பெண் சிங்கம் சூ கி


என்னடா சூ கி - என்று என்னெனவோ சொல்றானே என்று பாக்காதீங்க,இவர் தான் பர்மாவின் புரட்சிப் புயல்.

20 வருடங்கள் வீட்டுச் சிறையில் அடைத்தும் தளராதவர் பர்மாவின் சூ கி(suu kyi)இவரது அப்பா ஆங் சாண்(aung san) நவீன பர்மாவின் தந்தை,அவர் தான் பிரிட்டனிடமிருந்த்து பர்மாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தவர்,ஆனால் அதற்கடுத்த சில நாட்களிலேயே படுகொலை செய்யப்பட்டார்,பர்மா ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் உயர் படிப்பு முடித்த சூ கி 1988 ஆம் ஆண்டு பர்மா திரும்பினார்,பர்மாவில் ராணுவத்தின் அராஜகத்தை கண்டு வெகுண்டார்,ஜனனாயக ஆட்சி மலர முழு மூச்சுடன் இங்கினார்.

அவருக்கு மகாத்மா காந்தி தான் ரோல் மாடல்,அஹிம்சை வழியிலேயே தன் போராட்டங்களை நடத்தினார்.

1990 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சூ கி-க்கு ஆதரவாக 82 சதவீத மக்கள் ஓட்டு போட்டார்கள்.ஆனால் ராணுவமோ இந்த தேர்தல் செல்லாது என்று அறிவித்து சூ கி-யை வீட்டுக் காவலில் அடைத்தது.


கடுமமையான தனிமையான வீட்டுச் சிறையில் வாடினார் சூ கி,கேன்சரால் பாதிக்கப்பட்ட தன் கணவரை பார்க்க கூட தடைகளை விதித்தது,அவர் இறந்த போதும் கூட கடும் கட்டுப்பாடுகளுடன் தான் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

"மீண்டும் பர்மாவுக்கு வர மாட்டேன்" என்கிற உத்தரவாதத்தோடு வெளிநாட்டில் தஞ்சம் அடைந்தால் வீட்டுச் சிறையிலிருந்து விடுதலை என்று பர்மா அரசு பேரம் பேசியது , அசைந்து கொடுக்கவில்லை இந்த இரும்புப் பெண்மணி.

2002 இல் ஐ.நா-வின் தலையீட்டால் அரசுக்கும்,சூ கி - க்கும் இடையில் ஒப்பந்தம் உருவானது.உடனடியாக வீட்டுச் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

அதோடு விட்டதா சூ கி செல்லுமிடமெல்லாம் கலவரத்தை உருவாக்கியது அரசு,இதையே காரணம் காட்டி மீண்டும் வீட்டுச் சிரையில் அடைத்தது.

பல உலக நாடுகள் எச்சரித்தும் இன்று வரை அசையவில்லை அரசு,காரணம் சீனா-வாகத்தான் இருக்க முடியும்,ஏனெனில் நம் இந்தியாவிற்க்கும் சீனா - விற்க்கும் இடையில் தான் இந்த பர்மா இருக்கிறது.பர்மா தன் கையில் இருந்தால் இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டலாம் என்ற ஆசையில் தான் இப்படி செய்து வருகிறது.

சூ கி இந்தியாவிற்க்கு ஆதரவானவர்,அதனால் தான் இன்று வரை அவருடன் மல்லுக்கு நிற்கிறது.இதுதான் உலக அரசியலோ.....


புரட்சி எரியும்..........

10 Response to "பெண் சிங்கம் சூ கி"

 1. அறியாத‌வ‌ர்...ப‌கிர்விற்கு ந‌ன்றி.. தொட‌ர‌ட்டும்..

  கலக்குறீங்க ஜில்லு!!
  வாழ்த்துக்கள், தொடருங்கள்.

  malgudi says:

  சூகி .......தகவல் அருமை

  Nice Article....

  Riyas says:

  good post...

  continue

  சரியான தலைப்பு , ஜில்

  படிச்சிருக்கேன் இவுங்களை பத்தி!

  சூ கி அம்மையார் எனக்கு பிடித்த பெண் புரட்சியாளர்.

  VELU.G says:

  புது தகவல்கள் நன்றி

  பாவம்ல அவங்க..

Related Posts with Thumbnails