தோ(ழி)ழன் அப்டேட்ஸ்....

டிஸ்கி : அண்ணன் கார்க்கி அவர்களின் தோழி அப்டேட்சை படித்து படித்து, நாமளும் எழுதுவோமே என்று முயற்சி செய்தது :)


எதுக்கெடுத்தாலும் ட்ரீட் கேக்குறவன் நண்பன்...ட்ரீட்டுக்காகவே எதையாவது கேக்குறவன் என் நண்பன்

****************************************************************************

தோழி மழையில் நனைந்து வந்த போதுதான் எனக்கு நம்பிக்கை வந்தது, காதலின் மேல் அல்ல அவள் மேக்கப்பின் மேல்,கலையவே இல்லீங்க :)

*******************************************************************************
நண்பனுக்கு புது தோழி குறுஞ்செய்தி
அனுப்பியிருந்தாள்

என்ன செய்தி என்று வாங்கி படித்துக் கொண்டே
தோழி நம்பரை மனப்பாடம் செய்வான் இன்னொரு டகால்டி நண்பன்

********************************************************************************

மாப்ள உனக்கெத்தன அரியர்டா என்றுதான் கேட்டேன், நட்சத்திரத்த உன்னால என்ன முடியுமான்னு கேக்குறான்,என்னத்த சொல்ல :)

*******************************************************************************
தோழியின் சாப்பாடு டப்பாவை ஆட்டைய போட்டு ஆசையாக தயிர் சாதம் சாப்பிட திறந்தால் தனியாக அமர்ந்திருக்கிறது பர்கர் !?!

*******************************************************************************

நீல நிற சுடிதார் உனக்கு எடுப்பாக இல்லை என்றேன், உமக்கு எடுப்பா இருக்கும் போட்டுக்குறீயா என்கிறாள் :(

*******************************************************************************

என் அலைபேசியில் இன்னொரு பெண்னின் பெயரை பார்த்துவிட்டு சீறினாள் யார் என்று ? என் சித்தி என்றேன் சிரித்தாள் :) பெருமூச்சுடன் :()

********************************************************************************

பௌர்னமி நிலாவை காட்டி "நிலவில் உன் முகம் தெரிகிறது" என்றேன்
அப்ப என்ன ஔவை பாட்டி என்கிறாயா,என் மேக்கப் அவ்வளவு மோசமாவா இருக்கு என்கிறாள்

*********************************************************************************

இப்படியும் ஆகுமா....

நண்பர்களே இந்த பதிவை போல தோழியையும்,தோழனையும் ஒன்னா வைக்காதீங்க , அப்பறம் அவ்வளவுதான் :)


23 Response to "தோ(ழி)ழன் அப்டேட்ஸ்...."

 1. நல்லாருக்கு.... :)))

  // நண்பனுக்கு புது தோழி குறுஞ்செய்தி
  அனுப்பியிருந்தாள்

  என்ன செய்தி என்று வாங்கி படித்துக் கொண்டே
  தோழி நம்பரை மனப்பாடம் செய்வான் இன்னொரு டகால்டி நண்பன் //

  அருமை... ;)

  நீ யாருப்ப அவ்......

  மச்சி அந்த சுடிதாரூ :))))

  நட்சத்திரம் பழசு

  மீதெல்லாம் கலக்கலு...

  / நண்பர்களே இந்த பதிவை போல தோழியையும்,தோழனையும் ஒன்னா வைக்காதீங்க , அப்பறம் அவ்வளவுதான் :) /

  அனுபவமா? பதிவு நல்லாயிருக்கு

  என்ன இதெல்லாம் கார்க்கிக்கு நடந்ததா!


  சகா! என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

  "நண்பனுக்கு புது தோழி குறுஞ்செய்தி
  அனுப்பியிருந்தாள்

  என்ன செய்தி என்று வாங்கி படித்துக் கொண்டே
  தோழி நம்பரை மனப்பாடம் செய்வான் இன்னொரு டகால்டி நண்பன்"

  இதை நான் இப்ப கூட செய்வேனுங்க ...ஆனா யாருமே கரெக்ட் ஆகல ...அதான் வருத்தம்

  //ஆனா யாருமே கரெக்ட் ஆகல ...அதான் வருத்தம்

  //

  ஒரு அம்பது ரூவா நோட்ட பாக்கெட்க்கு வெளில தெரியறா மாதிரி வெச்சுட்டு பஸ் ஸ்டேண்ட் பக்கமா ஒரு ரவுண்டு வாங்க!

  ///நீல நிற சுடிதார் உனக்கு எடுப்பாக இல்லை என்றேன், உமக்கு எடுப்பா இருக்கும் போட்டுக்குறீயா என்கிறாள் :(///
  முயற்சி பண்ணிப் பாரு மாப்பி ..!!

  Riyas says:

  //பௌர்னமி நிலாவை காட்டி "நிலவில் உன் முகம் தெரிகிறது" என்றேன்
  அப்ப என்ன ஔவை பாட்டி என்கிறாயா,என் மேக்கப் அவ்வளவு மோசமாவா இருக்கு என்கிறாள்//

  அதுதானே...? எல்லாம் கலக்கல் ஜில்லு

  கிரேட் தம்பி...

  எல்லாமே கலக்கல் ரெண்டாவது படிச்சவுடன் சிரிப்பு வந்துடுச்சி

  கும்மங்குத்து

  @ராஜன்

  //என்ன இதெல்லாம் கார்க்கிக்கு நடந்ததா!//

  இல்லண்ணே இது என்னோடது :)

  //
  நீல நிற சுடிதார் உனக்கு எடுப்பாக இல்லை என்றேன், உமக்கு எடுப்பா இருக்கும் போட்டுக்குறீயா என்கிறாள் :(//


  செம பல்பு போலயே!

  மச்சி அந்த தோழி பேரு என்ன டா ?:)
  (மொபைல் குடு பாப்போம் :))

  //ராஜன் says:
  July 26, 2010 1:38 AM
  என்ன இதெல்லாம் கார்க்கிக்கு நடந்ததா!


  சகா! என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
  /

  அண்ணே..நீங்க அறிவு கொழுந்தண்ணே

  ஹிஹிஹி.. ஜில்தண்ணி..ஜில்லுன்னு ஒரு பதிவு... கண்டினியூ

  Chitra says:

  நீல நிற சுடிதார் உனக்கு எடுப்பாக இல்லை என்றேன், உமக்கு எடுப்பா இருக்கும் போட்டுக்குறீயா என்கிறாள் :(


  ...... தோழி, செம form ல இருக்காங்க.... ஹா,ஹா,ஹா,ஹா...

  Anonymous says:

  ஔவை பாட்டி ஜோக் அசத்தல்
  சிரி சிரி சிரி'னு எழுதி தள்ளிட்டீங்க..

  ஃபோட்டோ பார்த்து ஒன்றும் சொல்றதுக்கில்லை...

  //என்ன செய்தி என்று வாங்கி படித்துக் கொண்டே
  தோழி நம்பரை மனப்பாடம் செய்வான் இன்னொரு டகால்டி நண்பன்//


  ஹா,ஹா,ஹா,ஹா...

  ஹா,ஹா,ஹா,ஹா... நல்லா இருக்கு நண்பா.. கடைசியில போட்ட படத்தை பார்த்ததும்.. ஒரு கணம் யோசிக்கவும் வைத்துவிட்டது. பகிர்வுக்கு நன்றி..!

  //////தோழி மழையில் நனைந்து வந்த போதுதான் எனக்கு நம்பிக்கை வந்தது, காதலின் மேல் அல்ல அவள் மேக்கப்பின் மேல்,கலையவே இல்லீங்க :)
  //////////


  ஆஹா இதை உங்க தோழி வாசிதாங்க நீங்க அவளவுதான் போங்க !

  அப்பறம் இறுதியில் இணைத்திருக்கும் புகைப் படத்தைப் பார்க்கும் பொழுது ரொம்ப உசாரா இருக்கணும் என்று நல்லாவே தெரிகிறது .

Related Posts with Thumbnails