இரவுக் கவிதையும் இரவல் கவிதையும்

தூக்கம் எதிரியாய் தெரியும் சில இரவுகளில் மனதில் கிறுக்கியவை சில

*** இரவுக் கவிதைகள் ***


அவளெனும் 
வீணையை மீட்டினேன் 
உச்சஸ்தாயியில் 
பிறந்தது 
மௌன ராகம்....

###############################

இலக்கணமில்லா
கவிதையும் தீருமோ 
அந்த 
அழகின் இலக்கணத்திற்கு 
முன்னால்

###############################

அன்று 
வெட்கச் சிணுங்களில் 
ஒளிந்து மறைந்தவள் 
இப்போதும் 
சிணுங்குகிறாள் 
என்னுள் 
ஒளிந்து கொண்டு 
 
###############################
 
அவள்
பார்வையால் 
தீணி போடாததால் 
இப்போது பசியெடுத்து 
கத்த ஆரம்பித்துவிட்டது
கா...கா....காதல்
 
 
 *** இரவல் கவிதை  ***
 
எத்தனை முறை தான் என்னோட கவிதைய படிச்சி அலுத்துப் போயிருப்பீங்க, அதான்  ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னு தோழி மதுர பொண்ணுகிட்ட சில கவித எழுதி கேட்டேன்...அதையும் பாருங்க

அன்பே உன் நினைவலைகள்
கனல் நெருப்பாய் என்னை
கடந்து செல்வதால்
கண்களை மூடினாலும்
அதிலும் நீ மட்டுமே தெரிகிறாய்.
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 
உனக்கான அழகிய கவிதையொன்றை
அலசி கொண்டு இருந்த போது
உனக்கே உரித்தானதாய் ஒரு கவிதை
பறந்து வந்தமர்ந்தது 
அதுவோ
உனக்கான கவிதை இந்த
உலகத்தில் இல்லை என்ற
செய்தியையே கொண்டு வந்து இருந்தது!

இதென்ன கல்வியா ?

முஸ்கி : என்னடா என்னுமா தேடல்,இடைவேளை,சந்தேகம்ன்னு போன பதிவுல கொழப்புனவனாச்சேன்னு பாக்குறீங்களா,இனி  நம்ம  ரவுண்டு தான் 

 பத்தாம் வகுப்புத் தேர்வில் 500 க்கு 400க்கு மேல் எடுத்தவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து பதினொன்றாம் வகுப்புக்கு சேர்த்துக் கொள்கிறது சில பள்ளிகள் அதுவும் மெட்ரிக் பள்ளிகள்,இப்படி நன்றாக படிப்பவர்களை மட்டும் வைத்து பாடம் நடத்தி பரிட்சை எழுத வைத்து பின் பீத்திக் கொள்வது "மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற பள்ளி" என்று

இது பெரிய சாதனை மயிரா,யோவ் பத்தாம் வகுப்பில் 250 எடுத்தவனுக்கு பயிற்சி கொடுத்து பனிரெண்டாம் வகுப்பில்  முன்னேற்றி காட்டு ஒத்துக்குறேன்


அரசு பள்ளிகளிலிருந்துதான் விளையாட்டுத் துறைக்கு அதிக மாணவர்கள் வருகிறார்கள் என்பது சந்தோசத்திற்குரிய விசயம்,ஏன்னா முக்கால்வாசி மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு வாய்க்காத ஒன்றாகிவிட்டதே

விளையாட்டுத்தான் சொல்லித் தரல பாடமாவது ஒழுங்கா சொல்லிக் கொடுக்குறானுவோளா இந்த மெட்ரிக் பள்ளிகளில் என்று பார்த்தால்,அதுவும் கவலைக்குரிய நிலை தான்

நான் படித்த மெட்ரிக் பள்ளி ஒன்றின் நிலைமையை பாருங்களேன்

@@  விளையாட்டுதான் இல்லையென்பதால் மைதானமும் இல்லை

@@  ஆசிரியர்களாக  பணிபுரியும் அத்துனை பேரும் பெண்கள்,ஏன்னா அவங்க தான் கேள்வி கேக்காம கொடுக்குற சம்பளத்த வாங்கிட்டு போயிடுவாங்க

@@   LKG வகுப்புக்கு பாடம் நடத்துபவர் பட்டதாரியாக இருக்க வேண்டாம், பத்தாம் வகுப்புக்கு நடத்துபவர் கூட  பட்டம் பெற்றவராக இல்லையே
 
@@  கல்லூரியில் வேதியல் படித்தவரை இங்கு வரலாறு நடத்த சொல்கிறார்கள்,அவரும் நடத்துகிறார் (வேறு வழி)

@@   ஒரு எழவையும் மாணவர்களுக்கு நடத்தாமல் பொட்ட மனப்பாடம் செய்ய சொல்லி பரிட்சை எழுத வைக்கிறாங்க

@@  விளையாட்டுமில்ல,பாடமும் நடத்த வக்கில்ல  டாய்லட் கூடவா சுத்தம் செய்யாமையா இருக்கனும் கொடுமடா

@@  இவனுக கரெக்டா செய்யுற ஒரே வேலை என்னான்னா மாசம் ஒன்னாந்தேதி ஆனா FEES பணத்த வாங்கிடுறது தான்

@@  ஆயிரம்,ஐநூறுன்னு வேனுக்கு பணம் வாங்குறானுங்க,வேனோட நிலைமையா பாத்தா ரொம்ப கவலைக்கிடம்

@@  ஓட்டும் டிரைவருக்கு லைசன்சு இல்ல

@@  ஒரே ட்ரிப்பில் 60 பேரை ஏத்தி பிஞ்சுக் குழந்தைங்க உசுரெடுக்குறது

@@  இவனுக கெட்ட கேட்டுக்கு டொனேஷனும் எட்டாவது சேர்க்க என்ட்ரன்சு எக்சாமும்  ஒரு கேடு :(

இந்த மாதிரி பள்ளிகளில் படித்துவிட்டு எங்க போய் கிழிக்கிறது,என்னுமோ சமச்சீர் கல்வி வரப்போகுதாமே,அது என்ன கிழிக்கிதுன்னு பாப்போம்

ஒரு சிறிய இடைவேளை தேவை

வாழ்க்கை புத்தகத்தின் தலைப்பை கூட முழுதாய் படிக்கவில்லை
அதற்குள் பல வருடங்கள் ஓடிவிட்டன
பாலைவன வெற்றிடமாய் இருக்கிறது  மூளை
கற்றது கையளவு கூட இல்லை கடுகளவு தான் 

ஒரு மூன்று மாதமாய் குடியிருந்த பதிவுலகத்திற்கும் எனக்கும் இடையில் ஒரு வெற்றிடம் உருவாகியிருக்கிறது,எழுத நினைத்ததை எழுத முடியவில்லை,எங்கெங்கோ அலைகிறது மனசு

ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது இப்படியே இருந்துவிட முடியாது,எதாவது செய்தே தீரணும் 
 
எனக்குள் நிறைய குழப்பங்கள் இருக்கு ??
நான் நானாகவே மாறணும்
நிறைய படிக்கனும்
நிறைய சிந்திக்கனும் சந்திக்கனும்
 
அது வரை பதிவுலகை விட்டு சற்றே விலகி இருக்கிறேன்,இது என் தேடலின் துவக்கம் தான்

மீண்டும் வருவேன்
நானாய்

வெறும்பயலுக்கு பாராட்டு விழா

பதிவுலகில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது

ஒன்றல்ல.............................. பத்தல்ல...................................

நூறு கவிதைகள் ஒரே பதிவில்....யாரால் முடியும்

என் நண்பன் வெறும்பயலால் மட்டுமே முடிந்தது

அவனை பாராட்டி பட்டம் வழங்கத்தான் இந்த பதிவே

வெறும்யலை பாராட்டி ஒரு கவித 

நீ வெறும்பயலல்ல
பெறும்பய (கீழுள்ள போட்டோவை பார்க்கவும்)

ஒன்றும் தெரியாதென்று சொன்னாய்
ஒன்னு ரெண்டு முழுசா தெரிஞ்சிருக்கே

சிங்கப்பூர் கண்டெடுத்த சிங்கமே !!!
சினம் கொள்ளாத சிவனே :(

சிரிப்பு போலீசிடம் கூட
சிக்காத சில்வண்டே



இவரு வெறும்பயலாம் :) நம்புங்க 

அண்ணன் தேவா இப்போது வெறும்பயலுக்கு கவிஞர் வெறும்பாதி என்ற பட்டத்தை அளிப்பார் 



ம்ம்ம் போதும் போதும் ஆட்டுக்கு அருள் இன்னும் அருள் வரலையே....
அடிங்கடா

டண்டனக்குட டணக்குனக்குட டண்டனக்குட டணக்குனக்குட
டண்டனக்குட டணக்குனக்குட டண்டனக்குட டணக்குனக்குட
டண்டனக்குட டணக்குனக்குட டண்டனக்குட டணக்குனக்குட



செல்வா....சௌந்தர்...ஆளாலுக்கு ஒன்னு எடுத்துக்கங்க,ஆடும் ரெடி ...

வெட்டும் போது அடிபட்டுவிட கூடாது நம்ம நண்பனாச்சேன்னு ஹெல்மெட் போட்டு விட்டுறுக்கோம்


மொத வெட்டு நாங்கதான் வெட்டுவோம் (செல்வா/சௌந்தர்/நான்)

அடுத்து உங்க ரவுண்டு தான்....பூந்து வெட்டுங்க
கறி நிறைய தேறும் போல
சிங்கப்பூருக்கே இன்னக்கி செம தீணி தான் வாங்க வெட்டுங்க ஆட்ட :)

கோக்குமாக்கு (19 / 08 / 10 ) - இசை ஸ்பெஷல்

கோக்குமாக்கு என்னடா புதுசா இருக்கேன்னு பாக்குறீங்களா வேற ஒன்னுமில்லங்க கலந்து கட்டுறதுக்குதான்

**********************************************************************


ணம் சுகம்னு ஒரு மியூசிக்கல் நாவல்  வந்துருக்குங்க, அதுல எனக்கு கிடைச்சது அதன் இசை மட்டும் தான், ரணங்களையும் சுகமாக ரசிக்கும் அந்த பாடல்கள் அத்தனையும் எனக்கும் ரொம்ப பிடித்துவிட்டது

இந்த இசை தொகுப்பில் ஒரு பத்து பாடல்கள் இருக்கு, காதலை வைத்து ஒரு மூன்று பாடல்களும், நட்பிற்கு ஒரு மூன்று பாடல்களும் என்று பின்னியெடுத்துருக்காங்க

இசையோடு வரிகளும் சேர்ந்தே போட்டி போடுகிறது

மாற்றம் மாறலாம் 
நாளை மாறியே போகலாம் 
இது மாறினாலும் 
நம் நட்பு மாறிப் போகுமா......

நீங்களும் ஒருக்கா தரவிறக்கி  கேட்டு பாருங்க பிடித்துவிடும்

_______________________________________________________________________________

அப்பரம் இத சொல்லியே ஆகனும் ஜி.வி.பிரகாஷும், தமனும் யுவனை ஓரம் கட்டி வருகிறார்கள், அதுவும் தமன் தாருமாறாக வளர்ந்து வருகிறார்,வெஸ்டர்னில் பூந்து பட்டைய கிளப்புறார்

இப்பலாம் எந்திரன் பாட்டுகளை  தாண்டி தமனின் ஆத்தாடி ஆத்தாடி(அய்யனார்) பாடலையும்,சாட்டர் டே கேர்ளோடு (அரிது அரிது) பாடலையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்னா பாத்துக்குங்க

யுவனுக்கு நிறைய சான்சுகள் கிடைத்தும் அவர் பாடும் பாடல்கள் மட்டுமே ஹிட் ஆகுது,இப்படியே போனால் கண்டிப்பாக யுவன் ஓரத்தில் தான் நிற்பார்
 ________________________________________________________________________________

இசையை பற்றி சொல்லிவிட்டு இசைராஜாவை பற்றி சொல்லாமல் எப்படி,இளையராஜாவின் ரமண மாலை,திருவாசகம்,NOTHNG BUT WIND,HOW TO NAME IT போன்ற இசை தொகுப்புகளை நீங்க கேட்டிருக்கிறீர்களான்னு தெரியல

திருவாசகத்தை ஒரே ஒரு முறை மனதுவிட்டு கேட்டு பாருங்கள் ,உருகி விடுவீங்க,ஆனா ஒரு பொறுமை வேணும் இவைகளை கேட்க

எனக்கு ரமணமாலையின் காரணமின்றி கண்ணீர் வரும் உன் கருனை விழிகள் கண்டால்  பாடலை கேட்காமல் தூக்கமே வராது
_____________________________________________________________________________

துக்குலோண்டு இருந்துகிட்டு எப்புடியெல்லாம் பாட்டு போடுது,யார சொல்றேன்னு புரியலயா JUSTIN BIEBER ன்னு ஒரு பய புள்ள ஆங்கில பாப் பாடல்கள் போடுதுங்க,சமீபத்துல ஜாக்கியும் ஜேடனும் இனைந்து நடித்த தி கராத்தே கிட்  படத்துலையும் ஒரு பாட்டு போட்டிருக்கிறார்,தாரு மாறு போங்க

இந்த ஸ்கூல் பையனுக்கு ட்விட்டர்ல எவ்வளவு ஃபாலோயர்சு தெரியுமா
4,588,126  இது என்ன லட்சமா இல்ல கோடியா :)

______________________________________________________________________________

நான் எந்த வகை பாடலையும் விட்டு வைக்கிறது கிடையாது, ஆமாம் ராப் இசை பாடல்களும் எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று, பாட்ட பாடச் சொன்னா  பேசுறானுங்க என்னா வேகத்துல,ஆனா அதுவும் செமயாத்தானே இருக்கு

ரொம்ப நாளுக்கப்புறம் இன்னக்கு யோகி பி-யின் மடை திறந்து தாவும் நதியலை பாடலை கேட்டேன்,எப்பவும் போல அதே செம ராப்

கவிதை குண்டர் என்ற ராப் இசை  தொகுப்பு ஒன்னு  இருக்கு  ,அடிக்கடி சாயந்தர நேரத்தில் சன் மியூசிக்கில் போடுவானுங்களே BAD BOY I AM A GOOD BOY  அந்த பாடல் இதுல தான் இருக்கு

அப்பரம் இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்னு இருக்கு , மும்பை குயில் நேஹா பாசினின் வசீகர குரலில் உள்ள பாடல் 

தனியே என் பக்கம் வேண்டும் துனையே
இரவு நேரம் விழிகள் உனையே 

ராப் பாடல்கள் என்னன்னு புரியிலன்னாலும் ஒரு பவர் இருக்கு
 ________________________________________________________________________

கொசுறுக்கு :

சிக்கு புக்குனு ஒரு படம் பாடல் ரிலீசு ஆயிருக்கு, யாரோ COUSINS சாமே அவுக உபயம் தானாம் , புதுசா இருக்கே கேக்கலாமுன்னு தரவிறக்கினேன் , கேட்ட பிறகு தான் தெரிஞ்சிச்சி

"இவனுக பாட்டு போடலன்னு யார் அழுதா"
உபயம் : குத்தாலத்தான்


அப்டியே இன்னொன்னும் சொல்லிக்கிறேன் இப்ப என்னய இந்த ஜில்தண்ணிய நம்பி 100 ஃபாலோயர்சு வந்துட்டாங்க,ட்ரீட்லாம் கேக்க பிடாது..........ஆமாம்

உமா சங்கருக்காக அரசுக்கு ஒரு கண்டனம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:



இந்திய ஆட்சிப்பணியில் சேர்வதற்காக செ.உமாசங்கர், தனது இருப்பிடம், மதம் ஆகியவற்றை மாற்றி ஆதி திராவிட இனத்தைச் சார்ந்தவர் என்று தவறான சாதிச் சான்றிதழ் பெற்றுள்ளார் என்ற புகார்களின் அடிப்படையிலும், அவர் படித்த பள்ளி, கல்லூரி, தேர்வு இயக்ககம் மற்றும் தொடர்புடைய அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், அனைத்திந்திய ஆட்சிப் பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1969-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் இவர் தொடர்ந்து பணியில் நீடிப்பது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்பதாலும், இதுதொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை மற்றும் உரிய அமைப்பின் மூலம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாலும் உமா சங்கர், அரசால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். 

என் கண்டனங்கள் 
உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை.  புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம்  தெரிவித்துக் கொள்கிறேன்.
உமா சங்கர் அவர்களை ஆதரிக்கும் பதிவுகள் 


நான் பள்ளிக்கூடம் போறேனே

புட்டிப்  பால் குடிப்பதை கூட அப்போது நிறுத்தல அதற்குள் பள்ளிக்கூடத்துல சேத்துட்டாங்க, எங்க வீட்டுக்கு எதிர்புறமே ஒரு கான்வென்ட் வேறு இருந்ததால் வசதியா போச்சு டபாருன்னு அட்மிஷன் போட்டாச்சு

நோட்டு,புத்தகங்கள்,குச்சி டப்பா,பேக் எல்லாம் வாங்கிட்டு வந்தாங்க அப்பா,பள்ளிக் கூடம் திறப்பதற்கு மூணு நாளுக்கு முன்னாடிலேர்ந்தே எல்லாத்தையும் அடுக்கி வச்சி புது  பேக்க மாட்டிகிட்டுதான் நின்னுகிட்டு இருப்பேன்(பேக்கு பேக்க மாட்டிகிட்டு நின்னுச்சு )

ஸ்கூல் திறக்குற நாளும் வந்துச்சி,காலையிலேயே குளிப்பாட்டி (அப்பலாம் கரெக்டா குளிச்சருவேன் தெரியுமா ),எண்ணெய் வச்சி முடிய  நல்லா படிய சீவி, யூனிஃபார்மு,டை எல்லாம் ஜோரா ரெடி பண்ணிட்டாங்க  அம்மா

நான் மொத முறையா பள்ளிக்கூடம் போறதப் பார்க்க ஒரு ஊரே வந்துட்டுனா பாத்துக்குங்க(எங்க சொந்தக்காரங்களதான் சொன்னன் ) , நானும் சிரிச்சிகிட்டே கிளம்பிட்டேன் , ஸ்கூல்ல விட்டுட்டு எங்க சித்தப்பாவும்,அப்பாவும் வீட்டுக்கு வந்துட்டாங்க

அதுவரைக்கும் ஒன்னும் தெரியல ஸ்கூல்குள்ள போனா எல்லா பயபுள்ளைகளும் அழுதுகிட்டு இருக்கு, அப்பரம் நான் மட்டும் சும்மாவா இருப்பேன் ( நாங்க சிங்கமுல்ல) ,அழுது அழுது புது டையிலேயே மூக்க தொடச்சிப்பேன்


மதியம் சாப்பாடு ஊட்ட அம்மா அழைத்து போக வந்தாங்க,ஜாலியா சிரிச்சிகிட்டே வீட்டுக்கு வந்தேன்,டை பூறா மூக்கு சலிய பாத்து அம்மா கேட்டாங்க அழுதியா கண்ணு :) திரும்பவும் மூக்க தொடச்சிகிட்டு ம்ம்ம் திரும்ப அழுக

அழக்கூடாது நல்ல புள்ளல, அம்மா மம்மு எடுத்துட்டு வரேன்னு அடுப்படிக்கு போனாங்க, என்னடா  மம்மு கொடுத்துட்டு திரும்ப ஸ்கூல்ல  கொண்டு போய் விட்டுடுவாங்களான்னு யோசிச்சேன்,ஐடியா வந்துச்சி : )

வீட்ல பாட்டி தூங்கிகிட்டு இருந்தாங்க,அவுங்க பக்கத்துலயே நானுன் படுத்து தூங்குற மாதிரி கொஞ்ச நேரம் தூங்குற மாதிரி நடிச்சேன் அப்பறம் உண்மையாவே தூங்கிட்டேன் (என்ன வில்லத்தனம்)

அம்மா எழுப்பி பாத்துட்டு பாவம் சின்ன புள்ள தூங்கிடுச்சேன்னு எழுப்பாம விட்டுடாங்க,அன்னக்கி பொழுத ஓட்டியாச்சு :)

மறுநாள் வீட்ல கிளம்பும் போதே அழுகாச்சி தான்,ரகலை தான்(காலையில யாரும் தூங்கலயே ),இன்னக்கி மட்டும் ஸ்கூலுக்கு  போகலன்னு ஒரே  அடம் தான்,அதுக்குள்ள எங்க ஸ்கூல் வாத்தியார போய் கூப்டு வந்துட்டாங்க அப்பா

என்ன அழுக இப்ப வரியா இல்லாயான்னு அவரு அதட்டினாரு பாருங்க,இருந்த அழுக எங்க போனுச்சுனே தெரியல,அப்ப எனக்கு வாத்தியார்னா ஒரு பயம் அடிப்பாருன்னு வீட்ல சொல்லி சொல்லி  பயமுறுத்தி வச்சிருந்தாங்க  ( இப்ப அந்த வாத்தியார பாத்தா காமெடியா தெரியது)

அவர் என்ன குண்டுகட்டா தூக்கி அவர் தோல் மேல வச்சிகிட்டு ஸ்கூலுக்கு போயிட்டார் , நானும் பயத்துல அழவே இல்லனா பாத்துக்குங்க :)

அதுலேர்ந்து அழுகைய கொறச்சிகிட்டேன் :) நல்ல புள்ளையா ஸ்கூல் போனேன்(இப்ப வரைக்கும் முதல் வருடம்  காலேஜ் போகக் கூட அழலன்னா பாத்துக்குங்க)

என்னுகிட்டேந்து பலப்ப குச்சை ஒருத்தன் புடிங்கிட்டான்,அவன என்ன செஞ்சேன்னு இன்னொருவாட்டி சொல்றேன்,ரைட்டா :)

பதிவுலகில் ஜொள்ளும் ஜில்லும்

ஊரே நான் எப்படிப்பட்டவன் !!!  நான் எப்படிப்பட்டவன்னு கேள்வி கேட்டுகிட்டு அலையுது, இப்ப என்னையும் கேக்க வச்சிட்டாரு நம்ம நண்பன் வெறும்பய
சரி அதையும் பாத்துடலாம் வாங்க

முதலில் இந்த தொடர் பதிவை என்னை எழுத அழைத்த வெறும்பயலுக்கு கட்டிச் சட்னியுடன் செட் தோசை பார்சல்

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

முதலில் வெறும் ஜில்தண்ணி என்று தான் வைத்திருந்தேன்,அப்பரம் என்னுமோ தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா மாதிரி நானே என் பெயருடன் ஜில்தண்ணி - யோகேஷ் என்று போட்டுக் கொண்டேன்

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
 
என் உண்மையான முழு பெயர் யோகேஷ்வரன் 


ஜில்தண்ணினு வைக்க காரணம் சுடுதண்ணி அவர்களின் பதிவுகளின் மேல் உள்ள ஈர்ப்பு தான் காரணம்,பதிவுலகில் நிறைய பேர் என்னை  ஜில்லு என்றுதான் கூப்பிடுவார்கள்.


3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

இந்த பதிவுகள் அப்டின்னு ஒன்னு இருக்குறதே சுடுதண்ணி அவர்களின் பதிவை படித்த பின்பு தான் தெரியவந்தது,அவர் பதிவுகளில் வரும் பின்னூட்டத்தில் மூலம் நிறைய நண்பரக்ளின் பதிவை படிக்க ஆரம்பித்தேன்,படிக்க படிக்க எனக்கும் ஆசை வந்துவிட்டது எழுத 


4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எல்லாமே செய்திருக்கிறேன்


பின்னூட்டத்தில்,chat ல்,ஆர்குட்டில்,ட்விட்டரில் இப்படி எல்லாவற்றிலும் என்னை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று என்  பதிவுகளை போட்டிருக்கிறேன்

நான் நாலு பேர படிக்க ஆரம்பித்தேன் என்னை நாலு பேர் படிக்க ஆரம்பித்தார்கள்,அப்படியே நட்பு வட்டம் விரிந்தது


வலைச்சரத்திற்கும் இதில் பங்கிருக்கிறது
சை.கொ.ப,சேட்டைகாரன்,கே.ஆர்.பி அண்ணே,நீச்சல்காரன்,புலவன் புலிகேசி ஆகியோரால நானும் என் பதிவும் அறிமுகப்படுத்தப்பட்டோம்,அதன் மூலமும் நண்பர்கள் என் பதிவிற்கு வந்தார்கள்  

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அவ்வப்போது  இங்கு பகிர்ந்துகொண்டுள்ளேன்,இனியும் பகிர்வேன்
விளைவு என்னை  என் மனநிலையை மற்றவர்கள் ஓரளவுக்கு இதனால் புரிந்து கொண்டார்கள் என்று நினைக்கிறேன்


6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ம்ம்ம் முழு நேர பொழுதுபோக்காகத்தான்  ஆரம்பித்தது எனக்கு நிறைய சம்பாதித்து கொடுத்தது நண்பர்களை தான் 

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு பதிவுகளும்  தமிழில் தான் இருக்கிறது
ஒன்று இந்த ஜில்தண்ணி

இன்னொன்று நண்பன் குத்தாலத்தானுடன் இனைந்து குத்தாலத்தான்ஸ்  என்ற பதிவும் தொடங்கியிருக்கிறோம்



8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

யார் மீதும் கோபம் வந்ததில்லை,நிறைய பதிவர்களை பார்த்து டன் கணக்கில் பொறமை பட்டிருக்கிறேன்

அவர்களில் வால் பையன், பனித்துளி சங்கர் அண்ணே,சகோதரர்  தேவா , அண்ணன் பட்டறை ஷங்கர்,ஹாலிவுட் பாலாண்ணே ,சைவ கொத்து பரோட்டா, வெறும்பய,பிரசன்னா இப்டி இன்னும் பெரிய லிஸ்டே இருக்கு ,இவர்களை படித்து படித்து பொறாமை படாத நாட்களே இல்லை

ஏன் பொறாமை என்றால், எப்டித்தான் இப்டி எழுதுறாங்க,அவங்களுக்கும் மனித மூளை தானே இருக்கும்,பின்ன எப்படி என்று யோசித்து யோசித்து பொறாமை பட்டிருக்கிறேன் 

 9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல் பதிவிலேயே பின்னூட்டமிட்டு பாராட்டியவர் அண்ணன் LK அவர்களும் சகோ ஆனந்தியும.
அதன் பிறகு நிறைய பாரட்டுக்கள்  மீண்டும் மீண்டும் எழுத எனக்கு உத்வேகமாக இருந்தது

என் அலைபேசி எண்ணை விடாப்படியாக  வாங்கி  என்னிடம் பேசி பாராட்டியும் என்னை மெருகூட்ட ஐடியாக்களையும் தந்தவர் பனித்துளி சங்கர் அண்ணன் அவர்கள்

அப்பறம் chatting-ல சகோதரர் தேவாவும்,சிரிப்பு போலீசு ரமேஷ் அண்ணனும் வந்து பாராட்டியது எனக்கு மிகப் பெரும் உத்வேகமளித்தது எதாவது உருப்படியாக எழுத

இப்போதும்   ரசிகன்-மகேஷ்,பிரசன்னா,வெறும்பய,கோமாளி  போன்ற நட்புகளின் அன்பால்  நான் இங்கு இருக்கிறேன் ,இருக்க முடிந்தது

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

கண்டிப்பா என்ன பத்தி இன்னும் நிறைய  சொல்ல வேண்டியிருக்கு 

முடிவா சொல்லிக்கிறேன் பதிவுலகில் நான்  ஒரு

லொள்ளு - ஜொல்லு - தில்லு - ஜில்லு 

இன்னும் நிறைய பேரை சொறிந்துவிட வேண்டும், இதை தொடர அழைப்பவர்கள்

மகேஷ் - ரசிகன்
கொத்துபரோட்டா  பிரசன்னா
இந்திராவின் கிறுக்கல்கள்
நான் வாழும் உலகம் - ரியாஸ்

எழுதுங்க !!!! தெரிஞ்சிக்கிறோம்

தோழி(கள்) தேவை

தோழியை அப்டேட்டாக வைத்திருக்கும் அண்ணன் கார்க்கி இப்போது மணமகளை தீவிரமாக தேட ஆரம்பித்திருக்கிறார்,இனி அவர் தோழியை அவ்வளவாக எதிர்பார்க்க முடியாது என்பதால்,நான் அந்த பணியை சிரம் மேற்கொண்டு தொடரலாம்னு நினைக்கிறேன்(நீங்க என்ன சொல்றீங்க)

சாப்டியா டா,குளிச்சியா டா,படிச்சியா டா,என்ன படம் பாக்குற?, டேய் தூங்கு மூஞ்சி ! ,இப்டில்லாம் குறுஞ்செய்தியில் நண்பர்களின் தோழிகள் அனுப்புறதும்,போன் பண்ணி ஜாலியா கலாய்ப்பதும் பார்த்தா,எனக்கு ஒரே  
stomach fire ஆயிடுது (எனக்கு மட்டும் ஆசையா இருக்காதா பின்ன)

எவ்வளவு நாள் தான் நாமளும் இருக்குற மாதிரியே சீன் போடுறது (அப்ப ஒரு கேர்ள் ஃப்ரெண்டும் இல்லயா)

அதனால் சரி நாமளும் ஒரு தோழிய கண்டுபிடிக்கலாமுன்னு ட்விட்டர்,ஆர்குட்,ஹை 5  ன்னு போகாத இடம் கிடையாது ,கும்பிடாத பெண் தெய்வங்கள் கிடையாது

ஆர்குட்ல கிடச்ச ரெண்டு தோழிகள்ட ஆர்வக் கோளாருல ஆன்லைனில் chat செய்தேன்,விளைவு ஆன்லைனிலேயே செருப்பு வந்ததுதாங்க மிச்சம்(ஒன்ணே ஒன்னு தான் வந்தது)

அதனால் இப்ப கேக்குறது என்னன்னா ஒரே ஒரு நல்ல தோழி ( நாளைந்து பேர் மட்டும் கிடைத்தாலும் பரவாயில்ல),அதுக்கு இந்த பயடேட்டா


பெயர்                    :          யோகேஷ்வரன்

(தோழிக்கு    பெயரே    இல்லனாலும்   பரவாயில்ல  அம்மு,பம்முனு  எதாவது     வச்சி கூப்டுக்குறேன்)

வயசு                     :          வாலிப வயசு 20
                                            (தோழிக்கு 18 to_ _ இருந்தா தேவலாம்)

தொழில்               :         இன்னும் படித்தே முடிக்கல 
                                            (தோழியும் அப்டியே )

பாலினம்             :         ஆண் 
                                           (தோழி கண்டிப்பா பொண்ணாதான் இருக்கனும் : ) )

ஊர்                        :          தமிழ்நாடு 
                                          (தோழி யூ.எஸ் -ல இருந்தாலும் பரவாயில்ல)

குணம்                  :          ஊருக்குள் நல்லவன் மனதில் _ _ _வன் 
                                           ( தோழி வில்லியாக கூட இருக்கலாம்)

உயரம்                 :         ஷூ போடாமலே 6 அடி ஆம்பள
                                          ( தோழிக்கு ஹீல்சு அலவன்சு உண்டு) 

பொழுதுபோக்கு  :   பந்து பொறுக்கி போடுறது(கிரிக்கெட்டாமே),புத்தகத்தில்
                                        ஸ்டில் பார்ப்பது

(தோழிக்கு பொழுதுபோக்குன்னு ஒன்னுமே இல்லனாலும் பரவாயில்ல அதுக்குதான் நான் இருக்கேனே)

நல்ல பழக்கம்    :       அப்பாவி போல ஊர்ல மூஞ்ச வச்சிக்கிறது 
                                          (தோழிக்கு சீக்ரட் சொல்லித் தரப்படும்)

கெட்ட பழக்கம்  :       மொக்கை போடுவது 
                                          (தோழியிடம் இது இருக்க கூடாது)

நம்புவது               :        இதுவரை என் கண்'னை மட்டும் 
                                          (வா தோழி உன்னை )
நம்பாதது             :         என்னையும் சேர்த்து 
                                          (தோழி(கள்)யை மட்டும் நம்பலாம்னு இருக்கேன்)

பிடித்த இடம்     :         கோவில் (அங்காவது எதாவது??? கிடைக்குமான்னுதான்)

சமீபத்திய சாதனை :  முழுசா அரை மணி நேரம் சுழிய ஒரே இடத்தில் அமர  
                                              வைத்திருப்பது(இங்க பதிவுல தான்) 

நீண்ட கால சாதனை : என் முகத்தை கண்ணாடியில் பார்ப்பது : ( 
                                              ( தோழி(கள்) பயப்பட வேண்டாம்  Fair and Handsome
                                                வாங்கி பயன்படுத்துறேன் இன்றிலிருந்து)

உறுதிமொழி :

கிடைக்கும் தோழி(கள்)யிடம் என் பதிவை படிக்க சொல்லி கொடும படுத்த  மாட்டேன் என்று இந்த பதிவின் மூலம் உறுதியளிக்கிறேன்


டிஸ்கி : 1 :  இது காமெடிக்கு அல்ல,மெய்யாலுமே எனக்கு தோழி(கள்) வேனுங்க

டிஸ்கி : 2 : ஆர்வமுள்ள  தோழி(கள்) இங்கோ,என் மின்னஞ்சலிலோ, ட்விட்டரிலோ, தெரிவிக்கவும்(வெக்கமா இருந்தா  சொல்லுங்க நாம போன்ல பேசிக்கலாம்)   

டிஸ்கி : 3 :  ஏமி ஜாக்சன் இங்கு வந்து தன்னை தோழியாக ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சினாலும் கதறினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்(அவள வேற லிஸ்ட்ல வச்சிருக்கேன்)

டிஸ்கி : 4 :  பதிவுலக நண்பர்களே உங்களுக்கு தெரிந்த எதாவது நல்ல,கெட்ட பொன்னுங்க இருந்தாலும் சொல்லி உதவி பண்ணுங்க : )

குறிப்பு : இதன் மூலம் ஒரு தோழியாவது கிடைத்தால் பின்னூட்ட குலசாமிக்கு கோழி அறுத்து படைக்கிறேன்


















மன்னாதி மன்னன் - ஹர்சவர்த்தனர்

வரலாற்றை படிப்பதனால் அப்படி என்ன தெரிந்து விடப் போகிறது,எல்லாம் முடிந்து போன விஷயம் தானே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்,இந்த பதிவை எழுத நிறைய மன்னர்களை பற்றி புத்தகங்களை தேடி படிக்க ஆரம்பித்தேன்,அதில் இந்த மன்னனை மட்டும் தெரிந்து கொள்ளவில்லை,அந்த காலத்தில் இருந்த சமயங்கள்,பண்பாடுகள் பற்றி அறிய இந்த பதிவு எனக்கு உதவியது

இந்த அருமையான பதிவை என்னை எழுத வைத்த,தொடர் பதிவிற்கு அழைத்த நண்பன் ரசிகன்:மகேஷ் க்கு நன்றிகள் பல


ரசிகன் : மகேஷ் அவர்களின் மன்னாதி மன்னன் - சந்திரகுப்த மௌரியர் பதிவு
_____________________________________________________________________________

கி.பி ஏழாம் நூற்றாண்டில் அரசியல் மேடை ஏறியவரும் கடைகி மிகப்பெரும் புத்த மத மன்னருமான ஹர்சவர்த்தனர் வரலாற்றுப் புகழ் பெற்ற மன்னராவார்.

முடிசூட்டல்

கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நரவர்த்தனர் என்பவரால் இந்த வம்சம் நிறுவப்பட்டது, அவரை தொடர்ந்து ஆதித்யவர்த்தனரும்,பிரபாகவர்த்தனரும் ஆட்சி செய்தனர்,பிரபாகவர்த்தனரின் மறைவுக்கு பின்னர் இராஜ்ய வர்த்தனர் அரியனை ஏறினார்

ஹீனர்களை (ஊனர்கள்) அடக்கி தானேசுவரத்தை கைபற்றினார்,அதே சமயம் மாளவ மன்னன் தேவகுப்தன் ஹர்சரின் சகோதரி ராஜ்ஸ்ரீயின் கணவரை கொன்றுவிட்டு ராஜ்யஸ்ரீயையும் தன்னோடு அழைத்துச் சென்று சிறை வைத்தான்

அதை அறிந்த ராஜ்யவர்த்தனர் தேவகுப்தன் மீது போர் தொடுத்து வெற்றியும் பெற்றான்,ஆனால் அதன் பின் சில சூழ்ச்சியால் சசாங்க மன்னனால் கொல்லப்பட்டான்

அப்போது ஹர்சருக்கு வயது பதினாரே நிரம்பிய நிலையில் ஹர்சவர்த்தனராக முடிசூட்டிக் கொண்டார்,ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சசாங்கனை பழிவாங்கி தன் சகோதரி ராஜ்யஸ்ரீயையும் மீட்டான்


ஆட்சி முறை

அதுவரை தானேசுவரத்தை தலைநகராக கொண்டு தான் அனைவரும் ஆட்சி செய்து வந்தனர்,ஆனால் ஹர்சர் கன்னோசியையும் அதனுடன் இனைத்து மாபெறும் சாம்ராச்சியத்தை உருவாக்களானான்.


மிகப்பெரிய பேரரசு பரந்து விரிந்திருந்ததனால்,ஆட்சி செய்ய கடினமாய் இருந்தது,அதனால் சிற்றரசர்களை அச்சுருத்தவும்,உள்நாட்டுக் குழப்பங்களை தீர்க்கவும் ஒரு மிகப் பெரிய படையை 60,000 யானைகளையும், 1,00,000 குதிரைகளையும் வாங்கி உருவாக்கலானான் என்று குறிப்புகளில் உள்ளது

படைபலம் மட்டுமன்றி  நட்பையும் பெருக்கலானார்,அசாம் நாட்டு மன்னன் பாஸ்கர வர்மனிடம் தீவிர நட்பு பாராட்டலானார்.

அது மட்டுமன்றி அண்டை தேசங்களுடன் நட்பு பாராட்டி வானிபத்தை பெருக்க முயன்றார்,அதற்கு சீன தேசத்திற்கு தன் தூதுவரை அனுப்பி நட்பு பாராட்டினார் ஹர்சர்

மாநிலங்கள் புக்திகள் என்று அழைக்கப்பட்டன,புக்திகள் விஷயம் அல்லது மாவட்டங்களாக பிரித்து நிர்வாகம் செய்தான்

ஹர்சரின் சமயம்

தொடக்கத்தில் தீவிர சிவபக்தராக இருந்தவர் ஹர்சர் என்றும்,யுவான் சுவாங் தெரிவித்த புத்த மத கொள்கைகளாலும்,சகோதரி ராஜ்யஸ்ரீ யாலும் இவர் புத்த மதத்தை தழுவலானார்

புத்த சமயத்தை இவர் தழுவினாரே அன்றி ஏனைய சமய மக்களையும் கனிவோடு கவனித்தார்,கட்டாய மதமாற்றம் போன்றவைகளை வெறுத்தார்

தலைநகர் கன்னோசி

வடஇந்தியாவின் முக்கிய நகரமாகி புத்தர் காலத்து பாடலிபுத்திரத்தின் இடத்தை பிடித்தது ஹர்சரின் தலைநகர் கன்னோசி, 10,000 க்கும்  மேற்பட்ட இரு புத்த சமய துறவிகள் இங்கு வாழ்ந்து வந்தனர்

பிற மத கோவில்களும் இருநூற்றுக்கும் மேல் இருந்ததாகவும் தெரிகிறது, நன்கு  திட்டமிடப்பட்ட வீதிகளும்,பூங்காக்களும்,புத்த மடங்களும் கன்னோசியை அலங்கரித்தது

யுவான் சுவாங்கும் நாலந்தா பல்கலைகழகமும்

ஹர்சர் சீனாவடன்   நெருங்கிய நட்பு பூண்டமையால்,சீன நாட்டு யுவான் சுவாங்கை வரவேற்று உபசரித்தார்,யுவானுக்கு ஹர்சரின் ஆட்சி முறையும் போர் திறமையும் மிகவும் பிடித்து விட்டது



ஹர்சரின் காலத்தில் மிகப்பெரும் தொகை மானியமாக நாலந்தா பல்கலைக்கு வழங்கப்பட்டு வந்தது

பல்கலையின் உயர்ந்த கட்டிடங்கள்,போதனா முறைகள் ஆகியன புத்த சமயத்திற்கே உரித்தான புகழாகும்

ஹர்சர் காலத்து இலக்கியம்

ஹர்ச சரிதத்தையும் காதம்பரி போன்ற அற்புத நூல்களை படைத்த பாணபட்டர் ஹர்சரின் நெருங்கிய நண்பர் ஆதலால் இவரின் இலக்கிய ஆர்வம் இதிலிருந்தே தெரிகிறது

மேலும் ஹர்சரே ஒரு சிறந்த நாடகாசிறியர் ஆவார்,நாகானந்தம்,பிரியதர்ஷிகா,இரத்தினாவலி ஆகியன இவரே எழுதிய நாடகங்கள்

மறைவும் பேரரசின் சிதைவும்

நாற்பாதாண்டு காலம் மிகப் பெரிய சாம்ராச்சியத்தை நடத்திய ஹர்சவர்த்தனர் கி.பி 647 வாக்கில் மறைந்தார் என தெரிகிறது

ஹார்சரின் மறைவுக்கு பிறகு அவருக்கு கீழிருந்த சிற்றரசர்கள் தங்கள் எல்லைகளை பெருக்கி கொண்டனர்,அசாம் மன்னன் பாஸ்கர வர்மனும் நகரங்களை பிடித்துக் கொண்டான்,இதனால் மிகப்பெரிய சாம்ராச்சியம் முடிவுக்கு வந்தது

குறிப்புகள் :

ஹர்சரை பற்றிய குறிப்புகள் பாணரின் ஹர்சசரிதத்திலும்,யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளான சியூக்கியிலும் கிடைக்கப் பெற்றவை

விக்கிபீடியா கலைக்கலஞ்சியத்தில் இவரை பற்றி ஆங்கிலத்தில் அதிக தகவல்கள் உள்ளன,தமிழில் மிகக் குறைவே

தொடர் பதிவு :
 
விக்கிபீடியாவில் இவர் போன்ற மன்னர்களை பற்றிய தகவல்கள் தமிழில் மிகக் குறைவாகவே உள்ளது,விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகளை அதிகம் வலையேற்றும் சிறு முயற்சியாக இந்தப் பதிவைத் தொடர்பதிவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். ஆகவே, விருப்பமிருக்கும் அனைவரும் "மன்னாதி மன்னன்" என்றத் தலைப்பில் தொடரலாம். பின்வரும் விதிகளை மட்டும் கவனத்தில் கொள்க!

1) வரலாற்றில் முக்கியமான எந்த மன்னரைப் பற்றியும் கட்டுரை இருக்கலாம்,ராணிகளையும் இதில் எழுதலாம்

2) விக்கியில் தமிழில் அதிகம் தகவல் இல்லாத மன்னராக இருக்க வேண்டும்.

3) கட்டுரையை முடித்ததும் விக்கியில் வலையேற்றவும்.
 
இதை தொடர அழைக்கிறேன்

இவர்கள் மட்டுமல்ல ஆர்வமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் தொடரலாம் !!! மன்னாதி மன்னனை



50 பதிவுகள் ???

முதலில் என்னை வளர்த்த அனைத்து பதிவுலக நண்பர்களையும்,அண்ணன்களையும்,அக்காக்களையும் என் சிரம் தாழ்த்தி        வ   ண   ங்  கு  கி  றே  ன்  

இது ஐம்பதாவது பதிவு எழுதிவிட்டேன் என்று சொல்வதற்கான பதிவல்ல, ஐம்பதில் என்ன கிழித்திருக்கிறேன் என்று என்னுள் நானே பார்க்கும் ஒரு மீள் பார்வை தான்

எப்பவாச்சும் சும்மா இருக்கும் போது கவித எழுத தோணும்,அப்டி எழுதிய  கவிதைகளை மத்தவங்களுக்கு காட்டலாம்னு பதிவெழுத ஆரம்பித்தேன்

நான் கணிப்பொறி மாணவன் என்பதாலோ சுடுதண்ணி அவர்களின் பதிவுகள் எனக்கு ரொம்ப யோசிக்க வைத்துவிட்டது,அதன் விளைவு இந்த ஜில்தண்ணி

இதுவரை என்ன பதிவெழுதி கிழிச்சிருக்கேன்

எழுத ஆரம்பித்த போது புத்தகங்களில் காப்பி அடித்தவைகளை  வைத்து தோணுவதை எழுதுவேன்,அதன் பிறகு சில ஃபார்வட் மெயில்களை பதிவிட்டேன்

இவை தந்த ஊக்கத்தில் அடுத்த கட்டத்திற்கு முயற்சி செய்தேன்,அவை கவிதைகளாக வந்தது,கவிதைளை எழுதி பாராட்டு பெறும் போது,அதற்கு ஈடு இனை எதுவுமில்லை,அப்படியொரு திருப்தி கிடைத்தது

அதன் பிறகு அறிவியல் வாத்தியார் போன்ற அறிவியலை எளிதாக சொல்லும் முயற்சிகளை எடுத்தேன்,அது எனக்கு மாபெரும் வெற்றியாக தெரிந்தது,ஆனால் அதையும் என்னால் இன்று தொடர்ந்து எழுத இயலவில்லை

கவிதையை தவிர்த்து என் எண்ணங்களை அப்படியே பதிவாக அமைந்த முதல் பதிவு உலகம் எப்போது அழியும் என்ற பதிவுதான்
 
அதன் பிறகு கடவுள் என்னைபொருத்தவரை என்னவென்று எழுதிய பதிவு கடவுள் என் மட்டில் ,அது எனக்குள் நிறைய எண்ணங்களை விதைத்தது,இதுவரை எழுதியதிலேயே சிறந்த பதிவாக நான் கருதுவது இந்த பதிவைதான்,ஏனென்றால் என் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்தது,அதன் விளைவு அடுத்தது என்னவென்ற தேடல் தொடங்கியது

ஆம் நிறைய சந்தேகங்கள் வர ஆரம்பித்திருக்கிறது,என்னை சுற்றி இருக்கும் சமூகத்தை பற்றியும் சரி,கடவுள்,மூடநம்பிக்கை,பரிணாமம்,மதம்,மனிதம் பற்றிய   நிறைய சந்தேகங்கள் வந்துகொண்டே இருக்கிறது

அதன் விளைவு என்னையே நான் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளேன்,இனி அதற்கு பதில் தேட வேண்டும்

இனி என் பதிவு எப்படி இருக்கும் ????

என் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளும் பதிவுகள் வரும்,அப்பறம் கவிதைகள்,வித்யாசமான என் சிந்தனைகள்,நான் ரசித்தவைகள் என்று தொடர்ந்து என் பயணத்தை தொடரலாம் என்று நினைக்கிறேன்

ஆனால் இந்த அளவுக்கு எழுதியதற்கு காரணம் நீங்கள் தான்,உங்கள் உண்மையான அன்பினால் வரும் ஒவ்வொரு பின்னூட்டமும் என்னை மீண்டும் மீண்டும் எதையாவது தேடத் தூண்டுபவையாக இருக்கும்

இதுவரை ஒன்னும் பெரியதாக எழுதிவிடவில்லை,ஆனால் இனி தேடுவதற்கு  நிறைய இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது

நிறைய படிக்க ஆரம்பித்திருக்கிறேன் புத்தகங்களும் சரி,பதிவுகளும் சரி.

அப்பறம் நிறைய சொந்தங்கள் கிடைத்திருக்கிறது மாப்பி என்று கூப்பிடும் நட்புகளும்,தம்பி என்று கூப்பிடும் அண்ணண்களும்,அக்காக்களும் கிடைத்திருக்கின்றன,இதுவே எனக்கு மிகப் பெரிய வரப் பிரசாதமாக நினைக்கிறேன்


அனைத்து சொந்தங்களுக்கும் ஒரு வேண்டுகோள்,நான் இதுவரை எழுதிய பதிவுகளை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பின்னூட்டத்தில் மறக்காமல் பதியுங்கள்,ஏனென்றால் என்னை அடுத்த முயற்சிக்கு தூண்டுபவையாக அவை இருக்கும்  ,ஒரு FEED BACK ஆக இருக்கும்  

மீண்டும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

Related Posts with Thumbnails