நான் மறந்த என் முதல் பதிவு

நானும் பதிவெழுதப்போறேன் என்று கிளம்பி கிட்டத்தட்ட ஒரு மூன்று மாதம் ஆகிறது,30 பதிவுகளும் போட்டாச்சி,50 பேர்ன்னை பின்தொடர்கின்றனர்,அப்டி என்னதான் இருக்கிறது இந்த பதிவுலகில்

இப்போது தான் தெரிகிறது இது மிகப் பெரிய உலகம் என்று
எவ்வளவு வியக்கத்தக்க உலகம் திறமைசாலிகளும்,எழுத்தாளர்களும்,சிந்தனையாளர்களும் அற்புதமாக எழுதி வருகின்றனர்.

என் ஒவ்வொரு முயற்சியையும் தட்டிக் கொடுக்க அன்பான நண்பர்கள் கிடைத்தார்கள்,என் தவறை சுட்டிக் காட்டி திருத்தும் அண்ணன்கள் கிடைத்தார்கள்,இங்கு வயது வித்தியாசமின்றி பழகும் பெரியோர்கள் இருக்கின்றனர்.

முக்கியமாக இப்போது நிறைய படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்,என்னையும் நம்பி ஒரு 50 பேர் இருக்கிறார்களே,அதற்காகவாவது சிறந்த பதிவுகளை எழுத வேண்டுமே என்று அக்கறை வந்துள்ளது.

இங்கு திறமை கண்டிப்பாக பாராட்டப்படும்,வெளிக்கொணரப்படும் !!!

என் திறமையை முடிந்த வரை வெளிப்படுத்த முயல்வேன் நண்பர்களே !!!

_________________________________________________

இந்த சின்னப் பையனின் ஒரு சின்ன அறிமுகம்

இவ்வளவு நாளாய் ஜில்தண்ணி என்று அழைத்துக்கொண்டிருந்த நண்பர்களே,என் பெயர் "யோகேஸ்வரன்".வயசு ஒரு 21 ஆகுது,சும்மா ஏதோ கிறுக்கிக் கொண்டிருக்கின்றேன்,எங்க ஊரு குத்தாலம் (குற்றாலம் இல்லீங்க) நாகை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சின்ன ஊர்.

இனி என்னை 'ஜில்லு' யோகேஷ் என்று கூட கூப்பிடலாம்,அப்பறம் நிறைய எழுதனும்னு ஆசையாத்தான் இருக்கு,முடிந்தவரை முயற்சிப்பேன்

இன்னும் என்னை பத்தி ஏதாவது தெரியணும்னா,ஒரு மின்னஞ்சல் அனுப்புங்க இல்ல மின்னரட்டைக்கு வாங்க

மின்னஞ்சல் : jillthanni@gmail.com

குறிப்பு : இதய நோய் உள்ளவர்களும் ,பெண்களும்,சிறுவர்களும் கீழே உள்ள படத்தை பார்ப்பதை தவிர்க்கவும் ,மீறி பார்த்து பயந்து போனால் நான் பொறுப்பல்ல (ஹி ஹி ஹி )

இது தான் நான்


அப்பாடா என்னபத்தி சொல்லிபுட்டேன்,அப்பறம் நீங்கதான் சொல்லணும்

வரட்டுங்களா !!!!

22 Response to "நான் மறந்த என் முதல் பதிவு"

 1. Ananthi says:

  hiiiii yogesh... :-))))

  nice to know about you..!!

  நண்பா இப்பவாவது உன்ன பத்தி சொன்னியே..
  இல்லைனா வெளி உலகத்திற்கு தெரியாமலையே போயிருக்கும்..

  // இதய நோய் உள்ளவர்களும் ,பெண்களும்,சிறுவர்களும் கீழே உள்ள படத்தை பார்ப்பதை தவிர்க்கவும் ////

  நீ சொன்னத கேட்டிருக்கணும்.. உன் போட்டோவ பாத்திட்டு என்னோட பாட்டி புட்டுகிச்சு......

  இனிமே இந்த மாதிரியெல்லாம் பயமுறுத்தாத சரியா...

  Ananthi says:

  ஹாய் யோகேஷ்,
  பதிவுலகில் நீங்கள் தொடர்ந்து கலக்குவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!
  உங்களைப் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி..!! :-))))

  உங்கள் படம் பார்த்து நா பயப்படலியே...!!

  உங்கள் படம் பார்த்து நா பயப்படலியே...!!

  ///

  சகோதரி ஆனந்தி..
  எதற்காகவும் எங்கேயும் நா (நாக்கு) பயப்படாது..
  ஆனா நீங்க பயந்திருப்பீங்க வெளிய சொல்ல கூச்சப்படுறீங்க..

  @@@வெறும்பய--//நண்பா இப்பவாவது உன்ன பத்தி சொன்னியே..
  இல்லைனா வெளி உலகத்திற்கு தெரியாமலையே போயிருக்கும்..//

  ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

  யோகேஷ், மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்

  விஜய்

  வாழ்த்துக்கள் யோகேஷ்...

  என்ன சொன்னாலும் நான் ஜில்லு -ன்னு தான் கூப்பிடுவேன்... :-)

  உங்கள எங்கயோ பாத்த மாதிரியே இருக்கே...???

  still thinking........

  யோகேஷ் - வாழ்த்துக்கள் மேலும் எழுத!

  வாழ்த்துக்கள் ஜில்தண்ணி :). சீக்கிரமே பிரபல பதிவராக பிராப்திரஸ்து!!! :D

  வாழ்த்துக்கள் 'ஜில்லு' யோகேஷ்

  Riyas says:

  ம்ம்ம் இப்பவாவது சொன்னிங்களே..

  ஜில்லு..தொடர்நது எழதங்க

  Ananthi said...உங்கள் படம் பார்த்து நா பயப்படலியே...!!//

  நான் பயந்துட்டேனே .. நல்ல அறிமுகம் யோகேஷ் வாழ்த்துக்கள்

  என்னா ஜில்லு.. இப்படி பொசுக்குனு போட்டு ஒடச்சிட்ட.. இன்னும் கொஞ்ச நாள் தல மறைவா இருந்க்க வேண்டிதான :)

  ஜில்லு... ஜின்னு அடிச்ச மாதியே இருக்கிங்க....

  யோகேஷ் க்கு..... கலக்குங்க (தண்ணிய இல்ல)

  //என்னா ஜில்லு.. இப்படி பொசுக்குனு போட்டு ஒடச்சிட்ட.. இன்னும் கொஞ்ச நாள் தல மறைவா இருந்க்க வேண்டிதான :)//

  ஆமா யோகேஷ் போலீஸ் உன்னை தேடிகிட்டு இருக்கு(சிரிப்பு போலீஸ் இல்லப்பா) பத்திரமா இரு

  wishes!
  :)

  Jey says:

  என்ன ராசா, படத்த பார்த்துட்டு, சினிமாகரங்க கால்சீட்டு கேட்டு தொந்தறவு ஏதும் பன்றாங்களா?.

  //"யோகேஸ்வரன்".வயசு ஒரு 21 ஆகுது,//

  என்னை விட மூணு வயசு அதிகமா தல உங்களுக்கு!

  ஏங்க நீங்கதான் ”வெறும்பய” - கிட்ட என் பேர சொன்ன ஆளா?
  இருங்க உங்கள சுடுதண்னிகிட்ட சொல்லுறன்.

  ///////முக்கியமாக இப்போது நிறைய படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்,என்னையும் நம்பி ஒரு 50 பேர் இருக்கிறார்களே,அதற்காகவாவது சிறந்த பதிவுகளை எழுத வேண்டுமே என்று அக்கறை வந்துள்ளது.
  ////////////


  வாழ்த்துக்கள் நண்பரே உங்களின் எழுத்துக்களில் பல அறிந்துகொள்ளக் கத்திருக்கிறோம் . தொடரட்டும் உங்களின் எழுத்துப்பயணம் .

  உங்களின் புகைப்படம் பற்றி நீங்கள் அறிமுகம் செய்த விதம் மிகவும் ரசிக்க வைக்கிறது .

  //ஏங்க நீங்கதான் ”வெறும்பய” - கிட்ட என் பேர சொன்ன ஆளா?
  இருங்க உங்கள சுடுதண்னிகிட்ட சொல்லுறன்.//

  இந்த வெறும்பய செய்த வேலையா இது

  கோவிச்சுகாதீங்க தல,சும்மா தான்

  அன்பின் ஜில்லு - யோகேஷ்

  வாழ்க வாழ்க ! நல்லதொரு அறிமுகம்

  நல்வாழ்த்துகள் ஜில்லு
  நட்புடன் சீனா

Related Posts with Thumbnails