நான் பள்ளிக்கூடம் போறேனே

புட்டிப்  பால் குடிப்பதை கூட அப்போது நிறுத்தல அதற்குள் பள்ளிக்கூடத்துல சேத்துட்டாங்க, எங்க வீட்டுக்கு எதிர்புறமே ஒரு கான்வென்ட் வேறு இருந்ததால் வசதியா போச்சு டபாருன்னு அட்மிஷன் போட்டாச்சு

நோட்டு,புத்தகங்கள்,குச்சி டப்பா,பேக் எல்லாம் வாங்கிட்டு வந்தாங்க அப்பா,பள்ளிக் கூடம் திறப்பதற்கு மூணு நாளுக்கு முன்னாடிலேர்ந்தே எல்லாத்தையும் அடுக்கி வச்சி புது  பேக்க மாட்டிகிட்டுதான் நின்னுகிட்டு இருப்பேன்(பேக்கு பேக்க மாட்டிகிட்டு நின்னுச்சு )

ஸ்கூல் திறக்குற நாளும் வந்துச்சி,காலையிலேயே குளிப்பாட்டி (அப்பலாம் கரெக்டா குளிச்சருவேன் தெரியுமா ),எண்ணெய் வச்சி முடிய  நல்லா படிய சீவி, யூனிஃபார்மு,டை எல்லாம் ஜோரா ரெடி பண்ணிட்டாங்க  அம்மா

நான் மொத முறையா பள்ளிக்கூடம் போறதப் பார்க்க ஒரு ஊரே வந்துட்டுனா பாத்துக்குங்க(எங்க சொந்தக்காரங்களதான் சொன்னன் ) , நானும் சிரிச்சிகிட்டே கிளம்பிட்டேன் , ஸ்கூல்ல விட்டுட்டு எங்க சித்தப்பாவும்,அப்பாவும் வீட்டுக்கு வந்துட்டாங்க

அதுவரைக்கும் ஒன்னும் தெரியல ஸ்கூல்குள்ள போனா எல்லா பயபுள்ளைகளும் அழுதுகிட்டு இருக்கு, அப்பரம் நான் மட்டும் சும்மாவா இருப்பேன் ( நாங்க சிங்கமுல்ல) ,அழுது அழுது புது டையிலேயே மூக்க தொடச்சிப்பேன்


மதியம் சாப்பாடு ஊட்ட அம்மா அழைத்து போக வந்தாங்க,ஜாலியா சிரிச்சிகிட்டே வீட்டுக்கு வந்தேன்,டை பூறா மூக்கு சலிய பாத்து அம்மா கேட்டாங்க அழுதியா கண்ணு :) திரும்பவும் மூக்க தொடச்சிகிட்டு ம்ம்ம் திரும்ப அழுக

அழக்கூடாது நல்ல புள்ளல, அம்மா மம்மு எடுத்துட்டு வரேன்னு அடுப்படிக்கு போனாங்க, என்னடா  மம்மு கொடுத்துட்டு திரும்ப ஸ்கூல்ல  கொண்டு போய் விட்டுடுவாங்களான்னு யோசிச்சேன்,ஐடியா வந்துச்சி : )

வீட்ல பாட்டி தூங்கிகிட்டு இருந்தாங்க,அவுங்க பக்கத்துலயே நானுன் படுத்து தூங்குற மாதிரி கொஞ்ச நேரம் தூங்குற மாதிரி நடிச்சேன் அப்பறம் உண்மையாவே தூங்கிட்டேன் (என்ன வில்லத்தனம்)

அம்மா எழுப்பி பாத்துட்டு பாவம் சின்ன புள்ள தூங்கிடுச்சேன்னு எழுப்பாம விட்டுடாங்க,அன்னக்கி பொழுத ஓட்டியாச்சு :)

மறுநாள் வீட்ல கிளம்பும் போதே அழுகாச்சி தான்,ரகலை தான்(காலையில யாரும் தூங்கலயே ),இன்னக்கி மட்டும் ஸ்கூலுக்கு  போகலன்னு ஒரே  அடம் தான்,அதுக்குள்ள எங்க ஸ்கூல் வாத்தியார போய் கூப்டு வந்துட்டாங்க அப்பா

என்ன அழுக இப்ப வரியா இல்லாயான்னு அவரு அதட்டினாரு பாருங்க,இருந்த அழுக எங்க போனுச்சுனே தெரியல,அப்ப எனக்கு வாத்தியார்னா ஒரு பயம் அடிப்பாருன்னு வீட்ல சொல்லி சொல்லி  பயமுறுத்தி வச்சிருந்தாங்க  ( இப்ப அந்த வாத்தியார பாத்தா காமெடியா தெரியது)

அவர் என்ன குண்டுகட்டா தூக்கி அவர் தோல் மேல வச்சிகிட்டு ஸ்கூலுக்கு போயிட்டார் , நானும் பயத்துல அழவே இல்லனா பாத்துக்குங்க :)

அதுலேர்ந்து அழுகைய கொறச்சிகிட்டேன் :) நல்ல புள்ளையா ஸ்கூல் போனேன்(இப்ப வரைக்கும் முதல் வருடம்  காலேஜ் போகக் கூட அழலன்னா பாத்துக்குங்க)

என்னுகிட்டேந்து பலப்ப குச்சை ஒருத்தன் புடிங்கிட்டான்,அவன என்ன செஞ்சேன்னு இன்னொருவாட்டி சொல்றேன்,ரைட்டா :)

30 Response to "நான் பள்ளிக்கூடம் போறேனே"

  1. ரைட்டு

    சரி சரி...

    எனக்கும் அதே பீலிங்க்ஸ் தான். நானும் LKG ல அம்மா கொண்டு போய்விட்டப்ப அழுதேன்....ஒரு பிஸ்கட் packet வாங்கி தான். பிறகு அழுவே இல்லை

    சரி சரி விடு... விடு.....

    Jey says:

    ம்..பல்ப குச்சிய பிடுங்குன அப்பாவிய கடிச்சி வைக்கலியே?...

    SAME FEELING...

    Riyas says:

    அடடா.. ஜில்லு பள்ளிக்கூடம் வேற போனீயா ஆமா அப்போ போனது இதுவரைக்கும் ஞாபகமிருக்கா...

    நானும் சின்னப்புள்ளயில ஸ்கூலுக்கு போய் என் கிளாசுக்கு போகாம என் அக்கா கிளாசுல அக்கா பக்கத்துல நின்னுறுவேன்.. அப்புறம் வார்த்தியாரு அனுப்பிவெப்பாரு சமாதானம் பேசி.

    ஸ்கூல்கு போறப்ப நீங்க அழுதிங்க, காலேஜ் ku போறப்ப வாத்தியார் அழுதிருப்பார் :)

    எல்லா நாளும் லீவா இருக்கணும்னு சாமி கிட்ட வேண்டினது எல்லாம் சொல்லவே இல்லை.?

    Chitra says:

    அதுலேர்ந்து அழுகைய கொறச்சிகிட்டேன் :) நல்ல புள்ளையா ஸ்கூல் போனேன்(இப்ப வரைக்கும் முதல் வருடம் காலேஜ் போகக் கூட அழலன்னா பாத்துக்குங்க)


    ..... சமத்து..... :-)

    சரி ரைட்டு...

    Anonymous says:

    இப்படியெல்லாம் சொன்னா நீங்க இஸ்கூலக்கு போனீங்கனு நாங்க நம்பிடுவோமாக்கும்...

    என்ன மாப்பி .. புதுசா சொல்லுற .. நீ பள்ளிக்கூடம் போனியா ..?
    என்னால நம்பவே முடியல ..?

    //என்ன மாப்பி .. புதுசா சொல்லுற .. நீ பள்ளிக்கூடம் போனியா ..?
    என்னால நம்பவே முடியல ..?


    ///

    pinna school pella yaar adikkirathu....

    //நோட்டு,புத்தகங்கள்,குச்சி டப்பா,பேக் எல்லாம் வாங்கிட்டு வந்தாங்க அப்பா,பள்ளிக் கூடம் திறப்பதற்கு மூணு நாளுக்கு முன்னாடிலேர்ந்தே எல்லாத்தையும் அடுக்கி வச்சி புது பேக்க மாட்டிகிட்டுதான் நின்னுகிட்டு இருப்பேன்(பேக்கு பேக்க மாட்டிகிட்டு நின்னுச்சு )//

    ஆடுனு தெரியாமையே மஞ்சதண்ணி தெளிச்சிட்டு நின்னு இருக்க!

    அந்த நாள் ஞாபகம்.....உங்க குழந்தயை அனுப்புகிற போது ஞாபகம் வருதா?

    @@ நிலாமதி said...

    /// அந்த நாள் ஞாபகம்.....உங்க குழந்தயை அனுப்புகிற போது ஞாபகம் வருதா? ///

    இன்னாது கொழந்தயா ? ஏங்க எனக்கு இருபது வயசுதாங்க ஆவுது,அதுக்குள்ள வீட்ல கல்யாணம் பன்ன முடியாதுங்குறாங்க

    //ஸ்கூல் திறக்குற நாளும் வந்துச்சி,காலையிலேயே குளிப்பாட்டி (அப்பலாம் கரெக்டா குளிச்சருவேன் தெரியுமா)// ஆனா இப்போலாம் குளிக்கணும்னு சொன்ன பாவாக்க சாப்டுற மாதிரி இருக்கு.பிரண்ட்ஸ் கேட்டா நான் மொதோ நாளே குளிச்சுடேனு சொல்லிருவேன்.

    //அதுவரைக்கும் ஒன்னும் தெரியல ஸ்கூல்குள்ள போனா எல்லா பயபுள்ளைகளும் அழுதுகிட்டு இருக்கு,//

    அப்படி இல்ல ஜில்.எல்லாரும் சிரிச்சுக்கிட்டு தான் இருந்து இருப்பாங்க.பயபுள்ளங்க தெரியாம உன்னைய பாத்துட்டாங்க போல

    ///மதியம் சாப்பாடு ஊட்ட அம்மா அழைத்து போக வந்தாங்க,ஜாலியா சிரிச்சிகிட்டே வீட்டுக்கு வந்தேன்,//

    சாப்பாடுனா போதும்.எங்க இருந்தாலும் ஓடி வந்துருவேனா பாத்துகங்க..

    ஹாஹாஹ ரைட்டு பலப்பமா.. ஸ்லேட்டுல எழுதி இருக்கிங்களா அவ்வளவு வயசாயிருச்சா ..:))

    @@ வானம்பாடிகள் said...

    /// ரைட்டு ///

    மிக்க நன்றி ஐயா :)

    @@@ வினோ said...

    /// சரி சரி... ///

    ரைட்டு நன்றிங்க வினோ

    @@@ டம்பி மேவீ said...

    /// எனக்கும் அதே பீலிங்க்ஸ் தான். நானும் LKG ல அம்மா கொண்டு போய்விட்டப்ப அழுதேன்....ஒரு பிஸ்கட் packet வாங்கி தான். பிறகு அழுவே இல்லை ///

    என்னது ரொட்டி பாக்கெட் வாங்கி கொடுத்துட்டா அழ மாட்டீங்களா :)ரைட்டு

    @@ சௌந்தர் said...

    // சரி சரி விடு... விடு..... //

    அதான் அழலன்னு சொல்றேன் அப்பரம் என்னா விடு விடு

    @@@ Jey said...

    ///ம்..பல்ப குச்சிய பிடுங்குன அப்பாவிய கடிச்சி வைக்கலியே?...///

    கடிக்கல அதுக்கு பதிலா வேற ஒன்னு செஞ்சிட்டேன் ??

    :)

    அது ஒரு கனா காலம்

    Katz says:

    Congrates for 100 followers. Metoo got 50 today.

    Unknown says:

    click here for info replica goyard bags Check Out Your URL replica bags aaa quality click this over here now replica bags philippines

    nobet says:

    w3k44k6u94 o1b43h1u21 h2k52p3d17 p3g16i3f71 a8y07x7y94 p1e29j5k21

Related Posts with Thumbnails