பதிவுத் திருட்டு - உஷார்
labels உதவி , பதிவர்கள் , பதிவுத் திருட்டு , பதிவுலகம் , 31 பின்னூட்டங்கள்
நேற்று வானம்பாடிகள் ஐயாவின் பதிவில் அலெக்சா ரேட்டிங்கும் அல்லக்கைகளும் என்ற பதிவை படித்தேன்.அதில் பதிவர் சூர்யா கண்ணன் அவர்களின் கூகுள் கணக்கு அனைத்தும் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு விட்டதாகவும் அதனால் அவர் பதிவும் முடக்கபட்டுவிட்டதாக கூறுயிருந்தார்.
சூர்யா கண்ணன் அவர்களின் பதிவு எப்படிப்பட்ட பதிவென்பது நாம் அறிந்ததே,நம்மை போன்ற பதிவர்கள்,கணிப்பொறி துறை மாணவர்கள்,கணிப்பொறி வல்லுனர்கள் போன்ற அனைவரும் சூர்யா கண்ணன் பதிவுகளின் மூலம் பயன் பெற்று வந்தோம்
இன்று அந்த பதிவே இல்லை என்கிறது
எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை, பதிவிலேயே மீட்டெடுக்க சில வழிகளை பதிவுலக நண்பர்கள் அளித்திருக்கின்றனர், நண்பர்களே உங்கள் யாருக்காவது ஏதேனும் வழிகள் தெரிந்தால் சொல்லி உதவுங்கள் ,நமக்கு அந்த பதிவு தேவை.
அந்த பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் அஹமது இர்ஷாத் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்
உங்கள் ஆக்கங்கள் யாரால் திருடப்பட்டிருக்கிறது என்று அறிய இத்தளத்தில் உங்கள் வலை முகவரியை கொடுத்தால் உடனே சொல்லி விடுகிறது.. http://www.copyscape.com/
அந்த இனையதளத்திற்கு சென்று என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என சென்றேன்
முகப்பு பக்கத்திலேயே எனது வலைதள முகவரியை கேட்டிருந்தார்கள்,கொடுத்து தேடினேன்,ஒன்றும் இல்லை,பதிவின் வேறு பக்கங்களை தேடிப் பாருங்கள் என்ற செய்தியும் வந்தது.
நானும் அடுத்தடுத்த பதிவை கொடுத்து எங்காவது திருடப் பட்டுள்ளதா என்று தேடிக் கொண்டிருந்தேன்.
என்னுடைய உலகம் எப்போது அழியும் என்ற பதிவின் முகவரி கொடுத்து தேடும்போது,இந்த பக்கத்தில் உள்ள தகவல்கள் இன்னொரு தளத்துடன் ஒத்துப் போகிறது என்ற தகவல் வந்தது
அந்த தளத்தில் நுழைந்து பார்த்த போது தெரியவந்தது,என்னுடைய அந்த பதிவு திருடப்பட்டிருப்பது
மீனகம்.காம் என்ற வலைதளத்தில் தான் இந்த திருட்டு வேலை நடந்திருக்கிறது,நான் அந்த பதிவை போட்டது ஜீன்.30 ஆம் தேதி,அந்த பதிவில் ஜீலை 1 ஆம் தேதி திருடிப் போட்டிருக்கின்றனர் .
என்ன ஒரு கேவலமான வேலை,ஒருத்தர் அறிவை,ஒருத்தர் முயற்சியை இப்படி சல்லித்தனமாக காப்பி & பேஸ்ட் செய்வது என்ன மோசமான செயல்
என்னுடைய உலகம் எப்போது அழியும் பதிவு
திருடப்பட்ட பதிவு -மீனகம்.காமில்
கண்டிப்பாக உங்கள் பதிவுகள் கூட திருடப்படவும்,திருடப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது,அதனை தீர்த்துக் கொள்ள இந்த தளத்திற்கு செல்லவும் உங்கள் பதிவின் முகவிரியை கொடுத்து தேடிப் பாருங்கள்.
இந்த பதிவுத் திருட்டிலிருந்து தப்பிக்க சில வழிகளை நம்ம ஜெய்லானி அண்ணன் பதிவில் கூறியுள்ளார்,அதையும் பாருங்கள்
இனிவரும் காலங்களில் இந்த பதிவுத் திருட்டை தடுக்க என்ன செய்யலாம் ? சொல்லுங்கள் நண்பர்களே !!! சொல்லுங்கள்
நமக்காக சூர்யா கண்ணன் அவர்கள் இன்னொரு வலைப்பூவையும் தொடங்கிவிட்டார்
http://sooryakannan.blogspot.com/
இந்த தளத்திலும் அவருக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
பயனுள்ள பதிவுதான் நண்பரே . அந்த தளத்தில் நானும் முயற்சித்துப் பார்த்தேன் . நண்பர் சூரியக் கண்ணன் இப்பொழுது ஒரு புது தலத்தில் தற்காலிகமாக பதிவிடுவதாக ஒரு செய்தி கொடுத்திருந்தார் நானும் அறிந்தேன் . பகிர்வுக்கு நன்றி
இதுக்காகவே நான் எழுதிய பதிவு முடிந்தால் பார்க்கவும் . http://kjailani.blogspot.com/2010/05/blog-post_31.html
பதிவு திருடர்களுக்கு கண்டனங்கள்
http://pirathu.blogspot.com
arumayana thagaval aanaal ungal valapadhivai thirudiya paavigallukku en kandanam
நானும் தொழில்-நுட்ப பதிவுகள் தான் செய்து வருகிறேன். பல முறை எனது பதிவுகளை பல தளங்களில் திருடப்பட்டுள்ளதைப் பார்த்திருக்கிறேன். கேட்டால், இதிலென்ன தவறிருக்கிறது என்று நியாயம் கேட்கின்றனர்.
இதில் ஒரு நகைச்சுவையான விடயம் ஒன்று இருக்கிறது. நாம் பதிவிடும் போது 4 அல்லது 5 ஓட்டுகள் விழும். திருடப்பட்ட இடத்திலோ 20, 25 என வோட்டுகள் விழும். இது எப்படி?
நான் அவர் பதிவுகளில் இருந்து நிறைய விசயம் கற்று கொண்டேன். அவர்க்கே இப்படி ஆனது அதிர்ச்சி
அண்ணே நீங்க பிரபலம் ஆயிட்டீங்க.. அதான் திருடி போடுறாங்க..
அவங்களுக்கு தெரியலே. கேட்டா நாமளே தாராளமா கொடுத்திருப்போன்னு...
எனக்கு பிரச்சனயில்லப்பா!
என்னோட கடை மேட்டர திருடிப்போட்டா தெனமும் 100 போன் வரும் ஆட்டோ அனுப்புவானுக, கைய கால வெட்டறேன்னு மெயில் அனுப்புவானுக! தேவையா இதெல்லாம்!
@கே.ஆர்.பி.செந்தில் said...
//அண்ணே நீங்க பிரபலம் ஆயிட்டீங்க.. அதான் திருடி போடுறாங்க..//
என்னது பிரபலமா போங்கண்ணே நீங்க வேற :))
//அவங்களுக்கு தெரியலே. கேட்டா நாமளே தாராளமா கொடுத்திருப்போன்னு...//
அதானே,கேட்டா கொடுக்க போறோம் ஹா ஹா :)
@ராஜன்
எல்லோருக்கும் நம்ம கடையில கமெண்ட் போடுவதற்கே ஒரு பயம் இருக்கு,திருட்டுலாம் எங்க :))
ஹாய்! என்னப்பா இது கொடுமை?
அறிவை திருட முடியாதும்பாங்க இப்ப அதுலயும் கைய வச்சுட்டாங்களா?
http://www.copyscape.com/ ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்ன்னு நினைக்கிறன்
திருடனாய் பார்த்து திருந்தும் வரை திருட்டை ஓழிக்க முடியாது.
இந்த பாடலுக்கு ரீமிக்ஸ் ரெடி செய்திறவேண்டியதுதான்...
நன்றி யோகேஷ். என்னோட பதிவையும் நாதாரிங்க திருடிருக்காங்க. (நம்மாலே மொக்கையா எழுதுறோம் அதையும் திருடினா என்ன ஆளுப்ப அவன்?)
Same blood
தகவல் திரட்டு என்ற போர்வையில் தகவல் திருட்டு இடம்பெறுகின்றது இது முற்றிலும் தவறான ஒரு செயல் ஒருவருடைய பதிரை இன்னொருவர் பயன்படுத்தும்போது கட்டாயமாக அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் அப்பதிவுக்கு நொந்தக்காரர் யார் என்பதையும் குறிப்பிட வேண்டும் இவ்வாறு செய்யாதவர்கள் வலைத்தளங்கள் நடத்தவே தகுதியில்லாதவர்கள் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து
படைப்பாளியின் படைப்பை அவரின் ஒப்புதலோடு மட்டுமே பறுபதிவு செய்யவேண்டும் என்ற ஒரு சட்டம் ... வரும் காலத்தில் நிச்சயம் அவசியமானதாகிவிடும்.
திருடுவது.... என்பது ... கேவலம்!
சூர்யா கண்ணன் வலைப்பக்கம் அழிக்கப்பட்டது. மிகவும் வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும்குரியது.
தங்களது உழைப்பில் உருவான பதிவுத்திருட்டும் வருத்தத்திற்குரியதுதான். இதை நண்பர்களுக்கு தெரிவித்த தங்களது விழிப்புணர்வு பாராட்டுக்குரியதாகும்.
என்னவெல்லாமோ நடக்குது :(
@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪
கருத்துக்கு நன்றி தல :)
@ஜெய்லானி said...
அனைவருக்கு உபயோகமான பதிவு,நன்றி அண்ணே
@பிராது
ரொம்ப நன்றிங்க :)
@Gayathri said...
முதல் வருகைக்கு ரொம்ப நன்றிங்க :) மகிழ்ச்சி
@vino
உண்மைதான் வினோ,என்ன செய்வது திருடனாய் பார்த்து திருந்தனும் :)
@சௌந்தர் - மிக்க நன்றி நண்பா
@pinky rose - ஆமாம்பா இதையும் விட்டுவைக்கல ம்ம்ம் :)
@ரோமியோ - நன்றி நண்பா :)
@அஹமது இர்ஷாத்
உண்மைதான் அண்ணே,அவனுகளா திருந்தனும் :(
@ரமேஷ்(சத்தியமா ரொம்ப நல்லவன்)
ஆமாம் உங்க பதிவில் போட்டீங்களே,கொடும :(
@வழிப்போக்கன் - நன்றிங்க :)
@ajith
தங்களின் முதல் வருகைக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி நண்பா :)
@சி.கருணாகரசு
ஆமாம் தல பதிப்புரிமை பெற்று தான் அதை செய்ய வேண்டும்
கருத்துக்களுக்கு நன்றி
@பிரவீங்குமார்
ஆமாம் நண்பா வருத்தம் தான் :)
@பிரசன்னா
வாங்க :) ஆமாம் என்னமோ நடக்குது :( மர்மமா இருக்குது
அருமையான பதிவு மாப்ள .. என்னோட சில பதிவுகளும் வேறு ஒரு தளத்தில் இருந்தது .. ஆனாலும் அவர்கள் நன்றி அப்படின்னு என்னோட பெயரை போட்டிருந்தாங்க ..!!
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..
பெற்றுக்கொள்ளவும்.
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..
பெற்றுக்கொள்ளவும்.
அட பாவிங்களா.. பதிவையும் விட்ரதில்லையா?
எத எத சுடறதுன்னு விவஸ்தையே இல்ல போல இருக்கு :-((
சூர்யா கண்ணன் அவர்கள் தொடங்கியிருக்கும் புது வலைப்பூவிற்கு என் வாழ்த்துக்கள். என்னுடைய கவிதைகளும் பல தளங்களில் திருடி பதிவிடப்ப்ட்டிருப்பதை பார்த்து அதிர்ந்திருக்கிறேன். இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
பயனுள்ள பதிவுதான் யோகேஷ்
பதிவு திருடர்களுக்கு கண்டனங்கள்
Dai naya unnakku vera work illaiya.
Ethum mudeyalana kosu va pudechi seyvuthu la kuthu da kosu.....
BY Nanban Nattamai