Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

உலகம் எப்போது அழியும் ?



கண்டிப்பாக 20ஆம் நூற்றாண்டு உலகத்தின் அழிவாகத்தான் இருக்கும்,என்பது போன்ற செய்திகள் அவ்வப்போது கிளம்புவதுண்டு

அப்படியென்றால் உலகம் அழியவே அழியாதா என்றால் அழியும் ஆனால் மெல்ல மெல்ல அழியும் என்பது தான் என் கருத்து.

எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் இந்த மனிதனால் இயற்கையை எதிர்த்து நிற்பது அவ்வளவு சுலபமல்ல,இயற்கையை நாம் ஆக்கிறமிக்கிறோம் அது நம்மை ஆட்டி வைக்கிறது

கண்டிப்பாக இந்த பூமிக்கு அழிவிறுக்கிறது,அது எப்படி வேண்டுமானாலும் வரலாம்

பகவத் கீதையில் தண்ணிரால் தான் இந்த உலகம் அழியும் என்ற
கூற்று இருக்கிறதாம்(நான் படிக்கல,நண்பர்கள் சொன்னதுங்கோ),ஆம் சுனாமி,பூகம்பம்,எரிமலை சீற்றம் போன்ற இயற்கை பேரழிவுகளால் மெல்ல அழியும்



ஒரு புறம் தண்ணிர் இல்லாததால் வறட்சியால் பூகம்பம் மற்றொறு புறம் வேறு மாதிரியான பிரச்சனை

வெயில் காலங்களில் நல்ல மழை பெய்கிறது,மழை பருவத்தில் வெயில் சுட்டெரிக்கிறது,எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கிறது,இதை என்னவென்று சொல்ல?

இந்த உலக வெப்பமயமாதல் வேற,இங்கு மட்டும் வெப் உயர்வில்லை பனிப் பிரதேசங்களான ஆர்டிக்,அண்டார்டிகா பகுதிகளிலும் தான்,இதனால் என்ன ஆகும்

நம் பூமிப் பந்தில் நான்கில் மூன்று சதவீதம் கடல் தான்,ஒரு பகுதி தான் நாம் வாழும் நிலப்பகுதி,வெப்பம் அதிகரிப்பினால் பனிக்கட்டிகள் உருகி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது,இதனால் கடல் பகுதி கண்டிப்பாக அதிகரிக்கும்,நிலப் பகுதி குறையும்,நாமும் குறைவோம் ?


ஒரே ஓட்டை போட்டு சர்வ சாதாரணமாக ஆபத்தான அறுவை சிகிச்சைகளை மருத்துவத் துறை செய்து வருகிறது,மிகப் பெரிய வளர்ச்சி தான்,ஆனால் இந்த நோய்களின் வளர்ச்சி இதைவிட அபரிமிதமாக இருக்கிறதே,முன்பு பிளேகு,காளரா என்று எண்ணக்கூடிய அளவிலிருந்த நோய்கள்(கிருமிகள்) இப்போது தங்களை மறுவடிவமைப்பு செய்துகொண்டு வருகிறது,அழிவு தானே ?


அழிவு இப்படித்தான் வரவேண்டும் என்றில்லை,உலகப் போரின் போது அப்பாவி மக்கள் எவ்வளவு பேர் கொள்ளப்பட்டனர்,ஹிட்லர்,ஸ்டாலின் , ராஜபக்ஷே போன்ற சர்வாதிகாரிகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும் இது போன்ற அழிவுகள் வரும்

இலங்கையில் நம் தமிழ் இனம் அழிக்கப்பட்டது ஒரு அழிவுதானே :(


இப்படி ஒருபுறம் இருக்க வேற்று கிரக வாசிகளால் கூட அழிவு ஏற்படலாம் என்கிறார் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரான ஹாகின்ஸ்.

எப்படி இருந்தாலும் இன்னும் ஒரு நூற்றாண்டோ அல்லது ஒன்றரை நூற்றாண்டுகளுக்குத் தான் இந்த பூமியால் தாக்குப் பிடிக்க முடியும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது

என்னடா அழிவை பற்றியே சொல்றானே ஒரு சந்தோசமான விஷயம் என்னவென்றால் செவ்வாய் கிரகத்தில் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது அப்படியென்றால் கண்டிப்பாக தண்ணீர் இருக்கும் என்பதும் உறுதி.

அப்ப செவ்வாய் கிரகத்துல ஒரு பிளாட் வாங்கிட வேண்டியதுதான் போலிருக்கு :)

அழிவு உறுதியாகிவிட்டதால் அதை தடுக்க முடியாது வேண்டுமென்றால் கொஞ்சம் தள்ளிப் போடலாம்,அதற்கு முதலில் இயற்கையோடு சண்டையிடுவதை முதலில் நிறுத்த வேண்டும்

என்னால் இந்த பூமியை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் நீங்களும் ஒரு மரம் வளருங்கள்.


நம் பூமித் தாய்க்கு இப்போது தேவை சுதந்திரம்,சுத்தமான காற்று,நல்ல தண்ணி இவற்றை உங்களால் கொடுக்க முடியுமா ???? யோசிங்க

மனிதன் தன் அடுத்த பரிணாமத்தில் இவற்றையெல்லாம் தூள் தூளாக்கக் கூட வாய்பிருக்கிறது ,பாப்போம் நாம் இருந்தால்

அறிவியல் வாத்தியார் - 3

மாலை வணக்கம் ஐயா

வணக்கம் வணக்கம்,என்னடா ஒரு வாரமா ஆள காணோம்

என்னோட ஆளு ஊர்லதான்யா இருக்கா,இப்பதானே பாத்தேன்

அது வேறயா ,சரி சரி நடத்து நடத்து

ஏதாவது சந்தேகம் இல்லாம வரமாட்டையே,என்ன ?

இந்த இசைக்கும் - சத்தத்துக்கும் என்ன வித்யாசம்யா ?

அதாவது இசையும்,சத்தம் இரண்டுமே ஒலி தான்

இரண்டுமே அதிர்வ்களால் உருவாவது தான்

இசை சீரான அதிர்வுகளால் உருவாவது

சத்தம் தாறுமாறான அதிர்வுகளால் உருவாவது

அவ்வளவுதான்..

ஹ ஹ ஹச்ச்ச்ச் .......................
ஐயா இந்த தும்மல் ஏன் வருகிறது ?

ம்ம்ம் சொல்றேன்
முதல்ல தும்மும் போது கைக்குட்டையை வைத்து மூடி கொண்டு தும்மு,சரியா

மூக்கில் உள்ள மெல்லிய சவ்வின் நரம்பு நுனிகள் தூண்டல் ஏற்படும் போது தும்முகிறோம், மூச்சை உள்ளே இழுக்கும் போது தூசி அல்லது பூந்தாதுக்கள் உள்ளே செல்வதாலோ,ஒவ்வாமை,மூக்கடைப்பு இருந்தால் கூட வரும்

மூக்கில் இருக்கும் அன்னியப் பொருளை (foreign particles) காற்றின் மூலம் வெளியேற்ற உதவும் ஒரு அனிச்சை செயலே(reflex action ) தும்மல்

போன வாரம் கராத்தே கிட் படத்துக்கு போனோம்,ண்பன் ஒருத்தன் பாப் கார்ன் வாங்கினான் (எனக்கு ஓசி ),அத பொரிக்கும் போது அந்த குதி குதிக்குதே அது ஏன் ?

படம் எப்டி இருந்தது
வூட்ல பொய் நான் ரசித்ததை படிங்க

பாப் கார்ன் செய்ய பயன் படும் சோளம் ஒரு வித கடினத் தன்மை கொண்டதாகும்,நடுவில் சிறிய அளவு பருப்பும் அதைச் சுற்றி கடினமான மாவுப் பொருளும் இருக்கும் மற்றும் 10 முதல் 15 சதவீதம் ஈரப்பசை

கீழே இருக்கும் ஈரப்பசை சூடாகி ஆவியாக பலமடங்கு பெரிதாகும் ,அந்த மாவு பொருளை பிளந்து கொண்டு வெளியே வரும்,அதனால் தான் குதிக்கிறது


அவர்கள் வந்துவிட்டார்கள் (Aliens)

நியு ஆர்லியஸ் மாகாணத்தில் பறக்கும் தட்டை பார்த்ததாக மக்கள் வியப்பு

தென் ஆப்ரிக்காவில் இரவு நேரங்களில் வட்ட வெளிச்சம் ஒன்று தெரிவதாக சொல்கிறார்கள்


இது
போன்ற செய்திகள் அடிக்கடி நாளிதிழில் பார்த்திருப்பதுண்டு,அவற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது,வெறும் வியூகம் தான் என்று இதுவரை நினைத்திருப்போம் .

வேற்று கிரக வாசிகள் என்பது கற்பனையல்ல அவர்கள் ஒரு நாள் இங்கு வந்தே தீருவார்கள்,நாம் அவர்களை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம் ஆனால் அவர்களை நாம் சந்திக்கும் நேரம் அழிவின் ஆரம்பமாக கூட இருக்கலாம்

இந்த திகிலூட்டும் தகவலை சொன்னது நானல்ல,புகழ் பெற்ற இயற்பியல் ஆராய்ச்சியாளர் ஸ்டீஃபென் ஹாகின்ஸ் தான்

ஹாக்கின்ஸ் ஒரு மாற்றுத் திறனாலி ஆவார்,அவர் தன் சற்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்,தன் குறைகளை பொறுட்படுத்தாது பல சாதனைகளை புரிந்துள்ளார்


சமீபத்தில் ஹாக்கின்ஸ் தன் ஆராய்ச்சியை உலகிற்கு காட்ட டிஸ்கவரி சானலில், Into the universe என்ற அற்புதமான ஆராய்ச்சி நிகழ்ச்சியில் தான் இந்த தகவலை அறிவித்துள்ளார்


கண்டிப்பாக வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்கள் என்று அடித்து சொல்ல காரணம் ஒரு கணக்கு தான் என்கிறார்

நாம் வாழும் பூமி மற்றும் இதர கோள்கள் அடங்கியது ஒரு மண்டலம் மட்டும் தான்,இந்த பிரபஞ்சத்தில் 100 கோடி மண்டலங்கள் இருக்கும்
பூமியை போல உயிர் வாழ ஏதுவான சூழ்நிலை கண்டிப்பாக ஏதாவது கோள்கலில் இருக்கலாம்.


ஆனால் அங்கு உயிரினம் எப்படி இருக்கும் என்று நாம் சொல்ல முடியாது,அவை ஒரு செல் உயிரினமாகவும் இருக்கலாம்,இல்லை மனிதனை விட பரிணமித்த ஜீவன்களாகவும் இருக்கலாம்,அவர்கள் கிரகத்தில் எல்லா வளங்கள் தீர்ந்து போன பின்,வேறு கிரகத்தை ஆக்கிரமிக்க பல ராட்சத தட்டுகளில் கூட இங்கு வரலாம்.

இதுவரை அவதார்,ப்ரிடேட்டர்,ஏலியன்ஸ்,இ.டி போன்ற படங்களிலும்,அறிவியல் புனைவுகளிலும் நாம் கற்பனையில் பார்த்த அந்த ஜீவராசிகள் நமக்கே ஆப்பு வைக்க வந்தா எப்படி இருக்கும்.ஆப்பு கண்ணுக்கு தெரியும்


டிஸ்கவரி தொலைகாட்சியில் ஒளிபரப்பான இந்த அற்புதமான டாக்குமெண்ட்ரியை கான

Into the universe பாகம்-1


Into the universe பாகம்-2

Into the universe பாகம்-3

Into the universe பாகம்-4

Into the universe பாகம்-5

மேலும் வாசிக்க

ஹாக்கின்சின் இனையதளம்

அவர் பேட்டி

அறிவியல் வாத்தியார் - 2


வணக்கம்
ஐயா,சௌக்கியமா இருக்கீங்களா !!

ரொம்ப நல்லா இருக்கேண்டா தம்பி,தமிழ் பதிவுலகில் ஏதோ பிரச்சனயாமே

வேணாம் யா,ரவுண்டு கட்டிடுவாங்க,நாம நம்ம வேலைய பாப்போம்

அதுவும் சரி தான் சரி நேத்து ராத்திரி 12 மணிக்கு டவுட்டுன்னு போன் பண்ணினது நீதான

ஆமாம் யா , பல சந்தேகம் இருக்கு

சரி ஒன்னு ஒன்னா கேட்டு தொல

எங்க அம்மா வயித்துல பிறந்த எனக்கும், என் தம்பி ,தங்கச்சிக்கும் இடையே உருவ ஒற்றுமை இருந்தாலும்,குணம் வேறு படுவது ஏன் ஐயா ?

ஒக்காந்து யோசிச்சிருக்க போல

இல்லையா படுத்துக்கிட்டு யோசிச்சேன் (ஹி ஹி ஹி )

சரி கேட்டுக்க

கருவுறுதல் நிகழும் பொது 23 பண்புக்காரணிகள் மட்டுமே சேர வேண்டும்,இது கூடவோ,குறையவோ கூடாது.இதை சரியாக செய்வது மீயாசிஸ் (meiosis) என்ற பிரிவாகும்

ஆணின் முதல் 23 பண்புக்காரணிகளோ அல்லது கடைசி 23 பண்புக்காரணிகளோ சேரலாம்.என்னென்ன குணங்கள் அல்லது எந்த வரிசை என்பதை கண்டுபுடிக்க முடியாது ( ஆனாலும் முடியும் )



சூல்முட்டையில் விந்து விழும் போது எந்தெந்த விதமாக பண்புக்காரணிகள் இனைகிறதோ,அதை பொறுத்து தான் குணங்கள் மாறுபடுகின்றன,ஒவ்வொரு முறை கருவுறும் போதும் இப்படித்தான் வெவ்வேறு குணங்களில் குழந்தைகள் பிறக்கின்றன

சில இரட்டை குழந்தைகள் ஓட்டிப் பிறப்பது ஏன்யா ?

கருவான முட்டை சில சமயங்களில் இரண்டாக பிரிய வாய்ப்பிருக்கிறது ,அது தான் ரெட்டை குழந்தை(twins) ,அப்படி பிரியும் போது சரியாக பிரியாமலிருக்கும் போது ஓட்டிப் பிறக்கும் (conjoined twins ),சரியாக பிரியாத முட்டை தனித்தனி குழந்தையாக வளர்கிறது

இந்த தேன் சிட்டுக் குருவி மட்டும் எப்படி காற்றில் நிலையாக நிற்கிறது ?

தேன் சிட்டுக்கள் பறந்து கொண்டே தேனை குடிக்கும் ஆற்றல் பெற்றவை,சிறகுகளை வேகமாக அடிப்பதன் மூலமே இது சாத்தியமாகிறது.ஒரு நிமிடத்திற்க்கு 55 தடவைகள் அடிக்கிறது என்றால் பாருங்களேன்

இவ்வளவு வேகமான அசைவுகளால் நம் கண்களுக்கு சிறகுகள் தெரியாது,வெறும் சத்தம் மட்டும் தான் கேட்கும்


ஐயா,இன்னக்கி காலையில என்ன சாப்பாடு ?

சப்பாத்தி தான் டா

ம் அதுல ஒரு சந்தேகம்

அடப் பாவி கேளு

சப்பாதியில எப்படி இரண்டு அடுக்குகள் உருவாகிறது ?

மாவு உருண்டைய தட்டையாக்கி சூடான இரும்பு தவாவில் சுடும் போது,அடியில் இருக்கும் பகுதி சீக்கிரம் சூடாகிறது.அதனால் நடுவில் உள்ள ஈரப்பசை ஆவியாகி மேல் நோக்கி அழுத்தம் தருவதாலேயே பலூனை போல் உப்புகிறது.


ஆனால் சரியாக மாவு இடப்படவில்லையெனில்,சில இடங்கள் மெலிதாகவும் இருக்கும்,அப்போது முழுவதும் உப்பாமல்,விட்டு விட்டு உப்பியிருக்கும்

கடைசியா ஒன்னு சொல்றேன் கேட்டுக்க

நம்ம மூக்குல வாசனை உணரும் செல்கள் எவ்வளவு இருக்கு தெரியுமா ?

அதையும் நீங்களே சொல்லிடுங்களேன்

வெறும் 50 லட்சம் தான்,ஆனால் நாய்க்கு எவ்வளவு தெரியுமா கிட்டத்தட்ட 22 கோடி செல்கள் இருக்கிறதான்,அதனால தான் போலீஸ்ல பயன்படுத்துறாங்க
தெரியுமா

சரி சரி போதும்,இன்னொரு நாள் பார்போம்,ஆனால் நைட் மட்டும் போன் பன்னாதடா

சரி யா பன்னமாட்டேன்,ரொம்ப நன்றி ஐயா !!

நன்றி,வரேன்

அறிவியல் வாத்தியாரிடம் சில கேள்விகள்

பில் கேட்சிடம் கேட்ட கேள்விகளுக்கு இன்னும் அவர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை ,நேத்து தான் நம்ம பழைய அறிவியல் வாத்தியார பார்த்து பேசிகினு இருந்தேன்,அப்ப அவர் கிட்டேயும் சில கேள்விகள்,ஆனா என்ன பதில்கள் உடனே வந்துடுச்சு.

கடல் நீர் உப்பு கரிக்குதுன்னு நாம குடிக்க மாற்றோம்,அப்டி குடிச்சா என்ன ஆகும் வாத்தியாரே ?

டேய் தம்பி,ஒரு லிட்டர் கடல் நீரை எடுத்து சோதித்துப் பார்த்தால் கிட்டத்திட்ட 35 கிராம் உப்பு கிடைக்கும்,மனிதனுக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 5 லிட்டர் வரை தேவைபடுகிறது,இந்த அளவில் 100-150 கிராம் உப்பு இருக்கும் ,ஒரு நாளைக்கு இந்த அளவு உப்பு சேர்ந்தால் ஏகப்பட்ட விளைவுகள் ஏற்படும்..அப்பறம் ஒன்னும் செய்ய முடியாது ,சரியா

அய்யா நான் இந்த வயசுலேயே இம்புட்டு உசரமா இருக்கேன் நீங்க ஏன் குள்ளமாவே இருக்கீங்க?

ஆளுக்கு ஆள் உயரம் வித்யாசப்படுவது கால் எலும்புகளின் நீளம் தான்,குட்டையோ நெட்டையோ ஆண்களின் இடுப்பு முதல் கழுத்து வரை சராசரி 28 அங்குலம்தான் , பெண்களுக்கு 24 அங்குலம் , ஆளுக்கு ஆள் உயரம் வித்யாசமாவது இந்த கால் எலும்பு அளவில் தான்,ரைட்டா....



சரி இந்த உப்பு மேட்டர பத்தி சொல்லுங்க,மனிதனின் கண்ணீரும் ஏன் உப்பு கரிக்கிறது?

மனிதனின் கண்களிலிருந்து நாள்தோறும் குறைந்த பட்சம் 15 சொட்டு கண்ணீர் வருகிறது ,அது வாகனம் ஓட்டும் போதோ,தொலைகாட்சி பார்க்கும் போதோ எப்படி வேண்டுமானாலும் வரும்,அதில் பாதி ஆவியாகிவிடுகிறது,கண்ணீரில் 33% தண்ணீர் தான் இருக்கிறது,மேலும் அதில் புரோடீன்,குல்கோஸ் ,சோடியம் ,பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளதால் தான் உப்பாக உள்ளது.......


வாத்தியாரே எனக்குத்தான் கனவுல நமீதா,நயன்தாரா எல்லாம் வராங்க,கண் பார்வை இல்லாதவர்களுக்கு கனவு வருமா ?

கனவு பொதுவாக காட்சியுடன் தொடர்புடையது ,மூளையிலுள்ள பார்வைப்புரணி (visual cortex) என்ற பகுதியே பார்வை உணர்ச்சியை முறைப்படுத்துகிறது,நாம் உறங்கும்போதும் செல்கள் இயங்கிக் கொண்டிருக்கும்,அவற்றின் தன்னியல்பு இயக்கத்தால் தோன்றும் சாயல்கள் மற்றும் நிகழ்வுகளே கனவுகள் ஆகும்.

தூக்கத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலோ அல்லது இடைவெளியிலோ தான் கனவு வருகிறது ,உறக்கத்தின் அந்த பகுதியை விரைவு விழியியக்க உறக்கம்(REM-Rapid Eye Movement sleep) என்பர் .

பார்வையற்றோருக்கு கனவு தோன்றுமா என்பது அவரது பார்வஐப்புரணி துடிப்புடன் செயல்படுகிறதா என்பதை பொறுத்தது ,பார்வைப்புரணி பழுதாகாத பார்வையற்றோரால் கண்டிப்பாக கனவு காண முடியும்,ஆனாலும் அவை வெறும் ஒளித் தெறிப்புகளாக மட்டுமே இருக்கும் (flash).

என் தம்பி பஸ்லயோ,கார்லயோ போனாலே வாந்தி எடுத்துடுறான் அது ஏன்?
உம் இதுக்கு பேரு மோஷன் சிக்னஸ், வாகனங்கள் முன்னும் பின்னும் அசைந்து குலுங்குவதால்,சிலரது உட்செவியிலுள்ள (inner ear ) உடல் சமநிலை நரம்புகள் மிகுதியாக தூண்டப்பட்டு குமட்டலும்,வாந்தியும் வருகிறது .பயணம் செய்து பழகிவிட்டால் இந்த பிரச்சன இருக்காது.

பஸ்ல போன ஒரு ரூபாய்க்கி புளிப்பு முட்டாய் வாங்கிக் கொடு,சரியாய் போயிடும்.


சரி இத்தன கேள்விக்கு பொறுமையா பதில் சொன்னேன்ல,நான் உன்ன ஒரு கேள்வி கேக்குறன் சொல்லு?

சரி கேளுங்க

உனக்கு எத்தன கேர்ள் பிரண்ட்ஸ் இருக்காங்க,உண்மையச் சொல்லு ?

அவ்வ்வ்வ் பப்ளிக்க வச்சி இதெல்லாம் கேக்க பிடாது , கேட்டாலும் 12 பிரண்ட்ஸ் தான்னு சொல்ல மாட்டேனே

டேய் மர மண்டயா அதான் நீ யே சொல்லிட்டியே

ஆஹா! சரி சரி விடுங்க ஒரு இளைஞன் வாழ்கையில இதல்லாம் சகஜமப்பா...

சரி டா ,மணி ஆயிடிச்சி,வீட்டுக்காரி திட்டுவா வரட்டுமா,மீண்டும் சிந்திப்போம்

நீங்களுமா,சரி வாத்தியாரே வாங்க !!!

Related Posts with Thumbnails