கடவுள் என் மட்டில்
டிஸ்கி : கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது இந்த பதிவின் நோக்கமல்ல,இவை அனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்கள் மட்டுமே
"கடவுள்" இந்த வார்த்தையை உச்சரித்தால் சிலருக்கு பயம்,சிலருக்கு பக்தி,சிலருக்கு வெறுப்பு,சிலருக்கு அமானுஷ்யம்
அப்படி என்ன தான் இருக்கிறது இந்த கடவுள் என்ற மாயையில்,எல்லாம் இந்த மனிதப் பதர் உருவாக்கியவை தானே,என்ன அதில் மாயை,மந்திரம்?
"மனிதன் தான் கடவுளை படைத்தான்" இது என் கருத்து தான், அதனால் தான் மனிதனை போலவே கடவுளும் இருக்கிறார்
பாருங்க எல்லா ஆங்கில்லையும் போட்டோ எடுத்துக்க என்று நடராஜர் தான் காலை தூக்கிட்டு நின்றிருப்பாரா இல்லை சரஸ்வதி குளோசப் போட்டோ சரியாய் விழலன்னு இன்னொரு டேக் போயிருப்பாங்களோ,சாத்தியமே இல்லையே
மனிதனுக்கு தன்னை கட்டுப்படுத்தவும் இன்ன பிற சௌகரியங்களை செய்து கொள்ளவும் ஒரு உருவம் தேவை பட்டது, அதை தான் கடவுள் என்று படைத்து விட்டனர், வகை வகையாக மனித உருவத்தில் மாற்றம் செய்து கடவுளர்களை உருவாக்கி இருப்பர்,பின்னர் அதிலிருந்து வேர் விட்டது தானே இந்த மதமும் சாதியும்
கடவுள் இருக்கிறார் இல்லை என்பது அவரவர் விருப்பம் தான்
அதனால் கடவுள் இல்லை என்பவரிடம் இருக்கிறார் என்று திரும்ப திரும்ப கூறுவதோ,இருக்கிறார் என்பவரிடம் இல்லை என்று பழிப்பதோ வீண் வேலை தான்
"உண்டு" என்ற வார்த்த்தை இருக்குமானால் "இல்லை" என்ற வார்த்தை இருந்தே தீர வேண்டும்,அப்படி இல்லையென்றால் "உண்டு" என்பது அர்த்தமற்றதாகிவிடும்,இருக்கு என்பதும் அறிவுதான்,இல்லை என்பதும் அறிவுதான்
நாத்து நட்டிருக்கு மழை பெய்யக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்ளும் விவசாயிக்கு நாத்து நட ஒரு நம்பிக்கை தேவை படுகிறது இதில் தவறேதும் இல்லையே,ஒரு நம்பிக்கை தானே அதை நீங்க கொடுத்தால் என்ன கடவுள் என்ற உருவம் கொடுத்தால் என்ன ?
முடிவாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்,இருக்கு என்பவர்களுக்கு இருந்துட்டு போகட்டும்,இல்லை என்பவருக்கு இல்லாமலேயே இருக்கட்டும்
ஆனால் இந்த இரண்டிற்க்கும் இடையில் மதத்தையும்,கடவுளையும் வைத்து ஊரை ஏமாற்றி காசு பார்க்கும் மூடர்களையும்,அதை காரணமாக வைத்து மக்களிடையே தீண்டாமை என்று பிரிக்கும் மிருகங்களையும் தான் நாம் இழித்தொழிக்க வேண்டும் !!! தூக்கி எரிய வேண்டும் !!!
நூறு
குடம் பாலபிஷேகம்
கல்லுக்கு
ஊத்திய போது
சிரித்தேன் கடவுளை பார்த்து
உமக்கு தேவையா என்று
அபிஷேகம் முடிந்து கொடுத்த
சர்க்கரை பொங்களை சிரித்துக் கொண்டே
வாங்கும் போது
என்னை பார்த்து
சிரித்த கடவுள்
இவையனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்களே,தவறிருப்பின் சுட்டிக் காட்டுங்கள்,மாற்றிக் கொள்கிறேன்
ஆத்தா மாரியாத்தா எந்த கமெண்ட்சையும் காக்கா தூக்கிட்டு போகாம நீ தான் காப்பாத்தனும் :)
நண்பா என்ன இது....
அய்யா சாமி நான் வரல இந்த விளையாட்டுக்கு..
ஆகா இதுதான் நடுநிலையா..?
தத்தையும்,கடவுளையும் வைத்து ஊரை ஏமாற்றி காசு பார்க்கும் மூடர்களையும்,அதை காரணமாக வைத்து மக்களிடையே தீண்டாமை என்று பிரிக்கும் மிருகங்களையும் தான் நாம் இழித்தொழிக்க வேண்டும் !!! தூக்கி எரிய வேண்டும் !!!
////
இந்த விசயத்தில் நானும் உன்னுடன் தான் ...
சாமி கண்ண குத்திற போகுது, இப்படி எல்லாம் கடவுள் இல்லைன்னு சொன்னா
///இவையனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்களே,தவறிருப்பின் சுட்டிக் காட்டுங்கள்,மாற்றிக் கொள்கிறேன்///
இதில் தவறு ஏதும் இல்லை, கடவுள் எனபது ஆரம்பத்தில் அந்த அந்த கூட்டத்தில் உள்ள முரட்டு மனிதர்களை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது , முதல் கடவுள்கள் முரட்டு தனமாகவே இருப்பார்கள் (உதாரணம் , புயல் காற்று, இருட்டு, சூரியன், , ஐயனார் ) , அப்பொழுது இந்த அழகான லட்சுமி , நடராஜன் போன்ற கடவுள்கள் கிடையாது .
பாய்ண்ட புடிச்சிட்டீங்க தல, அப்படியே ஆழமா இன்னொரு பதிவ போடுங்க.
//முதல் கடவுள்கள் முரட்டு தனமாகவே இருப்பார்கள் (உதாரணம் , புயல் காற்று, இருட்டு, சூரியன், , ஐயனார் )//
ம்ம்ம் அதாவது இயற்கையை கடவுளாக நம்பினார்கள் சரி தானே மங்கு
ஜில்தண்ணி - யோகேஷ் said...
//முதல் கடவுள்கள் முரட்டு தனமாகவே இருப்பார்கள் (உதாரணம் , புயல் காற்று, இருட்டு, சூரியன், , ஐயனார் )//
ம்ம்ம் அதாவது இயற்கையை கடவுளாக நம்பினார்கள் சரி தானே மங்கு///
அப்பைஎல்லாம் மக்களுக்கு அதற்க்கு மேல் யோசிக்க தெரியாது , அது மட்டுமல்லாமல் இயற்கையை எதிகொள்ள தெரியாது , எனவே அவை கடவுள்கள்
ரைட்டு தல :)
அதனால் கடவுள் இல்லை என்பவரிடம் இருக்கிறார் என்று திரும்ப திரும்ப கூறுவதோ,இருக்கிறார் என்பவரிடம் இல்லை என்று பழிப்பதோ வீண் வேலை தான் ////
இந்த கருத்தை பத்தி நீங்க என்ன சொல்றீங்க தல
ஜில்தண்ணி - யோகேஷ் says:
July 7, 2010 11:20 PM
ரைட்டு தல :)
அதனால் கடவுள் இல்லை என்பவரிடம் இருக்கிறார் என்று திரும்ப திரும்ப கூறுவதோ,இருக்கிறார் என்பவரிடம் இல்லை என்று பழிப்பதோ வீண் வேலை தான் ////
இந்த கருத்தை பத்தி நீங்க என்ன சொல்றீங்க தல////
நிச்சயமா, நாமா யாருக்கும் கொள்கை பரப்பு செயலாளர்கள் கிடையாது , உங்களை யாராவது சீண்டினால் நீங்கள் திரும்ப தாக்கலால் , அல்லது பேசாமலும் இருக்கலாம் , அவரவர்களுக்கு விருப்பம் இருந்தால் அவர்களுடைய கொள்கைகளை பிரச்சாரம் செய்யலாம் அல்லது எதிர் கொள்கைகளை விமர்சிக்கலாம்
எனக்காக தங்கள் அரிய கருத்துக்களை பதிந்தமைக்கு நன்றி தல :)
ஜில்தண்ணி - யோகேஷ் says:
July 7, 2010 11:32 PM
எனக்காக தங்கள் அரிய கருத்துக்களை பதிந்தமைக்கு நன்றி தல :)///
என்னைய வச்சு ஏதும் காமடி கீமடி பண்ணலையே ???
சும்மா தமாசு
இதில் தவறு ஏதுமில்லை யோகேஷ்.. "கடவுள்" யாராலும் விடை சொல்ல முடியாத கேள்வி.... அருமை...
பெரும்பாலும் உங்கள் கருத்து தான் என்னுடையதும்..
என்ன ஒண்ணு, சக்கரை பொங்கல் வாங்கி திங்க மட்டும் கூச்சமே பட மாட்டேன் :)
ஆனால், மனிதனின் மிகச்சிறந்த படைப்பு கடவுள்தான் என்று சொல்வேன் :)
கடவுள் புண்ணியத்துல உங்களுக்கு நிறைய ஓட்டு விழட்டும். அப்படி விழுந்தா மன்குனிக்கு மொட்டை அடிச்சு காது குத்துறேன்
பிடிபடாத விசயங்கள், அவையெல்லாம் கடவுள் செயல் என ஒதுக்கி வைக்கப்படுகின்றன! அதனால் அவை முற்று பெறாமல் போகிறது, அதற்காகவாவது கடவுளை தூகி ஓரம் வைத்து விட்டு சிந்திப்பதே சிறந்தது!
முடிவில் தெரியும், கடவுள் இருக்கா, இல்லையான்னு!
மனிதனுக்கு மேல் ஒரு சக்தி உள்ளது..அதுதான் கடவுள்..
சிலைகளையும் உருவங்களையும் வணங்குபவன் மூடன்...கடவுளே இல்லை என்று சொல்பவன் தவறுக்கு அஞ்சாதவன்..
//கடவுளே இல்லை என்று சொல்பவன் தவறுக்கு அஞ்சாதவன்.. //
எப்படி இந்த முடிவுக்கு வர்றிங்க!
குற்ற உணர்வுன்னு ஒன்னு இருக்கு!
ஒரு பொய் சொல்லி அதுனால மத்தவங்க கஷ்டபட்டா நமக்கு பதறும், அது தான் மனித இயல்பு, மனிதனுக்கு கடவுள் தேவையில்லை அவன் மனிதனாக வாழ! மனிதனாக மாறாமல் இருப்பவர்களுக்கு தேவைப்படலாம், ஆனா அது பத்தி எனக்கு தெரியாது!
@கே.ஆர்.பி.செந்தில்
//ஆகா இதுதான் நடுநிலையா..?//
நடுநிலை என்ற ஒன்று எங்கும் இருக்க
வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்
எனக்கு யாராவது சொல்லுங்கப்பா இந்த நடுநிலைய பத்தி ?
வருகைக்கு நன்றி
@வெறும்பய
//இந்த விசயத்தில் நானும் உன்னுடன் தான் //
ரைட்டு மச்சி ரொம்ப நன்றி :)
@வழிப்போக்கன்
//சாமி கண்ண குத்திற போகுது, இப்படி எல்லாம் கடவுள் இல்லைன்னு சொன்னா//
கடவுள் இல்லயென்று நான் சொல்லவேயில்லயே
வருகைக்கு நன்றி
@jey
//பாய்ண்ட புடிச்சிட்டீங்க தல, அப்படியே ஆழமா இன்னொரு பதிவ போடுங்க //
இதுவரைக்கும் புரிஞ்சத போட்டாச்சி,இன்னும் புரிதல்கள் வளரும்,அப்பறம் போட்டுடலாம் இன்னொரு பதிவு :)
நன்றி ஜெய் அண்னே
@கவிதை காதலன்
முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சார்
@பிரசன்னா
நன்றி பிரசன்னா நம் இருவருக்கு ஒரே கருத்தா, நல்லது
சக்கரை பொங்கல் என்ன உடைத்த தேங்காய பொருக்க கூட நாங்க யோசிக்க மாட்டோம் :)
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா
ஆஹா மங்குனி தப்பிப்பாரா ?
நன்றி ரமேஷ் அண்ணே
//பிடிபடாத விசயங்கள், அவையெல்லாம் கடவுள் செயல் என ஒதுக்கி வைக்கப்படுகின்றன!//
பிடிபடாத விஷயங்கள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள் வால் ?
அதை பற்றி கொஞ்சம் சொன்னால் தெரிந்து கொள்வேன்
@மர்மயோகி
//மனிதனுக்கு மேல் ஒரு சக்தி உள்ளது //
அது என்ன சக்தி என்று சொன்னால் தெரிந்து கொள்வேன் ?
@மர்மயோகி
//அதுதான் கடவுள்..
சிலைகளையும் உருவங்களையும் வணங்குபவன் மூடன்...கடவுளே இல்லை என்று சொல்பவன் தவறுக்கு அஞ்சாதவன்..//
இந்த கருத்தை நான் ஓற்றுக் கொள்ள மாட்டேன்
மனிதனுக்கு மனிதன் எப்படி வித்யாசங்கள் இருக்கிதோ அதைப் போல் அவர்கள் சிந்தனைகளும்,விருப்பங்களும் மாறுபடும்
அதை தவறாக சொல்வது என்னை பொருத்தவரை சரியானது இல்லை
இந்த அரசியல் எல்லாம் நமக்கு எதுக்கு நண்பா...
ப்ரீயா விடுங்க....
செலவில்லாமல் கடவுளை வணங்குபவர்களை, நான் குறை சொல்வதில்லை...!
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தவறு செய்ய அஞ்ச மாட்டார்கள் என்பது தவறு. கொலை செய்துவிட்டு, வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டுமென்பதற்காக கிடா வெட்டும் மனிதர்களை என்னவென்று சொல்வது. குற்றம் செய்துவிட்டு உண்டியலில் பணம் போடுபவர்கள் யார்?
இவ்வளவு வெவர வெளக்கேன்னையா எழுதறவரு,ஆல் இன் ஆல் அழகுராஜா தியேட்டர்ல ஆபாச படம் போட்டா
மொதோ ஆளா முண்டியடிச்சு,விசிலடிச்சு,ஆரவாரம் பண்றது ஏம்ப்பு? (நித்தி டவுசர் கழண்டது,மயிராண்டி வேட்டி
உருவுனது இதெல்லாம் ஓகே ) பாப்போம்.இது வருதா இல்லையான்னு?
////////ஆத்தா மாரியாத்தா எந்த கமெண்ட்சையும் காக்கா தூக்கிட்டு போகாம நீ தான் காப்பாத்தனும் :)///////
GOOD BOY !
கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் எடுக்கும் ஆயுதங்கள் மதங்களில் உள்ள குறை பாடுகள், போலிச் சாமியார்கள், மதப் புத்தகங்களில் சொல்லப் பட்டுள்ளவை சில அறிவியலால் பொய் என நிரூபிக்கப் பட்டது போன்றவையாகும். [இதற்க்கு உதாரணம் கலிலியோ உலகம் உருண்டை என நிரூபித்ததைச் சொல்லலாம்]. ஆனால் கடவுள் இல்லை என்பதற்கு இவையா ஆதாரங்கள்? இது சிறுபிள்ளைத் தனமான சிந்தனை. மதங்களில் குறைபாடுகள் உள்ளன, அவை பணம் சம்பாதிக்க துஷ்பிரயோகம் செய்யப் படுகிறது என்றால் மதத்தை
நம்ப வேண்டாம், விட்டுத் தள்ளுங்கள், ஆனால் அதற்கும் மேல் ஒரு படி சென்று படைத்தவன் என்று ஒருத்தன் இருக்கிறானா என்று சிந்தியுங்களேன்? ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, அப்படியானால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றல் அனைத்தும் எங்கிருந்து வந்தது, அதற்க்கு மூலம் என்ன? இயற்கையின் விதிகளை [அதாவது நியூட்டன் விதி மாதிரி] உருவாக்கிய சட்ட அமைச்சர் யாரு? பூமியை சுழலவிட்டது யாரு, உயிரங்கள் இவ்வளவு அழகா இருக்கே அதன் வடிவமைப்பை ஏற்படுத்தியது யாரு? அட, அவ்வளவு ஏன், நம்ம உடலில் உள்ள உறுப்புகளே இவ்வளவு அற்புதமாக உருவாகி இருக்கே இதை வடிவமைச்சவர் யாரு? எல்லாமே தானா வந்துச்சு என்பதுதானா அறிவியல்? தானா ஒரு இட்டிலியோ சப்பாத்தியோ கூட வராது, நல்லா சமைக்கத் தெரிஞ்சவங்களால தான் அதைச் செய்ய முடியும். அப்படியிருக்க சூப்பர் கம்பியூடரையே மிஞ்சும் நமது மூளை எப்படி தானா உருவாகும்? கல்லை கடவுள்னு சொல்லி பாலை ஊத்துறவன் ஒரு பக்கம் கிடக்கட்டும், நீங்கதான் அறிவாளிங்கலாச்சே, காரணம் யாருன்னு கண்டுபிடியுங்களேன்?
மேற்ச்சொன்னதுக்கெல்லாம் நான்தான் காரணம் என்று எவராலாச்சும் சொல்ல முடியுமா? இதுக்கெல்லாம் காரணகர்த்தா யாருன்னு கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க. விஞ்ஞானிகள் பலர் இறைவன் இல்லை என்று சொல்லலாம். ஆனால்,
பூமியில் தோன்றிய அறிவியல் வல்லுனர்களிலேயே தலைசிறந்தவர் ஐன்ஸ்டீன், அவ்வளவு விஷயம் தெரிஞ்சவர் இறைவன் இருக்கிறான் என்று ஏன் நம்பினாருன்னு யோசியுங்களேன்.
கடவுள் இருக்காரா இல்லையான்னு தெரிஞ்சு போகும்.
Sorry, Each time I pressed Publish your comment, it gave error, I thought it was not going and repeated sent the message many times. I request you to kindly remove the duplicate and leave just one message. Thanks.
Jayadeva
//மதத்தை நம்ப வேண்டாம், விட்டுத் தள்ளுங்கள், ஆனால் அதற்கும் மேல் ஒரு படி சென்று படைத்தவன் என்று ஒருத்தன் இருக்கிறானா என்று சிந்தியுங்களேன்? //
மதத்தையும் மதத்தின் ஓட்டைகளையும் எண்ணுவதற்கே, கடவுள் என்னும் கருத்தாக்கத்தை - concept - மறுத்தவர்களால் மட்டுமே முடியும். கடவுளை மறுக்காதவன் யாரும் மதங்களை, மதங்களில் கற்பிக்கப்படும் கடவுளர்களை மறுக்க மாட்டான் என்றே எண்ணுகிறேன்.
//ஐன்ஸ்டீன், அவ்வளவு விஷயம் தெரிஞ்சவர் இறைவன் இருக்கிறான் என்று ஏன் நம்பினாருன்னு யோசியுங்களேன்.//
அப்டியா? அப்போ அவரு சொன்னா கேட்டுக்குவீங்களா?
ஏன்னா, அவர் சொன்னதாக நான் வேற மாதிரில்ல வாசிச்சிருக்கேன். கீழே என் பதிவில் உள்ளதைத் தந்துள்ளேன்.
//ஐன்ஸ்டீன் கூற்றுக்களில் சில:
*நான் கடவுள் நம்பிக்கையற்ற, ஆனால் ஓர் ஆழமான ஆன்மீகவாதி.
* கடவுள் என்னும் கோட்பாடு எனக்கு ஏற்புடைத்ததல்ல; அது அறிவுக்குப் புறம்பானது.
*இந்தப் பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தையும், அதில் இன்னும் நம் அறிவுக்கு எட்டாதிருக்கும் அறிவியல் உண்மைகளையும் நினைத்து, அறிவுள்ள எவனும் தன்னை மிகவும் அற்பமான ஒன்றாக உணரவேண்டும்.இதுவே உண்மையான சமயச் சார்பான சிந்தனையாகும். இந்த சமய உணர்வுக்கும் மதங்கள் பேசும் இறைத்தன்மைக்கும் ஏதும் தொடர்பில்லை. (pp 36)//
ஜில்
//கடவுளே இல்லை என்று சொல்பவன் தவறுக்கு அஞ்சாதவன்..//
இக்கருத்தை அழகாக மறுத்துள்ளீர்கள். இதைப் பற்றிய என் பதிவையும் பாருங்களேன்.
நன்றி
@ தருமி ஐயா
"கடவுள் என்றொரு மாயை" புத்தகத்தை புரட்டி எடுத்த அந்த தங்கள் 12 பதிவுகளை முழுவதும் படிக்கிறேன்
அதன் மூலம் இன்னும் நிரைய புரிதல்கள் கிடைக்கும் என நம்புகிறேன்
தங்களை போன்ற அறிவில் முதிர்ந்தவர்களின் வழிக்காட்டுதல் எனக்கு தொடர்ந்து தேவை
ரொம்ப நன்றி ஐயா
//ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, அப்படியானால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றல் அனைத்தும் எங்கிருந்து வந்தது, அதற்க்கு மூலம் என்ன? இயற்கையின் விதிகளை [அதாவது நியூட்டன் விதி மாதிரி] உருவாக்கிய சட்ட அமைச்சர் யாரு? பூமியை சுழலவிட்டது யாரு, உயிரங்கள் இவ்வளவு அழகா இருக்கே அதன் வடிவமைப்பை ஏற்படுத்தியது யாரு? அட, அவ்வளவு ஏன், நம்ம உடலில் உள்ள உறுப்புகளே இவ்வளவு அற்புதமாக உருவாகி இருக்கே இதை வடிவமைச்சவர் யாரு?.......மேற்ச்சொன்னதுக்கெல்லாம் நான்தான் காரணம் என்று எவராலாச்சும் சொல்ல முடியுமா? இதுக்கெல்லாம் காரணகர்த்தா யாருன்னு கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க. //
உங்களாலும் இந்த கேள்விகளுக்கான பதிலாக கடவுள் அல்லது ஒரு சக்தி இருக்கிறது என நிரூபிக்க முடியாது. நிரூபிக்க முடியாத, புரியாத கேள்விகளுக்கு கடவுள் அல்லது சக்தி ஒன்று தான் காரணம் என ஏன் கொள்ள வேண்டும். தெரியாது என்பதே நல்ல பதிலாகுமே. படிக்காத மக்களுக்கு வேண்டும் ஆனால் நிரூபிக்க முடியாத, புரியாத கேள்விகளுக்கு ஒரு உருவகம் தேவைப்படலாம், படித்தவர்களுக்கு அல்ல.
//விஞ்ஞானிகள் பலர் இறைவன் இல்லை என்று சொல்லலாம். ஆனால்,
பூமியில் தோன்றிய அறிவியல் வல்லுனர்களிலேயே தலைசிறந்தவர் ஐன்ஸ்டீன், அவ்வளவு விஷயம் தெரிஞ்சவர் இறைவன் இருக்கிறான் என்று ஏன் நம்பினாருன்னு யோசியுங்களேன்.//
மிக சிறந்த அறிவு மேதை என்பதால் அவர் சொல்வதை அப்படியே ஏற்றுகொள்ள வேண்டுமா. மிக சிறந்த அறிவு மேதைகள் கூறிய பல விஷயங்கள் பின் வந்த சில அறிவு மேதைகளால் பொய் என நிரூபிக்க பட்டு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்
//உங்களாலும் இந்த கேள்விகளுக்கான பதிலாக கடவுள் அல்லது ஒரு சக்தி இருக்கிறது என நிரூபிக்க முடியாது. நிரூபிக்க முடியாத, புரியாத கேள்விகளுக்கு கடவுள் அல்லது சக்தி ஒன்று தான் காரணம் என ஏன் கொள்ள வேண்டும்.// இங்க நான் கடவுள் இருக்காரு, சக்தி இருக்குதுன்னு சொல்லவே இல்லை. இவற்றுகெல்லாம் மூல காரணம் என்னன்னு தெரிஞ்சுக்க முயற்சி பன்னுங்கன்னுதான் சொன்னேன். இப்ப யோகேஷ்-ன்னு ஒருத்தர பாத்தா நான் சொல்லுவேன் அவருக்கு அப்பா ஒருத்தர் கண்டிப்பா இருப்பாரு. நீங்க கேட்கலாம், நீ என்ன அவங்க பெற்றோருக்கு கல்யாணம் பண்ணி வச்சியா, அவங்க வாழுறத பாத்தியா, இல்லை அவங்க தாயாருக்கு பிரசவம் நடந்தது உனக்குத் தெரியுமா என்று கேட்டுக் கொண்டே போகலாம். எல்லாத்துக்கும் நான் இல்லை என்றுதான் பதில் சொல்லுவேன், ஆன போதிலும் யோகேஷ்-க்கு தந்தை இருப்பார் என்பதில் எனக்கு ஒருபோதும் ஐயமே இல்லை. ஏனெனில் ஒருத்தர் இருப்பதே அவருக்கு தந்தை ஒருத்தர் இருப்பார் என்பதற்கு ஆதாரம், வேறு ஆதாரம் தேவை இல்லை. நீங்கள் மட்டுமல்ல எந்த ஒரு மனிதரைப் பார்த்தாலும் அவருக்கு தந்தை ஒருத்தர் இருப்பார் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், அவர் யார் என்று என்னால் சொல்ல முடியாமல் இருக்கலாம், அது இரண்டாம்பட்சம். இது மனிதருக்கு மட்டுமல்ல, மேசை, Chair, கணினி, தொலைகாட்சி என்று எல்லாத்துக்குமே செய்தவர் ஒருத்தர் நிச்சயம் இருப்பார், அவர் X-ஒ Y-ஒ, அது வேறு விஷயம். இந்த உலகம் இருக்கு, இது இருக்கிறதே இதனோட மூலத்துக்கு ஆதாரம் வேறு ஆதாரம் தேவையே இல்லை. இந்தப் படைப்பின் மூலம் நம்மை போல சிந்திக்கக் கூடிய Personality-யா இல்லை வெறும் சக்தியா, இல்லை வேறேதனாச்சுமா என்பது இங்கே இரண்டாம் பட்சம். அதுக்குத்தான் நீங்க ஆராய்ச்சி பண்ணனும், Source-இருக்கிறது என்பது இந்த உலகம் இருக்கிறது என்பதே நிரூபணம், வேறு எந்த Proof-உம் இங்கு தேவையில்லை.
மிக சிறந்த அறிவு மேதை என்பதால் அவர் சொல்வதை அப்படியே ஏற்றுகொள்ள வேண்டுமா. //மிக சிறந்த அறிவு மேதைகள் கூறிய பல விஷயங்கள் பின் வந்த சில அறிவு மேதைகளால் பொய் என நிரூபிக்க பட்டு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.// அறிவு மேதைகளுக்கே இந்த நிலைமை என்றால் குப்பனும் சுப்பனும் உட்கார்ந்து கொண்டு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று வாதம் செய்து கொண்டிருப்பது வேடிக்கை அல்லவா? இன்னொன்று, நேற்றைக்கு அறிவு மேதையென கருதப் பட்டவன் பேசியதை எவ்வளவு கூமுட்டைத் தனம் என்று இன்றைய "மேதாவிகள்" சொல்கிறார்கள், இன்று இவர்கள் சொல்வது நாளைய அறிவிஜீவிகள் வந்து தவறு என்று நிரூபிப்பார்கள். இந்த மாதிரி ஆட்களை வைத்து ஒருபோதும் உண்மையை உணர/அறிய முடியாது என்பது தெளிவு.
@Jayadeva
நீங்கள் சொல்லவருவது புரிகிறது நண்பா,எந்த ஒரு உயிருக்கும் அதை படைத்தவர் இருந்தே தீருவார் என்று சொல்கிறீர்கள் அது தானே
ரைட்டு தான்,அப்படிப் பார்த்தால் ஆதி முதல் உயிரை யார் படைத்திருப்பார் என்ற கேள்வி தான் எழுகிறது?
கண்டிப்பாக அது இயற்கையாகத்தான் இருக்க முடியும்,ஆகவே இங்கு இயற்கையை கடவுள் என்று ஒத்துக் கொள்ளலாம்
@வால்பையன்
//முடிவில் தெரியும், கடவுள் இருக்கா, இல்லையான்னு!//
உங்க இந்த நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.. முடிவில் பார்க்கலாம்தானே...
//உங்க இந்த நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.. முடிவில் பார்க்கலாம்தானே... //
என்னாங்க இது,
கடவுளை காட்டினாலும் நான் மறுப்பேன்னு யார் சொன்னது!?
நண்பா..ஜில்
ஓரிறை கொள்கையை ஏற்றுக்கொள்பவன் என்ற அடிப்படையில் உங்கள் நிறைய கருத்துகளுடன் உடன்பட முடியவில்லை என்றாலும். உங்கள் தனிப்பட்ட் கருத்துக்கள் சிந்தனைகளுக்கு மதிப்பளிக்கிறேன் வித்தியாசமாக சிந்தித்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@riyas
என் கருத்துக்கு மதிப்பளித்தமைக்கு ரொம்ப நன்றி நண்பா
தங்களது கடவுள் குறித்த புரிதல்கள் யோசிக்கவைக்கும் வகையில் உள்ளது.
//இந்த இரண்டிற்க்கும் இடையில் மதத்தையும்,கடவுளையும் வைத்து ஊரை ஏமாற்றி காசு பார்க்கும் மூடர்களையும்,அதை காரணமாக வைத்து மக்களிடையே தீண்டாமை என்று பிரிக்கும் மிருகங்களையும் தான் நாம் இழித்தொழிக்க வேண்டும் !!! தூக்கி எரிய வேண்டும் !!!
//
சரியான நெத்தியடி நண்பா..!
இதுல நான் மர்மயோகி பக்கம்ப்பா..
ஆனா உங்க சிந்தனை நல்லாருக்கு ஏன்ன சில சமயம் அதுதான் தெளிவுக்கு வகுப்பெடுக்கும்
@பிரவின்குமார்
கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி நண்பா :)
@pinky rose
//ஆனா உங்க சிந்தனை நல்லாருக்கு ஏன்ன சில சமயம் அதுதான் தெளிவுக்கு வகுப்பெடுக்கும்//
ரைட்டுதாங்க :)
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் :)
:-)
நண்பா, நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா?
@WILSON
நன்றி வில்சன் :))
தாங்கள் கடவுளை மறுப்பவரை கெட்டவர் என்று கூறுவீர்களானால் நான் கெட்டவனே :)
கலக்கல் யோகேஷ்.
பின்னூடங்களில் தருமி ஐயாவும் வழக்கம் போல முறையாக வாதிட்டுள்ளார்...
கடவுள் மனிதனை படைத்தார்...
மனிதன் கடவுளின் பெயரால் மதங்களை படைத்தான்...
கடவுளின் பெயரால் தன கற்பனைகளுக்கு உரு கொடுத்து தன் கருத்துக்களை மற்றவர்களை கவர்ந்துகொண்டான்...
கடவுள் என்ற ஒருவர் இல்லை என்றால்...
நல்லது செய்ததற்கு நல்லதும்
கெட்டது செய்ததற்கு கெட்டதும்
ஏன் நிகழ வேண்டும்...
//நல்லது செய்ததற்கு நல்லதும்
கெட்டது செய்ததற்கு கெட்டதும்
ஏன் நிகழ வேண்டும்... //
அது உங்கள் பார்வை பொறுத்து நண்பரே!
எதை நல்லது என்கிறீர்களோ அதுவே இன்னொருவருக்கு கெட்டதாக இருக்கும், எதையும் மேலோட்டமாக அணுகாமல் இன்னும் ஆழமாக சிந்தியுங்கள், கடவுள் என்பது ஒரு வியாபார பொருள் என்பதை அறிவீர்கள்!
//'//நல்லது செய்ததற்கு நல்லதும்
கெட்டது செய்ததற்கு கெட்டதும்
ஏன் நிகழ வேண்டும்... //
அப்டீயா ..? வடிவேலு லாங்குவேஜில்: என்னது இது .. சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு?
christian louboutin outlet online
golden goose outlet
curry 7
golden gooses
nike air vapormax
kd shoes
nike max
moncler outlet
hermes birkin
hermes handbags
அட... நானும் இங்கே வந்திருக்கிறேன். நண்பன் வால்பையனும் இருந்திருக்கிறான். காஅம் ஓடிப் போச்சு ....
ஏனிந்த பத்தாண்டு மெளனம் ??!!
this contentweblink click to read moretry this web-site a fantastic readhere
kd shoes
fear of god hoodie
supreme official
supreme clothing
Travis Scott Jordan
jordan shoes
supreme
bapesta
bape
goyard bag