Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

க..க...கல்லூரி சாலை

மூக்குக்கு கீழ நாலு முடியாவது மொளச்சிருக்கான்னு  அப்பப்ப கண்ணாடி முன்னாடி நின்னு தடவிப் பாத்துகிட்டே இருந்தன்...ஏன்னா காலேஜ் சேந்துட்டன்ல...எங்க என்ன பால்வாடின்னு கிண்டல் பண்ணுவாங்களோன்னு ஒரு பயம் வேற

அந்த நாளும் வந்துச்சி...கல்லூரி முதல் நாள்....

காலங்காத்தால எந்திருச்சி ஓன்னுக்கு நாலு தடவ சோப்பு போட்டு குளிச்சி...அப்பா அயன் பண்ணி வெச்சிருந்த சொக்காவ சோக்கா எடுத்து மாட்டிகிட்டு கண்ணாடிய பாத்தா...அட எனக்கும் ஸ்டைல் வந்துடுச்சிப்பா...சுருள் முடிகளை மெனெக்கெட்டு வகிடெடுத்து சீவி ஏதோ பரட்டை தலை எஃபெக்ட் வரவழைச்சாச்சு

அப்பா கிட்ட சொல்லிட்டு நோட் வாங்க பதினெஞ்சும்,பேருந்துக்கு இருவதும் அப்பா பாக்கெட்டிலிருந்து எடுத்துக்கிட்டன்...போய்ட்டு வரம்மா..போய்ட்டு வரம்பா

பேருந்தில் தொத்தி கித்தி கல்லூரிக்கு வந்து சேந்தாச்சு...அடுத்து என் க்ளாச தேடனும்...B.sc Computer science - room no.205  என்று போர்டில் எழுதியிருந்தது...205ஐ தேடி அங்க இங்க போனன் கெடைக்கல...

என்ன மாதிரியே இன்னும் நாலைந்து பய புள்ளைங்க 205ஐ தேடிக்கிட்டு இருந்துச்சுங்க...அதுல பய ஒருத்தன் நல்லா வாட்ட சாட்டமா என்ன விட அழகா(அவ்வ்வ்வ்) இருந்தான்...


எங்க சீனியரா இருப்பாயிங்களோ என்ற பயத்துடனே அவனை  நெருங்கி ஹாய் நீங்க பர்ஸ்ட் இயரா என்று மெல்ல விசாரிச்சன்...ஆமாம் நான் கம்ப்யூட்டர் சயின்சு நீங்க ? அட நானும் தான்..சரி வா ரூம தேடுவோம்

205 ஐ ஒரு வழியா தேடிப் பிடித்து போனால்....

என்னோட பன்னெண்டாவது படிச்ச பாதி பய புள்ளைங்க அங்க தான் இருக்காயிங்க...அட சூப்பருன்னு..ஒக்கார இடம் தேடுனா...இருந்தது மாப்பிள்ளை பெஞ்சு மட்டும் தான்...

அந்த கடைசி பெஞ்சில் ஆரம்பித்த என் கல்லூரி வாழ்க்கை...


தொடரும்....அடுத்த பதிவில்

கல்லூரிக் கலாட்டாவும் சில கவிதைகளும்

ஒரு ரெண்டு மூணு வாரமா இநத பக்கம் வர முடியாம போயிடுச்சி, மொக்கைகள் கம்மியா இருக்கு,ஆளாலுக்கு உருப்படியா எழுத ஆரம்பிச்சிட்டாங்க,இப்படியே போனா தமிழ் பதிவுலகம் என்னாவது சரி அதான் மொக்கை ரிட்டன்ஸ்

காலேஜும் போக ஆரம்பிச்சாச்சு புது நண்பர்கள் நிறைய பேர் கிடைச்சிருக்காங்க(தோழிகள் கிடைக்கலன்னு சொன்னா நம்பவா போறீங்க),புது சூழ்நிலை எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு

                                      *****************************

முதல் நாளே வாந்தி சாரி வாத்தி ஒருவர் யாரெல்லாம் ப்ளாகரா இருக்கீங்க,கைய தூக்குங்கன்னு சொல்ல,நான் மட்டும் தைரியமா கைய தூக்கிட்டேன்(ஆமாம் நான் ப்ளாகரா ?),  நான் மட்டும் கை தூக்க ஊரே என்னை பார்க்க ஆரம்பத்தது, அந்த வாத்தி whats your latest blog என்று கேட்க நான் கோக்குமாக்கு என்று  உளர,என்னை பாத்து  அத்தன பொண்ணுங்களும் சிரிக்க எப்படியோ சமாளிச்சேன்

                                      *****************************

ஒரு வாரக் காலத்தில் எல்லா பய புள்ளங்களுக்கும்  பட்டப் பேர் வச்சாச்சு, எனக்கு என்ன பேர் வச்கிருக்காங்கன்னு சொல்ல மாட்டேனே ( தெறம தெறம) :)

                                    *******************************

சென்னை வாழ்க்கையை  நல்லா அனுபவிக்கிறேன் முன்பு போல் விடியற்காலை 11 மணி வரை தூங்க முடியாவிட்டாலும்  முன்னிரவு 5.30 மணி வரை தான் தூங்க முடிகிறது(தாங்க சாரி தூங்க முடில)


                                    ********************************
மொக்க கவுஜைகள் ரிட்டன்ஸ்


சென்ற வருடம்
காதலித்த அவளுக்காக
எழுதிய கவிதையை
இப்போது காதலிக்கும்
அவள் படித்துப் பார்த்து சிரிக்கறாள்
அவளுக்கென்று நினைத்து

++===++===++===++===++===++


என் 
வாழ்க்கை பேனா 
அவன்,அவள்களை 
படித்து எழுதியதால் 
எப்போதும்
மகிழ்ச்சியில் 
பொங்கியே 
இருக்கிறது 
==++===++==++==++===++===
 நான் 
அவளோடு அதிகம் பேசிய
வார்த்தை 
"மௌனம்"
==++==++==++==++==++==++==++
என் அழகுப் பேயின் 
கன்னக் குழிகளில் 
காதல் ரசத்தை 
ருசித்ததால நான் 
என் வசம் இல்லாமல் போனேன்
டிஸ்கி :  நேரம் இல்லாததால்  சரியா மொக்கை போட முடியல,கூடிய சீக்கிரம் ஃபுல் ஃபார்முல ஆரம்பிச்சிடுறேன்

வெறும்பயலுக்கு பாராட்டு விழா

பதிவுலகில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது

ஒன்றல்ல.............................. பத்தல்ல...................................

நூறு கவிதைகள் ஒரே பதிவில்....யாரால் முடியும்

என் நண்பன் வெறும்பயலால் மட்டுமே முடிந்தது

அவனை பாராட்டி பட்டம் வழங்கத்தான் இந்த பதிவே

வெறும்யலை பாராட்டி ஒரு கவித 

நீ வெறும்பயலல்ல
பெறும்பய (கீழுள்ள போட்டோவை பார்க்கவும்)

ஒன்றும் தெரியாதென்று சொன்னாய்
ஒன்னு ரெண்டு முழுசா தெரிஞ்சிருக்கே

சிங்கப்பூர் கண்டெடுத்த சிங்கமே !!!
சினம் கொள்ளாத சிவனே :(

சிரிப்பு போலீசிடம் கூட
சிக்காத சில்வண்டே



இவரு வெறும்பயலாம் :) நம்புங்க 

அண்ணன் தேவா இப்போது வெறும்பயலுக்கு கவிஞர் வெறும்பாதி என்ற பட்டத்தை அளிப்பார் 



ம்ம்ம் போதும் போதும் ஆட்டுக்கு அருள் இன்னும் அருள் வரலையே....
அடிங்கடா

டண்டனக்குட டணக்குனக்குட டண்டனக்குட டணக்குனக்குட
டண்டனக்குட டணக்குனக்குட டண்டனக்குட டணக்குனக்குட
டண்டனக்குட டணக்குனக்குட டண்டனக்குட டணக்குனக்குட



செல்வா....சௌந்தர்...ஆளாலுக்கு ஒன்னு எடுத்துக்கங்க,ஆடும் ரெடி ...

வெட்டும் போது அடிபட்டுவிட கூடாது நம்ம நண்பனாச்சேன்னு ஹெல்மெட் போட்டு விட்டுறுக்கோம்


மொத வெட்டு நாங்கதான் வெட்டுவோம் (செல்வா/சௌந்தர்/நான்)

அடுத்து உங்க ரவுண்டு தான்....பூந்து வெட்டுங்க
கறி நிறைய தேறும் போல
சிங்கப்பூருக்கே இன்னக்கி செம தீணி தான் வாங்க வெட்டுங்க ஆட்ட :)

எனக்கென்று சில உறவுகள்


தங்கக் கம்பி

நான் பள்ளி சேர்ந்த வருடம்
நீ பூமியில் குதித்தாய்
என் தாய் மடியை அபகரித்து விட்டாயோ என்று
கண்ணில் நீர் கசிந்தது
அம்மா தேற்றினாள் உன் தம்பி தான் என்று

நான் தான் உனக்கு பெயரே வைத்தேன்
வளர்ந்துவிட்டாய்
நீ அண்ணா என்று கூப்பிடும் அந்த
வார்த்தைக்காக ஏங்கியவன்

எத்தனை சண்டைகள்
நமக்குள்
பலப்ப குச்சிக்கும் அம்மா செய்த முறுக்குக்கும்
சண்டை போடாத நாட்களே இல்லை

இன்று கூட
சண்டை தான்
புது தலையணையை யார்
வைத்துக் கொள்வது

என்ன இருந்தாலும் விட்டுக் கொடுப்பவன்
நான் தான்
என் தம்பி தானே

--------------------------------------------------------------

மாமன் மகள்..

குட்டிப் பெண்ணாய்
பார்த்துக் கொண்டிருந்தேன்
அதற்குள்
பெரிய மனுசி
ஆகிவிட்டாள்

நிறைய வித்யாசங்கள்
அவளிடம்
புதிதாய் கண்டுபிடித்த வெட்கம்
சற்றே உப்பிய கன்னம்
குரல் கூடத்தான்

சட்டென்று
குதித்த என் இதயம்
அவளிடம்
நின்று கொண்டு
முறைப் பெண் தானே
காதலித்து பாரேன்
என்றது
என்ன செய்ய ?

----------------------------------------------------

நண்பா...

இத்தனை வருடம் படித்தேன்
என்ன வளர்ந்தது
நண்பர்கள் எண்ணிக்கை தான்

அரியர் வைத்தாலும்
கேட்டாய்
ஆடை வாங்கினாலும்
கேட்டாய்
நானும் மறுக்கவில்லை
"ட்ரீட்"

சொந்தமே இல்லாமல்
மச்சான் என்றாய்
மாமா என்றேன்

ஒன்றுமே
இல்லையென்றாலும்
நமக்குள்
நிறைய
இருக்கும்
பகிர்ந்து கொள்ள

நம்
நட்பிற்கு
முடிவு
என்றுண்டா

நட்பெனும் காதல்....


அவளும் அவனும்....

அவளை
நேசித்த போது
அவன்
அவனாகவே இருந்தான்

இப்போது
அவனையும்
நேசிக்கிறேன்

அவள்
சொன்னால்
உன்
நண்பனை
கொஞ்சம்
ஒதுக்கியே
வை
என்று...

--------------------------------------------------------------------------------------

வாழ்க்கை பயணம்...

இரு வழிகள்
தொடரும்
சாலை

ஒன்றில்
அழகாய்
பூத்திருக்கும்
அல்லிப் பூவை
போல்
அவள்

மற்றொன்றில்
எனக்காக
வானத்தை
கூட
தாங்கும்
நண்பன்

எந்த
பாதையை
தெரிவு
செய்ய

அல்லிப் பூ
பூத்த போது
மட்டும் தான்

ஆனால்
அவனோ
உயிர் நீத்தும்
தாங்குவான்
உள்ளங் கையில்

எந்த பாதையை
தெரிவு
செய்ய
என்
வாழ்க்கை
பயணத்தை
தொடர ...


----------------------------------------------------------------------------

நண்பனின் மரணவாயிலில்...

நட்பெனும்
ஆழ்கடலில்
அழகாய்
நீந்திக்
கொண்டிருந்தோம்
இந்த
காலனுக்கு
நான்
இருப்பது
தெரியவில்லையா
அவனை மட்டும் அழைத்து
சென்று விட்டான்...

Related Posts with Thumbnails