மீனவர்களைக் காப்பாற்றுங்கள் #tnfisherman

ஐநூற்றுச் சொச்சம் மீனவர்கள்... ஐநூற்றுச் சொச்சம் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது இதுவரை. இனிமேலும் தொடராமலிருக்க, ஒரு வலையுலக யுத்தம்

கூட்டணி பேரம், பதவிச்சண்டை என்றால் மட்டும் ஆளாய்ப் பறந்துவிட்டு, ஒரு மரணம் சம்பவித்தால் லட்சத்தைத் தூக்கியெறிந்து தற்காலிகமாக வாயை அடைப்பது இங்கு மட்டும் தான் நடக்கும். நடவடிக்கை எடுக்கக் கேட்டால் இருக்கவே இருக்கிறது கடிதங்களும் தந்திகளும்.. இதையும் மீறி யாராவது ஏதாவது கேட்டால் கடந்த ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றொரு எகத்தாளப் பேச்சு. 

தங்களது குடும்பங்கள் இன்னும் நூறாண்டுகள் செல்வச்செழிப்புடன் வாழ தொலைநோக்குப் பார்வையுடன் யோசிக்கும் தலைவர்கள், ஒரு சாதாரணன் சாதாரண வாழ்க்கை வாழ வழி செய்யாதிருப்பது திருட்டுத்தனம்.

அயல்நாடு செல்லும் பிரபலங்கள் சோதனை என்ற பெயரால் அவமானப்படுத்தப்பட்டால் கூட பொங்கியெழும அரசியல் எரிமலைகள், இங்கொருவன் கொல்லப்பட்டு அவன் குடும்பம் சிதைக்கப்பட்டால் கூட மௌனம் சாதிப்பது அருவருப்பாக இருக்கிறது.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகாதா?

நன்றி மகேஷ்  : ரசிகன் 
மீனவர்களைக் காப்பாற்றுங்கள் #tnfisherman


6 Response to "மீனவர்களைக் காப்பாற்றுங்கள் #tnfisherman"

 1. உங்களின் பங்களிப்புக்கு நன்றி அண்ணே

  ஒன்றுபடுவோம்.... தொடர்ந்து குரல்குடுப்போம்...

  //அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகாதா?///

  அரசியல் பிழைத்தோருக்கு அறமே கூற்றென்னும் நீதியும் நிலைக்கட்டும்

  அடிவயிறு எரிகின்ற மீனவப் பெண்களின் வெப்பம்
  அப்படியே பொசுக்கட்டும்...
  ஆதிதமிழினம் அகிலத்தை ஆளும்
  அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்
  அந்நியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்’
  அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்

  சுதந்திர காற்று பரவட்டும் எங்கனும்
  சுதந்திர காற்று பரவட்டும் எங்கனும் - இது
  சத்தியம் ! சத்தியம் ! சத்தியம் !

  //இதையும் மீறி யாராவது ஏதாவது கேட்டால் கடந்த ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றொரு எகத்தாளப் பேச்சு.
  //

  இதுதான் ரொம்ப கொடுமை .. அடுத்தவன் பண்ணினா என்ன பண்ணாட்டி என்ன ? இவுங்க பண்ண வேண்டியதுதானே ..

  நானும் ட்விட்டர்ல எழுதிட்டிருக்கேன் மாப்பு .. தொடர்ந்து குரல் கொடுப்போம் ..

  நானும் மற்றவர்களின் முயற்சியில் பங்களிக்க முயன்று கொண்டிருக்கிறேன்! நன்றி...

  இணைந்து போராடுவோம்!

Related Posts with Thumbnails