3


முஸ்கி :  யாரும் கூப்புடலனாலும் நாங்களா தொடர் பதிவ எழுதுவோம்ல :)

1.விரும்பும் 3 விசயங்கள் : 

அ). அழகான பெண்கள்
ஆ). பேசிக் கொண்டே இருப்பது (ஆண் நண்பர்களிடமும் தான் :) )
இ).  இசை

2.விரும்பாத 3 விசயங்கள் :

அ). என்னை விரும்பாத அழகான பெண்கள்
ஆ). தனிமை
இ).  வெட்டி பந்தா

3.பயப்படும் 3 விசயங்கள் :

அ). வேகமாய் பயணிப்பது  
ஆ)  என் எதிர்காலம் ? 
இ).  என் க்ளோசப் போட்டோ 

4.புரியாத 3 விசயங்கள் :

அ).  கணக்கு
ஆ). பெண்கள்(இதுக்கும் கணக்குக்கும் சம்பந்தமில்ல :))
இ).  செல்வா கதைகள்

5.உங்கள் மேசையில் இருக்கும் 3 பொருட்கள் :

அ).  நான்
ஆ). படிக்கிறன்னு காட்டிக்க பத்து பதினைந்து புத்தகங்கள்( ஆ.வி,குமுதம்,குங்குமம் இல்ல)
இ).  லூசுத்தனமா கிறுக்கிய துண்டு பேப்பர்கள் 

6.உங்களைச் சிரிக்க வைக்கும் 3 விசயங்கள் :

அ). நானும் பதிவெழுதுவது
ஆ). அவ்வப்போது செல்வாவின் மொக்கைகள்
இ).  அவ்ளோதான் . 

7.இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள் :

அ).  யாரோ சொன்னாங்கன்னு எம்.சி.ஏ படிக்கிறன் 
ஆ). மொக்கை போடுவது
இ).  ஜில்தண்ணி'னு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சன் ஆனா.......

8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள் :

அ). ஒரு முறையாவது சரக்கடிக்கனும் :) 
ஆ).ஒரு சிறுகதையாவது முழுசா எழுதனும் 
இ).  ட்ரம்சு கத்துக்கனும் 

13.அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள் :

அ). இன்னும் ஓர் இரவு ( கற்றது தமிழ்)
ஆ).நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை( வாரணம் ஆயிரம்)
இ). பேசுகிறேன்...பேசுகிறேன்

14.பிடித்த 3 படங்கள் :

அ). கற்றது தமிழ்
ஆ) தளபதி
இ). வாரணம் ஆயிரம்

15.இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லுற 3 விசயங்கள் :

அ). இணையம்
ஆ). என் டப்பா அலைபேசி
இ).  வெட்டி பேச்சுடிஸ்கி
: யாருக்காவத் பதிவு போட ஒன்னுமில்லனா இத தொடர் பதிவா போடுங்க...முடிஞ்சா அதுல மேதகு ஜில்தண்னியார் அவர்களுக்கு நன்றின்னு போட்டால் வீட்டுக்கு எதாவ்து கிஃப்ட் வாங்கி அனுப்புறன் 

11 Response to "3"

 1. ரொம்ப நாட்களுக்கு பிறகு சுயசொறிதலுடன் 3 பதிவு கலக்கல். யாருமே கூப்பிடலனாலும் நாங்களும் தொடர்பதிவு எழுதுவோம்னு தில்லா சொல்லிய களம் இறங்கியிருப்பது சூப்பர் மக்கா.!!! பதிவு கலக்கல்.

  உன்னுடைய பதிவுகள் எப்பவும் நக்கலாகவும் நையாண்டியாகவும். செம காமெடியாக இருக்கும். வழக்கம்போல இந்த பதிவுலயும் அதனை எதிர்பார்த்து வந்தேன். செம கலக்கல் காமெடிகள் ஜில்லு. ஹி.. ஹி.. ஹி....

  Katz says:

  kalakkal maamu.

  4. புரியாத 3 விசயங்கள்.
  இ. செல்வா கதைகள் ஹா.. ஹா.. ஹா... கண்டிப்பா இதை செல்வா படிச்சா விழுந்து விழந்து சிரிப்பான். உனக்காவது இம்புட்டு நாளா புரிஞ்சு இருக்கும்னு நெனச்சு இருப்பான் பட் அதுவும் போச்சு.. ஹி.. ஹி...

  //6.உங்களைச் சிரிக்க வைக்கும் 3 விசயங்கள் :
  ஆ). அவ்வப்போது செல்வாவின் மொக்கைகள் // ஹி.. ஹி.. ஹி.. இதுகூட செம காமெடிதான். ஹய்யோ......... ஹய்யோ.... வாயில சுவீட்ட வச்சு.... வயித்துல ரீவிட்ட வச்சுட்டியே மக்கா..!! ஹெ.. ஹெ... செம கலக்கல்.

  /// யாரும் கூப்புடலனாலும் நாங்களா தொடர் பதிவ எழுதுவோம்ல ///

  நாங்க படிக்காட்டியும் காமெண்ட்ஸ் போடுவோமுள்ள...

  // என் எதிர்காலம் ? //

  என் இனமடா நீ...? சீக்கிரம் படிச்சு முடிங்க தம்பி அதுக்கப்புறம் தான் ஆட்டமே இருக்கு...

  // லூசுத்தனமா கிறுக்கிய துண்டு பேப்பர்கள் //

  மறுபடியும் என் இனமடா நீ...? இப்போது கொஞ்சம் மாடர்னாக மாறிவிட்டேன்... sticky notes என்ற வஸ்துவை வாங்கி சுவரெங்கும் எழுதி ஒட்டி வைத்திருக்கிறேன்...

  // யாரோ சொன்னாங்கன்னு எம்.சி.ஏ படிக்கிறன் //

  சேருவதற்கு முன்னால் ஆயிரம் முறை யோசிக்கலாம்... ஆனால் சேர்ந்தபிறகு ஏன் சேர்ந்தோம்ன்னு ஒருமுறை கூட யோசிச்சிடாதீங்க... எல்லாம் நன்மைக்கே...

  // ஒரு முறையாவது சரக்கடிக்கனும் :) //

  பண்லாம் பாண்டியா...

Related Posts with Thumbnails