உமா சங்கருக்காக அரசுக்கு ஒரு கண்டனம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய ஆட்சிப்பணியில் சேர்வதற்காக செ.உமாசங்கர், தனது இருப்பிடம், மதம் ஆகியவற்றை மாற்றி ஆதி திராவிட இனத்தைச் சார்ந்தவர் என்று தவறான சாதிச் சான்றிதழ் பெற்றுள்ளார் என்ற புகார்களின் அடிப்படையிலும், அவர் படித்த பள்ளி, கல்லூரி, தேர்வு இயக்ககம் மற்றும் தொடர்புடைய அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், அனைத்திந்திய ஆட்சிப் பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1969-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் இவர் தொடர்ந்து பணியில் நீடிப்பது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்பதாலும், இதுதொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை மற்றும் உரிய அமைப்பின் மூலம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாலும் உமா சங்கர், அரசால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். 

என் கண்டனங்கள் 
உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை.  புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம்  தெரிவித்துக் கொள்கிறேன்.
உமா சங்கர் அவர்களை ஆதரிக்கும் பதிவுகள் 


14 Response to "உமா சங்கருக்காக அரசுக்கு ஒரு கண்டனம்"

 1. I support

  உமா சங்கர் பற்றிய பதிவு

  மருத புல்லட் பாண்டியின் பதிவு

  அரசுக்கு எனது கண்டனங்கள்

  பணிச்சுமை காரணமாக எனது வலைப்பூவில் இதற்கு ஆதரவாக பதிவிட முடியவில்லை .. இருந்தாலும் இந்தப் பின்னூட்டத்தின் வாயிலாக எனது ஆதரவினை திரு உமா சங்கர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ///ஆதி திராவிட இனத்தைச் சார்ந்தவர் என்று தவறான சாதிச் சான்றிதழ் பெற்றுள்ளார் என்ற புகார்களின் அடிப்படையிலும், /// இது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் அவர் செய்ததும் தவறே என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

  என் ஆதரவும் உண்டு

  //தான் ஐ ஏ எஸ் தேர்வு எழுதிய பிறகு மத்திய தேர்வாணையம் தான் அளித்த ஜாதி சான்றிதழை உறுதி செய்த பிறகே தனக்கு அரசால் பணியாணை வழங்கியதாகவும் உமா சங்கர் குறிப்பிட்டார்
  //
  இதற்குப் பின்னர் எவ்வாறு அரசு தரப்பில் வழக்குத்தொடுத்தார்கள்.
  உமா சங்கருக்கு எனது ஆதரவினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  Jey says:

  ஜில்லு ஜோதியில ஐக்கியமாய்ட்டியா...குட்:)

  rouse says:

  Govt must be reconsider his suspension.I support Umasankar IAS

  ~TSEKAR

  Chitra says:

  Present!

  உமாசங்கருக்கு என் ஆதரவு. அரசுக்கு என் கண்டனம்.

  உமாசங்கருக்கு என் ஆதரவு. அரசுக்கு என் கண்டனம்.

  நாட்டுக்காக நல்லவங்க போராடுனா, நல்லவங்களுக்காக நாம போராடுவோம்.
  நானும் பதிவு பண்ணிட்டேன்.

  மதிப்பிற்குரிய பதிவர்களுக்கு,

  உமா ஷங்கர் மீதான நியாயம் இல்லாத குற்றச் சாட்டுகள் நீங்கும் வரை அனைத்து பதிவர்களும் வேறு வகை பதிவுகள் எழுத வேண்டாம் என்று வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன்.இது புதிதாக வரும் பயனர்களுக்கு இதை பற்றி அறிந்து கொள்ளவும் அவர்களின் ஆதரவும் கிடைக்க உதவும்.நான் இதை பற்றி நாளிதழ்களில் செய்திகளை தேடிய போது எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பது வருத்தமாக இருந்தது.அது போல் வேறு வகை பதிவுகள் வெளி வந்தால் இந்த பதிவுலக புரட்சியின் வேகம் குறைய வாய்புகள் அதிகம்.தருமி அவர்களுக்கும் உமா ஷங்கர் பற்றி பதிவினை போடும் அனைவர்க்கும் என்னுடைய ஆதரவு நிச்சயமாக இருக்கும்.

  This comment has been removed by the author.
Related Posts with Thumbnails