விவசாயாமா அப்டின்னா ?

நாத்து பறிப்பது முதல் களையெடுத்தல்,அறுவடை வரை மனிதசக்தியை மட்டுமே நம்பி விவசாயம் செய்து கொண்டிருந்த நாம் இப்போது அத்தனையையும் எந்திரத்தை வைத்தே செய்து முடிக்கிறோம் .

எல்லாம் அறிவியலின் சாகசங்கள் தான்.ஆனால் இன்னும் சில வருடங்களில் இந்த அறிவியல் உன்னதங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய நிலங்களே இருக்காது என்பது தான் கவலைக்கிடம்.

என் தாத்தா விவசாயநிலத்தில் இறங்கி உழைச்சாங்க ,அப்பா சாப்பாட்டுக்காவது வேண்டுமேன்னு விவசாயம் செய்றாங்க.அடுத்து நானோ வயல்களில் கால் வைப்பதை கீழ் தரமாக நினைக்கிறேன்,எங்கப்பாவால் முடியும் வரைதான் விவசாயம் அடுத்து அந்த நிலத்த ப்ளாட்டா மாத்திடுவேன் அவ்ளோதான்.

இது என்னோட எண்ணம் மட்டுமல்ல.இதுதான் இப்போதைய நிலைமை.
பல பல ஏக்கர் நிலங்களை வைத்து விவசாயம் செய்யும் முதலாளிகள் முதல் ஒரு வேலி நிலமே வைத்திருக்கும் சாதாரண கூலி வரை தங்கள் பிள்ளைகள் படித்து பட்டம் வாங்க ஒரு அரசு உத்தியோகத்திலோ அல்லது வேறு நல்ல வேலையிலோ அமர வைப்பதுதான் அவர்களின் ஆசையாகவும் கடமையாகவும் இருக்கிறது.

தான் பட்ட கஷ்டம் மகனும் படக்கூடாது என்பது தான் அவர்களின் எண்ணம் அவர்களை சொல்லிக் குற்றமில்லை.

இப்படி படித்து நல்ல வேலையில் அமருகின்றோம் ,அப்பா இருக்கும் வரை விவசாயத்தை கருமமேன்னு செய்கிறார். அதன்பின் கொஞ்ச நிலமாக இருந்தால் உடனே பைசல்,அதிகமா இருந்தா ப்ளாட்டுகள் தான், யார் விவசாயமெல்லாம் செய்யுறது ?

இந்த எண்ணம்தான் மாறனும், நம்  உணவுத் தேவையையாவது நாமே பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்காவது விவசாயம் செய்யனும்.

நான் புதுசா நிலம் வாங்கி விவசாயம் பண்ண சொல்லலீங்க, கொஞ்சமோ நஞ்சமோ நிலம் வைத்திருப்பவர்களாவது இதை செய்யலாம்ல!

முடியுமா நீங்க சொல்லுங்க ?

35 Response to "விவசாயாமா அப்டின்னா ?"

 1. முடியும் ஆனா ஆள் யாரு தருவ சொல்லு எல்லாரும் கொத்தனார் ,வெளிநாட்டுல தொழில் ,வீட்டு வேலை, இப்டி என்ன என்னனோவோ பண்றாங்க முன்னாடி வேலை செய்ய இருந்தா ஆட்கள் இப்போ இல்ல இதுவும் ஒரு மறைக்கப்பட்ட உண்மை !
  நீ என்ன சொல்ற ?
  நிலம் வச்சு இருக்குறவன் மட்டும் எவ்ளோ வேலை செய்வான் சொல்லு ?
  வேலைக்கு ஆள் வேணும் யார் இருக்கா ?

  :(

  Terror says:

  நல்ல பதிவு...

  @குத்தாலத்தான்

  ஆளே தேவையில்லையே எல்லாம் எந்திரம் பாத்துக்குமே :)

  நாம வேடிக்க பாத்தா போதும்

  மிக மிக அவசியமான பதிவு. பல விவசாய நிலங்கள் இன்று வேறு காரணங்களுக்காக விற்கப்படுகின்றன. இருக்கின்ற கொஞ்சம் விவசாயிகளும் பல கெமிக்கல் பயன்படுத்தி பழங்கால இயற்கை விவசாயம் காணமல் போய்விட்டது. உண்மையில் பசி என்ற ஒன்று இல்லையென்றால் விவசாயம் என்றோ சுத்தமாக காணாமல் போயிருக்கும்.

  //நான் புதுசா நிலம் வாங்கி விவசாயம் பண்ண சொல்லலீங்க, கொஞ்சமோ நஞ்சமோ நிலம் வைத்திருப்பவர்களாவது இதை செய்யலாம்ல!

  முடியுமா நீங்க சொல்லுங்க ? //

  கண்டிப்பாக முடியும் நம்மை போன்ற இளைஞர்கள் மனது வைத்தால்...

  முயற்சி செய்யுறேன் ஜில்லு.படிப்புக்கு மத்தியில் பதிவு போட்டதற்கு நன்றி.

  முடியும் ஜில்லு...

  "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம்
  தொழுதுண்டு பின் செல்வர்".

  இந்த குறள் தான் ஜில்லு நினைவுக்கு வருது.இத ஜாய்ன் பண்ணி டிங்கரிங் பண்ணி இருந்த நல்ல இருக்கும்.இந்த காலத்துல இப்படி ஒரு சமுக அக்கறை உள்ள புள்ளையானு சொல்ல மாட்டேன்.காலேஜ்கு வந்து கேட்டாதான் தெரியும் ஜில்லு பையன பத்தி.

  ஜில்லு அடுத்த பதிவு எப்படா போடுவனு எதிர் பாக்குறேன்.அடுத்த பதிவு எப்ப ஜில்லு போடுவ... ஏதோ என்னால முடிஞ்சா ஒரு கேள்வி தான் கேட்டேன்.ஹிஹிஹீ .

  DHANS says:

  னா ஆள் யாரு தருவ சொல்லு எல்லாரும் கொத்தனார் ,வெளிநாட்டுல தொழில் ,வீட்டு வேலை, இப்டி என்ன என்னனோவோ பண்றாங்க முன்னாடி வேலை செய்ய இருந்தா ஆட்கள் இப்போ இல்ல இதுவும் ஒரு மறைக்கப்பட்ட உண்மை !//

  repeat

  if you have large land then you can do it with machins but in case fo smal lands with out workers nothing doing.

  i am ready to do but i cant find anyone to work for agriculture

  last time i forced my dad to do and i faced a loss of 3000 rupees.

  but i am ready to do after 3-5 years (there wont be any other option to eat)

  Chitra says:

  அக்கறையுடன் எழுதப்பட்ட நல்ல பதிவு.

  நல்ல எண்ணங்கள்!

  முடியும்ன்னு நினைச்சிகிட்டு இது நாள் வரை இருக்கிறேன். நண்பர் “தன்ஸ்” சொன்னது போல், வேலை செய்பவர்களின் பிடிவாதத்தால் ஒரு முறை 30 ஆயிரம் வரை இழந்திருக்கிறேன். எதிர்வரும் நாட்களில் நடைமுறை சிக்கல் நிறைய வரும். பார்ப்போம்.

  கொஞ்சம் வயல் இருக்கு... எக்காரணத்தைக் கொண்டும் விவசாயத்தை நிறுத்துவதாக இல்லை.. :)

  ம்......... கேக்க நல்லாத்தான் இருக்கு........

  நல்ல விஷயம் தான் எழுதி இருக்க .....உங்களோடைய எண்ணத்திற்கு பாராட்டுகள் .அனாலும் எல்லாம் எந்திர மாயம் ஆகிட்டு ன்னு சொல்லுற இல்லை மக்கா அதை சேத்தில் இறங்கி இயக்க இப்ப உள்ள தலை முறைகள் ரெடி இல்ல ..நன் இப்பவும் விவசாயம் செய்கிறோம் ஆனால் லாபம் இல்லை ..
  ஒரு டாக்டரோட மகன் டாக்டர் ஆகுவான்
  ஒரு engineer ஓட மகன் engineer ஆகுவான்
  ஆனால் விவசாயி மகன் மட்டும் தன்னோட மகனை விவசாயி ஆக்கமட்டன் .ஏன் என்றால் விவசாயம் லாபகரமான தொழில் .என்று விவசாயம் லாபகரமான தொழில் ஆகுதோ அன்று தான் விவசாயம் செழித்து நடக்கும் ........

  என்றைக்கும் தேவை இருக்கும் பொருள் உணவு. விவசாயம் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்ற பகுத்தறிவு இல்லாத ஜென்மங்கள் மக்களுக்கு ஏதேதோ புகட்டி கண்கட்டு வித்தை காண்பித்துக் கொண்டிருக்கிறது.

  Do nothing, Zero Budget போன்ற நல்ல பல இயற்கை முறை விவசாய தொழில் நுட்பங்கள் மீண்டும் பிரபலமடைகிறது. அரசாங்கம் எதன் பின்னோ ஓடிக்கொண்டிருப்பதுதான் வேதனை. ராணுவத்திற்கு இணையாக விவசாயம் கவனிக்கப் படும் காலம் விரைவில் வரும்.

  ஜில்லு, எல்லா வேலைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாது. அரசாங்கம் விவசாய விலை பொருளுக்கு நல்ல விலை நிர்ணயம் செய்யறது இல்லை. பெட்ரோல், டீசலுக்கு மட்டும் அவங்களே விலை வைக்கலாம். ஆனா உணவை உற்பத்தி செய்யுற விவசாயி அவனோட பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாது. இப்படி இருந்தா எவன் விவசாயம் செய்வான்?

  உரிய நேரத்தில் தேவையான கருத்து, வாழ்த்துக்கள் ஜில்லு.

  IT விவசாயி says:

  வரும் காலத்தில் விவசாய தொழில் Corporate நிறுவனம் செய்யும் , அப்பொழுது Rice கிலோ 100௦௦ தாண்டும் , Reliance Agri Limited என்று கூட வரலாம் .

  Anonymous says:

  விவசாயமா??? அப்படினா???

  ஆமாம் மாப்ள ., விவசாயம் பண்ணுறது வர வர குறைஞ்சிட்டே வருது.
  அதவிட எங்க ஊர்ப்பக்கமெல்லாம் விவசாயம் பண்ணுரவங்களுக்குப் பொண்ணு கூட தரமாட்டேங்கிறாங்க ..!! எல்லாம் எங்க போய் முடியுமோ ..?

  தற்போது FCI குடோனில் அடுத்த வருடம் வரை தானிய கையிருப்பு உள்ளதாம். அது வற்றும் வரை எந்த விழிப்புணர்வும் வராது.

  அது காலியாகும்...அந்நாள் வரும்போது தங்கம்விலையை விட அரிசி விலை கூடலாம். அப்போது எல்லா மக்களும் விழுந்தடித்துக்கொண்டு விலை நிலங்களை தேடி தேடி வாங்கி விவசாயம் பாப்பார்கள்.

  ரியல் எஸ்டேட்... ச்சே ச்சே... 'ரியல் ஃபார்ம்'காரர்கள் வீட்டை எல்லாம் இடித்து விலை நிலமாக்கி பிசினஸ் பார்பார்கள்.

  நிலம் கிடைக்காதோர் மொட்டை மாடியில் விவசாயம் செய்வார்கள்.

  விவசாயிகள் கை நிறைய சம்பளத்துடன் பன்னாட்டு கார்பரேட் நிறுவன ஊழியர்கள் ஆவார்கள். அவர்களுக்கு இன்றைய ஐ டி ஊழியர்களுக்கு கிடைக்கும் கவுரவம் கிடைக்கலாம்.

  எனக்கு பிடித்த என் டேஸ்டுக்கு ஏற்ற சரியான நல்ல பதிவு. நன்றி.
  http://pinnoottavaathi.blogspot.com/

  பயனுள்ள பதிவு நண்பா..!! அரசுகளால் வழங்கப்படும் இலவச திட்டங்கள் நிறுத்தப்படும்போது விவசாயம் தழைக்கும். அதுவரை 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வாங்கி பொழைப்ப ஓட்டவேண்டியதுதான்... இது ஏழை விவசாயிகளின் எண்ணஅலை. விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து குறைந்த விலைகளில் உரம், விதை போன்றவற்றை வழங்கலாம்.
  அரசின் நெல்கொள்முதல் மையங்கள் நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளின் நெல்களை நியாயமான விலைக்கு வாங்கினால் ஓரளவுக்கு போட்ட முதலை எடுக்கலாம். பினாமி பெயர்களில் தரகர்களால் விற்கப்படும் வரை இருக்கும் ஒரு சில விவசாயிகளும் காணாமல்தான் போவார்கள்.

  நான் புதுசா நிலம் வாங்கி விவசாயம் பண்ண சொல்லலீங்க, கொஞ்சமோ நஞ்சமோ நிலம் வைத்திருப்பவர்களாவது இதை செய்யலாம்ல!///

  கண்டிப்பா செய்யலாம்

  ஜில்லு புதுசா ஒரு கடை தொறந்து இருக்கேன்.நேரம் இருக்குறப படிச்சு பாரு.

  Great article and now a days its important for all peoples to know...
  "Give important to Agriculture"

  யோசிக்க வேண்டிய விஷயம் தான் பாஸ்!

  எனக்கும் இதே டவுட் தான்..

  /ராணுவத்திற்கு இணையாக விவசாயம் கவனிக்கப் படும் காலம் விரைவில் வரும்./

  இதை ஆமோதிக்கறேன்.. வரும்.. வரவேண்டும்..

  காணமல் போனவர் பற்றிய அறிவிப்பு:

  பெயர் : ஜில்தண்ணி என்கிற யோகேஷ்

  உயரம்:மிச்ச சொச்சம் சொச்ச மிச்சம்

  நிறம் :கருப்பா கலரா இருப்பார்

  ஊர் :குத்தாலம்.

  செய்தி : இவர் கடந்த மாதம் அக்டோபர் பதினெட்டு தேடி "விவசாயம் அப்படினா" என்ற பதிவு போட்டவர் இதுவரை வீடு திரும்பவில்லை.இவரை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கபடும்(ஆட்டோ அனுப்பபடும்).

  Mathi says:

  நாம் செய்யணும் நு இல்ல ..செய்கிறவங்களை கிண்டல் பண்ணாமல் இருக்கலாமே !!!
  நல்ல அவசியமான பதிவு .

  :)


  http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_16.html

  நல்ல பதிவு யோகேஷ்....
  அதுக்கு முன்னாடி ஒரு வணக்கம்... இதான் எனக்கு ஃபர்ஸ்ட் விசிட்....
  தொடர்ந்து எழுதுங்கள்.. நானும் தொடர்ந்து வருகிறேன்...

Related Posts with Thumbnails