பதிவுலகில் ஜொள்ளும் ஜில்லும்

ஊரே நான் எப்படிப்பட்டவன் !!!  நான் எப்படிப்பட்டவன்னு கேள்வி கேட்டுகிட்டு அலையுது, இப்ப என்னையும் கேக்க வச்சிட்டாரு நம்ம நண்பன் வெறும்பய
சரி அதையும் பாத்துடலாம் வாங்க

முதலில் இந்த தொடர் பதிவை என்னை எழுத அழைத்த வெறும்பயலுக்கு கட்டிச் சட்னியுடன் செட் தோசை பார்சல்

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

முதலில் வெறும் ஜில்தண்ணி என்று தான் வைத்திருந்தேன்,அப்பரம் என்னுமோ தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா மாதிரி நானே என் பெயருடன் ஜில்தண்ணி - யோகேஷ் என்று போட்டுக் கொண்டேன்

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
 
என் உண்மையான முழு பெயர் யோகேஷ்வரன் 


ஜில்தண்ணினு வைக்க காரணம் சுடுதண்ணி அவர்களின் பதிவுகளின் மேல் உள்ள ஈர்ப்பு தான் காரணம்,பதிவுலகில் நிறைய பேர் என்னை  ஜில்லு என்றுதான் கூப்பிடுவார்கள்.


3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

இந்த பதிவுகள் அப்டின்னு ஒன்னு இருக்குறதே சுடுதண்ணி அவர்களின் பதிவை படித்த பின்பு தான் தெரியவந்தது,அவர் பதிவுகளில் வரும் பின்னூட்டத்தில் மூலம் நிறைய நண்பரக்ளின் பதிவை படிக்க ஆரம்பித்தேன்,படிக்க படிக்க எனக்கும் ஆசை வந்துவிட்டது எழுத 


4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எல்லாமே செய்திருக்கிறேன்


பின்னூட்டத்தில்,chat ல்,ஆர்குட்டில்,ட்விட்டரில் இப்படி எல்லாவற்றிலும் என்னை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று என்  பதிவுகளை போட்டிருக்கிறேன்

நான் நாலு பேர படிக்க ஆரம்பித்தேன் என்னை நாலு பேர் படிக்க ஆரம்பித்தார்கள்,அப்படியே நட்பு வட்டம் விரிந்தது


வலைச்சரத்திற்கும் இதில் பங்கிருக்கிறது
சை.கொ.ப,சேட்டைகாரன்,கே.ஆர்.பி அண்ணே,நீச்சல்காரன்,புலவன் புலிகேசி ஆகியோரால நானும் என் பதிவும் அறிமுகப்படுத்தப்பட்டோம்,அதன் மூலமும் நண்பர்கள் என் பதிவிற்கு வந்தார்கள்  

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அவ்வப்போது  இங்கு பகிர்ந்துகொண்டுள்ளேன்,இனியும் பகிர்வேன்
விளைவு என்னை  என் மனநிலையை மற்றவர்கள் ஓரளவுக்கு இதனால் புரிந்து கொண்டார்கள் என்று நினைக்கிறேன்


6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ம்ம்ம் முழு நேர பொழுதுபோக்காகத்தான்  ஆரம்பித்தது எனக்கு நிறைய சம்பாதித்து கொடுத்தது நண்பர்களை தான் 

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு பதிவுகளும்  தமிழில் தான் இருக்கிறது
ஒன்று இந்த ஜில்தண்ணி

இன்னொன்று நண்பன் குத்தாலத்தானுடன் இனைந்து குத்தாலத்தான்ஸ்  என்ற பதிவும் தொடங்கியிருக்கிறோம்8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

யார் மீதும் கோபம் வந்ததில்லை,நிறைய பதிவர்களை பார்த்து டன் கணக்கில் பொறமை பட்டிருக்கிறேன்

அவர்களில் வால் பையன், பனித்துளி சங்கர் அண்ணே,சகோதரர்  தேவா , அண்ணன் பட்டறை ஷங்கர்,ஹாலிவுட் பாலாண்ணே ,சைவ கொத்து பரோட்டா, வெறும்பய,பிரசன்னா இப்டி இன்னும் பெரிய லிஸ்டே இருக்கு ,இவர்களை படித்து படித்து பொறாமை படாத நாட்களே இல்லை

ஏன் பொறாமை என்றால், எப்டித்தான் இப்டி எழுதுறாங்க,அவங்களுக்கும் மனித மூளை தானே இருக்கும்,பின்ன எப்படி என்று யோசித்து யோசித்து பொறாமை பட்டிருக்கிறேன் 

 9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல் பதிவிலேயே பின்னூட்டமிட்டு பாராட்டியவர் அண்ணன் LK அவர்களும் சகோ ஆனந்தியும.
அதன் பிறகு நிறைய பாரட்டுக்கள்  மீண்டும் மீண்டும் எழுத எனக்கு உத்வேகமாக இருந்தது

என் அலைபேசி எண்ணை விடாப்படியாக  வாங்கி  என்னிடம் பேசி பாராட்டியும் என்னை மெருகூட்ட ஐடியாக்களையும் தந்தவர் பனித்துளி சங்கர் அண்ணன் அவர்கள்

அப்பறம் chatting-ல சகோதரர் தேவாவும்,சிரிப்பு போலீசு ரமேஷ் அண்ணனும் வந்து பாராட்டியது எனக்கு மிகப் பெரும் உத்வேகமளித்தது எதாவது உருப்படியாக எழுத

இப்போதும்   ரசிகன்-மகேஷ்,பிரசன்னா,வெறும்பய,கோமாளி  போன்ற நட்புகளின் அன்பால்  நான் இங்கு இருக்கிறேன் ,இருக்க முடிந்தது

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

கண்டிப்பா என்ன பத்தி இன்னும் நிறைய  சொல்ல வேண்டியிருக்கு 

முடிவா சொல்லிக்கிறேன் பதிவுலகில் நான்  ஒரு

லொள்ளு - ஜொல்லு - தில்லு - ஜில்லு 

இன்னும் நிறைய பேரை சொறிந்துவிட வேண்டும், இதை தொடர அழைப்பவர்கள்

மகேஷ் - ரசிகன்
கொத்துபரோட்டா  பிரசன்னா
இந்திராவின் கிறுக்கல்கள்
நான் வாழும் உலகம் - ரியாஸ்

எழுதுங்க !!!! தெரிஞ்சிக்கிறோம்

64 Response to "பதிவுலகில் ஜொள்ளும் ஜில்லும்"

 1. நல்ல பகிர்வு !!!

  மகேஷ் - ரசிகன்
  கொத்துபரோட்டா பிரசன்னா
  இந்திராவின் கிறுக்கல்கள்
  நான் வாழும் உலகம் - ரியாஸ் //


  இந்த நான்கு பேருக்கு வாழ்த்துக்கள்... இவர்களை நல்லா மாட்டி விட்டதற்கு நன்றி நண்பா....

  ஜில்லு கலக்கல்...

  ஜில்லு, அட்ரஸ் குடுங்க. வீட்டுக்கு ஆட்டோ அனுப்பனும்.

  சூப்பர் தம்பி., நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னா மொக்கை போடுறது தப்பே இல்லை.

  // லொள்ளு - ஜொல்லு - தில்லு - ஜில்லு //

  சரி சரி கொஞ்சம் என் பக்கமும் வந்துட்டு போங்க ஜில்லு ...

  MANO says:

  பதிவு நன்றாக உள்ளது.

  மனோ

  kadaisi punch super.....

  // சூப்பர் தம்பி., நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னா மொக்கை போடுறது தப்பே இல்லை. //

  Repeattuuuuuuuu...

  நண்பா பதில்கள் எல்லாமே வழக்கம் போல கலக்கல்...

  Good Post Yogesh..

  முதலில் இந்த தொடர் பதிவை என்னை எழுத அழைத்த வெறும்பயலுக்கு கட்டிச் சட்னியுடன் செட் தோசை பார்சல்

  ///

  மச்சி பார்சல் இன்னும் வரல.... சீக்கிரம் வரலன்னா கடைய மாத்த வேண்டி இருக்கும்...

  நிறைய பதிவர்களை பார்த்து டன் கணக்கில் பொறமை பட்டிருக்கிறேன்
  அவர்களில் வால் பையன், பனித்துளி சங்கர் அண்ணே,சகோதரர் தேவா , அண்ணன் பட்டறை ஷங்கர்,ஹாலிவுட் பாலாண்ணே ,சைவ கொத்து பரோட்டா, வெறும்பய,பிரசன்னா இப்டி இன்னும் பெரிய லிஸ்டே இருக்கு ,இவர்களை படித்து படித்து பொறாமை படாத நாட்களே இல்லை

  //


  இதில என்னை தவிர மத்தவங்கள பார்த்து பொறாமப்படுறத நான் ஒத்துக்குறேன் ...

  என்னை பார்த்து பொறாமப் படுறதெல்லாம் கொஞ்சம் ஓவரு.. நான் உன்ன பார்த்து பொறாமப் படுறேன் .. நீ என்னை பார்த்து பொறாமை படு...

  ஜில்லு பாணி எப்பவுமே தனி பாணிதான். அருமை

  அருமை ஜில்லு.

  Riyas says:

  ரொம்ப நல்லாயிருந்தது பதில்கள் ஜில்லு..

  //ம்ம்ம் முழு நேர பொழுதுபோக்காகத்தான் ஆரம்பித்தது எனக்கு நிறைய சம்பாதித்து கொடுத்தது நண்பர்களை தான்// உண்மை
  என்னையும் மாட்டி விட்டுட்டியே ஜில்லு..

  dheva says:

  என்ன பெத்த ராசா யோகேசு...சிலித்து போச்சுப்பா உடம்பு.....!


  நீ இப்போ பிரபல பதிவர் ....இனிமே எடு சாட்டையை ...! உன்னை சுற்றி நடக்குற கொடுமைகளை பத்தி கிழி கிழின்னு கிழி....சரியா... தம்பி...!

  யோவ் நீ ஜொள்ளுன்னு சொல்லி தான் எங்களுக்கு தெரியணுமாக்கும் ..அதன் முஞ்சியில பொறுக்கி எழுதி ஒட்டி இருக்கே.

  யோவ் நீ ஜொள்ளுன்னு சொல்லி தான் எங்களுக்கு தெரியணுமாக்கும் ..அதான் முஞ்சியில பொறுக்கி எழுதி ஒட்டி இருக்கே.

  // சூப்பர் தம்பி., நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னா மொக்கை போடுறது தப்பே இல்லை. //

  Repeattuuuuuuuu...//

  ரிப்பீட்டோ ரிப்பீட்டு

  // இப்போதும் ரசிகன்-மகேஷ்,பிரசன்னா,வெறும்பய,கோமாளி போன்ற நட்புகளின் அன்பால் நான் இங்கு இருக்கிறேன் ,இருக்க முடிந்தது //

  ஆஹா... நன்றி ஹை.

  // இன்னும் நிறைய பேரை சொறிந்துவிட வேண்டும், இதை தொடர அழைப்பவர்கள்

  மகேஷ் - ரசிகன் //

  இப்ப சந்தோஷமா ?

  //என்ன பெத்த ராசா யோகேசு...சிலித்து போச்சுப்பா உடம்பு.....!
  நீ இப்போ பிரபல பதிவர் ....இனிமே எடு சாட்டையை ...! உன்னை சுற்றி நடக்குற கொடுமைகளை பத்தி கிழி கிழின்னு கிழி....சரியா... தம்பி...! //

  ரிப்பீட்டு ....

  // யோவ் நீ ஜொள்ளுன்னு சொல்லி தான் எங்களுக்கு தெரியணுமாக்கும் ..அதான் முஞ்சியில பொறுக்கி எழுதி ஒட்டி இருக்கே. //

  பால் குடி பிள்ளைய இப்படி சொல்லிட்டாங்களே ... அழுகாச்சியா வருது ஜில்லு ...

  ///////////முதலில் வெறும் ஜில்தண்ணி என்று தான் வைத்திருந்தேன்,அப்பரம் என்னுமோ தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா மாதிரி நானே என் பெயருடன் ஜில்தண்ணி - யோகேஷ் என்று போட்டுக் கொண்டேன் /////////


  இன்றும் என்றும் என்னை அடிமையாக்கி வைத்திருப்பது ஜில்தண்ணி என்ற உங்களின் பெயர்தான் . அறிமுக விரிவு அருமை .வாழ்த்துக்கள் உங்களின் வெற்றிப் பயணம் தொடர்வதற்கு என் வாழ்த்துக்கள் .

  :))

  ஜில்லுன்னு இருக்கு தம்பி ...

  Jill (Cool) post

  ஜில் "தண்ணி" அது எந்த "தண்ணி"ங்க?

  Anonymous says:

  ஆளாளுக்கு இப்படி பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்களே..
  ம்ம்ம் நல்லா தான் இருக்கு.

  @குத்தாலத்தான் said...

  //நல்ல பகிர்வு !!!///

  யோவ் என்னயா கிண்டலா :)

  @ சௌந்தர் said...

  ///இந்த நான்கு பேருக்கு வாழ்த்துக்கள்... இவர்களை நல்லா மாட்டி விட்டதற்கு நன்றி நண்பா.... ///

  அது சரி அது சரி
  அடுத்து உமக்கு இன்னொரு பதிவும் ரெடு பன்ன வேண்டியதுதான் :)

  @வினோ

  நன்றி நண்பா :)

  ///நான் நாலு பேர படிக்க ஆரம்பித்தேன் என்னை நாலு பேர் படிக்க ஆரம்பித்தார்கள்,அப்படியே நட்பு வட்டம் விரிந்தது///
  தத்துவம் மாப்பி ..!!

  அப்புறம் ரமேஷ் அண்ணன் வழிமொழிகிறேன் ..!!

  @ கொல்லான் said...

  // ஜில்லு, அட்ரஸ் குடுங்க. வீட்டுக்கு ஆட்டோ அனுப்பனும். ///

  என்னது ஆட்டோவா,அட ராமா :)

  @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  ///சூப்பர் தம்பி., நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னா மொக்கை போடுறது தப்பே இல்லை.////

  தப்பில்லயா அப்ப சரி
  நாளைக்கே அடுத்த மான் ஆட்டை கூட்டிடவேண்டியதுதான் :)

  நியோ said...

  /////சரி சரி கொஞ்சம் என் பக்கமும் வந்துட்டு போங்க ஜில்லு ... ////

  வந்தேன் ஆனா எதோ இங்கிலீஷ்ல இருந்துச்சு அதான் திரும்ப ஓடியாந்துட்டேன் :)

  @MANO said...

  //பதிவு நன்றாக உள்ளது.

  மனோ ////

  ம்ம்ம நன்றிங்க மனோ :)

  @ஜீவன்பென்னி said...

  ///kadaisi punch super.....///

  நன்றிங்க நண்பா :))

  @@ வெங்கட் said...

  /// Repeattuuuuuuuu... ////

  அட அதே ரிப்பீட்டாஆஆஆஆஆஆ

  நன்றிங்க :)

  @ அஹமது இர்ஷாத் said...

  ///Good Post Yogesh..///

  ரொம்ப நன்றிங்க தல :)

  @@@ வெறும்பய said...

  ///மச்சி பார்சல் இன்னும் வரல.... சீக்கிரம் வரலன்னா கடைய மாத்த வேண்டி இருக்கும்... ////

  பார்சல் உடனே வர நீ என்ன பக்கத்துலயா இருக்க :) எங்கேயோ குந்திகினு உடனே வரலன்னா எப்புடி ??

  வட ஊசிப்போய் நாளைக்குதான் வரும் பரவாயில்ல எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோ :)

  @@@ வெறும்பய


  ////என்னை பார்த்து பொறாமப் படுறதெல்லாம் கொஞ்சம் ஓவரு.. நான் உன்ன பார்த்து பொறாமப் படுறேன் .. நீ என்னை பார்த்து பொறாமை படு... //////

  மச்சி ஓவர்லாம் இல்ல உண்மைதான்

  சட்டு புட்டுனு 50 பதிவ போட்ட,100 ஃபாலோயர்சயும் புடிச்சிட்ட பின்ன பொறாம வராம நட்சத்திர ஆமையா வரும் :)

  @வில்சன் said...

  ///ஜில்லு பாணி எப்பவுமே தனி பாணிதான். அருமை ////

  ரொம்ப நன்றிங்க தல :)

  @@@ வழிப்போக்கன் said...

  ///அருமை ஜில்லு. ///

  நன்றி நண்பா :)

  @@ Riyas said...

  ///ரொம்ப நல்லாயிருந்தது பதில்கள் ஜில்லு..///

  ரொம்ப நன்றி நண்பா :)

  @@@@ dheva said...

  ////என்ன பெத்த ராசா யோகேசு...சிலித்து போச்சுப்பா உடம்பு.....!

  நீ இப்போ பிரபல பதிவர் ....இனிமே எடு சாட்டையை ...! உன்னை சுற்றி நடக்குற கொடுமைகளை பத்தி கிழி கிழின்னு கிழி....சரியா... தம்பி...! ////

  நன்றிங்க சகோ :)

  ம்ம்ம் கிழிச்சிடுவோம் :)

  @@ madurai ponnu said...

  ////யோவ் நீ ஜொள்ளுன்னு சொல்லி தான் எங்களுக்கு தெரியணுமாக்கும் ..அதன் முஞ்சியில பொறுக்கி எழுதி ஒட்டி இருக்கே./////

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(

  @@@ அருண் பிரசாத் said...

  ///ரிப்பீட்டோ ரிப்பீட்டு///

  அது சரி எல்லாரும் ரிப்பிட்டுலயே வேலைய முடிச்சிட்டீங்களா ரைட்டு :)

  @@@மகேஷ் - ரசிகன் said...

  /////இப்ப சந்தோஷமா ? //

  ரொம்ப சந்தோசம் :)

  @ நியோ

  ///பால் குடி பிள்ளைய இப்படி சொல்லிட்டாங்களே ... அழுகாச்சியா வருது ஜில்லு ... ////

  அழுகாத அழுகாத பாத்துக்கலாம்..
  என்ன பண்றது என் மூஞ்ச பாத்தாளே எல்லாரும் கண்டுபிடிச்சிருராங்க :)

  இன்னும் ட்ரெயினிங் எடுக்கனும் போல :)

  @@@@@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

  ///இன்றும் என்றும் என்னை அடிமையாக்கி வைத்திருப்பது ஜில்தண்ணி என்ற உங்களின் பெயர்தான் . அறிமுக விரிவு அருமை .வாழ்த்துக்கள் உங்களின் வெற்றிப் பயணம் தொடர்வதற்கு என் வாழ்த்துக்கள் .///

  வாழ்த்துக்களுக்கு நன்றி தல :)

  @@@ வானம்பாடிகள் said...

  // :)) ///

  ரொம்ப நன்றிங்க தல :)

  @@ கே.ஆர்.பி.செந்தில் said...

  /// ஜில்லுன்னு இருக்கு தம்பி ... ///

  ரொம்ப நன்றிங்க அண்ணே :)

  @@@ வழிப்போக்கன் - யோகேஷ் said...

  /// Jill (Cool) post ///

  அட இன்னொரு யோகேஷா :)

  வாங்க வாங்க நன்றி :)

  @@@ Mohamed Faaique said...

  ///ஜில் "தண்ணி" அது எந்த "தண்ணி"ங்க? ///

  வாங்க வாங்க எல்லாம் "நல்ல" தண்ணி தான்

  @@@ இந்திரா said...

  ///ஆளாளுக்கு இப்படி பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்களே..
  ம்ம்ம் நல்லா தான் இருக்கு. //

  வாங்க மேடம் :) நன்றி

  ப.செல்வக்குமார் said...

  //தத்துவம் மாப்பி ..!
  அப்புறம் ரமேஷ் அண்ணன் வழிமொழிகிறேன் ..!! ///

  ரைட்டு :) திரும்பவுமா

  தங்களை பற்றிய தகவல்களும் மற்ற நண்பர்களை மறக்காமல் நினைவுபடுத்தியமைக்கும் உங்களுக்கு ஒரு பெரிய கைதட்டல்... தொடருங்கள் தங்கள் பயணத்தை வெற்றிகரமாக.....

  பதிவுலகில் கொல்லும் ஜில்லுனு தலைப்பு வச்சா சரியா இருக்கும்
  என்ன ஜில்லு கரெக்ட் தான :)

  @@@@ பிரவின்குமார் said...

  ///////தங்களை பற்றிய தகவல்களும் மற்ற நண்பர்களை மறக்காமல் நினைவுபடுத்தியமைக்கும் உங்களுக்கு ஒரு பெரிய கைதட்டல்... தொடருங்கள் தங்கள் பயணத்தை வெற்றிகரமாக..... ////

  ரொம்ப நன்றி மாப்ள :))

  @@ Maduraimohan said...

  பதிவுலகில் கொல்லும் ஜில்லுனு தலைப்பு வச்சா சரியா இருக்கும்
  என்ன ஜில்லு கரெக்ட் தான :) ////

  வாங்க நண்பா :)

  டைட்டில் சரியா இருக்கும் ஆனா இனி மாத்த முடியாதே :(

  Ananthi says:

  ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குங்க யோகேஷ்..

  நீங்க மென்மேலும் நிறைய எழுதி பெயர் வாங்க வாழ்த்துக்கள்..!!

  @@@ Ananthi said...

  //// ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குங்க யோகேஷ்..

  நீங்க மென்மேலும் நிறைய எழுதி பெயர் வாங்க வாழ்த்துக்கள்..!! ////

  எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கு சகோ :)

  ரொம்ப நன்றி :)

Related Posts with Thumbnails