Showing posts with label நண்பர்கள். Show all posts
Showing posts with label நண்பர்கள். Show all posts

க..க...கல்லூரி சாலை

மூக்குக்கு கீழ நாலு முடியாவது மொளச்சிருக்கான்னு  அப்பப்ப கண்ணாடி முன்னாடி நின்னு தடவிப் பாத்துகிட்டே இருந்தன்...ஏன்னா காலேஜ் சேந்துட்டன்ல...எங்க என்ன பால்வாடின்னு கிண்டல் பண்ணுவாங்களோன்னு ஒரு பயம் வேற

அந்த நாளும் வந்துச்சி...கல்லூரி முதல் நாள்....

காலங்காத்தால எந்திருச்சி ஓன்னுக்கு நாலு தடவ சோப்பு போட்டு குளிச்சி...அப்பா அயன் பண்ணி வெச்சிருந்த சொக்காவ சோக்கா எடுத்து மாட்டிகிட்டு கண்ணாடிய பாத்தா...அட எனக்கும் ஸ்டைல் வந்துடுச்சிப்பா...சுருள் முடிகளை மெனெக்கெட்டு வகிடெடுத்து சீவி ஏதோ பரட்டை தலை எஃபெக்ட் வரவழைச்சாச்சு

அப்பா கிட்ட சொல்லிட்டு நோட் வாங்க பதினெஞ்சும்,பேருந்துக்கு இருவதும் அப்பா பாக்கெட்டிலிருந்து எடுத்துக்கிட்டன்...போய்ட்டு வரம்மா..போய்ட்டு வரம்பா

பேருந்தில் தொத்தி கித்தி கல்லூரிக்கு வந்து சேந்தாச்சு...அடுத்து என் க்ளாச தேடனும்...B.sc Computer science - room no.205  என்று போர்டில் எழுதியிருந்தது...205ஐ தேடி அங்க இங்க போனன் கெடைக்கல...

என்ன மாதிரியே இன்னும் நாலைந்து பய புள்ளைங்க 205ஐ தேடிக்கிட்டு இருந்துச்சுங்க...அதுல பய ஒருத்தன் நல்லா வாட்ட சாட்டமா என்ன விட அழகா(அவ்வ்வ்வ்) இருந்தான்...


எங்க சீனியரா இருப்பாயிங்களோ என்ற பயத்துடனே அவனை  நெருங்கி ஹாய் நீங்க பர்ஸ்ட் இயரா என்று மெல்ல விசாரிச்சன்...ஆமாம் நான் கம்ப்யூட்டர் சயின்சு நீங்க ? அட நானும் தான்..சரி வா ரூம தேடுவோம்

205 ஐ ஒரு வழியா தேடிப் பிடித்து போனால்....

என்னோட பன்னெண்டாவது படிச்ச பாதி பய புள்ளைங்க அங்க தான் இருக்காயிங்க...அட சூப்பருன்னு..ஒக்கார இடம் தேடுனா...இருந்தது மாப்பிள்ளை பெஞ்சு மட்டும் தான்...

அந்த கடைசி பெஞ்சில் ஆரம்பித்த என் கல்லூரி வாழ்க்கை...


தொடரும்....அடுத்த பதிவில்

நாங்களும் குத்துவோம்ல :)

என்னடா எல்லா குத்துகளும் முடிஞ்சிடுசேன்னு பாக்குறீங்களா,இல்ல இல்ல இன்னொன்னு இருக்கு , அதான் சும்மா இருக்குற சுவரை குத்துறது

இந்த செவுத்த குத்துறது ஒரு பெரிய ரிலாக்சேஷனுங்க...ஏன்னா செவுறு திரும்ப குத்தாதுல்ல (அட பெரிய கண்டுபிடிப்புதான்) ,என்ன வலிக்குமேன்னு பாக்குறீங்களா..உங்களுக்கு யாரையாவது குத்தனும்னு தோணுச்சினா அவங்கள நினைச்சிகிட்டு செவுத்த குத்தலாம் (ஏதோ நம்மாள முடிந்தது)





## என்ன பதிவெழுதுறது ரெண்டு நாளா யோசித்து யோசித்து செவுத்ததான் போட்டு குத்திகிட்டு இருந்தேன் ,அட இந்த ஐடியா வந்துடுச்சே :)

## எல்லா பொன்னுங்களுக்கு முன்னாடி உனக்கு அறிவு இருக்கான்னு மேடம் கேக்கும் போது மேடத்த குத்தனும்னு தோனும் ஆனா முடியாது அப்ப செவுத்ததான் குத்தனும்

## பரிட்சை எழுதும் போது பட்டுனு நம்ம பேப்பர பிடுங்கி,அவன் வச்சிக்கிகுவான், கேக்க போனா நாமலும் மாட்டிக்கனும்,அப்ப எத குத்தனும் போல தோணும் செவுத்த தான் :)

## அவனோட லவ்வர் வரும் போது,நாம பக்கத்துல நின்னா அவனுக்கு ப்ரெஸ்டீஜ் ப்ராப்ளம் அப்டி தள்ளி நில்லுன்னு சொல்லுவான்,அப்பவும் செவுத்ததான் குத்தனும்

## மாப்ள உன் எழுத்து அவ்வளவு அழகு சிற்பம் டா,பிரிண்ட் எடுத்த மாதிரி இருக்கு என்று ஐஸ் வைத்து நைட்டு ஃபுல்லா அவனோட அசைன்மென்ட்டையும் எழுத வச்சிட்டு போயிடுவான்,அப்பரம் என்ன நைட்டு ஃபுல்லா எழுதிக்கிட்டே குத்த வேண்டியதுதான் :(

## இந்த பொண்ணுங்களுக்கு செல்போன்ல பேலன்சே இருக்காது போல :) , நம்ம கிட்ட சுத்தமா பேலன்ஸ் இல்லாத போது தான், தொடர்ந்து 10 மிஸ்டு கால்,call me urgent அப்டின்னு மெசேஜ் அனுப்பி கொல்லும் போதும் செவுத்ததான் குத்தனும் :)

## ஒரு வாரமா நான் சைட் அடிக்கிற ஃபிகரு,இன்னக்கி புசுக்குன்னு இன்னொருத்தன் பைக்ல ஏறி போகும் போது செவுத்த தான் வெறிக்க வெறிக்க குத்த முடியும் :))

## ஒரு 50 கமென்ட்சு,50 ஓட்டு விழுந்திருக்கும்னு பதிவ ஓபன் பன்னுனா தொப்பி 3 கமெண்ட்சும்,5 ஓட்டும் விழுந்திருக்கும் அப்ப நச்சுனு செவுத்த குத்துனா ஒரு பெரிய ரிலாக்சேஷனா இருக்கும் (ஓ___,கமெ____போடாதவங்கள குத்துற மாதிரி ஒரு அலாதியான சுகம் )

ஹா ஹா ஹா !!!

என்ன பதிவு மொக்கையா இருக்குன்னு தோணுதா , உடனே செவுத்த குத்துங்க(அதாவது என்ன நினைச்சிகிட்டு)

இல்ல ஓட்டையாவது எனக்கு குத்துங்க :))

Related Posts with Thumbnails