நாங்களும் குத்துவோம்ல :)

என்னடா எல்லா குத்துகளும் முடிஞ்சிடுசேன்னு பாக்குறீங்களா,இல்ல இல்ல இன்னொன்னு இருக்கு , அதான் சும்மா இருக்குற சுவரை குத்துறது

இந்த செவுத்த குத்துறது ஒரு பெரிய ரிலாக்சேஷனுங்க...ஏன்னா செவுறு திரும்ப குத்தாதுல்ல (அட பெரிய கண்டுபிடிப்புதான்) ,என்ன வலிக்குமேன்னு பாக்குறீங்களா..உங்களுக்கு யாரையாவது குத்தனும்னு தோணுச்சினா அவங்கள நினைச்சிகிட்டு செவுத்த குத்தலாம் (ஏதோ நம்மாள முடிந்தது)

## என்ன பதிவெழுதுறது ரெண்டு நாளா யோசித்து யோசித்து செவுத்ததான் போட்டு குத்திகிட்டு இருந்தேன் ,அட இந்த ஐடியா வந்துடுச்சே :)

## எல்லா பொன்னுங்களுக்கு முன்னாடி உனக்கு அறிவு இருக்கான்னு மேடம் கேக்கும் போது மேடத்த குத்தனும்னு தோனும் ஆனா முடியாது அப்ப செவுத்ததான் குத்தனும்

## பரிட்சை எழுதும் போது பட்டுனு நம்ம பேப்பர பிடுங்கி,அவன் வச்சிக்கிகுவான், கேக்க போனா நாமலும் மாட்டிக்கனும்,அப்ப எத குத்தனும் போல தோணும் செவுத்த தான் :)

## அவனோட லவ்வர் வரும் போது,நாம பக்கத்துல நின்னா அவனுக்கு ப்ரெஸ்டீஜ் ப்ராப்ளம் அப்டி தள்ளி நில்லுன்னு சொல்லுவான்,அப்பவும் செவுத்ததான் குத்தனும்

## மாப்ள உன் எழுத்து அவ்வளவு அழகு சிற்பம் டா,பிரிண்ட் எடுத்த மாதிரி இருக்கு என்று ஐஸ் வைத்து நைட்டு ஃபுல்லா அவனோட அசைன்மென்ட்டையும் எழுத வச்சிட்டு போயிடுவான்,அப்பரம் என்ன நைட்டு ஃபுல்லா எழுதிக்கிட்டே குத்த வேண்டியதுதான் :(

## இந்த பொண்ணுங்களுக்கு செல்போன்ல பேலன்சே இருக்காது போல :) , நம்ம கிட்ட சுத்தமா பேலன்ஸ் இல்லாத போது தான், தொடர்ந்து 10 மிஸ்டு கால்,call me urgent அப்டின்னு மெசேஜ் அனுப்பி கொல்லும் போதும் செவுத்ததான் குத்தனும் :)

## ஒரு வாரமா நான் சைட் அடிக்கிற ஃபிகரு,இன்னக்கி புசுக்குன்னு இன்னொருத்தன் பைக்ல ஏறி போகும் போது செவுத்த தான் வெறிக்க வெறிக்க குத்த முடியும் :))

## ஒரு 50 கமென்ட்சு,50 ஓட்டு விழுந்திருக்கும்னு பதிவ ஓபன் பன்னுனா தொப்பி 3 கமெண்ட்சும்,5 ஓட்டும் விழுந்திருக்கும் அப்ப நச்சுனு செவுத்த குத்துனா ஒரு பெரிய ரிலாக்சேஷனா இருக்கும் (ஓ___,கமெ____போடாதவங்கள குத்துற மாதிரி ஒரு அலாதியான சுகம் )

ஹா ஹா ஹா !!!

என்ன பதிவு மொக்கையா இருக்குன்னு தோணுதா , உடனே செவுத்த குத்துங்க(அதாவது என்ன நினைச்சிகிட்டு)

இல்ல ஓட்டையாவது எனக்கு குத்துங்க :))

60 Response to "நாங்களும் குத்துவோம்ல :)"

 1. Riyas says:

  me the first

  நானும் குத்திட்டேன்...

  இந்தா வாங்கிகோங்க குத்து!

  டிஷ்யூம்

  This comment has been removed by the author.

  யோவ் இப்படி போட்டு குத்தினா எங்க ஹவுஸ் ஓனர் சண்டைக்கு வந்துடுவார் :)

  // ஒரு வாரமா நான் சைட் அடிக்கிற ஃபிகரு,இன்னக்கி புசுக்குன்னு இன்னொருத்தன் பைக்ல ஏறி போகும் போது//

  என்னமோ இவ்வளவு நாளா உன் பைக்குள ஏறி வந்துட்டு, திடீர்னு அவர் கூட போறா மாதிரி பீல் பண்ற.. பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் :)

  Riyas says:

  என்னாயிடுச்சு ஜில்லு.. சின்னப்புள்ளத்தனமா இருக்கே

  ஹி...ஹி..ஹி..

  கும்மாங் குத்து. இன்னும் கொஞ்சம் குத்து விட்டுருக்கலாம்ன்னு தோணுது.

  என் சார்பாவும் இந்தாங்க ஒரு குத்து. வொட் பண்ணுனத சொன்னேன்.

  நல்லாருந்தது. ஆனா நீங்க சொல்றது குத்துற வகையில் வராது. அது முட்டிக்கிறது.. ஹிஹி.!

  Jey says:

  இந்த வாரம் குத்து வார்ர்ர்ரம்ம்ம்ம்.....

  நல்லா குத்துப்பா... ரெண்டு கையாலையும் நல்லா குத்து....( அப்பதான் வலியில 1 வாரமாவது, மொககை போடாம இருப்பாங்க, நாமலும் நிம்மதியா.. இருக்கலாம்.:), ஹி ஹி)

  இது நல்ல யோசனைன்னு சொல்ல முடியாது ... உங்க அனுபவம் அப்படின்னு வேனா சொல்லலாம். சரியா?

  மச்சி இப்டி எல்லாத்துக்கும் குத்துற
  சண்ட வந்தா மட்டும் குத்தாம.....
  காணமல் போனவர்களை பற்றிய அறிவிப்புல தேட வக்கிர !!!!:)

  இப்பிடியே ஆளாளுக்கு குத்திட்டிருந்தா பதிவுலகம் என்னாறது. தட்டச்ச முடியாம:))

  எப்படி ராசா இந்தமாதிரில்லாம் யோசிக்கிற... பரம்பரை மொக்கை பதிவரை முந்திட்ட ராசா...
  நல்லாருடே...

  மூக்கு கொஞ்சம் போடப்பா இருந்தா இப்படிலாம் யோசிக்க தோனுமாம்.

  lol!!!!!!!!

  முதலில் பதிவின் தலைப்பை பார்த்ததும் பயந்து போனேன் . இப்பொழுது வாசித்து முடித்ததும் . சுவற்றில் முட்டமலே இரத்தம் வர வைத்துவிட்டீர் போங்க !

  இன்னைக்கு ஒரே குத்தா இருக்கு....
  விக்கி வலைபதிவுளையும் குத்து தான் மேட்டரு...
  மாத்தி மாத்தி குத்தன அந்த செவுறு தான் என்ன ஆகறது...

  இந்தாங்க என்னோட குத்து.

  குத்தாலத்தான் குத்தாம போய்ட்டாரு.

  மாப்ளே இவ்வளவு பேரு குத்தியிருக்காங்களே.. இன்னுமா எதிர்பாக்கிற..

  சந்தேகமே இல்லை... உங்களுக்கும் அதேதான். :-)

  குத்தியாச்சு

  நானும் குத்திட்டேன்.. அண்ணா இப்பலாம் யாரை குத்துரதுன்னே தெரியலைண்ணே..

  சரியான மொக்கை நீ நம்ம குருப் என்று நிருபித்து காட்டிவிட்டாய் வந்ததற்கு நானும் ஓரு குத்து

  குட்டி சுவரா தேடுறேன்.. நான் குத்துறதுக்கு


  நீயே ஒரு குட்டி சுவர்தானேன்னு எவனாவது பின்னூட்டம் போட்டிங்க...அவ்ளோதான்

  @riyas

  வடை ஸ்டாக் இல்ல,நாளைக்கு தரேன் :)

  @அகல்விளக்கு

  ம்ம்ம் குத்துங்க குத்துங்க :)

  @வால் பையன்

  தோ வாங்கி கிட்டேன்
  :)

  @பிரசன்னா

  ரைட்டு பிரசன்னா

  @வழிப்போக்கன்

  அட நீங்களும் குத்தியாச்சா :) நன்றி

  @ஜீவன்பென்னி

  நன்றிங்க குத்துக்கு :)

  @ஆதிமூலகிருஷ்ணன்

  நீங்க சொல்றதும் ரைட்டு தான் :) டைட்டில் மாத்திடாலாமா :(

  உன்னோட பதிவ படிச்சிட்டு உன்ன குத்தனும்னு நினைச்சா எப்படி குத்துறது மாப்பி .. செவுத்ததான் குத்தனும் ..!!

  @jey

  அதான் ஒரே குத்தா குத்திட்டேன் ஹா ஹா :) நன்றி

  @கருணாகரசு

  ஆமாங்க சார்,என் அனுபவம் தான் இப்டி இருக்கு,நன்றி தல

  @குத்தாலத்தான்

  மாப்ள ,பப்ளிக் பப்ளிக் :)

  @வானம்பாடிகள்

  அட நீங்களும் குத்திட்டீங்களா
  நன்றீங்க ஐயா :)

  @நாஞ்சில் பிரதாப்

  அட வாங்க சார்
  எல்லாம் ஒரு அனுபவம் தான் :)

  @கார்பன் கூட்டாளி

  உண்மைதான் உண்மைதான் :)

  @தெய்வசுகந்தி

  அட முதல் வருகைக்கு நன்றிங்க :)

  @பனித்துளி சங்கர்

  ரொம்ப நன்றிங்க தல,ரத்தம் வந்துட்டா ஹா ஹா :))

  @வினோத்

  புதுசா கட்டிக்க வேண்டியதுதான் செவுத்த :))

  @வெறும்பய

  எவ்வளவு பேரு குத்துனாலும் நாம தாங்குவோம்னு உனக்கு தெரியாது மாப்ள் :)

  ரைட்டு...நடத்துங்க...

  @ரோஸ்விக்

  அட வாங்க தல
  என்னது குத்தா :)

  @ஜோதிஜி

  வாங்க ஜி,
  நீங்க வந்ததுல ரொம்ப சந்தோசமுங்க
  குத்தியாச்சா :)

  @டம்பி மேவி

  என்னது அண்ணனா அட :)

  @கே.ஆர்.பி.செந்தில்

  வாங்கண்ணே குத்திட்டீங்களா
  ரைட்டு

  @சௌந்தர்

  அதேதான் அதேதான் :)

  @கார்க்கி

  அட நீங்களும் குத்தியாச்சா
  ரைட்டு :)

  @செல்வகுமார்

  மாப்ள நீயும் குத்திட்டியா செவுத்த
  இத இத இதத்தான் எதிர்பார்த்தேன் :)

  @கமலேஷ்

  வருகைக்கு நன்றிங்க தல :)

  pinkyrose says:

  இந்த பதிவ படிச்சுட்டு உன் சாரி உங்க மூஞ்சில குத்தணும் போல இருக்கே என்ன பண்ண?

  // இந்த பதிவ படிச்சுட்டு உன் சாரி உங்க மூஞ்சில குத்தணும் போல இருக்கே என்ன பண்ண? //

  உன் என்று சொன்னால் கூட தப்பா எடுத்துக்கமாட்டேன் அக்கா :)

  சரி வந்துட்டிங்க குத்திட்டு போங்க

  MANO says:

  NICE POST YOGESH..

  MANO

  உங்க விலாசம் சொல்லுங்க... எல்லாருமா சேர்ந்து தேடி வந்து குத்துறோம்.......

  Chitra says:

  ....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... ஒவ்வொரு குத்தும் செம பஞ்ச்! கலக்கல்!

  நீண்ட நாட்களுக்குப்பின்னர் உங்களுடைய பழைய பதிவுகளை படிக்கும் வாய்ப்பு கிட்டியது... கடவுளை பற்றிய உங்களது கருத்துக்கள் சிறப்பாகவும் தெளிவாகவும் இருந்தன... நானும் உங்கள் இனம் தான்... ஏமிக்கு ஒரு காதல் கடித்தும் பதிவும் எனக்கு மிகவும் அருமையாக இருந்தது... இனி உடனுக்குடன் தொடர முயற்ச்சிக்கிறேன்...

  @mano

  வாங்க மனோ,மிக்க நன்றி

  @shriப்ரியை

  விலாசம் தானே கொடுத்துட்டா போச்சு :)

  @chitra

  வாங்க அக்கா ரொம்ப நாளாச்சு இந்த பக்கம் வந்து,நன்றிங்க :)

  @philosophy prabhakaran

  வாங்க நண்பா
  எப்டி இருக்கீங்க
  உங்கள் வேலை பலு அதிகமாக இருப்பது போல் தெரிகிறது

  பாத்துக்குங்க :)
  நன்றி மாம்சு

  pinkyrose says:

  ஹலோ! அது மரியாதை இல்ல ஜில்லு
  அந்த மொக்க பதிவுக்கு ஓட்டு வேற போட்டு பெரியாளா ஆக்கியிருக்காங்களே அத்தனை பேருக்கும் ...
  ( நாமளும் தம்பின்னு கூப்ட்டு குத்த ஒரு ஆள் மாட்டியாச்சு டோய்! ;)))

  மவனே நீ இந்தப்பக்கம் வா நான் உன் மூஞ்சில குத்துறேன்..

  Anonymous says:

  உங்க பதிவ படிச்சுட்டு
  இனிமே இந்த மாதிரி எல்லாம் எழுதுவியானு உன் மூக்குல குத்த வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..
  உங்க அட்ரஸ் சொல்லுங்க தலைவா..

  கமெண்ட் போடாட்டி எனக்கா ஒருதடவ செவத்த குத்துவ உனக்குத்தான் கைவலிக்கும் அதான் :-):-)

  @pinky rose

  நீங்க சொன்னா சரிங்கக்கா :)

  ஆனா தம்பின்னு கூப்பிட்டு குத்தெல்லாம் ?????

  @ரமேஷ்(சத்தியமா ரொம்ப நல்லவன்)

  அண்ணே அங்க வருவதற்கு கொஞ்சம் லேட் ஆகும்னா

  @இந்திரா

  நீங்களும் குத்தனுமா,சரி சரி விடுங்க பாத்துக்கலாம்

  @முனியாண்டி

  அண்ணே நீங்க ரொம்ப !! ரொம்ப நல்லவங்க அண்ணே

  pinkyrose says:

  ஜில்லுத்தம்பீஈஈஈஈஈ!

  ரெண்டு நாலா ஆள வீட்டுப்பக்கம் காணுமே காணாமல் போனவர்கள் பட்டியல்ல சேர்த்து தேவதைகளை (அப்பத்தான மாட்டுவ) தேட சொல்லலாம்னு நெனச்சுட்டு இருந்தேன்!

  Krishnav says:

  உலகின் ஏழாவது பணக்காரர் - 3 the next version was not updated last one month am waiting for your post

  அதான் வந்துட்டோம்ல :)

  @ Krishnav said...

  // உலகின் ஏழாவது பணக்காரர் - 3 the next version was not updated last one month am waiting for your post //

  கண்டிப்பா போட்டுடலாம் நண்பா

  கொஞ்சம் வொர்க் அதான் தொடர முடியவில்லை :) சீக்கிரம் தொடர்கிறேன்

  நன்றி

  இன்னும் கொஞ்சம் குத்து விட்டுருக்கலாம்

  ஹ அஹ அஹ ஆஹா

  தம்பி ரூம் போட்டு உட்கார்ந்து யோசிக்ரவங்க சங்கத்துல இருக்கியா தம்பி...

  கலக்குற போ, எங்க இருந்துதான்இப்படி தோணுதோ தெரியலைன்னு சிரிசுகிட்டே யோசிக்கிறேன்... ஹ ஹ எ

  இன்னும் நிறையா எழுதுங்க, நிறையா பேர் இருக்கோம் படிக்க

  எல்லோரும் குத்திட்டாங்களே, ரொம்ப லேட்டா வந்துட்டனோ!

  சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க, மொத குத்து நம்முளதுதான்

Related Posts with Thumbnails