க..க...கல்லூரி சாலை

மூக்குக்கு கீழ நாலு முடியாவது மொளச்சிருக்கான்னு  அப்பப்ப கண்ணாடி முன்னாடி நின்னு தடவிப் பாத்துகிட்டே இருந்தன்...ஏன்னா காலேஜ் சேந்துட்டன்ல...எங்க என்ன பால்வாடின்னு கிண்டல் பண்ணுவாங்களோன்னு ஒரு பயம் வேற

அந்த நாளும் வந்துச்சி...கல்லூரி முதல் நாள்....

காலங்காத்தால எந்திருச்சி ஓன்னுக்கு நாலு தடவ சோப்பு போட்டு குளிச்சி...அப்பா அயன் பண்ணி வெச்சிருந்த சொக்காவ சோக்கா எடுத்து மாட்டிகிட்டு கண்ணாடிய பாத்தா...அட எனக்கும் ஸ்டைல் வந்துடுச்சிப்பா...சுருள் முடிகளை மெனெக்கெட்டு வகிடெடுத்து சீவி ஏதோ பரட்டை தலை எஃபெக்ட் வரவழைச்சாச்சு

அப்பா கிட்ட சொல்லிட்டு நோட் வாங்க பதினெஞ்சும்,பேருந்துக்கு இருவதும் அப்பா பாக்கெட்டிலிருந்து எடுத்துக்கிட்டன்...போய்ட்டு வரம்மா..போய்ட்டு வரம்பா

பேருந்தில் தொத்தி கித்தி கல்லூரிக்கு வந்து சேந்தாச்சு...அடுத்து என் க்ளாச தேடனும்...B.sc Computer science - room no.205  என்று போர்டில் எழுதியிருந்தது...205ஐ தேடி அங்க இங்க போனன் கெடைக்கல...

என்ன மாதிரியே இன்னும் நாலைந்து பய புள்ளைங்க 205ஐ தேடிக்கிட்டு இருந்துச்சுங்க...அதுல பய ஒருத்தன் நல்லா வாட்ட சாட்டமா என்ன விட அழகா(அவ்வ்வ்வ்) இருந்தான்...


எங்க சீனியரா இருப்பாயிங்களோ என்ற பயத்துடனே அவனை  நெருங்கி ஹாய் நீங்க பர்ஸ்ட் இயரா என்று மெல்ல விசாரிச்சன்...ஆமாம் நான் கம்ப்யூட்டர் சயின்சு நீங்க ? அட நானும் தான்..சரி வா ரூம தேடுவோம்

205 ஐ ஒரு வழியா தேடிப் பிடித்து போனால்....

என்னோட பன்னெண்டாவது படிச்ச பாதி பய புள்ளைங்க அங்க தான் இருக்காயிங்க...அட சூப்பருன்னு..ஒக்கார இடம் தேடுனா...இருந்தது மாப்பிள்ளை பெஞ்சு மட்டும் தான்...

அந்த கடைசி பெஞ்சில் ஆரம்பித்த என் கல்லூரி வாழ்க்கை...


தொடரும்....அடுத்த பதிவில்

14 Response to "க..க...கல்லூரி சாலை"

 1. ரைட்டு..ரைட்டு! :-)

  சுடுதண்ணி வரும் நாள்தான் ஜில்தண்ணியும் வருமோ

  சுடுதண்ணி வரும் நாள்தான் ஜில்தண்ணியும் வருமோ

  Prasanna says:

  Super :) நீ வெள்ளைக்காரன் மாதிரியே இருக்கியே முதல் நாள்ல..

  தொடரட்டும் பார்க்கலாம்...  எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

  siva says:

  ok boss..kadisila penchila ukkanathalum neengathan mudal manavana varaporeenga....boss

  Anonymous says:

  //தொடரும்....அடுத்த பதிவில்//

  ம்ம்ம் நல்லா தொடருங்க..

  சீக்கிரம்....

  Anonymous says:

  aavaludan etirparkirom, viraivil thodara valthukkal

  Anonymous says:

  aavaludan ethirpakirom, viraivil thodra valthikkal

  Anonymous says:

  aavaludan ethirpakirom, viraivil thodra valthikkal

  உங்கள் பதிவுகளின் பாலோவரான நான்., இனி வரும் காலங்களில் வாரம் வாரம் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில்., உங்களின் அந்தந்த வாரம் படிக்க தவறிய பதிவுகளை படிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்., பார்க்கலாம் எந்த அளவிற்கு நடைமுறை படுத்துகிறேன் என்பதை!
  :)
  மேல உள்ளவாறு அடையாளமிட்டால், இந்த இடுக்கையை படித்துவிட்டேன்., என்னுடைய கருத்தென்று சொல்ல ஒன்றுமில்லை., அதாவது உங்களின் இந்த கட்டுரையை ஒரு சின்ன புன்னகையோடு ஏற்றுகொள்கிறேன் என்று அர்த்தம்!

  Softy says:

  Do Visit

  http://verysadhu.blogspot.com

  Softy says:

  மேலும் வாசிக்க....

  Do Visit

  http://www.verysadhu.blogspot.com/

Related Posts with Thumbnails