கோக்குமாக்கு -- 03 / 09 / 10
Friday, September 3, 2010
1:58 AM
labels இசை , கோக்குமாக்கு , சென்னை , நாட்டு நடப்பு , 76 பின்னூட்டங்கள்
labels இசை , கோக்குமாக்கு , சென்னை , நாட்டு நடப்பு , 76 பின்னூட்டங்கள்
குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு
குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு
என்னடா குவாட்டர் அடிக்க காசு கேக்குறானான்னு பாக்குறீங்களா, சீ நான் ரொம்ப நல்ல பையன் ,சரக்க அடிக்காத எனக்கே இப்டி மப்பு ஏறிடிச்சுனா,உங்களுக்கு சொல்லவா வேணும்
வேற ஒன்னும் இல்லங்க குவாட்டர் கட்டிங் பட பாடல்களை தான் சொல்றேன்,மெய்யாலுமே செம கிக்கு ஏறுதுங்க,பாடம் வரிகளும் தாரு மாறு
குடி குடிய கெடுக்கும் தெரியுமடி
ஆனாலும் குடிக்க புடிக்குமடி
மப்பு கிக்கு பூஸ்ட்டு டக்கரு
குவாட்டரு மேட்டரு கிடைக்கலயே
ஓசில குவாட்டர் கட்டிங் ஊருகாய் டயலாக்குகளுடன் தராங்க,சும்மா எடுத்து குடிங்க :)
குவாட்டர் கட்டிங் உபயம் : தயாநிதி அழகிரி (படத்துலயும் நீங்க தானா)
====####====####====####====####====####====####====####====####====####====
6காட்டாருக்கு நான் ஒரு பெரிய நன்றி சொல்லியே ஆகனும்,எப்ப பாத்தாலும் இந்த பொட்டி முன்னாடியே குந்திகினு இருப்பேன், இப்பதான் தினமும் மூணு மணி நேரம் எங்கூர்ல கரண்ட அடக்கிடுரானுங்களா,வேற வழியே இல்லாம புத்தகம் வாங்கி படிக்க ஆரம்பிச்சுட்டன்
இப்ப படிச்சிகினு இருக்குறது பா.ராகவன் சாரின் "தலிபான்" என்ற புத்தகம்
====####====####====####====####====####====####====####====####====####====
எங்க போனாலும் இந்த பாகிஸ்தான் என்றாலே பிரச்சன தானா,பாகிஸ்தான் வீரர்களுக்கு இது ஒன்னும் புதுசு கிடையாது, நல்ல ஃபார்முல விளையாடிக் கொண்டு இருப்பானுங்க,திடீர்னு கப்பு வாங்குவானுங்க,திடீர்னு சஸ்பெண்டும் ஆவானுங்க,இதே பொழப்பா போச்சு
அதிலேயும் ஆசிப் போன வருசம் ஊக்க மருந்து பயன்படுத்தியாதா கண்டுபுடிக்க பட்டு ஒரு வருசம் ஓரமா ஒக்கார வச்சாங்க, அந்த ஒரு வருசத்துல ஒரு ஃபிகரையும் நல்லா உசார் பண்ணிட்டாரு, இப்ப திரும்பவும் சூதாட்ட மேட்டர்ல மாட்டிகிட்டாரா,பாவம் ஆசிப்பு
ஃபிகரும் போச்சு,மானமும் போச்சு(அது இருந்தா தான) எல்லாமே போச்சு :)

====####====####====####====####====####====####====####====####====####====
ரொம்ப நாளா நம்ம குத்தாலத்தான் மூஞ்சி புத்தகத்துக்கு வா வான்னு கூப்டுகிட்டே இருந்தான்,சீ என்னாடா இருக்கு அதுலன்னு நான் போகவே இல்ல
இப்பதான் FACEBOOK PROFILE கிரியேட் பண்ணிருக்கேன், ட்விட்டர் மாதிரிலாம் இல்ல ரொம்ப போர் அடிக்குது
யாராவது போட்டா,கீட்டா,வீடியோ,கீடியோன்னு அப்லோட் பண்ணுனா பாக்கலாம் அவ்ளோதான் ஒன்னும் தேறாது :(
====####====####====####====####====####====####====####====####====####====
ஞாயிற்றுக் கிழமை முதல் நானும் சென்னைவாசி ஆகப் போறேன் அதாங்க வரும் திங்கள் கிழமையிலிருந்து காலேஜ் போகணுமாமே, ஆஹா இனி கும்பளா கும்மி அடிக்க முடியாதேன்னு ரொம்ப கவலையா இருக்கு :(
எந்த காலேஜுன்னு கேக்குறீங்களா அதாங்க Eeshwari college of engineering,ramapuram
சென்னைக்கு நான் புதுசாச்சா ஒரு மாசத்துக்கு ஒரு ரூட்டும் எழவும் புரியாது அதையும் தான் பாப்போம் என்ன நடக்குதுன்னு :)
இனி ஜில்தண்ணி சென்னையிலிருந்து சப்ளை செய்யப்ப்டும்

