50 பதிவுகள் ???

முதலில் என்னை வளர்த்த அனைத்து பதிவுலக நண்பர்களையும்,அண்ணன்களையும்,அக்காக்களையும் என் சிரம் தாழ்த்தி        வ   ண   ங்  கு  கி  றே  ன்  

இது ஐம்பதாவது பதிவு எழுதிவிட்டேன் என்று சொல்வதற்கான பதிவல்ல, ஐம்பதில் என்ன கிழித்திருக்கிறேன் என்று என்னுள் நானே பார்க்கும் ஒரு மீள் பார்வை தான்

எப்பவாச்சும் சும்மா இருக்கும் போது கவித எழுத தோணும்,அப்டி எழுதிய  கவிதைகளை மத்தவங்களுக்கு காட்டலாம்னு பதிவெழுத ஆரம்பித்தேன்

நான் கணிப்பொறி மாணவன் என்பதாலோ சுடுதண்ணி அவர்களின் பதிவுகள் எனக்கு ரொம்ப யோசிக்க வைத்துவிட்டது,அதன் விளைவு இந்த ஜில்தண்ணி

இதுவரை என்ன பதிவெழுதி கிழிச்சிருக்கேன்

எழுத ஆரம்பித்த போது புத்தகங்களில் காப்பி அடித்தவைகளை  வைத்து தோணுவதை எழுதுவேன்,அதன் பிறகு சில ஃபார்வட் மெயில்களை பதிவிட்டேன்

இவை தந்த ஊக்கத்தில் அடுத்த கட்டத்திற்கு முயற்சி செய்தேன்,அவை கவிதைகளாக வந்தது,கவிதைளை எழுதி பாராட்டு பெறும் போது,அதற்கு ஈடு இனை எதுவுமில்லை,அப்படியொரு திருப்தி கிடைத்தது

அதன் பிறகு அறிவியல் வாத்தியார் போன்ற அறிவியலை எளிதாக சொல்லும் முயற்சிகளை எடுத்தேன்,அது எனக்கு மாபெரும் வெற்றியாக தெரிந்தது,ஆனால் அதையும் என்னால் இன்று தொடர்ந்து எழுத இயலவில்லை

கவிதையை தவிர்த்து என் எண்ணங்களை அப்படியே பதிவாக அமைந்த முதல் பதிவு உலகம் எப்போது அழியும் என்ற பதிவுதான்
 
அதன் பிறகு கடவுள் என்னைபொருத்தவரை என்னவென்று எழுதிய பதிவு கடவுள் என் மட்டில் ,அது எனக்குள் நிறைய எண்ணங்களை விதைத்தது,இதுவரை எழுதியதிலேயே சிறந்த பதிவாக நான் கருதுவது இந்த பதிவைதான்,ஏனென்றால் என் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்தது,அதன் விளைவு அடுத்தது என்னவென்ற தேடல் தொடங்கியது

ஆம் நிறைய சந்தேகங்கள் வர ஆரம்பித்திருக்கிறது,என்னை சுற்றி இருக்கும் சமூகத்தை பற்றியும் சரி,கடவுள்,மூடநம்பிக்கை,பரிணாமம்,மதம்,மனிதம் பற்றிய   நிறைய சந்தேகங்கள் வந்துகொண்டே இருக்கிறது

அதன் விளைவு என்னையே நான் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளேன்,இனி அதற்கு பதில் தேட வேண்டும்

இனி என் பதிவு எப்படி இருக்கும் ????

என் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளும் பதிவுகள் வரும்,அப்பறம் கவிதைகள்,வித்யாசமான என் சிந்தனைகள்,நான் ரசித்தவைகள் என்று தொடர்ந்து என் பயணத்தை தொடரலாம் என்று நினைக்கிறேன்

ஆனால் இந்த அளவுக்கு எழுதியதற்கு காரணம் நீங்கள் தான்,உங்கள் உண்மையான அன்பினால் வரும் ஒவ்வொரு பின்னூட்டமும் என்னை மீண்டும் மீண்டும் எதையாவது தேடத் தூண்டுபவையாக இருக்கும்

இதுவரை ஒன்னும் பெரியதாக எழுதிவிடவில்லை,ஆனால் இனி தேடுவதற்கு  நிறைய இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது

நிறைய படிக்க ஆரம்பித்திருக்கிறேன் புத்தகங்களும் சரி,பதிவுகளும் சரி.

அப்பறம் நிறைய சொந்தங்கள் கிடைத்திருக்கிறது மாப்பி என்று கூப்பிடும் நட்புகளும்,தம்பி என்று கூப்பிடும் அண்ணண்களும்,அக்காக்களும் கிடைத்திருக்கின்றன,இதுவே எனக்கு மிகப் பெரிய வரப் பிரசாதமாக நினைக்கிறேன்


அனைத்து சொந்தங்களுக்கும் ஒரு வேண்டுகோள்,நான் இதுவரை எழுதிய பதிவுகளை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பின்னூட்டத்தில் மறக்காமல் பதியுங்கள்,ஏனென்றால் என்னை அடுத்த முயற்சிக்கு தூண்டுபவையாக அவை இருக்கும்  ,ஒரு FEED BACK ஆக இருக்கும்  

மீண்டும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

40 Response to "50 பதிவுகள் ???"

 1. LK says:

  vaalthukkal

  வாழ்த்துக்கள் ஜில்தண்ணி

  வாழ்த்துகள்:)

  வாழ்த்துக்கள் நண்பா!

  வாழ்த்துக்கள் மச்சி...
  ட்ரீட் எப்போ...

  வாழ்த்துக்கள் ஜில்தண்ணி

  வாழ்த்துக்கள் ))): மொக்கையும் ப்ளாக்உம் போல நீ மேலும் வளர்க...

  வாழ்த்துக்கள் நண்பா....தொடர்ந்து 100....200....300....

  50 500 ஆக வாழ்த்துக்கள்

  வாழ்த்துக்கள் ஜில் தண்ணி தம்பி....இன்னும் அழகிய பதிவுகள் படைக்க எனது வாழ்த்துக்கள்

  இன்னும் நிறைய எழுத என் வாழ்த்துக்கள் நண்பா....

  Anonymous says:

  ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்..

  குறிப்பாக ஐம்பது பதிவுகளில் நீங்க என்ன எழுதியிருக்குறீர்கள் என்று
  திரும்பிப் பார்த்ததற்கு (பார்க்கவைத்ததற்கு) பிடியுங்கள் எனது கூடுதல் பாராட்டுக்களை..

  தொடர்ந்து எழுதுங்கள்..

  Jey says:

  50-க்கு வாழ்த்துக்கள் பிரதர்.

  வாழ்த்துக்கள் ஜில்தண்ணி .

  வாழ்த்துக்கள் தோழர் ...
  குறுகிய காலத்தில் நீங்கள் அரை சதம் அடித்ததில் சற்று பொறாமையும் கூட!
  கடவுள் குறித்தும் சூ கி குறித்தும் சே குறித்தும் அறிவியல் வாத்தியார் குறித்தும் நீங்கள் எழுதியவை நான் படித்தவுற்றுள் எனக்குப் பிடித்தவை ...
  மீண்டும் வாழ்த்துக்கள் தோழர் ...

  வாழ்த்துக்கள்...

  வாழ்த்துக்கள் மாப்பி ..!!
  எனக்கு மொக்கை பெயர்க்காரணம் ரொம்ப பிடிச்சிருந்தது ..
  எமிக்கு எழுதிய கவிதைகள் மற்றும் உலக அழிவு பதிவு ..!!

  பேட் அப்! பேட் அப்!

  Congrats... GO ahead...

  Riyas says:

  நிறைய தேடுங்கள் நிறைய எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்

  மச்சி
  ட்ரீட் ?

  எவன் ஒருவனுக்கு கீழ்படியும் எண்ணம் இல்லையோ அவனுக்கு தலைமை தாங்கும் தகுதி கிடையாது . இதற்கு மாறுபட்ட எண்ணம் உள்ளவர் என்பது உங்களின் பதிவின் வாயிலாக நன்றாக தெரிகிறது நண்பரே . உங்களின் பதிவு இன்னும் பலரின் இதயங்களை அனுமதி பெற்று திருடுவதற்கு என் வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்களின் எழுத்துப் பயணம் .

  Hearty Wishes Dude...

  Keep Rocking!

  Chitra says:

  வாழ்த்துக்கள்!!!

  உங்கள் நகைச்சுவை உணர்வு, உங்களுக்கு ஒரு வரம்.... இன்னும் கொஞ்சம் சமூதாய அக்கறை கொண்ட விஷயங்களிலும், உங்கள் கருத்துக்களை உங்கள் பாணியில் சொல்லலாமே!

  வாழ்த்துக்கள் ஜில்தண்ணி.....

  50 பதிவு போடுவதற்குள் 91 பாலோயர்ஸ், நீங்க தான் ஒரிஜினல் பிரபலம்!

  வாழ்த்துக்கள் நண்பா...

  Kousalya says:

  உங்கள் எழுத்துகளில் நகைசுவை இழையோட இருப்பது பிடித்து இருக்கிறது......தொடரட்டும்......வாழ்த்துக்கள்.....

  நிறைய தேடுங்கள் நிறைய நீந்துங்கள் ...வாழ்த்துக்கள்

  dheva says:

  இன்னும் நிறைய பதிவுகள் எழுதி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி!

  மிக்க நன்றி LK அண்ணே :)

  ரொம்ப நன்றி அருண் :)

  வாழ்த்துக்கு நன்றி வானம்பாடிகள் ஐயா :)

  மிக்க நன்றி பாலாஜி :))

  நன்றி மாப்ள,ட்ரீட் தானே சீக்கிரம் வச்சிடலாம்:)

  வாழ்த்துக்கு நன்றி கார்த்திக் அண்ணே :)

  டெர்ரருக்கு மிக்க நன்றி :)

  ம்ம்ம் நன்றி சௌந்தர் :)

  சீக்கிரம் 500 ஆக்கிடலாம்னா,நன்றி ரமேஷ் அண்ணா :)

  ரொம்ப நன்றி விஜய் அண்ணே :)

  மிக்க நன்றி வினோத்- நிலா :)

  ரொம்ப சந்தோசம் இந்திரா,நன்றிங்க :)

  மிக்க நன்றி jey அண்ணே :)

  வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி நண்டு அண்ணே :)

  வாங்க நியோ தோழர் :) ரொம்ப நன்றி நண்பா

  RAVI says:

  sooper appu unga writtings....
  solvatharku varthaikale kidaikkale...
  ravi.

  வாழ்த்துக்கள்!

  MANO says:

  வாழ்த்துக்கள் யோகேஷ்.

  மனோ.

  மிக்க நன்றி அன்பரசன் :)

  மிக்க நன்றி செல்வா மாப்பு :)

  ரொம்ப நன்றி ராஜன் அண்ணே :)

  ரொம்ப சந்தோசம் வழிப்போக்கன் :))

  ட்ரீட் தானே குத்தாலத்தான்,கொடுத்துடலாம் மச்சி :)

  ரொம்ப நன்றி ரியாசு நண்பா :)

  உன்மை தான்,மிக்க நன்றி பனித்துளி சங்கர் தல :)

  நன்றிங்க சித்ரா அக்கா :)

  ரொம்ப நன்றி காயத்ரி அக்கா,கண்டிப்பா :)

  ரொம்ப நன்றி மகேசு :)

  மிக்க நன்றி வழிப்போக்கன் - யோகேஷ் :)

  ரொம்ப நன்றி செந்தில் அண்ணே :)

  வாழ்த்துக்களுக்கு நன்றி தேவா அண்ணே :)

  ரொம்ப நன்றி RAVI அவர்களே :)

  மிக்க நன்றி எஸ்.கே :)

  ரொம்ப நன்றி மனோ நண்பா :))

  வாழ்த்துக்கள் யோகேஷ்

Related Posts with Thumbnails