Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

க..க...கல்லூரி சாலை

மூக்குக்கு கீழ நாலு முடியாவது மொளச்சிருக்கான்னு  அப்பப்ப கண்ணாடி முன்னாடி நின்னு தடவிப் பாத்துகிட்டே இருந்தன்...ஏன்னா காலேஜ் சேந்துட்டன்ல...எங்க என்ன பால்வாடின்னு கிண்டல் பண்ணுவாங்களோன்னு ஒரு பயம் வேற

அந்த நாளும் வந்துச்சி...கல்லூரி முதல் நாள்....

காலங்காத்தால எந்திருச்சி ஓன்னுக்கு நாலு தடவ சோப்பு போட்டு குளிச்சி...அப்பா அயன் பண்ணி வெச்சிருந்த சொக்காவ சோக்கா எடுத்து மாட்டிகிட்டு கண்ணாடிய பாத்தா...அட எனக்கும் ஸ்டைல் வந்துடுச்சிப்பா...சுருள் முடிகளை மெனெக்கெட்டு வகிடெடுத்து சீவி ஏதோ பரட்டை தலை எஃபெக்ட் வரவழைச்சாச்சு

அப்பா கிட்ட சொல்லிட்டு நோட் வாங்க பதினெஞ்சும்,பேருந்துக்கு இருவதும் அப்பா பாக்கெட்டிலிருந்து எடுத்துக்கிட்டன்...போய்ட்டு வரம்மா..போய்ட்டு வரம்பா

பேருந்தில் தொத்தி கித்தி கல்லூரிக்கு வந்து சேந்தாச்சு...அடுத்து என் க்ளாச தேடனும்...B.sc Computer science - room no.205  என்று போர்டில் எழுதியிருந்தது...205ஐ தேடி அங்க இங்க போனன் கெடைக்கல...

என்ன மாதிரியே இன்னும் நாலைந்து பய புள்ளைங்க 205ஐ தேடிக்கிட்டு இருந்துச்சுங்க...அதுல பய ஒருத்தன் நல்லா வாட்ட சாட்டமா என்ன விட அழகா(அவ்வ்வ்வ்) இருந்தான்...


எங்க சீனியரா இருப்பாயிங்களோ என்ற பயத்துடனே அவனை  நெருங்கி ஹாய் நீங்க பர்ஸ்ட் இயரா என்று மெல்ல விசாரிச்சன்...ஆமாம் நான் கம்ப்யூட்டர் சயின்சு நீங்க ? அட நானும் தான்..சரி வா ரூம தேடுவோம்

205 ஐ ஒரு வழியா தேடிப் பிடித்து போனால்....

என்னோட பன்னெண்டாவது படிச்ச பாதி பய புள்ளைங்க அங்க தான் இருக்காயிங்க...அட சூப்பருன்னு..ஒக்கார இடம் தேடுனா...இருந்தது மாப்பிள்ளை பெஞ்சு மட்டும் தான்...

அந்த கடைசி பெஞ்சில் ஆரம்பித்த என் கல்லூரி வாழ்க்கை...


தொடரும்....அடுத்த பதிவில்

மாறியவை மாற்றியவை

முஸ்கி : நம்ம கடைய சரியா தொறக்குறதில்லன்னு நிறைய பேர் வருத்தப்படுறாங்க , சரி விடுங்க இனி ஜில்தண்ணி - எப்போதும்  சூடா (ஹீ ஹீ) கிடைக்குமுங்கோ



யார் இவன் ?

சென்னை - மாறியவையும் மாற்றியவையும் 

 நாலைந்து மாசம் தூங்குவதையே பொழப்பா ஓட்டிகிட்டு இருந்தன், இங்கு சென்னை வந்ததும் நானும் எந்திரம் சுழற்சியாய் ஓட ஆரம்பித்து விட்டேன், ஊரில் அனுபவித்த நிறைய சந்தோசங்கள் இங்கு காணாமல் போயின,ஆயினும் இங்கு இருப்பதையே சந்தோசமாக அனுபவிக்கும் பக்குவம் எனக்கு வந்துவிட்டது

ஆஹா என்ன ஒரே தத்துவமா வருது :) சரி ப்ளே(ட்)ட  மாத்துவோம்

## எங்க ஊர்ல ஒன்னு ரெண்டு ஃபிகர் தான் உருப்படியா பாக்க லெட்சனமா இருக்கும்...அது பின்னாடி ஒரு ஊரே க்யூ கட்டி நிக்கும்...இதுல நாமலாம் எங்க டூயட் சாங்க போடுறது....

## ஆனா இங்க சென்னைல எல்லா வகையான ஃபிகர்களும் இருந்தும் பார்க்க தான் நேரமில்லை ஓடிக்கினே இருக்கன் (ஏன் நீங்க எதாவது ஓட்டப் பந்தயத்துல கலந்துக்க போறீங்களான்னு கேக்க பிடாது )


## அப்பரம் கைலின்னு ஒன்ன இடுப்புல சுத்திகிட்டு திரிஞ்ச பய இப்ப கலர் கலரா டிராக்ஸ் தான் போடுறது (ஹ்ம்ம்ம் என்னத்த சொல்ல)

## முப்பது ரூவாய்க்கு முடி வெட்டி ட்ரிம்மிங்கும் பண்ணிடுவன் ஊர்ல, இங்க எண்பது ரூவா கேக்குறானுங்க கேட்டா அது சலூன் இது மென்ஸ்  பியூட்டி பார்லராம் (அதே மயிரத்தானடா இங்கயும் புடுங்குறீங்க)
 

## இந்த காதுல செவுட்டு மிசின் மாதிரி ஹெட்போன்....போட்டுட்டு அலைறானுகளே இவனுகன்னு கேட்டவன் இப்ப நானும் இந்த ஹெட்போனை எப்ப பாத்தாலும் காதுல மாட்டிகிட்டு இசையை ரசிக்கிறன் ( ஆமாம் ரசிக்கிறாறாமா மனசுல இளையராஜா பேரன்னு  நெனப்பு)


# தோழி(கள்)  தேவை அப்டின்னு பதிவே போட்டவன்... காலேஜில் போடுற மொக்கையில ஏகப்பட்ட ரசிகைகள்(ஐ மீன் தோழிகள்)  கிடைச்சிட்டாளுங்க
( அவ்ளோ பெரிய அப்பாடக்கராடா நீ :))

 
 # அப்பரம்  இதுக்கு ஒரு போஸ்டே போட்டு கொண்டாடிருக்கனும்.. ஆமாங்க என் ட்விட் ஒன்னு ஆனந்த விகடன் வலைபாயுதேல போட்டுட்டாயங்க
( ரொம்ப பழசு தான் )

பார்க்க : என் ட்விட் இடம் பெற்ற ஆனந்த விகடன்

டிஸ்கி  : முடிவா என்னதான் சொல்ல வரன்னு கேக்குறீங்களா...ஒன்னும் சொல்றதுக்கு இல்லன்னு சொல்ல வரேன் :)

நாங்களும் குத்துவோம்ல :)

என்னடா எல்லா குத்துகளும் முடிஞ்சிடுசேன்னு பாக்குறீங்களா,இல்ல இல்ல இன்னொன்னு இருக்கு , அதான் சும்மா இருக்குற சுவரை குத்துறது

இந்த செவுத்த குத்துறது ஒரு பெரிய ரிலாக்சேஷனுங்க...ஏன்னா செவுறு திரும்ப குத்தாதுல்ல (அட பெரிய கண்டுபிடிப்புதான்) ,என்ன வலிக்குமேன்னு பாக்குறீங்களா..உங்களுக்கு யாரையாவது குத்தனும்னு தோணுச்சினா அவங்கள நினைச்சிகிட்டு செவுத்த குத்தலாம் (ஏதோ நம்மாள முடிந்தது)





## என்ன பதிவெழுதுறது ரெண்டு நாளா யோசித்து யோசித்து செவுத்ததான் போட்டு குத்திகிட்டு இருந்தேன் ,அட இந்த ஐடியா வந்துடுச்சே :)

## எல்லா பொன்னுங்களுக்கு முன்னாடி உனக்கு அறிவு இருக்கான்னு மேடம் கேக்கும் போது மேடத்த குத்தனும்னு தோனும் ஆனா முடியாது அப்ப செவுத்ததான் குத்தனும்

## பரிட்சை எழுதும் போது பட்டுனு நம்ம பேப்பர பிடுங்கி,அவன் வச்சிக்கிகுவான், கேக்க போனா நாமலும் மாட்டிக்கனும்,அப்ப எத குத்தனும் போல தோணும் செவுத்த தான் :)

## அவனோட லவ்வர் வரும் போது,நாம பக்கத்துல நின்னா அவனுக்கு ப்ரெஸ்டீஜ் ப்ராப்ளம் அப்டி தள்ளி நில்லுன்னு சொல்லுவான்,அப்பவும் செவுத்ததான் குத்தனும்

## மாப்ள உன் எழுத்து அவ்வளவு அழகு சிற்பம் டா,பிரிண்ட் எடுத்த மாதிரி இருக்கு என்று ஐஸ் வைத்து நைட்டு ஃபுல்லா அவனோட அசைன்மென்ட்டையும் எழுத வச்சிட்டு போயிடுவான்,அப்பரம் என்ன நைட்டு ஃபுல்லா எழுதிக்கிட்டே குத்த வேண்டியதுதான் :(

## இந்த பொண்ணுங்களுக்கு செல்போன்ல பேலன்சே இருக்காது போல :) , நம்ம கிட்ட சுத்தமா பேலன்ஸ் இல்லாத போது தான், தொடர்ந்து 10 மிஸ்டு கால்,call me urgent அப்டின்னு மெசேஜ் அனுப்பி கொல்லும் போதும் செவுத்ததான் குத்தனும் :)

## ஒரு வாரமா நான் சைட் அடிக்கிற ஃபிகரு,இன்னக்கி புசுக்குன்னு இன்னொருத்தன் பைக்ல ஏறி போகும் போது செவுத்த தான் வெறிக்க வெறிக்க குத்த முடியும் :))

## ஒரு 50 கமென்ட்சு,50 ஓட்டு விழுந்திருக்கும்னு பதிவ ஓபன் பன்னுனா தொப்பி 3 கமெண்ட்சும்,5 ஓட்டும் விழுந்திருக்கும் அப்ப நச்சுனு செவுத்த குத்துனா ஒரு பெரிய ரிலாக்சேஷனா இருக்கும் (ஓ___,கமெ____போடாதவங்கள குத்துற மாதிரி ஒரு அலாதியான சுகம் )

ஹா ஹா ஹா !!!

என்ன பதிவு மொக்கையா இருக்குன்னு தோணுதா , உடனே செவுத்த குத்துங்க(அதாவது என்ன நினைச்சிகிட்டு)

இல்ல ஓட்டையாவது எனக்கு குத்துங்க :))

✍ நுழைவுத் தேர்வு அனுபவங்கள்...

மூனு வருசம் முக்கி முக்கி படிச்சி B.sc முடிச்சாச்சி, கடைசி செமஸ்டர் ரிசல்ட்டும் வந்துச்சு, நல்ல வேளை அரியர் ஒன்னும் விழல,சரி அடுத்தது என்னான்னு யோசிச்சா,கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் தெரிஞ்சது MCA மட்டும் தான்,திரும்ப மூனு வருசம் படிக்கனுமாம் அதான் பிரச்சனையே :(

சரி நாம பாக்காத படிப்பா,அதையும் பாத்துடுவோம்னு போணோம்,இந்த MCA வுக்கு tancet,tancet ன்னு நுழைவுத் தேர்வு வைக்கிறார்கள் (ரெண்டு தேர்வான்னு கேக்க பிடாது ).அதுல ஒரளவுக்கு மார்க் எடுத்தா தமிழ்நாட்டுல உள்ள முன்னனி கல்லூரி எதுலயாச்சும் கண்டிப்பா இடம் கிடைக்கும்,அங்கெல்லாம் 100 சதவீதம் campus placement தருவாங்கன்னு ஆசைய வேற கிளரி விட்டுட்டாயிங்க :)

சரி உடனே அந்த நுழைவுத் தேர்வுக்கும் அப்ளை செய்தேன்,அதோடு சரி என்னுமோ பிரிப்பேர் வேற செய்யனுமாமே,நாங்கெல்லாம் செமஸ்டர்க்கே தூங்கி எழுந்து அப்டியே போற ஆளுங்க,இது என்ன பிஸ்கோத்து பரிட்சை :)))

அந்த நுழைவுத் தேர்வு நடைபெறும் நாளும் வந்துச்சி,கூட்டமா போனோம்,அண்ணாமலை பல்கலையில் தான் நடந்தது,சீக்கிரமா போய் உருப்படியா சைட் மட்டும் தான் அடிச்சோம்(நமக்கு வேற என்ன தெரியும்)

அவனவன் ஃபார்முலா,அது இது லொட்டு லொசுக்குன்னு கடைசி நேரத்துல விழுந்து விழுந்து படிச்சிகினு இருந்தானுவோ, நாங்க சாவகாசமா கால ஆட்டிகிட்டு அவனுகள பாத்து சிரிச்சிகிட்டு இருந்தோம்(எவ்வளவு கஷ்டமான வேலை தெரியமா)

பரிட்சை நேரமும் வந்துச்சி,என் ஹால பார்த்து போய் உட்கார்ந்தேன்,சோத்தாங்கை பக்கம் ஒரு அட்டு பிகரு ஒக்காந்திருந்துச்சி(அந்த பக்கம் திரும்பவே முடியல),முன்னாடி பய புள்ள ஒருத்தன்,ஆனா எனக்கு பக்கத்து சீட்டு மட்டும் காலியா இருந்தது.

பென்சில தீட்டிக்கிட்டு இருந்தேன்(அப்பரம் மூளையா இருக்கு தீட்ரதுக்கு) ,EXCUSE ME SIRன்னு வெளியிலிருந்து ஒரு சத்தம்,யார்னு பாத்தா ஒரு செம செம ஃபிகர்,சட்டுனு உள்ள வந்து என் பக்கத்துல ஒக்காந்துச்சி(புரியுது கொஞ்சம் கேப் விட்டுத்தான்).எனக்கு ரொம்ப சந்தோசம்

இந்த ரெண்டு மணி நேரம் பொழுத போக்குறதுக்கு இத விட நல்ல ஐடியா இருக்க முடியாது,கொஸ்டின் பேப்பர் கொடுத்தாங்க,ஆன்சர் பேப்பரும் கொடுத்தாங்க,கொஸ்டின் பேப்பர பிரிச்சி நமக்கு தெரிஞ்ச ஒரு கேள்வி கூடவா இருக்காது பிரித்தேன் (ஆமாமாம்)


தேடினேன் தேடினேன் ஆங்கில இலக்கணத்தில் தேடினேன், கனிதத்தில் தேடினேன்,கணிப்பொறி பிரிவில் தேடினேன்.ஒன்ணே ஒன்னு தெரிந்தது என்ன REGISTER NUMBER ன்னு ஒன்னு கேட்டிருந்தாங்க,அத ரொம்ப ஈசியா எழுதிட்டேன்,ஹால் டிக்கெட்ட பாத்தே (அடடா இது தான் உள்வளத் திறமையா)

ஒரு எழவும் தெரியல,அரை மணி நேரம் வீணா போனது தான் மிச்சம்(ஆமாம் மிச்ச நேரத்துல கிழிச்சிட போறாறு),சரி பக்கத்துல உக்காந்திருக்குற பொன்னயாவது பாப்போமே ன்னு பாத்தேன்,என்ன கொடும அது கணக்கெல்லாம் போட்டுப் பாக்குது அந்த புள்ள(ரொம்ப பேட் கேர்ள்)


1 மணி நேரம் இப்டியே ஓடுச்சி, அப்போதைக்கு ஒரு திடீர் ஞானோதையம் இங்க நடந்ததையெல்லாம் நம்ம பதிவுல போட்டா எப்டி இருக்கும் ? போட்டா ஒரு முப்பது ஓட்டு விழாது (ஆமாம் ரொம்ப முக்க்கியம்),இப்டி யோசிச்சிகிட்டே ஒரு அரை மணி நேரம் தூங்கிபுட்டேன்(கண்ண தொரந்துகிட்டே)

திடீர் மணி அடித்தது என் மண்டைக்குள்ளும் தான்,கடைசி அரை மணி நேரம் தான் பாக்கி இருக்கு எழுத வேண்டிய கேள்விகள் மீதமிருப்பது 100 மட்டும் தாம் (மொத்தமே அதுதானே)

சரி நம் அறிவுக்கு சரியான் டெஸ்ட் தான் (அது இருக்கா),இனிமேல் யோசிச்சி எழுதுனா 10 கூட எழுத முடியது,யோசிச்சேன்(மூக்குல கைய வச்சிகிட்டு தான்) :)

கொஸ்டின் பேப்பர ஓரமா வைத்துவிட்டு,ஆன்சர் ஷீட்ட மட்டும் எடுத்தேன்,எல்லாமே கொள்குறி வகை கேள்விகள்(choose the right answer) தான் என்பதால்,என் அறிவை பயன்படுத்தி D,A,B,C,A,D,C,B,C,A,D கால் மணி நேரத்தில் 50 வினாக்களுக்கு இப்படியே விடையளித்து விட்டேன்(மிகப் பெரிய சாதனை தான்),மீதம் 50 சாய்ஸ்ல விட்டுடேன்(என்னோட சாய்ஸ்தான்)

இதுல என்ன கூத்துனா தவறான பதிலுக்கு நெகட்டிவ் மார்க் வேற எடுப்பானுங்களாம்,அடக் கொடுமையே நமக்கு வர்ரதே ஒன்ணோ ரெண்டோதான் அதையும் எடுத்துட்டா !! எங்க போறது (துபாய்க்கு)

பரிட்சை முடிச்சி வந்தா அவனவன் ஆன்சர் சொல்லிப் பாக்குறானுவோ,ஹா ஹா நமக்கும் அதுக்கும் சம்மந்தமில்ல!!

ஒருத்தன் சொன்னான் கன்ஃபார்மா 30 என்றான்,இன்னொருத்தன் 22 என்றான்,நான் சிரிச்சிகிட்டே எனக்கு -3 என்றேன் (உண்மைதானே)

சரி எழுதியாச்சு ரிசல்டும் வந்தது,மார்க பாத்தா எல்லாம் தலைகீழ் , 30 சொன்னவனுக்கு 3 தான் வந்துச்சி,-3 (நான் தான்) சொன்னவனுக்கு ஹாஹா +13 மார்க் (ஆண்டவன் நல்லவங்கள கைவிட மாட்டான் ஹா ஹா),செம சிரிப்பு தான் எனக்கு :))

எவண்டா எனக்கு +13 போட்டதுன்னு எனக்கு டவுட்டு வேற,அதனால ரிசல்ட் உண்மையான்னு ஒரு பத்து,பதினைந்து தடவையாவது பாத்திருப்பேன்(நம்பவே முடியல)

எல்லா பயலுவோலும் கேட்டானுங்க எப்டி டா எடுத்த வெரி குட் டா, நான் சொன்னேன் அதெல்லாம் புத்திசாலிங்களாலதான் முடியும் டா(ஒத்தயா ரெட்டயா போட்டதுல வந்ததுன்னு சொல்லிடுவேணா)

நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும் ,அதனாலதான் என் மார்க் ஸ்டேட்மன்டையே இங்கே போட்டுட்டேன் (நேர்மை,பொறுமை,எருமை)

இவ்வளவு பொறுமையாக படித்த அனைவருக்கும் மிக்க நன்றி !!!

பெரியவரின் பக்குவம்...


இன்று காலையில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

நேற்றிலிருந்தே என் நண்பன் ஒருவன் தங்கள் வீட்டுக்கு வருமாறு வற்புறுத்திக் கொண்டே இருந்தான்,சரி இன்னக்கி போவோம் என்று கிளம்பிச் சென்றேன்

அவன் வீட்டுக்கு சென்று மத்த நண்பர்களுடன் அளவளாவிவிட்டு , ஜில்லுன்னு ஒரு ஐஸ்கிரீம் சாபிட்டோம்

அப்போது மணி மதியம் 1.30 ஆகிவிட்டது ,சரி மச்சான் மணி ஆயிடிச்சி வீட்டுக்கு கிளம்புறேன் டா என்று அணைத்து நண்பர்களுக்கும் ஒரு பாய் சொல்லிவிட்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி கிளம்பினேன்

ஒரு தனியார் பேருந்து நின்று கொண்டிருந்தது,ஏறி கடைசி சீட்டில் ஒரு பெரியவர்க்கு அருகில் உட்கார்ந்தேன்

அப்போது ஒரு பருமனான வாலிபர் பஸ்சில் ஏறி படியிலேயே நின்றார்

சற்று நேரத்தில் இன்னொரு இளைஞன் ஏறி அந்த படியில் நிற்பவரை பார்த்து ,டேய் மேல ஏறுனா இன்னா கொறஞ்சா போவ போற என்று அதட்டல் மொழியில் சொன்னான்

அந்த வாலிபரும் நான் இங்கே தான் நிப்பேன் ,இன்னா பண்ணனும் இப்ப என்று கொஞ்சம் அசால்டாக பேசினான்

நடத்துனர் வந்து சொல்லியும் கேட்கவில்லை....

அப்போது அந்த பெரியவர் , தம்பி நீங்க கோச்சிக்க பிடாது ,வயசானவன் வெயில் தாங்கல கொஞ்சம் மேல ஏறி வந்தால் காத்து வரும் என்று அவரை தட்டி கொடுத்தார்

தப்பா நினைச்சுகாதீங்க என்று மறுபடியும் சிரித்துகே கொண்டே அந்த வாலிபரிடம் கூறினார்

இவ்வளவு நேரம் படியில் அடம் பிடித்துக் கொண்டிருந்த அந்த வாலிபர் சட்டென்று மேலே ஏறி பஸ்சின் நடு பகுதிக்கு சென்று விட்டு சிரித்து கொண்டே அந்த பெரியவர்க்கு தலை ஆட்டினார்.

இவ்வளவையும் பார்த்து கொண்டிருந்தேன் நான்

மனசுக்குள்ளே பேசிக் கொண்டேன்

இதுதான் பக்குவமா... முதிர்ச்சியா .. என்று அந்த பெரியவரை நினைத்து வியந்தேன்

சாதாரண மேட்டர் தான் .. அந்த தட்டி கொடுத்து இனிமயோடும்,பண்போடும் நடந்து கொள்ளும் அந்த பக்குவமும்,முதிர்ச்சியும் எனக்கு இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்வேன்

அதை வளர்த்துக் கொள்வேன் கண்டிப்பாக, நீங்களும் பக்குவமடையுங்கள்

வாழ்வில் மகிழ்ச்சி பூக்கட்டும்....

Related Posts with Thumbnails