உலகம் எப்போது அழியும் ?கண்டிப்பாக 20ஆம் நூற்றாண்டு உலகத்தின் அழிவாகத்தான் இருக்கும்,என்பது போன்ற செய்திகள் அவ்வப்போது கிளம்புவதுண்டு

அப்படியென்றால் உலகம் அழியவே அழியாதா என்றால் அழியும் ஆனால் மெல்ல மெல்ல அழியும் என்பது தான் என் கருத்து.

எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் இந்த மனிதனால் இயற்கையை எதிர்த்து நிற்பது அவ்வளவு சுலபமல்ல,இயற்கையை நாம் ஆக்கிறமிக்கிறோம் அது நம்மை ஆட்டி வைக்கிறது

கண்டிப்பாக இந்த பூமிக்கு அழிவிறுக்கிறது,அது எப்படி வேண்டுமானாலும் வரலாம்

பகவத் கீதையில் தண்ணிரால் தான் இந்த உலகம் அழியும் என்ற
கூற்று இருக்கிறதாம்(நான் படிக்கல,நண்பர்கள் சொன்னதுங்கோ),ஆம் சுனாமி,பூகம்பம்,எரிமலை சீற்றம் போன்ற இயற்கை பேரழிவுகளால் மெல்ல அழியும்ஒரு புறம் தண்ணிர் இல்லாததால் வறட்சியால் பூகம்பம் மற்றொறு புறம் வேறு மாதிரியான பிரச்சனை

வெயில் காலங்களில் நல்ல மழை பெய்கிறது,மழை பருவத்தில் வெயில் சுட்டெரிக்கிறது,எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கிறது,இதை என்னவென்று சொல்ல?

இந்த உலக வெப்பமயமாதல் வேற,இங்கு மட்டும் வெப் உயர்வில்லை பனிப் பிரதேசங்களான ஆர்டிக்,அண்டார்டிகா பகுதிகளிலும் தான்,இதனால் என்ன ஆகும்

நம் பூமிப் பந்தில் நான்கில் மூன்று சதவீதம் கடல் தான்,ஒரு பகுதி தான் நாம் வாழும் நிலப்பகுதி,வெப்பம் அதிகரிப்பினால் பனிக்கட்டிகள் உருகி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது,இதனால் கடல் பகுதி கண்டிப்பாக அதிகரிக்கும்,நிலப் பகுதி குறையும்,நாமும் குறைவோம் ?


ஒரே ஓட்டை போட்டு சர்வ சாதாரணமாக ஆபத்தான அறுவை சிகிச்சைகளை மருத்துவத் துறை செய்து வருகிறது,மிகப் பெரிய வளர்ச்சி தான்,ஆனால் இந்த நோய்களின் வளர்ச்சி இதைவிட அபரிமிதமாக இருக்கிறதே,முன்பு பிளேகு,காளரா என்று எண்ணக்கூடிய அளவிலிருந்த நோய்கள்(கிருமிகள்) இப்போது தங்களை மறுவடிவமைப்பு செய்துகொண்டு வருகிறது,அழிவு தானே ?


அழிவு இப்படித்தான் வரவேண்டும் என்றில்லை,உலகப் போரின் போது அப்பாவி மக்கள் எவ்வளவு பேர் கொள்ளப்பட்டனர்,ஹிட்லர்,ஸ்டாலின் , ராஜபக்ஷே போன்ற சர்வாதிகாரிகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும் இது போன்ற அழிவுகள் வரும்

இலங்கையில் நம் தமிழ் இனம் அழிக்கப்பட்டது ஒரு அழிவுதானே :(


இப்படி ஒருபுறம் இருக்க வேற்று கிரக வாசிகளால் கூட அழிவு ஏற்படலாம் என்கிறார் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளரான ஹாகின்ஸ்.

எப்படி இருந்தாலும் இன்னும் ஒரு நூற்றாண்டோ அல்லது ஒன்றரை நூற்றாண்டுகளுக்குத் தான் இந்த பூமியால் தாக்குப் பிடிக்க முடியும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது

என்னடா அழிவை பற்றியே சொல்றானே ஒரு சந்தோசமான விஷயம் என்னவென்றால் செவ்வாய் கிரகத்தில் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது அப்படியென்றால் கண்டிப்பாக தண்ணீர் இருக்கும் என்பதும் உறுதி.

அப்ப செவ்வாய் கிரகத்துல ஒரு பிளாட் வாங்கிட வேண்டியதுதான் போலிருக்கு :)

அழிவு உறுதியாகிவிட்டதால் அதை தடுக்க முடியாது வேண்டுமென்றால் கொஞ்சம் தள்ளிப் போடலாம்,அதற்கு முதலில் இயற்கையோடு சண்டையிடுவதை முதலில் நிறுத்த வேண்டும்

என்னால் இந்த பூமியை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் நீங்களும் ஒரு மரம் வளருங்கள்.


நம் பூமித் தாய்க்கு இப்போது தேவை சுதந்திரம்,சுத்தமான காற்று,நல்ல தண்ணி இவற்றை உங்களால் கொடுக்க முடியுமா ???? யோசிங்க

மனிதன் தன் அடுத்த பரிணாமத்தில் இவற்றையெல்லாம் தூள் தூளாக்கக் கூட வாய்பிருக்கிறது ,பாப்போம் நாம் இருந்தால்

அவளும் அந்த குட்டிக் கவிதைகளும்

பூவுக்குள்...

தோட்டத்திற்கு
சென்று
நீ
ஒரே ஒரு
பூவை
பறித்து
சூடினாய்
மறு நிமிடமே
மற்ற
பூக்களெல்லாம்
தற்கொலை
செய்து கொண்டன
அடுத்த பிறவி
எடுத்தாவது
உன்னை
அடைவேனென்று

கோலடிக்கிறாய்
..

ஏ பெண்ணே
என் இதயம்
என்ன
கால்ப்பந்து மைதானமா
தினமும்
உன்
டாலடிக்கும்
பார்வையால்
கோலடிக்கிறாய்

கை கொடு...


உன்
அசட்டுக்
கன்னக் குழிகளில்
தடுக்கி விழுந்தவன்
இன்னும்
எழவில்லை
வாழ்க்கைக்கு கூட
வேண்டாம்
எழுவதற்காவது
கை கொடுத்துவிடு
கவிதையே


சிக்கு...


உன் வீட்டு வாசலில்
சிக்குக் கோலங்களை
சிக்காமல்
போடுகிறாய்
சிக்கிக்
கொண்டது
நானல்லவோ

நான் மறந்த என் முதல் பதிவு

நானும் பதிவெழுதப்போறேன் என்று கிளம்பி கிட்டத்தட்ட ஒரு மூன்று மாதம் ஆகிறது,30 பதிவுகளும் போட்டாச்சி,50 பேர்ன்னை பின்தொடர்கின்றனர்,அப்டி என்னதான் இருக்கிறது இந்த பதிவுலகில்

இப்போது தான் தெரிகிறது இது மிகப் பெரிய உலகம் என்று
எவ்வளவு வியக்கத்தக்க உலகம் திறமைசாலிகளும்,எழுத்தாளர்களும்,சிந்தனையாளர்களும் அற்புதமாக எழுதி வருகின்றனர்.

என் ஒவ்வொரு முயற்சியையும் தட்டிக் கொடுக்க அன்பான நண்பர்கள் கிடைத்தார்கள்,என் தவறை சுட்டிக் காட்டி திருத்தும் அண்ணன்கள் கிடைத்தார்கள்,இங்கு வயது வித்தியாசமின்றி பழகும் பெரியோர்கள் இருக்கின்றனர்.

முக்கியமாக இப்போது நிறைய படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்,என்னையும் நம்பி ஒரு 50 பேர் இருக்கிறார்களே,அதற்காகவாவது சிறந்த பதிவுகளை எழுத வேண்டுமே என்று அக்கறை வந்துள்ளது.

இங்கு திறமை கண்டிப்பாக பாராட்டப்படும்,வெளிக்கொணரப்படும் !!!

என் திறமையை முடிந்த வரை வெளிப்படுத்த முயல்வேன் நண்பர்களே !!!

_________________________________________________

இந்த சின்னப் பையனின் ஒரு சின்ன அறிமுகம்

இவ்வளவு நாளாய் ஜில்தண்ணி என்று அழைத்துக்கொண்டிருந்த நண்பர்களே,என் பெயர் "யோகேஸ்வரன்".வயசு ஒரு 21 ஆகுது,சும்மா ஏதோ கிறுக்கிக் கொண்டிருக்கின்றேன்,எங்க ஊரு குத்தாலம் (குற்றாலம் இல்லீங்க) நாகை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சின்ன ஊர்.

இனி என்னை 'ஜில்லு' யோகேஷ் என்று கூட கூப்பிடலாம்,அப்பறம் நிறைய எழுதனும்னு ஆசையாத்தான் இருக்கு,முடிந்தவரை முயற்சிப்பேன்

இன்னும் என்னை பத்தி ஏதாவது தெரியணும்னா,ஒரு மின்னஞ்சல் அனுப்புங்க இல்ல மின்னரட்டைக்கு வாங்க

மின்னஞ்சல் : jillthanni@gmail.com

குறிப்பு : இதய நோய் உள்ளவர்களும் ,பெண்களும்,சிறுவர்களும் கீழே உள்ள படத்தை பார்ப்பதை தவிர்க்கவும் ,மீறி பார்த்து பயந்து போனால் நான் பொறுப்பல்ல (ஹி ஹி ஹி )

இது தான் நான்


அப்பாடா என்னபத்தி சொல்லிபுட்டேன்,அப்பறம் நீங்கதான் சொல்லணும்

வரட்டுங்களா !!!!

அண்ணன் வால் பையனுடன் ஒரு அரட்டை

3:53 PM me: vanakkam vaal


8 minutes
4:01 PM arunero: வணக்கம் தல
4:02 PM me: unmayileye thangalukku vayasu aayidicho
arunero: இல்லையே
யார் சொன்னா தல
me: photola ????
apdithaan theriyuthu
arunero: அது கிராபிக்ஸ்
4:03 PM me: aahaa nalla samaalikireenga vaal
arunero: நம்புங்க தல
4:04 PM me: ha ha ha
arunero: சிரிக்காதிங்க
நம்புங்க
4:05 PM me: sari nambiten
ippa sollunga epdi ivalavu thatroobama graphics
4:06 PM arunero: எங்க பாஸ் பண்ணி கொடுத்தார்
அந்த போட்டோ எடுத்தது அவர் தான்
me: yaaru avuru
arunero: கார்த்திக்
4:07 PM me: blog sollunga
arunero: ப்ளாக்கர் இல்ல
me: rightu
arunero: ம்ம்
me: unga photo irunthaa konjam mail pannungalen
naanum panren
4:08 PM arunero: என்ன பண்ண போறிங்க?
me: enaakum intha photoshop pidikkum
yethaavathu panni ungala azhagaakuren
4:09 PM he he he
arunero: சரி அனுப்புறேன்
me: rightu
arunero: லேசா பித்த நரை இருக்கும்
அதை மறைச்சிருங்க
me: mm he he he
kandippa
4:11 PM
நன்றிபித்த நரை மறைக்க சொன்னீங்க ,மறைத்துவிட்டேன் (போதுமா)


டைனாசர் போலவே இருக்குள்ள


தமிழ்நாட்டில் போட்டிக்கு விஜய் போன்ற ஹீரோக்கள் இருப்பதால் அண்ணன் வால் ஹாலிவுட்டில் தான் தன் லீலைகளை நடத்துவார்(அங்க மதுர பொண்ணு கிடையாது,மேகன் பாக்ஸ் )


இந்த போட்டோவுக்கு என்ன எழுதலாம் நீங்களே சொல்லுங்களேன்


என்னுமோ ஒன்னு குறையுதே


மீண்டும் வருவார் vaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaal


எனக்கென்று சில உறவுகள்


தங்கக் கம்பி

நான் பள்ளி சேர்ந்த வருடம்
நீ பூமியில் குதித்தாய்
என் தாய் மடியை அபகரித்து விட்டாயோ என்று
கண்ணில் நீர் கசிந்தது
அம்மா தேற்றினாள் உன் தம்பி தான் என்று

நான் தான் உனக்கு பெயரே வைத்தேன்
வளர்ந்துவிட்டாய்
நீ அண்ணா என்று கூப்பிடும் அந்த
வார்த்தைக்காக ஏங்கியவன்

எத்தனை சண்டைகள்
நமக்குள்
பலப்ப குச்சிக்கும் அம்மா செய்த முறுக்குக்கும்
சண்டை போடாத நாட்களே இல்லை

இன்று கூட
சண்டை தான்
புது தலையணையை யார்
வைத்துக் கொள்வது

என்ன இருந்தாலும் விட்டுக் கொடுப்பவன்
நான் தான்
என் தம்பி தானே

--------------------------------------------------------------

மாமன் மகள்..

குட்டிப் பெண்ணாய்
பார்த்துக் கொண்டிருந்தேன்
அதற்குள்
பெரிய மனுசி
ஆகிவிட்டாள்

நிறைய வித்யாசங்கள்
அவளிடம்
புதிதாய் கண்டுபிடித்த வெட்கம்
சற்றே உப்பிய கன்னம்
குரல் கூடத்தான்

சட்டென்று
குதித்த என் இதயம்
அவளிடம்
நின்று கொண்டு
முறைப் பெண் தானே
காதலித்து பாரேன்
என்றது
என்ன செய்ய ?

----------------------------------------------------

நண்பா...

இத்தனை வருடம் படித்தேன்
என்ன வளர்ந்தது
நண்பர்கள் எண்ணிக்கை தான்

அரியர் வைத்தாலும்
கேட்டாய்
ஆடை வாங்கினாலும்
கேட்டாய்
நானும் மறுக்கவில்லை
"ட்ரீட்"

சொந்தமே இல்லாமல்
மச்சான் என்றாய்
மாமா என்றேன்

ஒன்றுமே
இல்லையென்றாலும்
நமக்குள்
நிறைய
இருக்கும்
பகிர்ந்து கொள்ள

நம்
நட்பிற்கு
முடிவு
என்றுண்டா

அறிவியல் வாத்தியார் - 3

மாலை வணக்கம் ஐயா

வணக்கம் வணக்கம்,என்னடா ஒரு வாரமா ஆள காணோம்

என்னோட ஆளு ஊர்லதான்யா இருக்கா,இப்பதானே பாத்தேன்

அது வேறயா ,சரி சரி நடத்து நடத்து

ஏதாவது சந்தேகம் இல்லாம வரமாட்டையே,என்ன ?

இந்த இசைக்கும் - சத்தத்துக்கும் என்ன வித்யாசம்யா ?

அதாவது இசையும்,சத்தம் இரண்டுமே ஒலி தான்

இரண்டுமே அதிர்வ்களால் உருவாவது தான்

இசை சீரான அதிர்வுகளால் உருவாவது

சத்தம் தாறுமாறான அதிர்வுகளால் உருவாவது

அவ்வளவுதான்..

ஹ ஹ ஹச்ச்ச்ச் .......................
ஐயா இந்த தும்மல் ஏன் வருகிறது ?

ம்ம்ம் சொல்றேன்
முதல்ல தும்மும் போது கைக்குட்டையை வைத்து மூடி கொண்டு தும்மு,சரியா

மூக்கில் உள்ள மெல்லிய சவ்வின் நரம்பு நுனிகள் தூண்டல் ஏற்படும் போது தும்முகிறோம், மூச்சை உள்ளே இழுக்கும் போது தூசி அல்லது பூந்தாதுக்கள் உள்ளே செல்வதாலோ,ஒவ்வாமை,மூக்கடைப்பு இருந்தால் கூட வரும்

மூக்கில் இருக்கும் அன்னியப் பொருளை (foreign particles) காற்றின் மூலம் வெளியேற்ற உதவும் ஒரு அனிச்சை செயலே(reflex action ) தும்மல்

போன வாரம் கராத்தே கிட் படத்துக்கு போனோம்,ண்பன் ஒருத்தன் பாப் கார்ன் வாங்கினான் (எனக்கு ஓசி ),அத பொரிக்கும் போது அந்த குதி குதிக்குதே அது ஏன் ?

படம் எப்டி இருந்தது
வூட்ல பொய் நான் ரசித்ததை படிங்க

பாப் கார்ன் செய்ய பயன் படும் சோளம் ஒரு வித கடினத் தன்மை கொண்டதாகும்,நடுவில் சிறிய அளவு பருப்பும் அதைச் சுற்றி கடினமான மாவுப் பொருளும் இருக்கும் மற்றும் 10 முதல் 15 சதவீதம் ஈரப்பசை

கீழே இருக்கும் ஈரப்பசை சூடாகி ஆவியாக பலமடங்கு பெரிதாகும் ,அந்த மாவு பொருளை பிளந்து கொண்டு வெளியே வரும்,அதனால் தான் குதிக்கிறது


மழை பெய்யும் நேரம்...மழை பெய்யும் நேரம்...

மழை
நாளில்
நீ
நடந்து
சென்றாய்
மழை
துளிகள்
சண்டை போட்டு கொண்டன
உன் மேல் விழுவதற்கு
நானும் தான் .

------------------------------------------------------


வானவில்...

உன்னை
பார்க்கும்
நிமிடங்கள்
யாவும்
வானவில்
வண்ணங்களாக
மலர்கின்றன
பெண்ணே
உன்னை சந்திக்காத
நொடிகளில் மட்டும்
தனிமை காட்டில்
அலைந்து திரிகிறேன்
உன் எண்ண அலைகளோடு

----------------------------------------------------------


நான் தைரியமற்றவன்....

ஒரு
நூறு
மனிதர்களை
அடித்து
நொறுக்கும்
வாலிபத்தின் நரம்புகள்
என்னிடம் இருந்தாலும்
அவளிடம்
காதலை
சொல்ல சென்று
கண்களை பார்த்து
திரும்பி
வரும்போது
கோழயாகிறேன்
நான்
தைரியமற்றவனா....

அவளின்
பார்வை
சம்பவத்திற்காக
காத்திருந்து
ஏமாறும்
நேரங்களில்
நான்
ஏமாளியா...

இல்லை
அவள் முன்
ஏமாளியாகவும்
கோழையாகவும்
இருக்கவே
ஆசை..

சாலையோரக் கவிதைகள்

இந்த கவிதைகள் நான் கிறுக்கியது என்ற பதிவில் எழுதியது,இப்போது அந்த பதிவுகள் அழிந்துவிட்டது,உங்களுக்காக இங்கு...

விழியீர்ப்பு விசை...


கல்லூரி
காலங்களில்
நீ
அந்த
நீல நிற
சுடிதாரில்
உன்
தோழிகள் படை சூழ
வலம் வருவாய்
நான்
கடைக்கண் தரிசனம்
கிடைக்குமா
என ஏங்கிய
நேரத்தில்
மலையின் பின்
உதிக்கும்
ஆதவனை போல
உன்
கன்னக் குழிகளில்
உதித்த
அந்த
வெட்க்கச்சிரிப்பை
கண்டு
நான்
வெட்கினேன்

உன்
விழியீர்ப்பு விசையில்
அந்த
புவியீர்ப்பு
விசை கூட
தோற்று விட்டதடி

____________________________________

அழகுக் குறிப்பு.....

உன்னை
பின்தொடர்ந்து
வருகையில்
நீ
அள்ளி வீசினாய்
அழகுக் குறிப்புகளை
ஆம்
உன்
செருப்பும்
அழகின்
குறிப்பு தானே

______________________________________

அவளின்றிஇப்போதெல்லாம்
பூக்களை
பார்த்து
பரிகசிக்கிறேன்
நீ
எல்லாம்
எம்மாத்திரம்
என்னவள்
முன்பு...

நீங்களும் ரசிங்க - கராத்தே கிட்


ஞாயிற்று கிழமை வீட்ல வெட்டியா தானே இருக்கோம்,சரி ஏதாவது படத்துக்கு போகலாம்னு யோசிச்சப்ப நினைவுக்கு வந்தது தி கராத்தே கிட்,ஜெட்லி அண்ணன் எழுதுன விமர்சனம் தான் இந்த படத்தை யோசிக்க வைத்தது,

நண்பனுக்கு போன் போட்டு தி கராத்தே கிட் படத்துக்கு போகலாமாடான்னு கேட்டேன்,என்ன தர டிக்கட்டா என்று கேட்டான் சிரித்து விட்டேன்,ஒரு வழியா ஃபைனலைஸ் பன்னி,மாலை ஷோ போணோம்

விமர்சனமெல்லாம் நிறைய பேர் பண்ணிட்டாங்க..

நான் ரசித்தவைகளை பகிர்ந்து கொள்கிறேன்

* ஆரம்பத்திலேயே என்னை கவர்ந்தது ஜேடன் ஸ்மித்தின் தலை முடிதான்

* அவனை பார்த்து இது ஆம்பளையா இல்ல பொம்பளையா என்று பின்புறத்தில் கேட்டது,சிரித்து விட்டேன்

* பனிரெண்டு வயது சிறுவன் ஸ்மித் அந்த சிறுமியயை பார்த்து அசடு வழிந்ததும் ஓரே சிரிப்பு தான்

* வில்லன் சிறுவன் முதல் அடியே இடி போல் வியக்க வைத்தது,நல்ல நுணுக்கமான வெளிப்பாடு

* கிழ சிங்கம் ஜாக்கி நடை வித்யாசமாக இருந்தது,வயது முதிர்ச்சியை காட்ட அப்படி செய்தார்களா தெரியவில்லை

* திருவிழா ஒன்றில் நம்ம ஹீரோவும் அந்த சிறுமியும் முத்தம் கொடுக்குறது கொஞ்சம் ஓவர் தான்

* கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும் சிறுவன் ஸ்மித்தின் நடிப்பு அசத்தல் தான்

* குருவாக ஜாக்கி மிளிர்கிறார்

* தற்காப்புக்காகத்தான் இந்த குங்க்ஃபூ கலையை கற்க வேண்டும்,அடிப்பதற்க்கல்ல என்று சொல்லும் ஜாக்கியிடம் பக்கா குங்க்ஃபூ தெரிந்தது

* சட்டையை அவிழ்த்து,மாட்டி,கீழே போடடும் அந்த பயிற்சியின் மூலம் குங்க்ஃபூ சொல்லிக் கொடுத்தது எதிர்பார்க்காதது

* முத்தமும் கொடுத்து விட்டு அந்த சிறுமியின் அப்பாவிடம் நாங்க சிறந்த நண்பர்கள் தான் என்று சொல்லும் போதும் சிரிப்பு தான்

* போட்டியில் வழக்கம் போல் ஒரு புறம் வில்லனும் மற்றொறு புறம் ஹீரொவும் அரையிருதிக்கு முன்னேருகிறார்கள்

* அரை இறுதியில் திட்டமிட்டு ஸ்மித்தின் கால் முறிக்கப்பட்டதும் அரங்கமே நிசப்தம் தான்

* மீண்டும் எழுகிறான் ஹீரோ,ஒரே கைதட்டல் தான்

* கடைசியில் வெளிப்பட்ட கோப்ரா குங்க்ஃஃபூ மூலம் வெற்றி பெறுகிறான்

* நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்:

வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் நின்று விடக் கூடாது,போராட வேண்டும்

*கண்டிப்பா எல்லோரும் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்

எப்புடி எல்லாம் விளம்பரம் பன்றாயிங்க (ஃபார்வட் மெயில்)

நல்ல வேலை ஜூம் கண்டுபுடுச்சிடாயிங்கஎங்கெல்லாம் விளம்பரம் பாருங்க...


மும்பை போக்குவரத்து துறையால் வெளியிடப்பட்ட விளம்பரம் இது
ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தும் விளம்பரம்....


எவ்வளவு பெற வேணும்னாலும் அழச்சிக்கிட்டு போகலாம்....


ஜில்லுனு படிக்க நம்ம பக்கம் வாங்க......
இது நம்ம விளம்பரம்


யோசிக்க ஒரு படம்
வண்டி வண்டியா புகை விடுவதை நிறுத்துங்கள்...இல்லையென்றால்முடிஞ்சா உங்க விளம்பரத்துக்கு ஒரு வோட்டும், பின்னூட்டமும் போட்டுட்டு போங்க
ஹி ஹி ஹி.............

அவர்கள் வந்துவிட்டார்கள் (Aliens)

நியு ஆர்லியஸ் மாகாணத்தில் பறக்கும் தட்டை பார்த்ததாக மக்கள் வியப்பு

தென் ஆப்ரிக்காவில் இரவு நேரங்களில் வட்ட வெளிச்சம் ஒன்று தெரிவதாக சொல்கிறார்கள்


இது
போன்ற செய்திகள் அடிக்கடி நாளிதிழில் பார்த்திருப்பதுண்டு,அவற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது,வெறும் வியூகம் தான் என்று இதுவரை நினைத்திருப்போம் .

வேற்று கிரக வாசிகள் என்பது கற்பனையல்ல அவர்கள் ஒரு நாள் இங்கு வந்தே தீருவார்கள்,நாம் அவர்களை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம் ஆனால் அவர்களை நாம் சந்திக்கும் நேரம் அழிவின் ஆரம்பமாக கூட இருக்கலாம்

இந்த திகிலூட்டும் தகவலை சொன்னது நானல்ல,புகழ் பெற்ற இயற்பியல் ஆராய்ச்சியாளர் ஸ்டீஃபென் ஹாகின்ஸ் தான்

ஹாக்கின்ஸ் ஒரு மாற்றுத் திறனாலி ஆவார்,அவர் தன் சற்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்,தன் குறைகளை பொறுட்படுத்தாது பல சாதனைகளை புரிந்துள்ளார்


சமீபத்தில் ஹாக்கின்ஸ் தன் ஆராய்ச்சியை உலகிற்கு காட்ட டிஸ்கவரி சானலில், Into the universe என்ற அற்புதமான ஆராய்ச்சி நிகழ்ச்சியில் தான் இந்த தகவலை அறிவித்துள்ளார்


கண்டிப்பாக வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்கள் என்று அடித்து சொல்ல காரணம் ஒரு கணக்கு தான் என்கிறார்

நாம் வாழும் பூமி மற்றும் இதர கோள்கள் அடங்கியது ஒரு மண்டலம் மட்டும் தான்,இந்த பிரபஞ்சத்தில் 100 கோடி மண்டலங்கள் இருக்கும்
பூமியை போல உயிர் வாழ ஏதுவான சூழ்நிலை கண்டிப்பாக ஏதாவது கோள்கலில் இருக்கலாம்.


ஆனால் அங்கு உயிரினம் எப்படி இருக்கும் என்று நாம் சொல்ல முடியாது,அவை ஒரு செல் உயிரினமாகவும் இருக்கலாம்,இல்லை மனிதனை விட பரிணமித்த ஜீவன்களாகவும் இருக்கலாம்,அவர்கள் கிரகத்தில் எல்லா வளங்கள் தீர்ந்து போன பின்,வேறு கிரகத்தை ஆக்கிரமிக்க பல ராட்சத தட்டுகளில் கூட இங்கு வரலாம்.

இதுவரை அவதார்,ப்ரிடேட்டர்,ஏலியன்ஸ்,இ.டி போன்ற படங்களிலும்,அறிவியல் புனைவுகளிலும் நாம் கற்பனையில் பார்த்த அந்த ஜீவராசிகள் நமக்கே ஆப்பு வைக்க வந்தா எப்படி இருக்கும்.ஆப்பு கண்ணுக்கு தெரியும்


டிஸ்கவரி தொலைகாட்சியில் ஒளிபரப்பான இந்த அற்புதமான டாக்குமெண்ட்ரியை கான

Into the universe பாகம்-1


Into the universe பாகம்-2

Into the universe பாகம்-3

Into the universe பாகம்-4

Into the universe பாகம்-5

மேலும் வாசிக்க

ஹாக்கின்சின் இனையதளம்

அவர் பேட்டி

குறுஞ்செய்தி குறும்புகளும் கும்மியடிக்க தளங்களும்

காதல்...

a-->b-->c-->a
முக்கோணக் காதல்

a-->b/b-->a
ஒரு தலைக் காதல்

a<-->b
இருபக்க காதல்

a<-->b-->c

?
?
?
வேற என்ன கள்ளக் காதல்
____________________________________________

சர்தார்...

USA : நாங்கதான் நிலாவுல முதல்ல கால் வைத்தோம்

RUSSIA : நாங்கதான் வீனஸ் ல முதல்ல கால் பதித்தோம்

நம்ம சர்தார் : நாங்க இந்திய தான் முதலில் சூரியனில் கால் பதித்தோம்

USA : சான்சே இல்ல , ரொம்ப சூட இருக்கும் முடியவே முடியாது

நம்ம சர்தார் : யோவ்,கொய்யல நாங்க சூரியனுக்கு ராத்திரில போனோம் டா..

_____________________________________________

ஒரு த்ரில்லர் காதல் கதை...

அப்பா,அம்மா மற்றும் மகன் ( ஹீரோ)
ஹீரோ எதிர் வீட்டில் ஒரு சூப்பர் பிகரை பார்கிறான்
காதலில் விழுகிறான்
ஆஸ்திரேலியா வில் டூயட் பாடுகிறான்
காதலை சொல்லிவிட்டான்
நல்லாத்தான் போய் கொண்டிருந்தது
அப்பா பார்த்துவிட்டார்

______இண்டர்வல்___________

ஏன் அந்த பொன்னோடையே நிக்கிற
நான் அவல காதலிக்கிறேன் அவளைத்தான் கல்யாணம் கட்டிக்க போறேன்
அதிர்ந்து போன அப்பா
முடியாது அவ உன் தங்கச்சி டா,எப்டி கல்யாணம் பண்ணி
மிரண்டு போனான் ஹீரோ
அதற்குள் அம்மா
நான் ஏற்பாடு செய்கிறேன்
ஏனென்றால் நீ எனக்கு பொறக்கவே இல்ல
அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்..
ஹீரோவுக்கு சுபம் ....

__________________________________________
"பொன்"மொழி


நீ நேசிக்கும் மங்கை உன்னை விட்டு பிரிந்தாலும்
உன் நேசம் நிஜமானால்
அவள் தங்கை உனக்கு பிக்-அப் ஆகும்

__________________________________________

பெத்த பொண்ணுக்கும்,பரீட்சை தாளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா

ரெண்டுமே "கட்டி கொடுக்குற" வரைக்கும் தல வலி தான்

__________________________________________

பரீட்சைக்கு பிறகு...

மாணவன் ௧ : மச்சி நாலு பெஞ்ச் கேப் இருந்தும் எப்டி டா, அசராம பாத்து எழுதுற

மாணவன் ௨ : thanks to vaasan eye care !!!

__________________________________________

கும்மியடிக்க இணையதளங்கள்

காமடியான வெப்தளம் இது

பார்பதற்கு விக்கிபீடியா கலைக்களஞ்சியம் போலவே தோற்றம் அளிக்கும் தளம்,முற்றிலும் தவறான தகவல்களையே கொடுக்கும் தளம்,காமெடிக்காக மட்டுமே

அந்த தளத்தில் google என்று டைப்பி தேடினேன்

கிடைத்தது

Did you mean: Evil Empire?


No standard web pages containing all your search terms were found.

Your search - Rat - did not match any documents.

Suggestions:

  • Help me, HELP ME! THEY GOT ME OH MY GOD OH MY GOD GOING DOWN MAYDAY MAYDAY(end transmission)
  • It's a trap!
  • Oh, for God's sake check your spelling!
  • Escape from your mum's closet. Even living in New York is better than that place.
  • Run before they find you.
  • Forget the last one - no one can escape from google, just kill your self now.
  • Quit searching for illegal Child porn, it's fucking illegal dude!.
  • Or Just Fuck off and eat Mr. Hydes giant balls.

அந்த தளத்திற்கு செல்ல சொடுக்கவும் இங்கே
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் நல்லாவே இருக்கும்...யோசிக்க ஒரு படம்...


மரத்தை
நாம் காப்பாற்றினால்...
நம்மை மரங்கள் காப்பாற்றும்...
மரம் வளர்ப்போம் ! மரங்களை காப்போம்...

நட்பெனும் காதல்....


அவளும் அவனும்....

அவளை
நேசித்த போது
அவன்
அவனாகவே இருந்தான்

இப்போது
அவனையும்
நேசிக்கிறேன்

அவள்
சொன்னால்
உன்
நண்பனை
கொஞ்சம்
ஒதுக்கியே
வை
என்று...

--------------------------------------------------------------------------------------

வாழ்க்கை பயணம்...

இரு வழிகள்
தொடரும்
சாலை

ஒன்றில்
அழகாய்
பூத்திருக்கும்
அல்லிப் பூவை
போல்
அவள்

மற்றொன்றில்
எனக்காக
வானத்தை
கூட
தாங்கும்
நண்பன்

எந்த
பாதையை
தெரிவு
செய்ய

அல்லிப் பூ
பூத்த போது
மட்டும் தான்

ஆனால்
அவனோ
உயிர் நீத்தும்
தாங்குவான்
உள்ளங் கையில்

எந்த பாதையை
தெரிவு
செய்ய
என்
வாழ்க்கை
பயணத்தை
தொடர ...


----------------------------------------------------------------------------

நண்பனின் மரணவாயிலில்...

நட்பெனும்
ஆழ்கடலில்
அழகாய்
நீந்திக்
கொண்டிருந்தோம்
இந்த
காலனுக்கு
நான்
இருப்பது
தெரியவில்லையா
அவனை மட்டும் அழைத்து
சென்று விட்டான்...

அறிவியல் வாத்தியார் - 2


வணக்கம்
ஐயா,சௌக்கியமா இருக்கீங்களா !!

ரொம்ப நல்லா இருக்கேண்டா தம்பி,தமிழ் பதிவுலகில் ஏதோ பிரச்சனயாமே

வேணாம் யா,ரவுண்டு கட்டிடுவாங்க,நாம நம்ம வேலைய பாப்போம்

அதுவும் சரி தான் சரி நேத்து ராத்திரி 12 மணிக்கு டவுட்டுன்னு போன் பண்ணினது நீதான

ஆமாம் யா , பல சந்தேகம் இருக்கு

சரி ஒன்னு ஒன்னா கேட்டு தொல

எங்க அம்மா வயித்துல பிறந்த எனக்கும், என் தம்பி ,தங்கச்சிக்கும் இடையே உருவ ஒற்றுமை இருந்தாலும்,குணம் வேறு படுவது ஏன் ஐயா ?

ஒக்காந்து யோசிச்சிருக்க போல

இல்லையா படுத்துக்கிட்டு யோசிச்சேன் (ஹி ஹி ஹி )

சரி கேட்டுக்க

கருவுறுதல் நிகழும் பொது 23 பண்புக்காரணிகள் மட்டுமே சேர வேண்டும்,இது கூடவோ,குறையவோ கூடாது.இதை சரியாக செய்வது மீயாசிஸ் (meiosis) என்ற பிரிவாகும்

ஆணின் முதல் 23 பண்புக்காரணிகளோ அல்லது கடைசி 23 பண்புக்காரணிகளோ சேரலாம்.என்னென்ன குணங்கள் அல்லது எந்த வரிசை என்பதை கண்டுபுடிக்க முடியாது ( ஆனாலும் முடியும் )சூல்முட்டையில் விந்து விழும் போது எந்தெந்த விதமாக பண்புக்காரணிகள் இனைகிறதோ,அதை பொறுத்து தான் குணங்கள் மாறுபடுகின்றன,ஒவ்வொரு முறை கருவுறும் போதும் இப்படித்தான் வெவ்வேறு குணங்களில் குழந்தைகள் பிறக்கின்றன

சில இரட்டை குழந்தைகள் ஓட்டிப் பிறப்பது ஏன்யா ?

கருவான முட்டை சில சமயங்களில் இரண்டாக பிரிய வாய்ப்பிருக்கிறது ,அது தான் ரெட்டை குழந்தை(twins) ,அப்படி பிரியும் போது சரியாக பிரியாமலிருக்கும் போது ஓட்டிப் பிறக்கும் (conjoined twins ),சரியாக பிரியாத முட்டை தனித்தனி குழந்தையாக வளர்கிறது

இந்த தேன் சிட்டுக் குருவி மட்டும் எப்படி காற்றில் நிலையாக நிற்கிறது ?

தேன் சிட்டுக்கள் பறந்து கொண்டே தேனை குடிக்கும் ஆற்றல் பெற்றவை,சிறகுகளை வேகமாக அடிப்பதன் மூலமே இது சாத்தியமாகிறது.ஒரு நிமிடத்திற்க்கு 55 தடவைகள் அடிக்கிறது என்றால் பாருங்களேன்

இவ்வளவு வேகமான அசைவுகளால் நம் கண்களுக்கு சிறகுகள் தெரியாது,வெறும் சத்தம் மட்டும் தான் கேட்கும்


ஐயா,இன்னக்கி காலையில என்ன சாப்பாடு ?

சப்பாத்தி தான் டா

ம் அதுல ஒரு சந்தேகம்

அடப் பாவி கேளு

சப்பாதியில எப்படி இரண்டு அடுக்குகள் உருவாகிறது ?

மாவு உருண்டைய தட்டையாக்கி சூடான இரும்பு தவாவில் சுடும் போது,அடியில் இருக்கும் பகுதி சீக்கிரம் சூடாகிறது.அதனால் நடுவில் உள்ள ஈரப்பசை ஆவியாகி மேல் நோக்கி அழுத்தம் தருவதாலேயே பலூனை போல் உப்புகிறது.


ஆனால் சரியாக மாவு இடப்படவில்லையெனில்,சில இடங்கள் மெலிதாகவும் இருக்கும்,அப்போது முழுவதும் உப்பாமல்,விட்டு விட்டு உப்பியிருக்கும்

கடைசியா ஒன்னு சொல்றேன் கேட்டுக்க

நம்ம மூக்குல வாசனை உணரும் செல்கள் எவ்வளவு இருக்கு தெரியுமா ?

அதையும் நீங்களே சொல்லிடுங்களேன்

வெறும் 50 லட்சம் தான்,ஆனால் நாய்க்கு எவ்வளவு தெரியுமா கிட்டத்தட்ட 22 கோடி செல்கள் இருக்கிறதான்,அதனால தான் போலீஸ்ல பயன்படுத்துறாங்க
தெரியுமா

சரி சரி போதும்,இன்னொரு நாள் பார்போம்,ஆனால் நைட் மட்டும் போன் பன்னாதடா

சரி யா பன்னமாட்டேன்,ரொம்ப நன்றி ஐயா !!

நன்றி,வரேன்

Related Posts with Thumbnails