கோக்குமாக்கு - 29/08/11

ஹாய் மக்கள்ஸ் 


இளம் பதிவர்கள் சந்திப்பு

நம்ம ஜில்தண்ணி கடைய ஆரம்பிச்சி கிட்டத்தட்ட ரெண்டு வருசம் இருக்கும்னு நெனைக்குறன்...மொக்க போஸ்ட் போட்டாலும் அதுக்கும் கமெண்டுகளை வாரி வழங்கி என்னை வாழ வைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி (அப்பாடா எப்டியோ பிட்ட போட்டாச்சி :))

இந்த பதிவால நிறைய நண்பர்கள் கிடைச்சாயிங்க...நிறைய பேருகிட்ட ஆன்லைன்,மொபைல்'லதான் பேசிகிட்டு இருக்கன்...எல்லாரையும் நேரடியா சந்திக்கனும்னு ஆசை...அது கூடிய சீக்கிரம் கொஞ்சமாவுது நிறைவேற போவுதுன்னு நெனைக்குறன் 

சென்னை யூத் பதிவர் சந்திப்பாம்ல...என்னதான் நடக்குதுன்னு பாத்துடுவோமே :)

________________________________________________________________________________

 தமனை கேளுங்கள்

யப்பா...சான்சே இல்ல,வர வர தமன் போடுற லவ் சாங்ஸ்லாம் செம்ம பீட்டுதான் போங்க....வந்தான் வென்றான் பாடல்களை ஒரு முறை கேட்டுதான் பாருங்களேன் தெரியும் :)

________________________________________________________________________________

I quit facebooking...

ஹீ ஹீ ரொம்ப அடிக்ட் ஆயிட்டன்..சோ வேற வழியே இல்ல...அதான் De-activate செஞ்சிட்டன் ...இனி ஒன்லி ப்ளாகர் மட்டும் தான் :)

_________________________________________________________________________________

ஆவின் பால்

டெய்லி கரெக்டா பல்லு வெளக்குரனோ இல்லியோ...ஆவின் பால் குடிக்க மறக்குறதே இல்ல...மாலை 5 மணி ஆயிட்டுனா...வாய் நம நமங்குது....கிண்டி வந்து ஆவின் பால் குடிச்சிட்டுதான் வீட்டுக்கு போறதெல்லாம் :)

_________________________________________________________________________________

டிஸ்கி :  ரொம்ப நாள் எழுதாததால ஃப்ளோ இல்ல...அதான் இத்தோட முடிச்சிக்கிறன்.......) :)

3


முஸ்கி :  யாரும் கூப்புடலனாலும் நாங்களா தொடர் பதிவ எழுதுவோம்ல :)

1.விரும்பும் 3 விசயங்கள் : 

அ). அழகான பெண்கள்
ஆ). பேசிக் கொண்டே இருப்பது (ஆண் நண்பர்களிடமும் தான் :) )
இ).  இசை

2.விரும்பாத 3 விசயங்கள் :

அ). என்னை விரும்பாத அழகான பெண்கள்
ஆ). தனிமை
இ).  வெட்டி பந்தா

3.பயப்படும் 3 விசயங்கள் :

அ). வேகமாய் பயணிப்பது  
ஆ)  என் எதிர்காலம் ? 
இ).  என் க்ளோசப் போட்டோ 

4.புரியாத 3 விசயங்கள் :

அ).  கணக்கு
ஆ). பெண்கள்(இதுக்கும் கணக்குக்கும் சம்பந்தமில்ல :))
இ).  செல்வா கதைகள்

5.உங்கள் மேசையில் இருக்கும் 3 பொருட்கள் :

அ).  நான்
ஆ). படிக்கிறன்னு காட்டிக்க பத்து பதினைந்து புத்தகங்கள்( ஆ.வி,குமுதம்,குங்குமம் இல்ல)
இ).  லூசுத்தனமா கிறுக்கிய துண்டு பேப்பர்கள் 

6.உங்களைச் சிரிக்க வைக்கும் 3 விசயங்கள் :

அ). நானும் பதிவெழுதுவது
ஆ). அவ்வப்போது செல்வாவின் மொக்கைகள்
இ).  அவ்ளோதான் . 

7.இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள் :

அ).  யாரோ சொன்னாங்கன்னு எம்.சி.ஏ படிக்கிறன் 
ஆ). மொக்கை போடுவது
இ).  ஜில்தண்ணி'னு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சன் ஆனா.......

8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள் :

அ). ஒரு முறையாவது சரக்கடிக்கனும் :) 
ஆ).ஒரு சிறுகதையாவது முழுசா எழுதனும் 
இ).  ட்ரம்சு கத்துக்கனும் 

13.அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள் :

அ). இன்னும் ஓர் இரவு ( கற்றது தமிழ்)
ஆ).நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை( வாரணம் ஆயிரம்)
இ). பேசுகிறேன்...பேசுகிறேன்

14.பிடித்த 3 படங்கள் :

அ). கற்றது தமிழ்
ஆ) தளபதி
இ). வாரணம் ஆயிரம்

15.இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லுற 3 விசயங்கள் :

அ). இணையம்
ஆ). என் டப்பா அலைபேசி
இ).  வெட்டி பேச்சுடிஸ்கி
: யாருக்காவத் பதிவு போட ஒன்னுமில்லனா இத தொடர் பதிவா போடுங்க...முடிஞ்சா அதுல மேதகு ஜில்தண்னியார் அவர்களுக்கு நன்றின்னு போட்டால் வீட்டுக்கு எதாவ்து கிஃப்ட் வாங்கி அனுப்புறன் 

க..க...கல்லூரி சாலை

மூக்குக்கு கீழ நாலு முடியாவது மொளச்சிருக்கான்னு  அப்பப்ப கண்ணாடி முன்னாடி நின்னு தடவிப் பாத்துகிட்டே இருந்தன்...ஏன்னா காலேஜ் சேந்துட்டன்ல...எங்க என்ன பால்வாடின்னு கிண்டல் பண்ணுவாங்களோன்னு ஒரு பயம் வேற

அந்த நாளும் வந்துச்சி...கல்லூரி முதல் நாள்....

காலங்காத்தால எந்திருச்சி ஓன்னுக்கு நாலு தடவ சோப்பு போட்டு குளிச்சி...அப்பா அயன் பண்ணி வெச்சிருந்த சொக்காவ சோக்கா எடுத்து மாட்டிகிட்டு கண்ணாடிய பாத்தா...அட எனக்கும் ஸ்டைல் வந்துடுச்சிப்பா...சுருள் முடிகளை மெனெக்கெட்டு வகிடெடுத்து சீவி ஏதோ பரட்டை தலை எஃபெக்ட் வரவழைச்சாச்சு

அப்பா கிட்ட சொல்லிட்டு நோட் வாங்க பதினெஞ்சும்,பேருந்துக்கு இருவதும் அப்பா பாக்கெட்டிலிருந்து எடுத்துக்கிட்டன்...போய்ட்டு வரம்மா..போய்ட்டு வரம்பா

பேருந்தில் தொத்தி கித்தி கல்லூரிக்கு வந்து சேந்தாச்சு...அடுத்து என் க்ளாச தேடனும்...B.sc Computer science - room no.205  என்று போர்டில் எழுதியிருந்தது...205ஐ தேடி அங்க இங்க போனன் கெடைக்கல...

என்ன மாதிரியே இன்னும் நாலைந்து பய புள்ளைங்க 205ஐ தேடிக்கிட்டு இருந்துச்சுங்க...அதுல பய ஒருத்தன் நல்லா வாட்ட சாட்டமா என்ன விட அழகா(அவ்வ்வ்வ்) இருந்தான்...


எங்க சீனியரா இருப்பாயிங்களோ என்ற பயத்துடனே அவனை  நெருங்கி ஹாய் நீங்க பர்ஸ்ட் இயரா என்று மெல்ல விசாரிச்சன்...ஆமாம் நான் கம்ப்யூட்டர் சயின்சு நீங்க ? அட நானும் தான்..சரி வா ரூம தேடுவோம்

205 ஐ ஒரு வழியா தேடிப் பிடித்து போனால்....

என்னோட பன்னெண்டாவது படிச்ச பாதி பய புள்ளைங்க அங்க தான் இருக்காயிங்க...அட சூப்பருன்னு..ஒக்கார இடம் தேடுனா...இருந்தது மாப்பிள்ளை பெஞ்சு மட்டும் தான்...

அந்த கடைசி பெஞ்சில் ஆரம்பித்த என் கல்லூரி வாழ்க்கை...


தொடரும்....அடுத்த பதிவில்

ஆ........

அப்போது மணி  இரவு  எட்டை தாண்டியிருக்கும் ப்ரித்வி தோசையை விழுங்கிக்கொண்டிருந்தான், முறுவலா ஒரு தோசை என்று சித்தியிடம் ஆர்டர் செய்துவிட்டு எண்ணெய் ஜாடியை எடுக்க விழைகையில் ஒரு சத்தம்

டொக் டொக் !!
ஹாய் மச்சான்  !!

நண்பன் மணி அரட்டை பெட்டியில் கூப்பிடுரான் ஹாய் மச்சி தோ வாரேன்னு இவன் உரத்த குரலில் தன்னை அறியாமல் கத்திவிட, சித்தி டேய் என்னடா யாருகிட்ட பேசுற இங்க யாருமே இல்லயே, எதாவது போன் கீன் வந்துச்சாடா

சீ ஒன்னுமில்ல என்று தலையில் தட்டிக் கொண்டு தோசை போன்றே முறுவலான ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு எழுந்தான்.

மாடிப் படிகளில் சட்டென தாவி மேல சென்ற போது கடிகாரம் சரியாக 9.30 ஐ காட்டிக் கொண்டிருந்தது, சரி எதாவது படிக்கலாமேன்னு அலமாரியில் கலைந்து கிடந்து புத்தகங்களில் ஒன்றை எடுத்து நாலு பக்கம் மேய்ந்து கொண்டிருக்கையில் 

இன்னும் ஓர் இரவு ! இன்னும் ஓர் நிலவு  
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா ! 
என் நெஞ்சிலொரு பூ பூத்ததன் பேர் என்னவென கேட்டேன் !! 
இரும்பிலே இருதயம் முளைக்குதே !

என்று கன்னாபின்னாவென்று பாடல்கள் மாறி மாறி  இவன் காதுமடலருகில் காட்டுக் கத்தலில் ஒலித்துக் கொண்டிருந்தது, மண்டையே வெடித்துவிடும் போன்ற உணர்வு  மூளை நரம்புகள்  முறுக்கிக் கொள்வைதை போல ஒரு வலி, சட்டென தன் காதில் இருந்த ஹெட்போன பிய்தெடுக்க முயற்ச்சிக்கையில் காதில் ஹெட்போனே இல்லை, பின் எப்படி இந்த சத்தம் 

அலைபேசியை சுண்டிப் பார்க்கையில் அதிலும் பாடவில்லை, அந்த சத்தத்தின் படபடப்பு அடங்கவில்லை, ஜன்னலில் எட்டிப் பார்த்தான்...மொட்டை மாடியில் ஏறி தெருவை வெறித்து பார்த்தான்...குளிரில் குட்டி நாய் ஒன்று அலரிக் கொண்டிருந்த சத்தம் மட்டும் தான்..அப்படி ஒரு அமைதி...


பதட்டத்தில் பத்து படிகள் மதமதவென குதித்திறங்கி ஆக்வாசியூரில் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரை மூன்று தம்ளர்கள் குடித்திருப்பான்..அப்போது சித்தப்பா காலை சாப்பாட்டுக்கு வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தார் ..அவரிடம் இதை சொல்லலாமா என்று ஒரு நொடி  யோசிக்கையில் அனிச்சையாக கால்கள் படிகளில் செலுத்தப்பட்டு மீண்டும் மாடிக்கே வந்தான் 

இந்த உணர்வு என்னவென்று அவனுக்கு புரியவில்லை...இதை டைரியில் எழுதிவிடுவொம், என்னன்னு அப்பரம் ஓசிக்கலாம்னு..தன் மெத்தைக்கடியிலிருந்த டைரியை எடுத்து பிப்ரவரி 16-ஐ தேடி  இந்த உணர்வை எப்படி எழுதுவது என்று மனசுல ஒருவாரு எழுத்துக்களை கோர்த்து கொண்டு 
எழுத பேனாவை டைரியில் கைவைக்க அங்கொரு அதிர்ச்சி 

தான் மனதில் கோர்த்த எழுத்துக்கள் டைரியில் அச்சுபிசகாமல் அச்சடிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போய் டைரியை வீசிவிட்டான்...இரவின் தனிமையில் பயம்  என்னவென்றே புரியாமல் மொசேக் தரையில் சப்பணக்கால் போட்டுக் உட்கார்ந்து தலையை சொரிந்து கொண்டே இருந்தான் 

தலை முடியெல்லாம் உதிர்ந்து தலைபாரமே இல்லாமல் போன்றிருந்தது  ....தன்னையறியாமல் கண்கள் சொக்கிப் போய் தரையிலேயே தூங்கிப் போய்விட்டான் ப்ரித்வி...

காலை பத்து பதினோரு மணியிருக்கும் மீண்டும் அந்த சத்தம் 
 
டொக் ! டொக்
 
இப்போது கணிப்பொறிக்குள்ளிருந்து வந்தது..மேசையிலிருந்த சுட்டியை திரையில் நகர்த்தி க்ளிக்கி இவனும் ஹாய் மச்சான் என்று அரட்டையடிக்க ஆரம்பித்தான்

டிஸ்கி :   என்ன பண்றது இந்த சுஜாத புத்தகங்கள படிக்கிறதும் , கம்பிபிட்டர  நோண்டுறதுமே பொலப்பா இருந்தா இப்பிடித்தான் எதாவது சம்மந்தமில்லாம  தோணுமாம் 
மீனவர்களைக் காப்பாற்றுங்கள் #tnfisherman

ஐநூற்றுச் சொச்சம் மீனவர்கள்... ஐநூற்றுச் சொச்சம் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது இதுவரை. இனிமேலும் தொடராமலிருக்க, ஒரு வலையுலக யுத்தம்

கூட்டணி பேரம், பதவிச்சண்டை என்றால் மட்டும் ஆளாய்ப் பறந்துவிட்டு, ஒரு மரணம் சம்பவித்தால் லட்சத்தைத் தூக்கியெறிந்து தற்காலிகமாக வாயை அடைப்பது இங்கு மட்டும் தான் நடக்கும். நடவடிக்கை எடுக்கக் கேட்டால் இருக்கவே இருக்கிறது கடிதங்களும் தந்திகளும்.. இதையும் மீறி யாராவது ஏதாவது கேட்டால் கடந்த ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றொரு எகத்தாளப் பேச்சு. 

தங்களது குடும்பங்கள் இன்னும் நூறாண்டுகள் செல்வச்செழிப்புடன் வாழ தொலைநோக்குப் பார்வையுடன் யோசிக்கும் தலைவர்கள், ஒரு சாதாரணன் சாதாரண வாழ்க்கை வாழ வழி செய்யாதிருப்பது திருட்டுத்தனம்.

அயல்நாடு செல்லும் பிரபலங்கள் சோதனை என்ற பெயரால் அவமானப்படுத்தப்பட்டால் கூட பொங்கியெழும அரசியல் எரிமலைகள், இங்கொருவன் கொல்லப்பட்டு அவன் குடும்பம் சிதைக்கப்பட்டால் கூட மௌனம் சாதிப்பது அருவருப்பாக இருக்கிறது.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகாதா?

நன்றி மகேஷ்  : ரசிகன் 
மீனவர்களைக் காப்பாற்றுங்கள் #tnfisherman


Related Posts with Thumbnails