற இடங்களில்
ஒழுங்காக தட்டச்சு ஆகிறது. நான் ஹார்டடுவேர் பொறியாளரை அழைத்து
சோதனையிட்பொழுது அவர் தட்டச்சுப் பலகையில் எந்த பிரச்சனையுமில்லை என்று
கூறினார்.

ஆகவே எப்போதும் என்னுடைய அக்கவுண்டை திறப்பதற்காக ****** என்ற பாஸ்வேர்டை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. என்னால் கூட என்னுடைய
ஹாட்மெயில் பாஸ்வேர்ட் என்னவென்று தெரியாததால் தயவுசெய்து என்னுடைய
அக்கவுண்டை சோதனையிட்டு என்னை இந்தத் தீராத பிரச்சனையிலிருந்து என்னை
மீட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


2. என்னால் Shut_Down பொத்தானை அழுத்தியபிறகு எதுவுமே தட்டச்சு செய்ய முடியவில்லையே ஏன்?

3. டெஸ்க்டாப்பில் Start என்ற பொத்தான் இருக்கிறது. ஆனால் Stop என்ற பொத்தான் இல்லையே ஏன்? வைக்க மறந்து விட்டீர்களா?

4. மெனுவில் Run என்ற பொத்தான் இருக்கிறது. எனக்கு மூட்டு வலியாக இருப்பதால்
என்னால் ஓட முடியாது. ஆகவே அந்த பொத்தானை Sit என்று மாற்ற முடியுமானால்
எனக்கு உட்கார்ந்து கொண்டே இயக்குவதற்கு வசதியாக இருக்கும்.


4. கணிப்பொறி திரையில் Re-Cycle Bin என்று ஒன்று இருக்கிறதே. அப்படியானால் Re-Scooter என்று ஒன்று எங்கேனும் இருக்கிறதா? ஆனால் நான்
ஏற்கனவே ஸ்கூட்டர் வாங்கிவிட்டேனே?

5. Find என்ற ஒரு பொத்தான் இருக்கிறதே. அது சரியாக இயங்கவில்லை எனது மனைவி நேற்று வீட்டு சாவியை
தெலைத்து விட்டு அதில் தேடியிருக்கிறாள் ஆனால் அவளால் கண்டுபிடிக்க
முடியவில்லையே. விளக்கம் கூறவும். ஏதேனும் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்குமோ?


6. ஒவ்வொரு நாள் இரவிலும் எனது Mouseசை பூனையிடமிருந்து காப்பாற்ற நான் படும் பாடு படவேண்டியதாக இருக்கிறது.ஆகவே மவுஸோடு தாங்கள் நாயும்
வழங்கினால் மவுஸை பாதுகாக்க வேண்டிய கவலை இருக்காது அல்லவா.? எப்படி யோசனை?

7. என்னுடை மகன் Microsoft Word கற்று விட்டான் இப்போது அவன் Microsoft
Sentence படிக்க ஆசைப்படுகிறான்.எப்பொழுது அதனை வழங்குவீர்கள். ஆகவே
இதுபோன்ற குறைகளை எல்லாம் களைந்துவிட்டால் உங்களுக்கு இந்தநாள் மட்டுமல்ல எந்த நாளும் இனிய நாள்தான்.

17 Response to "பில் கேட்சிடம் கேள்விகள்-ஃபார்வட் மெயில்"

 1. ஆஹா இவர்கள் எல்லோரும் இங்கே இருக்கவேண்டிய ஆட்கள் இல்லை . எண்ணமா யோசிக்கிராகப்பா !

  பாவம் அந்த மனுசன் "பில் கேட்சிடம் !

  //////ஒவ்வொரு நாள் இரவிலும் எனது Mouseசை பூனையிடமிருந்து காப்பாற்ற நான் படும் பாடு படவேண்டியதாக இருக்கிறது.ஆகவே மவுஸோடு தாங்கள் நாயும்
  வழங்கினால் மவுஸை பாதுகாக்க வேண்டிய கவலை இருக்காது அல்லவா.? எப்படி யோசனை?//////////


  ஏலே மக்கா ! இது ரொம்ப நல்ல யோசனையா இருக்குல

  VELU.G says:

  பில்கேட்ஸீகிட்டேயிருந்து தப்பு பண்ணினதுக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பிச்சிட்டாரா

  போட்டு தாக்குங்க பாஸ்

  இதுக்கு பேருதான் உக்காந்து யோசிக்கறது.. வளரும் மொக்கமோஹனுக்கு வாழ்த்துக்கள்..

  என்ன‌ ஜில்த‌ண்ணி இவ்வ‌ள‌வு சீக்கிற‌மா ட‌வுட்டை கேட்டு முடிச்சிட்டீங்க‌.... க‌ண்டிப்பா விள‌க்க‌ம் த‌ருவார் பில்கேட்ஸ்..

  ஹா...ஹா... எல்லாமே சூப்பரான கேள்விகள்... ஆமா... இந்த மெயில பில்கேட்சுக்கு அனுப்பிட்டீங்களா?

  மக்கா, என்னாலே முடியலே மக்கா! :-)))))))))))))

  ஜில் இது நீங்களே எழுதுனா மாதிரி இருக்கு.. உண்மையா ஒத்துக்கோங்க :)

  அருமையான மொழிபெயர்ப்பு தல!

  சிரிச்சிகிட்டே இருக்கேன்!

  Riyas says:

  நல்லாத்தான் கேட்கிறாங்க கேள்வி...

  ஹா ஹா

  Ananthi says:

  அட அட அட.. என்னமா யோசிக்கிறாங்கப்பா..!!
  சூப்பர் எல்லா கேள்வியும்.. :)

  வருகை புரிந்து தங்களின் பொன்னான கருத்துக்களை பதித்ததற்க்கு மிக்க நன்றி

  அனைவருக்கும் மிக்க நன்றி

  நல்ல போஸ்ட்.இது actual ஆ,சர்தார் காமெடி.சரியா? :)

  ஜில்லுனு இந்த பதிவு நல்லாயிருக்கு

  நன்றி ILLUMINATI அடிக்கடி வாங்க

  நன்றி தக்குடுபாண்டி :)))

  கேள்வியின் நாயகனே நல்லா தான் உட்கார்ந்து யோசிச்சிருகீங்க

  r.v.saravanan
  kudanthaiyur.blogspot.com

  அப்டினா உங்க நண்பர் ஒரு சர்தார்ஜீயா...?

  ஏன்னா நான் ஏற்கனவே ஒரு சர்தார் ஜோக்ல இத படிச்சுருக்கேன் தல.

Related Posts with Thumbnails