புரட்சியின் மறுபெயர் "சே"
புரட்சியின் அடையாளம் சே குவேரா , வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவின் திமிர்த்தனத்தை எதிர்த்து நின்ற மாவீரன்.
இடதுசாரிக் கொள்கைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த சே,சிறு வயதிலிருந்தே அநீதியை கண்டு ஆத்திரம் கொள்பவராக இருந்தார்.பணக்காரக் குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் தோழனாக இருந்தவர்.
அமெரிக்க முழுவதும் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம் சே- வின் வாழ்கையை திசை மாற்றியது .முதலாளித்துவம் மக்களை எவ்வளவு கொடூரமாக பிழிந்தெடுக்கிறது என்பதை கண்கூடாகப் பார்த்தார்.இனி புரட்சி மட்டும்தான் ஒரே வழி என முடிவெடுத்தார்.
முதலாளித்துவ அமெரிக்காவின் கீழ் இருந்த கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ உடனான அறிமுகம் இதை சாத்தியப்படுத்தும் என நம்பினார் "சே".
அர்ஜென்டீனாவில் பிறந்த சே கியூபா பரட்சி வெற்றி பெற களம் இறங்கினார், அமெரிக்கா ஸ்தம்பித்தது, காஸ்ட்ரோ குவேராவை தன் நம்பிக்கையான தளபதியாக கருதினார்.மக்கள் சக்தி கியூபா வில் வெற்றி பெற்றது,சே விற்கு அமைச்சர் பதவி வழங்கினார் காஸ்ட்ரோ.
கொஞ்ச காலத்தில் அமைச்சர் பதவியை துறந்து காங்கோவின் விடுதலைக்கு போராட ஆப்ரிக்காவிற்கு சென்றார் ,அங்கிருந்து பொலீவிய நாட்டு விடுதலைக்காக போராடினார்.
சே வை விடாமல் துரத்தியது அமெரிக்க சி ஐ எ , கொரில்லா வீரர்களுடன் கடும் போர் ஏற்பட்டது,அங்குதான் சே சுட்டுக் கொள்ளப் பட்டார் .கலங்கினார் காஸ்ட்ரோ தன் ஒரு கையை இழந்தது போல் துடித்தார்,இன்று வரை அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்த்து நின்று கொண்டிருக்கிறார் காஸ்ட்ரோ.
"அநீதிக்கு எதிராக கிளர்ந்து எழுந்தால் நீயும் நானும் தோழனே " - சே குவேரா
இன்று சே வின் பேத்தியான லிடியா குவேராவும் ஒரு புரட்சிக்காரர் தான்,பசுமையை நோக்கி புரட்சி செய்கிறார் இந்த பெண் குவேரா
புரட்சி தொடரும்................
முன்னரே படித்து இருந்தாலும், அழகாக தொகுத்து
கொடுத்ததற்கு பாராட்டுக்கள் ஜில்லு.
அருமை.. தொடரவும் :)
அநீதிக்கு எதிராக கிளர்ந்து எழுந்தால் நீயும் நானும் தோழனே ...நண்டு@நொரண்டு
what you mean by revolution
அருமையான விவரிப்பு...தொடருங்கள்.
ஜில்தண்ணினு பேரு.. எழுதறது எல்லாம் சூடு.. என்னா தலைவா ??
சுருக்கமா இருந்தாலும் நிறைவா இருக்கு!
//அநீதிக்கு எதிராக கிளர்ந்து எழுந்தால் நீயும் நானும் தோழனே //
உண்மை..உண்மை..உண்மை..
@ சைவகொத்துப்பரோட்டா
நன்றி சை கொ ப
@பிரசன்னா
நன்றி பிரசன்னா! கண்டிப்பாக தொடரும்
@நண்டு@நொரண்டு -ஈரோடு
வாங்க நண்டு சார்! நன்றி
@Anonymous said...
\\what you mean by revolution\\
அனானி revolution என்றால் புரட்சி
@நாடோடி
மிக்க நன்றி!! நாடோடி சார்
@ருத்ர வீணை®
என்ன பண்றது ருத்ரா
என்னதான் ஜில்லுன்னு போட்டாலும்
நம்ம நினைப்பு எல்லாம் சூடாகத்தான் இருக்கு
ஜில்லான பதிவும் போடுவோம்,விரைவில்
@வால்பையன்
நன்றி வால்!!
@ஜெய்லானி
ம்ம்ம் உண்மைதானா,நன்றி ஜெய்லானி :)
இன்னொன்னு தெரியுமா?
"அமெரிக்கா ஒரு கழுதைப்புலி.அதன் வாலை அதன் நாட்டிலேயே அறுப்பேன்."
சொன்னவர் யார்?வேறு யார்,சே தான்...
புரட்சியின் மறுபெயர் சே.
“Better to die standing, than to live on your knees."
இதுவும் அவரே...
Good One Boss.
நல்ல பகிர்வு நண்பரே..
navigate to this web-site best replica designer bags look at more info replica louis vuitton bags anonymous replica designer bags wholesale
j9a30i5j51 a9n86n7z31 p1s12w3z00 n3o96p6n57 d5t02e1x76 h9f66h7m66