Showing posts with label பள்ளிக் கூடம். Show all posts
Showing posts with label பள்ளிக் கூடம். Show all posts

நான் பள்ளிக்கூடம் போறேனே

புட்டிப்  பால் குடிப்பதை கூட அப்போது நிறுத்தல அதற்குள் பள்ளிக்கூடத்துல சேத்துட்டாங்க, எங்க வீட்டுக்கு எதிர்புறமே ஒரு கான்வென்ட் வேறு இருந்ததால் வசதியா போச்சு டபாருன்னு அட்மிஷன் போட்டாச்சு

நோட்டு,புத்தகங்கள்,குச்சி டப்பா,பேக் எல்லாம் வாங்கிட்டு வந்தாங்க அப்பா,பள்ளிக் கூடம் திறப்பதற்கு மூணு நாளுக்கு முன்னாடிலேர்ந்தே எல்லாத்தையும் அடுக்கி வச்சி புது  பேக்க மாட்டிகிட்டுதான் நின்னுகிட்டு இருப்பேன்(பேக்கு பேக்க மாட்டிகிட்டு நின்னுச்சு )

ஸ்கூல் திறக்குற நாளும் வந்துச்சி,காலையிலேயே குளிப்பாட்டி (அப்பலாம் கரெக்டா குளிச்சருவேன் தெரியுமா ),எண்ணெய் வச்சி முடிய  நல்லா படிய சீவி, யூனிஃபார்மு,டை எல்லாம் ஜோரா ரெடி பண்ணிட்டாங்க  அம்மா

நான் மொத முறையா பள்ளிக்கூடம் போறதப் பார்க்க ஒரு ஊரே வந்துட்டுனா பாத்துக்குங்க(எங்க சொந்தக்காரங்களதான் சொன்னன் ) , நானும் சிரிச்சிகிட்டே கிளம்பிட்டேன் , ஸ்கூல்ல விட்டுட்டு எங்க சித்தப்பாவும்,அப்பாவும் வீட்டுக்கு வந்துட்டாங்க

அதுவரைக்கும் ஒன்னும் தெரியல ஸ்கூல்குள்ள போனா எல்லா பயபுள்ளைகளும் அழுதுகிட்டு இருக்கு, அப்பரம் நான் மட்டும் சும்மாவா இருப்பேன் ( நாங்க சிங்கமுல்ல) ,அழுது அழுது புது டையிலேயே மூக்க தொடச்சிப்பேன்


மதியம் சாப்பாடு ஊட்ட அம்மா அழைத்து போக வந்தாங்க,ஜாலியா சிரிச்சிகிட்டே வீட்டுக்கு வந்தேன்,டை பூறா மூக்கு சலிய பாத்து அம்மா கேட்டாங்க அழுதியா கண்ணு :) திரும்பவும் மூக்க தொடச்சிகிட்டு ம்ம்ம் திரும்ப அழுக

அழக்கூடாது நல்ல புள்ளல, அம்மா மம்மு எடுத்துட்டு வரேன்னு அடுப்படிக்கு போனாங்க, என்னடா  மம்மு கொடுத்துட்டு திரும்ப ஸ்கூல்ல  கொண்டு போய் விட்டுடுவாங்களான்னு யோசிச்சேன்,ஐடியா வந்துச்சி : )

வீட்ல பாட்டி தூங்கிகிட்டு இருந்தாங்க,அவுங்க பக்கத்துலயே நானுன் படுத்து தூங்குற மாதிரி கொஞ்ச நேரம் தூங்குற மாதிரி நடிச்சேன் அப்பறம் உண்மையாவே தூங்கிட்டேன் (என்ன வில்லத்தனம்)

அம்மா எழுப்பி பாத்துட்டு பாவம் சின்ன புள்ள தூங்கிடுச்சேன்னு எழுப்பாம விட்டுடாங்க,அன்னக்கி பொழுத ஓட்டியாச்சு :)

மறுநாள் வீட்ல கிளம்பும் போதே அழுகாச்சி தான்,ரகலை தான்(காலையில யாரும் தூங்கலயே ),இன்னக்கி மட்டும் ஸ்கூலுக்கு  போகலன்னு ஒரே  அடம் தான்,அதுக்குள்ள எங்க ஸ்கூல் வாத்தியார போய் கூப்டு வந்துட்டாங்க அப்பா

என்ன அழுக இப்ப வரியா இல்லாயான்னு அவரு அதட்டினாரு பாருங்க,இருந்த அழுக எங்க போனுச்சுனே தெரியல,அப்ப எனக்கு வாத்தியார்னா ஒரு பயம் அடிப்பாருன்னு வீட்ல சொல்லி சொல்லி  பயமுறுத்தி வச்சிருந்தாங்க  ( இப்ப அந்த வாத்தியார பாத்தா காமெடியா தெரியது)

அவர் என்ன குண்டுகட்டா தூக்கி அவர் தோல் மேல வச்சிகிட்டு ஸ்கூலுக்கு போயிட்டார் , நானும் பயத்துல அழவே இல்லனா பாத்துக்குங்க :)

அதுலேர்ந்து அழுகைய கொறச்சிகிட்டேன் :) நல்ல புள்ளையா ஸ்கூல் போனேன்(இப்ப வரைக்கும் முதல் வருடம்  காலேஜ் போகக் கூட அழலன்னா பாத்துக்குங்க)

என்னுகிட்டேந்து பலப்ப குச்சை ஒருத்தன் புடிங்கிட்டான்,அவன என்ன செஞ்சேன்னு இன்னொருவாட்டி சொல்றேன்,ரைட்டா :)

Related Posts with Thumbnails