Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

மீனவர்களைக் காப்பாற்றுங்கள் #tnfisherman

ஐநூற்றுச் சொச்சம் மீனவர்கள்... ஐநூற்றுச் சொச்சம் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது இதுவரை. இனிமேலும் தொடராமலிருக்க, ஒரு வலையுலக யுத்தம்

கூட்டணி பேரம், பதவிச்சண்டை என்றால் மட்டும் ஆளாய்ப் பறந்துவிட்டு, ஒரு மரணம் சம்பவித்தால் லட்சத்தைத் தூக்கியெறிந்து தற்காலிகமாக வாயை அடைப்பது இங்கு மட்டும் தான் நடக்கும். நடவடிக்கை எடுக்கக் கேட்டால் இருக்கவே இருக்கிறது கடிதங்களும் தந்திகளும்.. இதையும் மீறி யாராவது ஏதாவது கேட்டால் கடந்த ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றொரு எகத்தாளப் பேச்சு. 

தங்களது குடும்பங்கள் இன்னும் நூறாண்டுகள் செல்வச்செழிப்புடன் வாழ தொலைநோக்குப் பார்வையுடன் யோசிக்கும் தலைவர்கள், ஒரு சாதாரணன் சாதாரண வாழ்க்கை வாழ வழி செய்யாதிருப்பது திருட்டுத்தனம்.

அயல்நாடு செல்லும் பிரபலங்கள் சோதனை என்ற பெயரால் அவமானப்படுத்தப்பட்டால் கூட பொங்கியெழும அரசியல் எரிமலைகள், இங்கொருவன் கொல்லப்பட்டு அவன் குடும்பம் சிதைக்கப்பட்டால் கூட மௌனம் சாதிப்பது அருவருப்பாக இருக்கிறது.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகாதா?

நன்றி மகேஷ்  : ரசிகன் 
மீனவர்களைக் காப்பாற்றுங்கள் #tnfisherman


விவசாயாமா அப்டின்னா ?

நாத்து பறிப்பது முதல் களையெடுத்தல்,அறுவடை வரை மனிதசக்தியை மட்டுமே நம்பி விவசாயம் செய்து கொண்டிருந்த நாம் இப்போது அத்தனையையும் எந்திரத்தை வைத்தே செய்து முடிக்கிறோம் .

எல்லாம் அறிவியலின் சாகசங்கள் தான்.ஆனால் இன்னும் சில வருடங்களில் இந்த அறிவியல் உன்னதங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய நிலங்களே இருக்காது என்பது தான் கவலைக்கிடம்.

என் தாத்தா விவசாயநிலத்தில் இறங்கி உழைச்சாங்க ,அப்பா சாப்பாட்டுக்காவது வேண்டுமேன்னு விவசாயம் செய்றாங்க.அடுத்து நானோ வயல்களில் கால் வைப்பதை கீழ் தரமாக நினைக்கிறேன்,எங்கப்பாவால் முடியும் வரைதான் விவசாயம் அடுத்து அந்த நிலத்த ப்ளாட்டா மாத்திடுவேன் அவ்ளோதான்.

இது என்னோட எண்ணம் மட்டுமல்ல.இதுதான் இப்போதைய நிலைமை.




பல பல ஏக்கர் நிலங்களை வைத்து விவசாயம் செய்யும் முதலாளிகள் முதல் ஒரு வேலி நிலமே வைத்திருக்கும் சாதாரண கூலி வரை தங்கள் பிள்ளைகள் படித்து பட்டம் வாங்க ஒரு அரசு உத்தியோகத்திலோ அல்லது வேறு நல்ல வேலையிலோ அமர வைப்பதுதான் அவர்களின் ஆசையாகவும் கடமையாகவும் இருக்கிறது.

தான் பட்ட கஷ்டம் மகனும் படக்கூடாது என்பது தான் அவர்களின் எண்ணம் அவர்களை சொல்லிக் குற்றமில்லை.

இப்படி படித்து நல்ல வேலையில் அமருகின்றோம் ,அப்பா இருக்கும் வரை விவசாயத்தை கருமமேன்னு செய்கிறார். அதன்பின் கொஞ்ச நிலமாக இருந்தால் உடனே பைசல்,அதிகமா இருந்தா ப்ளாட்டுகள் தான், யார் விவசாயமெல்லாம் செய்யுறது ?

இந்த எண்ணம்தான் மாறனும், நம்  உணவுத் தேவையையாவது நாமே பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்காவது விவசாயம் செய்யனும்.

நான் புதுசா நிலம் வாங்கி விவசாயம் பண்ண சொல்லலீங்க, கொஞ்சமோ நஞ்சமோ நிலம் வைத்திருப்பவர்களாவது இதை செய்யலாம்ல!

முடியுமா நீங்க சொல்லுங்க ?

மன்னாதி மன்னன் - ஹர்சவர்த்தனர்

வரலாற்றை படிப்பதனால் அப்படி என்ன தெரிந்து விடப் போகிறது,எல்லாம் முடிந்து போன விஷயம் தானே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்,இந்த பதிவை எழுத நிறைய மன்னர்களை பற்றி புத்தகங்களை தேடி படிக்க ஆரம்பித்தேன்,அதில் இந்த மன்னனை மட்டும் தெரிந்து கொள்ளவில்லை,அந்த காலத்தில் இருந்த சமயங்கள்,பண்பாடுகள் பற்றி அறிய இந்த பதிவு எனக்கு உதவியது

இந்த அருமையான பதிவை என்னை எழுத வைத்த,தொடர் பதிவிற்கு அழைத்த நண்பன் ரசிகன்:மகேஷ் க்கு நன்றிகள் பல


ரசிகன் : மகேஷ் அவர்களின் மன்னாதி மன்னன் - சந்திரகுப்த மௌரியர் பதிவு
_____________________________________________________________________________

கி.பி ஏழாம் நூற்றாண்டில் அரசியல் மேடை ஏறியவரும் கடைகி மிகப்பெரும் புத்த மத மன்னருமான ஹர்சவர்த்தனர் வரலாற்றுப் புகழ் பெற்ற மன்னராவார்.

முடிசூட்டல்

கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நரவர்த்தனர் என்பவரால் இந்த வம்சம் நிறுவப்பட்டது, அவரை தொடர்ந்து ஆதித்யவர்த்தனரும்,பிரபாகவர்த்தனரும் ஆட்சி செய்தனர்,பிரபாகவர்த்தனரின் மறைவுக்கு பின்னர் இராஜ்ய வர்த்தனர் அரியனை ஏறினார்

ஹீனர்களை (ஊனர்கள்) அடக்கி தானேசுவரத்தை கைபற்றினார்,அதே சமயம் மாளவ மன்னன் தேவகுப்தன் ஹர்சரின் சகோதரி ராஜ்ஸ்ரீயின் கணவரை கொன்றுவிட்டு ராஜ்யஸ்ரீயையும் தன்னோடு அழைத்துச் சென்று சிறை வைத்தான்

அதை அறிந்த ராஜ்யவர்த்தனர் தேவகுப்தன் மீது போர் தொடுத்து வெற்றியும் பெற்றான்,ஆனால் அதன் பின் சில சூழ்ச்சியால் சசாங்க மன்னனால் கொல்லப்பட்டான்

அப்போது ஹர்சருக்கு வயது பதினாரே நிரம்பிய நிலையில் ஹர்சவர்த்தனராக முடிசூட்டிக் கொண்டார்,ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சசாங்கனை பழிவாங்கி தன் சகோதரி ராஜ்யஸ்ரீயையும் மீட்டான்


ஆட்சி முறை

அதுவரை தானேசுவரத்தை தலைநகராக கொண்டு தான் அனைவரும் ஆட்சி செய்து வந்தனர்,ஆனால் ஹர்சர் கன்னோசியையும் அதனுடன் இனைத்து மாபெறும் சாம்ராச்சியத்தை உருவாக்களானான்.


மிகப்பெரிய பேரரசு பரந்து விரிந்திருந்ததனால்,ஆட்சி செய்ய கடினமாய் இருந்தது,அதனால் சிற்றரசர்களை அச்சுருத்தவும்,உள்நாட்டுக் குழப்பங்களை தீர்க்கவும் ஒரு மிகப் பெரிய படையை 60,000 யானைகளையும், 1,00,000 குதிரைகளையும் வாங்கி உருவாக்கலானான் என்று குறிப்புகளில் உள்ளது

படைபலம் மட்டுமன்றி  நட்பையும் பெருக்கலானார்,அசாம் நாட்டு மன்னன் பாஸ்கர வர்மனிடம் தீவிர நட்பு பாராட்டலானார்.

அது மட்டுமன்றி அண்டை தேசங்களுடன் நட்பு பாராட்டி வானிபத்தை பெருக்க முயன்றார்,அதற்கு சீன தேசத்திற்கு தன் தூதுவரை அனுப்பி நட்பு பாராட்டினார் ஹர்சர்

மாநிலங்கள் புக்திகள் என்று அழைக்கப்பட்டன,புக்திகள் விஷயம் அல்லது மாவட்டங்களாக பிரித்து நிர்வாகம் செய்தான்

ஹர்சரின் சமயம்

தொடக்கத்தில் தீவிர சிவபக்தராக இருந்தவர் ஹர்சர் என்றும்,யுவான் சுவாங் தெரிவித்த புத்த மத கொள்கைகளாலும்,சகோதரி ராஜ்யஸ்ரீ யாலும் இவர் புத்த மதத்தை தழுவலானார்

புத்த சமயத்தை இவர் தழுவினாரே அன்றி ஏனைய சமய மக்களையும் கனிவோடு கவனித்தார்,கட்டாய மதமாற்றம் போன்றவைகளை வெறுத்தார்

தலைநகர் கன்னோசி

வடஇந்தியாவின் முக்கிய நகரமாகி புத்தர் காலத்து பாடலிபுத்திரத்தின் இடத்தை பிடித்தது ஹர்சரின் தலைநகர் கன்னோசி, 10,000 க்கும்  மேற்பட்ட இரு புத்த சமய துறவிகள் இங்கு வாழ்ந்து வந்தனர்

பிற மத கோவில்களும் இருநூற்றுக்கும் மேல் இருந்ததாகவும் தெரிகிறது, நன்கு  திட்டமிடப்பட்ட வீதிகளும்,பூங்காக்களும்,புத்த மடங்களும் கன்னோசியை அலங்கரித்தது

யுவான் சுவாங்கும் நாலந்தா பல்கலைகழகமும்

ஹர்சர் சீனாவடன்   நெருங்கிய நட்பு பூண்டமையால்,சீன நாட்டு யுவான் சுவாங்கை வரவேற்று உபசரித்தார்,யுவானுக்கு ஹர்சரின் ஆட்சி முறையும் போர் திறமையும் மிகவும் பிடித்து விட்டது



ஹர்சரின் காலத்தில் மிகப்பெரும் தொகை மானியமாக நாலந்தா பல்கலைக்கு வழங்கப்பட்டு வந்தது

பல்கலையின் உயர்ந்த கட்டிடங்கள்,போதனா முறைகள் ஆகியன புத்த சமயத்திற்கே உரித்தான புகழாகும்

ஹர்சர் காலத்து இலக்கியம்

ஹர்ச சரிதத்தையும் காதம்பரி போன்ற அற்புத நூல்களை படைத்த பாணபட்டர் ஹர்சரின் நெருங்கிய நண்பர் ஆதலால் இவரின் இலக்கிய ஆர்வம் இதிலிருந்தே தெரிகிறது

மேலும் ஹர்சரே ஒரு சிறந்த நாடகாசிறியர் ஆவார்,நாகானந்தம்,பிரியதர்ஷிகா,இரத்தினாவலி ஆகியன இவரே எழுதிய நாடகங்கள்

மறைவும் பேரரசின் சிதைவும்

நாற்பாதாண்டு காலம் மிகப் பெரிய சாம்ராச்சியத்தை நடத்திய ஹர்சவர்த்தனர் கி.பி 647 வாக்கில் மறைந்தார் என தெரிகிறது

ஹார்சரின் மறைவுக்கு பிறகு அவருக்கு கீழிருந்த சிற்றரசர்கள் தங்கள் எல்லைகளை பெருக்கி கொண்டனர்,அசாம் மன்னன் பாஸ்கர வர்மனும் நகரங்களை பிடித்துக் கொண்டான்,இதனால் மிகப்பெரிய சாம்ராச்சியம் முடிவுக்கு வந்தது

குறிப்புகள் :

ஹர்சரை பற்றிய குறிப்புகள் பாணரின் ஹர்சசரிதத்திலும்,யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளான சியூக்கியிலும் கிடைக்கப் பெற்றவை

விக்கிபீடியா கலைக்கலஞ்சியத்தில் இவரை பற்றி ஆங்கிலத்தில் அதிக தகவல்கள் உள்ளன,தமிழில் மிகக் குறைவே

தொடர் பதிவு :
 
விக்கிபீடியாவில் இவர் போன்ற மன்னர்களை பற்றிய தகவல்கள் தமிழில் மிகக் குறைவாகவே உள்ளது,விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகளை அதிகம் வலையேற்றும் சிறு முயற்சியாக இந்தப் பதிவைத் தொடர்பதிவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். ஆகவே, விருப்பமிருக்கும் அனைவரும் "மன்னாதி மன்னன்" என்றத் தலைப்பில் தொடரலாம். பின்வரும் விதிகளை மட்டும் கவனத்தில் கொள்க!

1) வரலாற்றில் முக்கியமான எந்த மன்னரைப் பற்றியும் கட்டுரை இருக்கலாம்,ராணிகளையும் இதில் எழுதலாம்

2) விக்கியில் தமிழில் அதிகம் தகவல் இல்லாத மன்னராக இருக்க வேண்டும்.

3) கட்டுரையை முடித்ததும் விக்கியில் வலையேற்றவும்.
 
இதை தொடர அழைக்கிறேன்

இவர்கள் மட்டுமல்ல ஆர்வமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் தொடரலாம் !!! மன்னாதி மன்னனை



Related Posts with Thumbnails