அவளும் அந்த குட்டிக் கவிதைகளும்

பூவுக்குள்...

தோட்டத்திற்கு
சென்று
நீ
ஒரே ஒரு
பூவை
பறித்து
சூடினாய்
மறு நிமிடமே
மற்ற
பூக்களெல்லாம்
தற்கொலை
செய்து கொண்டன
அடுத்த பிறவி
எடுத்தாவது
உன்னை
அடைவேனென்று

கோலடிக்கிறாய்
..

ஏ பெண்ணே
என் இதயம்
என்ன
கால்ப்பந்து மைதானமா
தினமும்
உன்
டாலடிக்கும்
பார்வையால்
கோலடிக்கிறாய்

கை கொடு...


உன்
அசட்டுக்
கன்னக் குழிகளில்
தடுக்கி விழுந்தவன்
இன்னும்
எழவில்லை
வாழ்க்கைக்கு கூட
வேண்டாம்
எழுவதற்காவது
கை கொடுத்துவிடு
கவிதையே


சிக்கு...


உன் வீட்டு வாசலில்
சிக்குக் கோலங்களை
சிக்காமல்
போடுகிறாய்
சிக்கிக்
கொண்டது
நானல்லவோ

22 Response to "அவளும் அந்த குட்டிக் கவிதைகளும்"

 1. நண்பா கவிதைகள் அருமை..

  dheva says:

  காதல் தம்பி வழியும் அட்டகாசமான கவிதைகள் தம்பி......அருமை!

  சிக்கு கோலங்கள் அருமை

  ஆஹா...

  கவிதையெல்லாம் பாத்தா பயபுள்ள எங்கயோ சிக்கிட்டாப்புல இருக்கே....

  நல்லாருக்கு...

  டி ஆர் சாயல் அடிக்குதே !!

  கவிதைகள் super

  கவிதைகள் super

  //உன் வீட்டு வாசலில்
  சிக்குக் கோலங்களை
  சிக்காமல்
  போடுகிறாய்
  சிக்கிக்
  கொண்டது
  நானல்லவோ//

  புள்ளி வெக்கும் போதே
  விழுந்து விட்டு
  இப்போது புழுங்கி சாவது ஏனோ?

  Riyas says:

  //கவிதையெல்லாம் பாத்தா பயபுள்ள எங்கயோ சிக்கிட்டாப்புல இருக்கே....//

  அப்படிதான் தோனுது..

  நல்லாயிருக்கு எல்லா கவிதைகளும் ஜில்.

  காதல் கவிதை அருவி மாதிரி கொட்டி இருக்கே.. என்ன விஷயம் :)

  அருமை நண்பரே

  உன்
  அசட்டுக்
  கன்னக் குழிகளில்
  தடுக்கி விழுந்தவன்
  இன்னும்
  எழவில்லை
  வாழ்க்கைக்கு கூட
  வேண்டாம்
  எழுவதற்காவது
  கை கொடுத்துவிடு
  கவிதையே//

  நல்லாயிருக்குங்க...

  ம்ம்ம்ம்....
  காதல்னா அப்படி இப்படி இருக்கதான் செய்யும் அதுக்குன்னு...

  கவிதயில கசந்தா .... எப்புடி

  கவிதைகள் அருமை!ஒரு நாற்பது வருஷம் முன் நானும் இப்ப்டி எழுதினவன் தான்!!


  அன்புடன் ஆர்.ஆர்.ஆர்.

  யோகேஷ் - சத்தியமா நல்லா இருக்கு!

  கவிதை ரொம்ப அழ்கா இருக்கு..

  ரெண்டாவது கவிதை அருமை....

  என்ன வேல்ட்டு கப் பாதிப்பா?

  @வெறும்பய

  நன்றி நண்பா

  @dheva

  அட வாங்க தேவா அண்ணா,நன்றி

  @ஷஸ்னி
  வாங்க ஷஸ்னி,ரொம்ப நன்றிங்க

  @அகல்விளக்கு said...

  //ஆஹா...

  கவிதையெல்லாம் பாத்தா பயபுள்ள எங்கயோ சிக்கிட்டாப்புல இருக்கே....//

  தல சிறுத்த சிக்கும் சில்வண்டு சிக்குமா,நன்றி

  மிக்க நன்றி ருத்ர வீணை®

  மிக்க நன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

  மிக்க நன்றி கொல்லான்,வாங்க

  மிக்க நன்றி Riyas

  மிக்க நன்றி பிரசன்னா

  மிக்க நன்றி வழிப்போக்கன்

  //வாழ்க்கைக்கு கூட
  வேண்டாம்
  எழுவதற்காவது
  கை கொடுத்துவிடு//

  வாழ்த்துகள்

  Too good...I really liked it.

  http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html

  Anonymous says:

  //உன் வீட்டு வாசலில்
  சிக்குக் கோலங்களை
  சிக்காமல்
  போடுகிறாய்
  சிக்கிக்
  கொண்டது
  நானல்லவோ//

  சூப்பர் :)

Related Posts with Thumbnails